புனித தாமசுக்கு எத்தனை மண்டை ஓடுகள்??

ஒரே மனிதருக்கு (புனித தாமசுக்கு) எத்தனை மண்டை ஓடுகள்?

40651267_1888390867897126_2640892785204396032_o

– இது சிறுசாருக்கச்சோல்லோ பொதச்சது, இது பெருசாருக்கச்சோல்லோ பொதச்சது கதையா இருக்கிறது புனித தோமையாரின் சமாதிகளும் மண்டை ஓடுகளும்.

– மார்க்கோ போலோ 1923இல் இங்கே வந்தார்ன்னு ஒருத்தன் பீலா விடறான் இங்கே (http://mukti4u2.dk/thomas_basilika_chennai.htm). டேய் பாவாடை… 😂

சமூக வலைதளம் வரும், இந்த 420களை வெளிச்சம்போட்டு காட்டும் எவனாவது நெனச்சு பாத்திருந்தா இப்படி பொய் சொல்லியிருக்க மாட்டானுங்க…

z thomas

– உண்மை மாறாதது, பொய் மாறிக்கொண்டே இருக்கும்.

40679190_1888394384563441_8619829784878252032_n

October 6, 2012 : The Holy Apostle Thomas
The bones of Saint Thomas
Missionaries of St Alphonsa Region at the Tomb of St Thomas, Mylapore

http://www.sangli.mstworld.org/home/newsdetail/30
http://thomasguild.blogspot.com/…/the-bones-of-saint-thomas…
http://www.omhksea.org/2012/10/the-holy-apostle-thomas/

 

திருவள்ளுவ நாயனார் சித்தாந்த சைவரே -கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள்

திருவள்ளுவ நாயனார் சித்தாந்த சைவரே -கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள்

சித்தாந்த சைவர், உள்ளது செயலுறுதலாகிய (சற்காரிய) வாதங் கொண்டு, காட்சி, கருதல் (அனுமானம்), உரை (ஆகமம்) எனும் மூவகை அளவைகளால் (மூவித பிரமாணங்களால்) கடவுளொருவருண்டென்றும், அவர் சித்தாந்தத் தெய்வமாகிய சிவமே (சிவபரம்பொருளே) என்றும், அக்கடவுளுக்கு வேறாய் எண்ணில்லாத உயிர்கள் உண்டென்றும், அவைகளைப் பந்தித்த ஆணவமல மொன்றுண்டென்றும், அம்மலத்தின் காரணமாக உயிர்களுக்குக் கன்மமலம் தொன்மையே (அநாதியே) உண்டென்றும், மலக் கட்டுடையவர்களான (சம்பந்திகளான) உயிர்களுக்கு உறைவிடமாக மாயை மலமொன்று உண்டென்றும், மலத்தைச் செலுத்துகின்ற ‘ஆதிசத்தி’ யாகிய ‘திரோதான’ மலமும், அதனாலான மாயைக் காரியங்களாகிய ‘மாயேய மலமும்’ உண்டென்றும், கன்ம மலமானது ஏறுவினை (ஆகாமியம்), இருப்பு வினை (சஞ்சிதம்), ஏன்ற வினை (பிரார்த்தம்) என முத்திறப்படும் என்றும், கன்ம பல போகங்களை நுகர் (அனுப) விக்கும் இடங் (தானங்க) ளாகிய துறக்க (சுவர்க்க), இருளுலகங்கள் ( நரக லோகங்கள்) உண்டென்றும், அங்ஙனம் நுகருங் (அனுபவிக்குங்) கால் அடையத்தக்க தேவர், அலகை முதலிய பிறவி (யோனி) பேதங்கள் உண்டென்றும், இங்ஙனம் இறந்து பிறந்து வருவதால் மறுபிறப்புக்கள் உண்டென்றும், அழிப்பு (சங்காரம்) இளைப்பொழித்தலாகும் என்றும், பிறவிப் பெருங்கடலைக் கடக்கத்தக்க வாயில்களை (உபாயங்களை) அறிவிக்கும் விதி நூல்களாகிய வேத சிவாகமங்கள் உண்டென்றும், அவற்றிற் கீடாக ஒழுகுங்கால் செய்யப்படுங் கன்மங்கள் நல்வினை தீவினைகளென இருதிறப்படூஉ மென்றும், இவைகளும் ‘திருஷ்ட சன்ம போக்கியம்’, ‘அதிருஷ்ட சன்ம போக்கியம்’, ‘திருஷ்டாதிருஷ்ட சன்ம போக்கிய்’ மென மூவகைப்படும் என்றும், அக் கன்ம பேதங்களால் போக பேதங்கள் உண்டென்றும், கன்ம பயன்கள் நுகர்ச்சியாவது உறுதி (அனுபவமாவது நிச்சயம்) என்றும், அப் பயன்களையும் இறைவனே உயிர்களுக்குக் கொடுப்பன் என்றும், அங்ஙனமாயினும் சிவாகமங்களின் வழி ஒரு வினைக்கு மற்றோர் வினையால் அழிவுண்டென்றும், கடமை (தருமங்) களைச் செய்யவேண்டுமென்றும், அவற்றைத் தக்கவர் தகாதவர் (பாத்திரா பாத்திரம்) அறிந்து செய்யவேண்டுமென்றும், கடமை (தருமங்) குள்ளே வேள்வி சிறந்ததென்றும், அதனினும் உயிரிரக்கம் (சீவகாருணியம்) மிகச் சிறந்ததென்றும், அதுவும் அருளில்லாதவழி கூடாதாகையால் உயிர்கள் மாட்டு அருள் வேண்டுமென்றும், அவ்வருள் இல்லாதவர் எத்தகையரானாலும், அவர்கள் வீடுபேற்றுத் திளைப்பு (மோட்சலோகாநுபவம்) இல்லையென்றும், அங்ஙனஞ் செய்கின்ற வினைகளும் ஒருவன் செய்தது அவனைச் சார்ந்தார்க்கும் ஆகுமென்றும், முத்தியுலகமானது தேவலோகத்துக்கு மேலுள்ள தென்றும், அதனை அடைவதற்கு நிலையும் நிலையாமையும் அறியும் ஞானம் (நித்தியா நித்திய வஸ்து விவேகம்) முதலாவதான காரண (சாதன) மென்றும், வேறு சிறந்த சாதனங்களும் உண்டென்றும், அவைகளைக் கடைப்பிடித்து மனம் வாக்குக் காயங்களால் முதல்வனை வழிபட வேண்டும் என்றும், அங்ஙனம் வழிபட்டார்க்குப் பிறவி (பெத்த) நீக்கமும் வீடு (முத்தி) பேறும் உண்டென்றும், முத்தியிலும் முப்பொருள்களும் முதல்வன் உதவியும் (உபகாரமும்) உண்டென்றும், முதல்வனின் அடிசேர் முத்தியே சித்தாந்த முத்தி என்றுங் கூறுவர். நாயனார்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. 1                        என்ற திருக்குறளால் ‘சற்காரியவாதம்’ கூறுகின்றதனானும், மேற்படி குறளில் உலகு என்றதனால் காட்சியளவையும் (காட்சிப் பிரமாணத்தையும்,) ‘ஆதிபகவன் முதற்றேயுலகு’ என்றதனால் கருதலளவையும் (அனுமானப் பிரமாணத்தையும்).

