பாதிரியார்களும் சிறுவர்களும் திருமண மறுப்பும்

பாதிரியார்களும் சிறுவர்களும் திருமண மறுப்பும்

சுகன்யா எனும் மாணவி கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது அப்பள்ளியின் ஆசிரியர்களான கத்தோலிக்க பாதிரியார்கள் சிலர் தான் எனவும் போலிஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பிஷப் ஆனந்தராஜ் மீது இப்படி புகார்கள் எழுந்து அவர் கைது செய்யப்பட்டார்.

கத்தோலிக்க பாதிரியார்களால் அதிக அளவில் நடத்தப்படும் பாலியல் பலாத்காரங்கள் தமிழக ஊடகங்களில் அதிக அளவில் பேசவோ விவாதிக்கப்படவோ இல்லை என நான் கருதுகிறேன். தமிழக ஊடகங்களிலும், சினிமாக்களிலும் பாதிரியார்கள் ஏதோ அன்பே உருவானவர்களைப் போல் தொடர்ந்து சித்தரிக்கப்படுகின்றனர். அவ்வப்போது இந்த பிம்பம் கலையும்போது சிலகாலம் பரபரப்பு ஏற்படுவதும் அதன்பின் அடங்கி விடுவதும் தான் நடக்கிறது.

மேலை நாடுகளில் இது போன்ற விவகாரங்கள் ஊடகங்களில் தொடர்ந்து விவாதிக்கப்படுவதால் மக்களுக்கு சரியான தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்க அவை பேருதவியாக இருக்கின்றன. தமிழகத்திலும், இந்தியாவிலும், மற்ற ஆசிய நாடுகளிலும் இது போன்ற விவகாரங்கள் வெளியே வராமல் அமுக்கி வைக்கப்படுகின்றன அல்லது உள்ளூர் அளவில் பஞ்சாயத்து மூலம் தீர்க்கப்படுகின்றன என நான் கருதுகிறேன்.

மத தலைவர்கள் மீதான புகார்கள் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்க காரணம் அவர்களுக்கு இருக்கும் புனிதர் இமேஜ் தான் என்பது என் கருத்து. அவர்களை நம்மைப்போல் சராசரி மனிதர்களாக நினைக்க நம்மால் ஏனோ இயலுவதில்லை. இந்துமதத்தில் பல கில்பான்ஸ் சாமியார்கள் இருந்தாலும் அவர்களைப்பற்றி அடிக்கடி பத்திரிக்கைகளில் செய்தி வந்து மக்கள் இப்போது உஷாராகி விட்டனர் என கருதுகிறேன்.

கிறிஸ்தவத்தில் கத்தோலிக்க பாதிரிகள் மீது மட்டும் இப்படி புகார் வர காரணம் செலிபசியை (திருமண மறுப்பு) வலியுறுத்தும் அவர்கள் மதகோட்பாடே காரணம் என்பது என் கருத்து. மனித இயற்கைக்கு மீறிய ஒரு கொள்கையை மதம் எனும் பெயரில் கற்பித்தால் விளைவுகள் இப்படித்தான் இருக்கும். செலிபசியை வலியுறுத்தாத பாப்டிஸ்டுகள், புராட்டஸ்டண்டு பாஸ்டர்கள் போன்றோர் மீது இப்படி பெரிய அளவில் புகார் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துமதத்திலும் செலிபசியை பின்பற்றும் சாமியார்கள் மீதுதான் இப்படி அதிக அளவில் புகார் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. செலிபசியை பின்பற்றும் சாய்பாபா மீது சிறுவர்களை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதாக புகார். அதே போல் கத்தோலிக்க பாதிரியார்கள் மீதும் சிறுவர்களை ஓரினசேர்க்கையில் ஈடுபடுத்தியதாக புகார். கத்தோலிக்க நியூஸ் சர்வீஸ் எனும் பத்திரிக்கை தெரிவிக்கும் தகவலின்படி அமெரிக்காவிலுள்ள 4% பாதிரியார்கள் சிறுவர்,சிறுமியருடன் உடலுறவில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வருகிறது.மேலும் இது மிக குறைந்த எண்ணிக்கை என்றும் உண்மையான தொகை இதை விட பல மடங்கு அதிகம் இருக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட 95% டயோஸிஸ்களில் செக்ஸ் ஊழல் நடந்திருக்கிறது என்றும் தெரிய வருகிறது.

சிறுவர் சிறுமியரை ஏன் இவர்கள் குறிவைக்கின்றனர்?அவர்கள் எளிதில் மாட்டுகின்றனர் ,மிரட்டி பணிய வைப்பது சுலபம் என்பதுதான் காரணமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

பல பாதிரியார்கள் ஆண்டுக்கணக்கில் இப்படி செக்ஸ் அடிமைகளாக பல சிறுவர் சிறுமியரை நடத்தியிருப்பதும் வாட்டிகன் அதை ஏதோ ஒரு தொகை கொடுத்து செட்டில் செய்வதும், விவகாரத்தை அமுக்கி விடுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.கிட்டத்தட்ட வெளிவந்த விவகாரங்களில் 10% பாதிரியார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். 29% பாதிரியார்கள் வெறும் சஸ்பெண்டு மட்டும் செய்யப்பட்டுளனராம்.அவர்களில் 6% பாதிரியார்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்ப்ட்டுள்ளனராம்.

அமெரிக்காவில் மட்டும்தான் இப்படி என நாம் தப்புகணக்கு போடலாகாது. அங்கே இது வெளியே வருகிறது. மற்ற நாடுகளில் அமுக்கி வைத்து மூடப்படுகிறது என்பது என் கருத்து.

மனித இயற்கைக்கு மாறான கோட்பாடுகளை மதம் எனும் பெயரில் திணிப்பவர்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும் என எனக்கு தோன்றுகிறது. மனிதனால் காமத்தை வெல்வது என்பது இயலாது. செலிபசி எனும் கோட்பாட்டை வாட்டிகன் ஏன் இன்னும் கட்டிக்கொண்டு அழவேண்டும்? செயிண்ட் பால் திருமணத்துக்கு அனுமதி அளித்திருப்பதை பாப்டிஸ்டு பாதிரிகள் பயன்படுத்துவது போல் கத்தோலிக்க பாதிரிகளும் பயன்படுத்தலாமே?

பொதுமக்களும் இனிமேல் பாதிரியார்களையும், சாமியார்களையும், மத தலைவர்களையும் புனிதர் எனும் நோக்கில் பாராது நம்மைப்போல் ஆசாபாசம் நிரம்பிய மனிதர்களாக பார்ப்பது பல விதங்களிலும் நல்லது. ஊடகங்களும், சினிமாக்களும் பாதிரியார்களுக்கு புனிதபிம்பம் இமேஜை தராமல் இருப்பது நல்லது. சாதாரண மனிதனாக இருப்பவர்களை புனிதர்களாக காட்டுவது அம்மாதிரி சித்தரிக்கப்படும் நபர்களுக்கே நல்லதல்ல. அப்படிப்பட்ட மனிதர்கள் செய்யும் சிறு தவறுகளும் பெரும் அதிர்வைத்தான் உண்டாக்கும்.

posted by Joke Party

Leave a comment

HINDUISM AND SANATAN DHARMA

Hinduism,Cosmos ,Sanatan Dharma.Ancient Hinduism science.

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் உள்ளபடியே

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

Tamilar Kural - Devapriya- தேவப்ரியா- (Based on Archaelogical,Historical & Theological)

வரலாற்று உண்மைகளை அலசுவோமே