ஏசு கிறிஸ்து – மத்தேயு நற்செய்தி கதாசிரியர்

இயேசு கிறிஸ்து நிறுவிய இறையாட்சி பற்றிய நற்செய்தியைத் திருத்தூதர் மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது.
மத்தேயு எபிரேய மொழியில் எழுதவில்லை என்பதை நாம் காண்போம்
 மத்தேயு1:18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ‘யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்’ என்றார். 22 இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்’ என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.
 மத்தேயு எபிரேய மொழியில் எழுதவில்லை என்பதை நாம் காண்போம்
எபிரேய மூல மொழியில் அல்மாஎன்ற சொல் உள்ளது -அது இளம் பெண் எனக் குறிக்கும்.
கன்னி என்பதற்கு எபிரேயச் சொல்  பெதுலா .
ஆனால் கிரேக்க செப்துவகிந்து மொழிபெயர்ப்பில் தவறாக இளம்பெண் என்பதற்கு கன்னி என உள்ளது.

மத்தேயு சுவி கதாசிரியர்- மேரியை விவாகரத்து செய்ய ஜோசப் கனவில் 
தேவதூதன் ஏசையாவின் தவறான கிரேக்க வசனத்தை சொல்லி அது தீர்க்க தரிசனம் என்கிறார். ஜோசப் எபிரேயர்- அவரிடம் எதற்கு தவறான கிரேக்கம்-
 மத்தேயுவிற்கு எபிரேயம் தெரியாது.
 எசாயா7:13 அதற்கு எசாயா: தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்: மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?14 ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்: அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்.
வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேமில் நுழைதல்
 மத்தேயு 21
(மாற் 11:1 – 11; லூக் 19:28 – 38; யோவா 12:12 – 19)
1 இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி,2 ‘ நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள்.3 யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், ‘ இவை ஆண்டவருக்குத் தேவை ‘ எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார் ‘ என்றார்.4 ‘ மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்;5 கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார் ‘ என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது.6 சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள்.7 அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள்.


எபிரேயம் தெரியாது இரண்டு கழுதைகள் மேல்- ஒரு தாய்- குட்டி இரண்டு மேல் ஏசு சவாரி செய்ததாக சொல்கிறார்.

                                             

ஏசு 2 கழுதை மேல் சென்று இருந்தால் அவரை மக்கள் பைத்தியம் என்றே சொல்லி இருப்பர்.

மத்தேயுவிற்கு எபிரேயம் தெரியாது.
 மத்தேயு 2:19 ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,20 ‘ நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள் ‘ என்றார்.21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ‘ நசரேயன் என அழைக்கப்படுவார் ‘ என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது. 
 யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்- தந்தைக்குப்பின் கலிலேயாவை அரசாண்டதுவும் ஏரோது மகன் அந்திப்பா தான்.

The nature of Matthew’s Pesher is best illustrated by 2:23, which states that Jesus settled down in Nazareth  “that what was spoken by the Prophets might be fulfilled, ” namely “HE” SHOULD BE CALLED A NAZARENE”; now here is the Old Testament we do not have such a statement.
Page -16; K.Luke; Companion to New Testament.
″நசரேயன்″ என அழைக்கப்படுவார் ‘ என்று இறைவாக்கினர்கள் உரைத்தது –பழைய ஏற்பாடு எங்கேயும் கிடையாது.
மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் பைபிள்  விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ்பேராசிரியராக இருந்தகாலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் “The Real Jesus” என்ற தன்நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்,
“Whereas Synoptic record most of Jesus ministry is located in Galilee, John place most of it in Jerusalem and its neighbourhood.” – Page-27 – THE REAL JESUS.

இப்படியான கதாசிரியர்கள் சொன்ன கதையை நம்புவது அறிவுள்ளோர் செய்வதல்ல.

நண்பர் ரிச்சர்ட் அவர்கள்- மத்தேயு கதாசிரியர் ஏன் சீடர் என்பதை மறுக்கிறீர் என்றார்?


இது பற்றிய கத்தோலிக்க பைபிள் விளக்க நூல்- இரு ஆர்ச் பிஷப் அங்கீகாரத்தோடு எழுதப்பட்ட நூலில் உள்ளதைப் பார்ப்போம்.
//The tradition of the existence of an Aramaic or Hebrew version of Matthew also generates more problem than it solves. ..
Why does Papias say Hebrew, when Jesus spoke Aramaic? Did Papias have any special reasons for placing Matthew’s Gospel before Marks? All these questions indicate that the ascription to Matthew the apostle and the tradition of an Aramaic or Hebrew version of Matthew involve too many problems for us place much reliance on them in interpreting the Gospel. //
Page-863. Daniel J.Harrington. S.J. in “The Collegeville Bible Commentary”

3 Responses to ஏசு கிறிஸ்து – மத்தேயு நற்செய்தி கதாசிரியர்

  1. Richard says:

    பைபிள் முழுதுமே பரிசுத்த ஆவியின் உந்துதலில் எழுதப்பட்டவை.

    செப்துவகிந்து கிரேக்கத்தில் உள்ளதை தான் மத்தேயு சொல்லி உள்ளார்.

    700 ஆண்டு முன்பே ஏசு கிறிஸ்து கன்னிக்கு பிறக்க வேண்டும் என தீர்க்கம் தானே.

  2. Richard says:

    பைபிளியல் நூல்கள் எனத் தாங்கள் கூறும் நூல்கள் இந்திய ஆசிரியர்கள், இந்திய பதிப்பகம் உண்டா? தமிழ் நூல்கள் உண்டா?

    நல்ல நூல்கள் சொல்லவும்

  3. abhai charan dass says:

    பரிசுத்த ஆவிதான் கடவுளே! கடவுளே! ஏன் கைவிட்டீர்
    ( எலோ எலோ லாமா சபக்தானி ) என்று கதறியதையும் எழுதியதா?

Leave a comment

HINDUISM AND SANATAN DHARMA

Hinduism,Cosmos ,Sanatan Dharma.Ancient Hinduism science.

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் உள்ளபடியே

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

Tamilar Kural - Devapriya- தேவப்ரியா- (Based on Archaelogical,Historical & Theological)

வரலாற்று உண்மைகளை அலசுவோமே