 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல். 543

 

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்

தள்ளாது புத்தே ளுளகு. 290

 

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு. 610

 

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 322

 

என்ற திருக்குறள்களால் உரையளவையும் (ஆகமப் பிரமாணத்தையும்) உடம்படுதலானும், கடவுள் வாழ்த்து என்ற அதிகாரம் கூறியதனாலும்,

 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார். 10             என்பது முதலிய திருக்குறள்களானும் கடவுள் ஒருவரே உண்டென்றும்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. 1                            என்ற திருக்குறளால் அக்கடவுள் சித்தாந்தத் தெய்வமாகிய ஆதிசத்தியாரோடு கூடிய சிவமே (சிவபரம்பொருளே) என்றும் கூறுதலானும்,

 

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை. 327

 

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்

நன்மை குறித்தது சால்பு. 1013

 

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 322

 

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22          என்ற திருக்குறளால் எண்ணில்லாத உயிர்கள் உண்டென்று கூறுதலானும்,

 

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

 

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு. 352

 

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய். 359

 

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்

நாமம் கெடக்கெடும் நோய். 360   என்ற திருக்குறள்களால் ஆணவமலம் ஒன்றுண்டென்று கூறுதலானும்,

 

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல். 505            என்ற திருக்குறளால் கரும மலத்தை உடம்படுதலானும்,

 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. 1                    என்ற திருக்குறளால் உலகுக்கு முதற்காரணமாகிய மாயா மலத்தையும், “ஆதி பகவன்” என்றதனால் “ஆதி சத்தியாகிய திரோதான மலத்தையும்’, “உலகு” என்றதனால் மாயைக் காரியமாகிய ‘மாயேய’ மலத்தையும் உடம்படுதலானும்,

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்

தவாஅப் பிறப்பீனும் வித்து. 361

 

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்

தவாஅது மேன்மேல் வரும். 368

 

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின். 369

 

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும். 370

 

என்ற திருக்குறள்களால் ‘ஆகாமிய‘ கன்மத்தையும்,

 

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை. 36

 

என்ற திருக்குறள்களால் ‘சஞ்சித‘ கன்மத்தையும்,

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி. 371

 

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால

ஊட்டா கழியு மெனின். 378

 

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும். 380

 

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும். 619

 

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர். 620

 

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்

பலரறியார் பாக்கியத் தால். 1141       என்ற திருக்குறள்களால் ‘பிராரத்த‘ கன்மத்தையுங் கூறதலானும்,

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு. 58

 

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது. 101

 

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற. 213

 

நல்லாறு எனினுங் கொளல்தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று. 222

 

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு. 234

 

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்

தள்ளாது புத்தேள் உலகு. 290

 

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு. 1103

 

புலத்தலின் புத்தேள்நா டுண்டோ நிலத்தோடு

நீரியைந் தன்னார் அகத்து. 1323                                       என்ற திருக்குறள்களால் ‘துறக்கம் உண்டென்று கூறதலானும்,

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும். 121

 

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும். 168

 

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல். 243

 

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு. 255

 

என்ற திருக்குறள்களால் நிரயத்தைக் கூறதலானும்,

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்

தெய்வத்துள் வைக்கப் படும். 50

 

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு. 58

 

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல். 84

 

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு. 86

 

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும். 121

 

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும். 167

 

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு. 234

 

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்குல். 269

 

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்

செல்லாது உயிருண்ணுங் கூற்று. 326

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு. 610

 

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. 1081

 

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு. 1083                                என்ற திருக்குறள்களால் தேவர்கள் உண்டெனக் கூறுதலானும்.

 

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும். 850                                     என்ற திருக்குறள்களால் அலகை உண்டெனக் கூறுதலானும்.

 

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு. 107

 

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு. 339

 

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்

தவாஅப் பிறப்பீனும் வித்து. 361

 

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும். 362

 

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து. 398

 

இன்மை எனவொரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும். 1042

 

இம்மைப் பிறப்பின் பிரியலம் என்றேனாக்

கண்ணிறை நீர்கொண் டனள். 1315                                           என்ற திருக்குறள்களால் மறுபிறப்புக்கள் உண்டெனக் கூறுதலானும்.

மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்திரா

என்னல்லது இல்லை துணை. 1168                           என்ற திருக்குறளால் அழிப்பும் அருளலின் (சங்கராமும்) அநுக்கிரகத்தின் பொருட்டே எனக் கூறுதலானும்.

 

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134                                என்ற திருக்குறளால் நான்மறையை உடம்படலானும்,

 

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார். 6    என்ற திருக்குறளால் சிவாகமத்தை உடம்படலானும்,

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல். 543

 

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில். 549

 

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர். 550                                                   என்ற திருக்குறள்களால் சாதி (வருண) பேதங்களைக் கூறுதலானும்,

 

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை. 41

 

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றிற் புறத்தாற்றின்

போஒய்ப் பெறுவது எவன் 46

 

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. 50

 

வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின்

ஈண்டுஇயற் பால பல. 342

 

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றை யவர். 348                           என்ற திருக்குறள்களால் நிலைகள் ‘ஆச்சிரம’ பேதங்களை உடம்படலானும்,

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின் 96                             என்ற திருக்குறளால் கன்ம பேதங்களாகிய நல்வினை தீவினைகளைக் கூறுதலானும்,

 

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும். 264

 

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும். 265                               என்ற திருக்குறளால் எடுத்த பிறப்பின் (திருஷ்ட ஜன்ம) போக்கிய கன்மமும்,

 

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பந் தரும். 98                           என்ற திருக்குறளால் இம்மை மறுமைப் பிறப்புக்களின் (திருஷ்டாதி திருஷ்ட ஜன்ம) போக்கிய கன்மமும்,

தவமுந் தவமுடையார்க்கு ஆகும் அவமதனை

அஃதிலார் மேற்கொள் வது. 262                                என்ற திருக்குறளால் தவப் பிறப்பின் (அதிருஷ்ட ஜன்ம) போக்கிய கன்மமும் உண்டெனக் கூறதலானும்.

 

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. 37

 

இலர்பல ராகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர். 270   என்ற திருக்குறள்களால் கன்ம பேதத்தால் போக பேதங் கூறுதலானும்,

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும். 207

 

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா

பிற்பகல் தாமே வரும். 319

 

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால

ஊட்டா கழியு மெனின். 378

 

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர். 514                                                  என்ற திருக்குறள்களால் கன்ம பலன்கள் அனுபவமானது நிச்சயமென்று கூறுதலானும்,

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. 377       என்ற திருக்குறளால் இறைவனே கன்ம பலனைக் கொடுப்பனெனக் கூறுதலானும்,

 

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின் 96                                                 என்ற திருக்குறளால் ஒரு வினைக்கு மற்றொரு வினையால் கூறுதலானும்,

 

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை. 36

 

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்குங் கல். 38

 

என்பது முதலிய திருக்குறள்களால் கடமைகளைச் (தருமத்தைச்) செய்ய வலியுறுத்தலானும்,

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன். 87

 

உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து. 105

 

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார். 104

 

என்ற திருக்குறள்களால் அறத்துக்குத் தக்கார் தகாதாரை (தருமத்துக்குப் பாத்திரா பாத்திரத்தை ) உடம்படலானும்,

 

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன். 87

 

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259

 

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

ஆன்றாரோ டொப்பர் நிலத்து. 413

 

என்ற திருக்குறள்களால் வேள்வியை உடம்படலானும்,

 

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. 204

 

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு. 255

 

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259

 

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி

ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. 252

 

என்ற திருக்குறள்களால் உயிரிரக்கம் கட்டாயமானது ( சீவகாருணியம் அவசியம்) என்றும், வேள்வியினும் சிறந்த தென்றுங் கூறுதலானும்,

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல். 243

 

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு. 247

 

என்ற திருக்குறள்களால் வீட்டுலகத்தை (மோட்ச லோகத்தை) அடைய உயிர்களிடத்து அருள் பாலித்தல் கட்டாயம் (அவசியம்) எனக் கூறுதலானும்,

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின். 62

 

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும். 63

 

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்

நாணுடையான் சுட்டே தெளிவு. 502

 

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பை தரும். 508

 

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும். 166

 

என்ற திருக்குறள்களால் ஒருவன் செய்த வினை அவனைச் சார்ந்தார்க்கும் ஆகும் எனக் கூறுதலானும்,

 

யான்எனது என்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும். 346

 

என்ற திருக்குறளால் தேவலோகங்களுக்கு அப்பாற்பட்டு மேலுள்ளது முத்தியுலகம் எனக் கூறுதலானும்,

 

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு. 351

 

என்ற திருக்குறளால் ‘நித்தியா நித்திய வஸ்து விவேகம்’ கூறுதலானும்,

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன். 341

 

யான்எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும். 346

 

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு. 350

 

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு. 352

 

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி. 356

 

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும். 362

 

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின். 369

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும். 370

 

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. 24

 

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு. 27

 

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து. 126

 

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்

நன்குடையான் கட்டே தெளிவு. 513

 

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. 267

 

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயி ரெல்லாந் தொழும். 268                         என்ற திருக்குறள்களால் முத்தியடைதற்குரிய சிறந்த காரணங்களை (சாதனங்களை)க் கூறுதலானும்,

 

 

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். 3

 

என்பது முதலிய திருக்குறள்களால் மனத்தாற் செய்யப்படும் வழிபாட்டையும்,

 

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

 

என்ற திருக்குறளால் வாக்காற் செய்யப்படும் வழிபட்டையும்,

 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின். 2

 

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை. 9

 

என்ற திருக்குறள்களாற் காயத்தாற் செய்யப்படும் வழிபாட்டையும் கூறுதலானும்,

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய். 359

 

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்

நாமம் கெடக்கெடும் நோய். 360

 

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு. 352

 

என்ற திருக்குறள்களால் பிறவி(பெத்த) நீக்கமும் முத்திப் பயனுங் கூறுதலானும்,

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்

முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. 1186

 

என்ற திருக்குறளால் முத்தியிலும் முப்பொருளும் முதல்வன் உபகாரமும் உண்டென்று கூறுதலானும்,

 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார். 10

 

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். 3                      என்ற திருக்குறள்களால் அடிசேர் முத்தியாகிய சித்தாந்த முத்தியைக் கூறுதலானும், ‘திருவள்ளுவ நாயனார் சித்தாந்த சைவர்’ என்பது தேற்றம்.

 

 

 

முற்றும்

 திருவள்ளுவரின் சமயக் கொள்கை (T.C.S.ராமச்சங்குப் பாண்டியன்)

 திருவள்ளுவரின் சமயக் கொள்கை  (T.C.S.ராமச்சங்குப் பாண்டியன்)

திருவள்ளுவரை ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமயத்தைச் சேர்ந்தவராகக் கூறுகின்றனர்.

“மலர்மிசை ஏகினான்” என்பது பற்றிப் புத்தனைக் குறிக்கும் என்று பெளத்தரும், அருகனைக் குறிக்கும் என்று சமணரும் கூறுவர். மேலும் சமணர் எண்குணத்தான் என்புழி எட்டுக் குணங்களும் அருகனுக்குரிய கடையிலாவறிவு, கடையிலார் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா வின்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை, அழியாவியல்பு என்பனவேயாகும் என்பர். சமணர் உலகம் நித்தியம் என்னும் கொள்கையர். “மூவா முதலா உலகம் ஒரு மூன்றும்” என்பது அவர் கொள்கை.

ஆயின் வள்ளுவர் உலகமும் அழிவதே என்னுங் கொள்கையர் அதனை “ஒறுத்தார்க்குகாருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் புகழ்” (156) என்றார்.

எனவே உலகம் அழியும்வரை நிற்பது புகழ் என்பது பெறப்படும்.

ஈண்டுப் “பொன்றுந் துணையும் புகழ்” என்று மட்டுமே கூறியதால் உலகம் பொன்றுந் துணையும் புகழ் எனக் கொண்டால் என்னை? எனின்; உடம்பு உள்ளளவும் உள்ளது ஒளி (உபசாரம்) எனவும், உடம்பு அழிந்த பின்னரும் நிற்பதே புகழ் என்பதே மரபு. நாலடியாருள்,

“உண்ணான் ஒளிநிறான் ஓங்குபுகழ் செய்யான்

துன்னருங் கேளிர்துயர் களையான் – கொன்னே

வழங்கான் பொருள்காத் திருப்பானேல் ஆஅ

இழந்தா னென்றெண்ணப் படும்”

என்று ஒளி இறக்கு மட்டும் நிற்பது என்றும் புகழ் இறந்தபின் வருவது என்றும் கொள்ளப்பட்டது பெறப்படும். அம்முறையே வள்ளுவரும், ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளியொருவற்

கஃதிறந்து வாழ்து மெனல் (971) என்றும்

நிலவரை நீழ்புக ழாற்றுற் புலவரைப்

போற்றாது புத்தே னாலகு (234)      என்றும்

கூறுமாற்றான் ஒளி என்பதற்கும் புகழ் என்பதற்கும் உள்ள பொருள் வேறுபாட்டை மரபுப்படி கொண்டு பாடியுள்ளார் என்பது பெறப்படும்.

எனவே “பொன்றுந் துணையும் புகழ்” என்பதற்கு உலகம் அழியும் வரை நிற்பது புகழ் எனக் கொள்ள வேண்டும். அங்ஙனமாக உலகத்தின் நிலையாமையை உடன்பட்டவர் என்பது பெறப்படும். அவ்வாறு கொண்டது “மூவாமுதலாவுலகம்” என்ற சமணக் கொள்கையை மறுக்குமாகலின் சமணர் ஆகார் என்பது பெறப்படும்.

பெளத்தருள் மாத்தியமிகர் எல்லாஞ் சூனியம் என்பவர். யோகாசாரர் புறப்பொருள் சூனியம் என்பர். செளந்திராந்திகரும் வைபாடிகரும் நான்கு புதங்களை மட்டுமே உடன்படுவர். ஆயின் வள்ளுவர்

“சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே யுலகு” (27) என்று

ஐம்பூதங்களையும் உடன்படுதலால் பெளத்தரும் ஆகார் என்பது பெறப்படும்.

ஏகான்மவாதிகள் பரப்பிமத்தோடு கூடுதலே – அஃதாவது குடம் உடைந்தவழிக் குடாகாயமும் மகாகாயமும் கூடுமாறு போலக் கூடுதலே – முத்தி என்பர். ஆயின் வள்ளுவர், “நற்றாள் தொழாஅர்” (2) என்றும் “மாணடி சேர்ந்தார்” (3) “வேண்டுதல் வேண்டாமையிலானடி சேர்ந்தார்” (4); “தனக்குவமை யில்லாதான் தாள் சேர்ந்தார்” (7) “அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்” (8), “எண்குணத்தான் தாளை வணங்காத் தலை (9), “இறைவனடி சேராதார்” (10) என்றும் அடி சேர்தலையே முத்தி எனக் கொள்கின்றார். பரப்பிரமத்திற்கு அடி முதலிய உறுப்புக்கள் இல்லாததால் ஏகான்மவாதியும் ஆகார் என்பது பெறப்படும். மேலும் “வகுத்தான் வகையல்லால்” (377) என்றும் “பற்றுக பற்றற்றான் பற்றினை” (350) என்றும் கடவுளும் உயிர்களும் வெவ்வேறு என்னும் கொள்கையர் என்பதால் ஏகான்மவாதியில்லை என்பது வலியுறுத்தப்படும்.

இனி வள்ளுவரை வைணவர் எனலாமோ எனின் அதுவும் பொருந்தாது. ஏனெனில் வைணவ ஆகமங்களில் விண்டுவிற்கு எட்டுக் குணங்கள் கூறப்படவில்லை. அன்றியும் வள்ளுவர் காமத்துப் பாலில் புணர்ச்சி மகிழ்தல் என்னும் அதிகாரத்துள்

தாழ்வீழ்வார் மென்றோட் டுயிலினிது கொள்

தாமரைக் கண்ணா னுலகு (1103)

என்று வைகுண்டத்தைக் காட்டிலும் மொன்றொட்டுயில் இனிது என்று கூறுமாற்றான் வைகுண்டத்தைத் தாழ்த்திக் காட்டினார். வைணவராயின் அவ்வாறு கூறியிருக்கமாட்டார். எனவே வள்ளுவர் வைணவராகார் என்பது பெறப்படும்.

இனி எண்குணம் என்பதை அணிமாவை முதலாக வுடையன வெனவும் உரைபாருமுளர் என்று பரிமேலழகர் காட்டியுள்ளார். அணிமா முதலிய எட்டாவன:- அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. அணிமா முதலியன மக்களாலும் முயன்று பெறப்படுதலின் குணமாக முடியாது. ஏனெனில் குணமாவது குணியோடு ஒற்றித்து. நிற்பதாகலின் அவ்வாறு ஒற்றித்து நில்லாது முயன்று பெறப்படும் சித்தியாகலின் அவற்றைக் குணமெனக் கொள்ள இயலாது.

எனவே பரிமேலழகர் “இவ்வாறு சைவாகமத்திற் கூறப்பட்டது” என்றார். எண்குணங்களாவன;_

  1. தன்வயத்தனாதல் – சுவதந்திரத்துவம்
  2. தூயஉடம்பினனாதல் – விசுத்ததேகம்
  3. இயற்கை உணர்வினனாதல் – நிராமயான்மா
  4. முற்றுமுணர்தல் – சருவஞ்ஞத்துவம்
  5. இயல்பாகவே பாசங்களினீங்குதல் – அனாதிபோதம்
  6. பேரருளுடைமை – அலுப்த சத்தி
  7. முடிவிலாற்றலுடைமை – அநந்த சத்தி
  8. வரம்பிலின்பமுடைமை – திருப்தி.

“எட்டுவான் குணத் தீசனெம் மானை” என்று திருநாவுக்கரசரும், “இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தினானை யிறையவனை மறையவனை எண்குணத்தினானை” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அருளிச் செய்தவாற்றானும் “இறைவனுக்கு எண்குணமுண்மை சிவாகம நூற்றுணி வென்றறிக” என்று நாவலர் கூறுமாற்றானும் அறியப் படும்.

சைவாகமத்திற் கூறப்பட்டது என்னுமாற்றான், ஒரு நூலை முன்னிட்டு கொள்ள வேண்டும் என்னுங் கொள்கையர் என்பது “சாதலறாய் கூறுமாக்கந்தரும்” (83) என்றும் “நூலோர் தொகுத்தவற்றாள் எல்லாந் தலை” (322) என்றும் கூறுமாற்றான் அறியப்படும். ஆயின் எண்குணம் என்புழி எந்நூலை முன்னிட்டுக் கூற வேண்டும்? “பொறிவாயிலைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க நெறி” என்றும் அந்நெறி நின்றார். “நீடுவாழ்வார்” என்றும் வள்ளுவர் கூறுகின்றார்.

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்

` நிற்க அதற்குத் தக” (391)

என்றும் கூறுகின்றார். நிற்க என்ற தனால் ஒழுகு தலையும் கற்க என்றதனால் நூலையும் குறிக்கும் என்பது அறியப்படும். எனவே பொய்தீர் ஒழுக்க நெறி என்பது பொறிவாயில் ஐந்துவித்தானான் கூறப்பட்டது என்பது பெறப்படும். அது பற்றியே பரிமேலழகரும் “ஒழுக்கநெறி ஐந்த வித்தாறாற் சொல்லப்பட்டமையின் ஆண்டை யாறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது” என்றார். அவ்வாறு ஒழுக்கநெறிக்கண் நின்றார். நீடுவாழ்வார் என்று சாதனமும் பயனும் கூறப்பட்டமையின் ஒழுக்க நெறி என்பது நூலையே குறித்து வற்புறுத்தும் என்பது பெறப்பட்டது. எனவே அந்நூலுள் மேற்கண்ட எண்குணமும் கூறப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறான நூல் சைவாகம் ஆகலின் சைவாகமத்திற் கூறப்பட்டது என்க.

மேலும் வள்ளுவர் “நற்றாள்” (2) என்றும் “மாணடி சேர்ந்தார்” (3) என்றும் “வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்” (4) என்றும் “தனக்குவமை யில்லாதான் தாள் சேர்ந்தார்” (7) என்றும் “அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்” (8) என்றும் “எண்குணத்தான் தாளை வணங்காத் தலை” (9) என்றும் “இறைவனடி சேராதார்” (10) என்றும் அடிசேர் முத்தியையே விதந்து கூறினார். அடிசேர் முத்தி சைவ சித்தாந்தத்திற்கே ஏற்புடையதாகலின் அதனானும் வள்ளுவர் சைவ சித்தாந்தி என்பது பெறப்படும்.

ஆயினும் அவரைச் சைவர் என்பதைச் சகித்துக்கொள்ள இயலாதார் தற்போது ஒரு புதுக் கொள்கையைப் புகுத்துகின்றனர். முதல் எட்டுக் குறளில் கூறப்பட்ட ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இறைவன், பொறிவாயிலைந்தவித்தான், தனக்குவமையில்லாதான், அறவாழி யந்தணன் என்பனவே, ஒன்பதாவது குறளில் கூறப்பட்ட எண்குணங்களாகும் என்பர். ஆயின் அவர் அதிகாரத் தலைப்பாகக் கூறப்பட்ட கடவுள் என்பது ஒரு குணமாகலின் அதனைக் காணாததுபோல் விட்டனர். அதனைக் கூட்டினால் குணம் ஒன்பதாகுமாகலின் விட்டனர் போலும். அவ்வாறு மறைந்து குன்றக் கூறலாகுமே என்பதை மறந்தனர்.

மேலும் பொய்தீர் ஒழுக்க நெறி என்பது பொறி வாயிலைந்தவித்தானாற் சொல்லப்பட்டது என்பதை மறந்தனர். அந்த ஒழுக்க நெறி நின்றாரே. நீடுவாழ்வார் என்று கூறியதையும் மறந்தனர். எனவே பொய்தீர் ஒழுக்க நெறியுட் கூறப்பட்ட எண்குணங்களே கொள்ளப் படுவதென்பதையும் மறந்தனர். எனவே ஒன்பது குணங்களை எட்டாக வெட்டி இழுக்கப்பட்டனர். அதனானும் அவர் சைவர் என்பதே வலியுறுத்தப்படும்.

ஆயின் கோ.வடிவேலுச் செட்டியார் “இவ்வதிகாரத்தின் 1,2,4,5,7,10 வது எண்ணுள்ள குறள் முதற் கடவுளையும் 3வது எண்ணுள்ள குறள் அயனையும், 6,8 வது எண்ணுள்ள குறள்கள் அரியையும், 9வது குறள் அரனையும் வாழ்த்துதலாம்” என்று கூறியுள்ளாரே எனிற் காணலாம்.

பரிமேலழகர் முதற்குறளின் இறுதியில் “முதற்கடவுளதுண்மை கூறப்பட்டது” என்றபின் அதனைத் தொடர்ந்து வரும் மற்றக் குறட்பாக்களும் முதற்கடவுளைப் பற்றியே கூறுவதாகத்தான் அமையும். அது பற்றியே பரிமேலழகர் 2வது குறளில் “ஆகம வறிவற்குப் பயன் அவன்றாளைத் தொழுது பிறவியறுத்த லென்பது இதனாற் கூறப்பட்டது” என்றும் 6வது குறளுரையில் “இவை மூன்றுபாட்டானும் அவனை நினைத்தலும் வாழ்த்தலும் வணங்கலும் செய்யா வழிப்படுங் குற்றங் கூறப்பட்டது” என்றும் 10 வது குறள் உரையில் “உலகியல்பை நினையாது இறைவனடியையே நினைப்பார்க்குப் பிறவி யறுதலும் அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்கு அஃதருமையுமாகிய இரண்டும் இதனால் நியமிக்கப்பட்டன என்றும் கூறினார். மேலும் இடையிடையே தொடர்புப் பொருத்தம் இல்லாமல் அயன் அரி அரன் என்பவரையும் வாழ்த்தினார் என்பது பொருந்தாது. மேலும் அவ்வாறு வள்ளுவர் கருதியிருந்தால் அக்கருத்துக்களையும் ஆங்காங்கே பரிமேலழகர் எடுத்துக் காட்டியிருப்பார். மேலும் அயனையும் அரனையும் ஒவ்வொரு செய்யுளானும் அரியை மட்டுமே இருசெய்யுட்களால் வாழ்த்தினார் எனச் செட்டியார் கூறுவது பொருந்தாது. அவ்வாறு கொள்வது அரியை உயர்த்தியும் மற்ற இருவரையும் தாழ்த்திக் கூறுவதாக அமையும், அவ்வாறு வள்ளுவர் செய்யுள் செய்திருக்க முடியாது. எனவே வடிவேல் செட்டியார் வலிந்து பொருள் கூறியது வள்ளுவரின் கருத்துக்கு மாறுபட்டது என்பது பெறப்படும். எனவே வள்ளுவர் சைவசித்தாந்தி என்பது நாட்டப்படும்.

திருச்சிற்றம்பலம்

 

 

திருக்குறள் பொது நூலா? ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை

  திருக்குறள் பொது நூலா?

  சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை;; திருநெல்வேலி பேட்டை

                                                   தோற்றுவாய்

விஞ்ஞானிகள் அதிகரிக்கின்றனர். விஞ்ஞானம் வளர்கிறது. அதனால்   அற்புதங்கள் பல ஆக்கம் பெறுகின்றன. ஆயினும் அவற்றுள் தீங்கு பயப்பன  பல. அவையும் நலத்துக்குப் பயன்படுத்தப்படுமா? அத்தீங்கு அகற்றப்படுமா? அவ்வாசையோடு செய்யப்படும் முயற்சிகளுமுள. நலம் பயக்கும் அற்புதங்களும் பலவே. ஆனால் எதிர்பாராத விதத்தில் ஆபத்துக்கள் அவற்றாலும் விளைவதுண்டு. எப்படியும் அவ்வற்புதங்கள் அற்புதங்களே. அவற்றால் உலகம் செழிக்கிறது. நாகரிகம் மேற்போகிறது. மக்கள் சுகிக்கின்றனர். அதனை நாமுஞ்  சம்மதிக்கலாம்.

விஞ்ஞானிகளுக்குப் புகழுண்டு. காணாதவற்றையெல்லாம் அவரறிவு கண்டு வருகிறது. ஆயினும் அவர் நூற்றுக்கணக்கானவரே. ஆனால் அவர் கண்ட அற்புதங்களை அனுபவிப்பவரோ கோடானு கோடியர். எனினும், ஆக்கும் அறிவு போல்வதாமா அனுபவிக்கும் அறிவு? மோட்டார் வண்டியைக் கண்டுபிடித்தவனது அறிவு சிறந்தது. அதில் ஏறிச் செல்பவனுக்கு அவ்வண்டி பற்றிய அறிவு எவ்வளவிருக்கும்? அப்படியிருந்தும் அதில் ஏறிச் செல்கிறவரும் தம்மறிவை மெச்சிக் கொள்கின்றனர். இன்றையவுலகில் அவர் பிறந்தார், இருக்கிறார். அதனால் அவரும் தம்மைப் புத்திசாலிகளென எண்ணிக் கொள்கின்றனர். முன்னோரை இகழ்ந்து பேசுமளவுக்கு அவரிடம் அச்செருக்கு மிகலாயிற்று.

மனிதனுக்கு ஆசையுண்டு. அதற்கு அளவோ? அதையளக்க முயன்றர் பூர்விகர். உலகெல்லாம் ஒரு குடைகீழ் வைத்து ஆள்கிறான் ஓர் அரசன். ஆயினும் அவனாசை அடங்கவில்லை. கடல்மீதிலும் தன் ஆணையைச் செலுத்தலாமா எனவும் அவன் நினைக்கிறான். ஆசைக்கோரளவில்லை. அதைக் காட்ட அக்கடலோடு நின்றனரவர். ஆனால் இன்றைய நிலையென்ன? ர்ஷிய ராக்கெட் வானிற் பறந்தது. எத்தனையோ இலக்கம் மைல்கள் மேற்சென்றது. சந்திரனைத் தாண்டியது. சூரியனையும் எட்டிவிட்டதாம். வானத்திற் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சில வருஷங்களே கழிக. அதற்குள் இவ்வுலக மக்கள் அக்கிரகங்களிற் போய் உலவுவர். அங்கும் மக்கள் உளரானால் அவரோடுந் தொடர்பு கொள்வர். போக்குவரத்துக்கான சாதனங்கள் விருத்தியாகும். போக்குவரத்தும் தொடர்ந்து நிகழலாம். அங்கு மக்கள் இல்லையானால் அக்கிரகங்கள் ஆக்கிரமிக்கப்படும். இவ்வுலக மக்களுக்கு அந்நம்பிக்கையுண்டு. இவருக்கு ஆசை மென்மேலும் வளர்கிறது. ஆனால் ஒன்று. அந்தக் கிரகங்களிலிருந்து எவரும் இவ்வுலகத்துக்கு இதுவரை வந்ததில்லை. அங்கு மக்களில்லையா? அவருக்கு ஆசையில்லையா? விஞ்ஞானம் வளரவில்லையா? என்னவோ? இங்குள்ளவரின் அறிவும் ஆசையும் முயற்சியும் நிதர்சனம். அவர் அங்குச் செல்ல முந்திக் கொண்டனர். இவராலாவது எல்லாக் கிரகங்களிலுமுள்ள மக்கள் விரைந்து சந்திக்க. அளவளாவுக, கொண்டுங் கொடுத்துங்குலாவுக. கடவுளென ஒருவரிருந்தால் அவரும் அதற்குத் துணை புரிக.

மற்றைக் கிரகங்களில் விஞ்ஞான வளர்ச்சி இருந்தாலுஞ் சரி இல்லாவிட்டாலுஞ் சரி. இங்குள்ள விஞ்ஞானிகள் அங்கு செல்ல நேர்ந்தால் இவரால் அங்கும் விஞ்ஞானம் வளரக்கூடும். அது அங்குள்ளோர்க்குப் பெரும் பாக்கியம். அதனால் எல்லாக் கிரகங்களுக்கும் பொது நலப் பேருபகாரிகள் விஞ்ஞானிகளேயென்பது தெரிகிறது. அவரால் கிரகங்களின் வக்கிரச் செயல் கூட மறையக்கூடும்.

ஆனால் பாரதி

‘வள்ளுவன் றன்னை யுலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’

என்றார். திருவள்ளுவரை அவ்வளவு புகழவேண்டுமாஅவரறிவு அதற்குத் தகுதியுடையதாபுகைவண்டி, வானொலி கருவி, வானவூர்தி முதலிவற்றுள் ஒன்றிரண்டையாவது அன்றே அவர் கண்டு பிடித்திருக்கலாம். அது செய்தாரா? எல்லாக் கிரகங்களையும் நேசப்படுத்த அவரால் முடிந்ததா? அவராற் கிடைத்தது ஒரு நூல். அன்று முதல் இன்று வரை அந்நூலாற் பயனெய்தியவர் எத்தனைபேர்ஒருவரிருவர் பெயர்தானும் யார்கேனுந் தெரியுமாஅந்நூற்குப் பயன்றான் என்னைஅந்நூல் இவ்வுலகத்துள்ள மக்களைத்தானும் ஒன்றுபடுத்தியதாஅவ்வினாக்களுக்கு விடை இன்றுங் கிடைத்தபாடில்லைஎனவே பாரதி பாடிய அப்புகழ் பொருளுடையதாமா? சிந்திக்கவல்லார் சிந்திக்க.

இப்படி நான் கூறுகிறேன். அது திருவள்ளுவரை இகழ்வதாகும் என்பார் சிலர். அதற்காக அவர் என்மேற் சீறவுஞ் செய்யலாம். எல்லாம் அறிந்தவருமில்லை. ஏதும் அறியாதவருமில்லை. எல்லார்க்கும் ஒவ்வொன்றெளிது என்பது ஒரு நியாயம். விஞ்ஞானிகளும் அறிஞர்திருவள்ளுவரும் அறிஞர்முன்னவரறிவு ஒருவகைபின்னவரறிவு இன்னொரு வகை. அவரறிவு இவருக்கில்லை. இவரறிவு அவருக்கில்லை. இங்ஙனம் திருவள்ளுவருக்கும் ஒரு வகை வகுத்து அவரறிவை அவ்வளவில் தடுத்து வைப்பார் சிலர். அதனால் திருவள்ளுவரும் அறியாதன பல, அது பற்றி அவருக்கும் அறியாமையுண்டு என்பது அவருக்குங் கருத்தாகும். அவர் தான் என்மேற் சீறுபவர். அச்சீற்றத்தில் அர்த்தமில்லை.

உண்மையில்உலகிற்கே திருவள்ளுவர் ஓர் ஒப்பற்ற மேதைதான். அவரை நன்கு அறிந்தவரே அவரறிவுடைமையைப் புகழ்தற்குரியார். அவரை நன்கு அறிதலாவது யாது? சூரிய மண்டலத்தை எட்டிவிட்டதாகச் சொல்லப்படும் ராக்கெட்டை ஆக்கியவரது அறிவு சாமானியமானதன்று. திருவள்ளுவரறிவும் அன்னதே. ஆனால் யாருடைய அறிவையும் மதிப்பது இரண்டு வழியாலாம். ஒன்று அவரிடமிருக்கும் அறிவின் விளக்கம் பற்றியது. இன்னொன்று அவரை விட்டு நீங்கியிருக்கும் அறியாமை பற்றியது. அறிவு விளங்கப் பெற்றவன் அறிஞனாஅறியாமை நீங்கப் பெற்றவன் அறிஞனா? இப்படி வினவிச் சிந்திக்க வேண்டும். அறிவு விளங்கப் பெற்றவரெல்லாம் அறியாமையில்லாதவரென்று சொல்ல முடியாது. அறியாமை நீங்கப் பெற்றவரை அறிஞரெனத் துணிந்து சொல்லலாம். அவரே தெள்ளறிஞர். ராக்கெட்டையனுப்பிய விஞ்ஞானிக்கும் அறியாமையுண்டுபிற விஞ்ஞானிகளுக்கும் ·துண்டுஅது கலவாத அறிவு பிராகிருதராயுள்ள எவரிடமுமில்லை. ஆனால் திருவள்ளுவரிடம் அவ்வறியாமை இம்மியுங் கிடையாது. அ·தறவே நீங்கப் பெற்றவர் அவர். அவர் போன்றோர் ஒரு சிலரேயுளர். அவரெல்லாம் பிராகிருதத் தொடர்பைக் கடந்தவர். திருவள்ளுவரை அறிவுடையாரென்பதை விட அறியாமை அறவே நீங்கப் பெற்றாரெனக் கொண்டு போற்றுபவன் நான்.

 மக்களிடம் அறியாமையும் உண்டு. அ·து எதனால் வந்தது? எப்போது வந்தது? யாராலாவது தரப்பட்டதா? அவரேதேடிக் கொண்டனரா? அதற்கு மூலம் யாது? அ·து அறவே தீரக் கூடியதா? அல்லது குட்டம், குன்மம் முதலிய நோய்கள் போல் அவ்வப்போது செய்யப்படும் சாந்தியளவில் அடங்கிப் பிறகு துன்புறுத்திக் கொண்டிருப்பதா? அறவே தீர்தற்கு வாயிலென்ன? அவற்றையெல்லாம் விசாரித்து ஆவன செய்ய வேண்டும். அவ்வகையில் பிராகிருத நூல்கள் சிறிதும் பயன்படா. சமய நூல்களே உதவக் கூடியன. சமயங்கள் பல. ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்த நூல்களும் அநேகம். ஆயினுமென்? அறியாமையைப் பற்றிய விளக்கமான செய்தி எந்தச் சமயத்திலுண்டுஅந்தச் சமய நூல்களின் சகாயம் வேண்டும்அந்த நூல்களே கற்பவைதிருவள்ளுவர் அவற்றைக் கசடறக் கற்றிருப்பர்கற்றபின் அதற்குத் தக நின்றிருப்பர்அதனால் அவரறியாமை அறவே நீங்கியிருக்கும்அவர் தெள்ளறிஞரானார்அச்சமயம் எதுபார்க்கலாம்.

உரைகள்

திருவள்ளுவர் தந்த நூல் திருக்குறள். அதற்கு உரைகள் பல. அவை பத்து என்றொரு கணக்குண்டு. பத்தாவதாகவுள்ளது பரிமேலமுகரியற்றியது. இந்நூலில் அவர் பெயர் வருமிடங்களில் அழகரென்று சொல்லப்படுவார்அவர் போய்ச் சில நூறு வருடங்களாயின. அக்காலை இத்தமிழகம் எத்தனையோ தமிழ்ப் புலவர்களைப் பெற்றது. இலக்கணிகள், தார்க்கீசர், கவிகள், உரையாசிரியர், நீதிநூல் வல்லார், அரசியல் வல்லார், இன்பநூல் வல்லார், வீட்டு நூலார் எனப் பல துறைகளில் வல்லவர் வந்து போயினர். புலமைப் பஞ்சம் இங்கில்லை. அவரால் ஆக்கப்பட்டு இப்போது கிடைத்தது வரும் நூல்களே அதற்குச் சான்று. ஆனால் அவருள் திருக்குறளுக்குப் பதினோராவது உரையாசிரியராக எவரும் வந்திலர்காரணமென்னகெளரவ புத்தி கொண்டு சிந்திக்க. விடை கிடைக்கவே செய்யும். அவ்விடைக்காலத் தமிழ்ப் பெரும் புலவரனைவராலும் அவ்வழகருரை அங்கீகரிக்கப்பட்டது என்பதே விடை. அவ்வுரை இலக்கண தருக்க வரம்புடையது. நடுநிலையிலிருந்து நூலாசிரியர் கருத்தை வாங்கி விளக்குவது. பல ஞான நூல்களிற் பயின்று எழுதப்பட்டது. மக்களையுயர்த்த வேண்டுமென்ற கருணையாலியன்றது. ஆனால் சென்ற சில ஆண்டுகளாகப் பல புத்துரைகள் வெளிவரலாயின. அவற்றுள் நான் சிலவுரைகளைப் படித்தேன். அவை திருக்குறள் கூறும் உண்மைகளைப் புலப்படுத்தவில்லை. தான்றோன்றித்தனமாக எழுதப்பட்டன. உரைக்காரனின் அபத்தக் கொள்கைகள் புகுத்தப்பட்டன, காசு கொடுப்பவரைக் களிப்பிக்கப் போந்தன. நூலைக் கருதாமல் காலத்தைக் கருதின. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாலும் இறங்கலாம். அப்போலியுரைகளைக் கொண்டு சபையேற முடியாது. ஏறினால் அச்சபை பரிகசிக்கும். அவ்வுரைகளுங் கணக்கிற் சேர்ந்தன. இப்போது அவ்வுரைகளின் தொகை பத்தைத் தாண்டி விட்டது. நான் அவற்றையெல்லாம் விட்டுவிடுகிறேன். பிராமண ஸ்தானத்தை வகித்து வருகிற அழகருரையைத் தழுவித் திருக்குறளுக்குப் பொருள் காணு முகத்தால், திருவள்ளுவர் ஆசரித்த சமயம் எதுவாயிருக்குமென ஆராய்வதே இந்நூலின் நோக்கம்.

நூற்பெயர்

 திருக்குறளுக்கு ஒன்பது பெயர்கள் காணப்படுகின்றன. ஆசிரியர் வைத்தனவா அத்தனையும்? ஒன்றிரண்டு அவரிட்டனவாயிருக்கலாம். அவ்வப்போது தோன்றிய புலவர் பெருமக்கள் பலர். அவர் அந்நூலை ஊன்றிப் படித்திருப்பர். அதன் நயம் அவருள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்கும். அதனால் மதிப்புரை பல வழங்கியிருப்பாரவர். அம்மதிப்புரைகளே அப்பெயர்கள். அவ்வொன்பதுக்கு மேலும் அன்ன பெயர்கள் இருந்திருக்கலாம். அவை நூலருமையைச் சரியாக விளக்கியிரா. அதனால் கால வெள்ளத்தில் மறைந்து போயிருக்கும். இன்றுவரை நிலைத்திருப்பன அவ் வொன்பது. அவை தள்ளப்படுவன அல்ல. போற்றபடுவனயென்பது அதனாற் புலனாம். அவற்றுட் சிலவற்றை இயைபுபற்றி இங்கு ஆராய வேண்டும்.

பொதுமறை

‘பொதுமறை’ யென்பது ஒரு பெயர். பொதுவுடைமையென்ற சொல்லையெடுத்துக்கொள்க. ரஷியப் பொதுவுடைமைசீனப் பொதுவுடைமையெனப் பலவுள. ரஷியர் சீனப் பொதுவுடைமையில் உரிமை கொள்ளமுடியாது. சீனர் ரஷியப் பொதுவுடைமையில் அப்படியே. அவ்வத்தேச வரம்பு அப்போது வென்னுஞ் சொல்லைக் கட்டுப்படுத்தி அவ்வுடைமையை அவ்வத்தேசத்தார்க்கே உரிமையாக்குகிறது. பொதுவென்னுஞ் சொல்லைப் பற்றிக் கொண்டு எவனும் எல்லாத் தேசங்களின் பொதுவுடைமைகளிலுங் கைவைக்கமாட்டான். வைத்தால் கை தறிபட்டுப்போம். அதுபோல் திருக்குறள் பொது மறையாயினும் அப்பொதுவுக்கும் வரம்புண்டு. அவ்வரம்பைக் கண்டு அதற்கு வெளியில் நிற்பவர் அந்நூலைத் தம்மதெனக் கொள்ளாதிருப்பதே நல்லது.

ஒரு தேசத்திற் பிறந்தவர் அத்தேசத்துக்கு மாத்திரம் பொதுமக்கள்யாமெல்லாம் பொதுவெனச் சொல்லிக்கொண்டு ஒரு தேசத்து மக்கள் மற்றத் தேசங்களுக்கும் பொதுவெனச் சொல்லிக் கொள்ளமாட்டார்அது போலப் பொதுமறையென்பதிலுள்ள பொதுவெனுஞ் சொல் தனக்கெனவொரு பொருளையுடையதுஅதைவிட்டு அச்சொல்லே கொண்டு அம்மறை தனக்குப் புறம்பான மறைகளுக்குந் தன்னையுரியதெனச் சொல்லிக் கொள்ளமாட்டாது.

பொதுமக்கள் என்பதொரு பிரயோகம். அப்பொதுவை எவரும் தம்பாற் சார்த்திக்கொள்ள விரும்பார். பொதுமறையென்பதிலுள்ள பொதுவும் அங்ஙனமே.

சித்தாந்த சாத்திரங்களிற் சொரூப லட்சணம், தடத்த லட்சாம் என்ற பிரயோகங்களுள. அவை முறையே சிறப்பியல்பு, பொதுவியல்பு எனத் தமிழிற் பெயர்க்கப்படும். த்ருக்கத்தில் சாமானியம் விசேடம் என இரண்டிலக்கணங்களுள. அவற்றுக்கும் முறையே பொது, சிறப்பு என்பன தமிழ். அப்பொதுக்களின் பொருளும், பொது மறையென்பதிலுள்ள பொதுவின் பொருளும் ஒன்றாகுமா?

சிதம்பர ஆலயம் பொதுவெனப்படும். அப்பொதுப் போன்றதா பொதுமறை யென்பதிலுள்ள பொது?

‘வேதமொ டாகம மெய்யா மிறைவனூ

லோதும் பொதுவுஞ் சிறப்புமென் றுன்னுக’

என்றது திருமந்திரம். சிவாகமமென்னுஞ் சிறப்புநூலொன்றுண்டு. அது பற்றி அவ்வேதம் பொதுநூலெனப்பட்டது. அப்பொதுவும், பொதுமறைப்பொதுவும் சமந்தானா?

தெய்வநூல் எதுவும் வயிநயிகருக்குத்தான் வேண்டப்படும் திருக்குறளுந் ‘தெய்வநூல்’. அது பிராகிருதருள்பட அனைவருக்கும் பொதுவாதல் யங்ஙனம்?

சூரியன் சந்திரன் முதலியவை எல்லார்க்கும் நலஞ் செய்வன வாய்ப் பொதுவாகும் என்பர் சிலர்.

‘அல்லவை புரியா ரேனு மறிவினற் பெரிய ரேனு

மெல்லவர் தமக்கு நண்பா யினியவே புதிதற் பாற்றோ

பல்லுயிர்த் தொகைக்கு மின்பம் பயந்திடு மதிகண் டன்றோ

புல்லிய கமல மெல்லாம் பொலிவழிந் திட்ட வன்றே’

என்ற கந்தபுராணச் செய்யுளால் அவையும் வெறுப்புக் கிலக்காதல் அறியப்படும். அவற்றின் பொதுமைப்போல் பொதுமறைப் பொதுமையும் இருக்குமா? அறிஞர் சிந்தனையில் இன்னும் பல பொதுமைகள் தோன்றலாம். அவற்றையுஞ் சேர்த்துக் கொள்க. பொதுமறையென்பதிலுள்ள பொதுமையென்னுஞ் சொல் தெளிவான விளக்கத்தை வேண்டி நிற்றல் காண்க.

ஆனால் ஒன்று சொல்லப்படும் எல்லா மதங்களுஞ் சம்மதிக்கக் கூடிய அறங்களின் தொகுப்பே திருக்குறள், அதுபற்றி அந்நூலைப் பொதுமறையென்னலாம் என்பது அது. அதுவுஞ் சரியன்று. ஏன்? அப்பொதுவறங்கள் அவ்வச் சமயத்திலேயே கூறப்பட்டுள்ளன. எச் சமயத்தாரும் தம் சமய நூல்களிலேயே அவற்றைக் கற்றுக் கொள்வர். அவர்க்குத் திருக்குறள் அநாவசியம். மேலும் அதிற் காணப்படும் பொதுவறங்களத்தனையும் சர்வ மத சம்மதமுமல்ல. பொதுவறங்கள் Natural Religion என்றும், சிறப்பறங்கள் Revealed Religion என்றும் ஆங்கிலத்திற் சொல்லப்படும். சமயந்தோறும் சிறப்பறங்களுமுள. ஒவ்வொரு சமயமும் மோக்ஷமென ஒரு லக்ஷ¢யத்தை வைத்துக் கொண்டிருக்கிறது. பொதுவறங்களைத் தழுவினாலே போதும், மோக்ஷம் சித்திக்கும் என எச்சமயமுஞ் சொல்லாது. பொதுவறங்களோடு சிறப்பறங்களையும் அனுட்டிக்கவேண்டும். அவ்வனுட்டான பரருக்குத்தான் அச்சமயத்தின் மோக்ஷமுண்டு. அங்ஙனமே ஒவ்வொரு சமயமும் தன் சமயத்தவர்க்கு உபதேசிக்கிறது. திருக்குறள் அச்சிறப்புத் தருமங்களையுஞ் சொல்லாமல் விட்டிருக்குமானால் அந்நூலால் மக்களுக்கு முடிவான லக்ஷ¢யங் கிடைக்கப் போவதில்லையென்பது உறுதி. ஏதாவது ஒரு சமயமும், அதற்கேயுரிய சிறப்பறங்களும் மக்களுக்கு உறுதி பயப்பன என்பது அவருள்ளத்திற்பட்டிருந்தால், அவற்றையும் ஆசிரியர் அந்நூலிற் சொல்லத்தான் வேண்டும், சொல்லியேயிருப்பர். இன்றேல் அந்நூல் முற்றுப் பெற்றதாகாது. அவரும் மக்களுக்காக அதனைச் செய்தவராகார். ஆனால் இவ்வுலக வாழ்க்கையை விரும்புவார் மிகப்பலர். அவர்பாற் பரிபாகம் குறைவு. அவரையும் வழிப்படுத்த வேண்டும். அதற்கான ஒழுகலாறுகளுமுள. அவற்றை ஆசிரியர் அந்நூலில் அதிகமாகச் சொல்லிவைத்தார். மறுவுலக வாழ்க்கையை விரும்புவார் வெகு சிலரே. உள்ளம் பக்குவப்பட்டவர் அவர். அவருக்கு வேண்டும் ஒழுகலாறுகள் வேறு. அவற்றைச் சுருக்கமாகச் சூசகமாகச் சொன்னாற் போதும். அப்படித் தான் அவை சொல்லப்பட்டிருக்கின்றன. சத்திநிபாதர்க்கு வேண்டும் சிவாகமவுண்மைகளைச் சுருக்கமாகவும் சூசகமாகவும், உலகர்க்கு வேண்டுவனவற்றை விரிவாகவும் வெளிப்படையாகவுந் தன்பாற் கொண்ட வேதம் அவ்வியல்புபற்றிப் பொதுநூலெனப்படும். அம் முறையிற் செல்வது திருக்குறள். அது பொதுநூல் எனப்படாது பொதுமறை எனப்படாது பொதுமறை யெனப்பட்டது அவ்வுண்மையைக் காட்டவேயாம். அங்ஙனம் பொதுநூல் என்பதிலுள்ள பொதுவிற்குரிய பொருளைப் பொதுமறையென்பதிலிருந்து பொதுவுக்குப் பொருத்துவதுதான் பொருத்தமென எனக்குத் தோன்றுகிறது.

                                                          திருவள்ளுவர்

திருக்குறளுக்குத் திருவள்ளுவரென்பது இன்னொரு பெயர். தொல்காப்பியர் செய்த இலக்கணம் தொல்காப்பியம். சேனாவரையர் செய்தவுரை சேனாவரையம். பாணினீ செய்த வியாகரணம் பாணினீயம். அவற்றிற்கு அவ்வாசிரியன்மாரின் பெயர் அப்படியே வரவில்லை. ஈறு திரிந்தே வந்திருக்கிறது. ஆனால் திருக்குறளுக்குத் திருவள்ளுவம் என்ற பெயரில்லை. ஆசிரியர் பெயர் திரியாமல் நூலுக்கு வந்துள்ளது. திருவள்ளுவம் வள்ளுவம் என்பன நேற்றுத் தோன்றின. திருவள்ளுவர் என்ற பெயரின் பொருட் சிறப்பையறியாதார் இட்டன அவை. கடல் மீனுக்கு நுளையனிட்டது பெயர் என்பது பழமொழி. பெருநூல்களின் பெயர்களெல்லாம் அப்படித்தான் வந்தனவென அவர் எண்ணிக் கொண்டனர் போலும். இல்லாவிட்டால் திருவள்ளுவரெனப் பெயரிக்கும்போது அப்பெயர்கள் இடவும் துணிந்திருப்பாரா அவர்? அவர் கிடக்க, திருவள்ளுவரென்ற பெயரிட்ட பெரும் புலவருக்குக் கருத்து யாதாயிருக்கலாம். வேதத்துக்குச் சுயம்பு என்பது இன்னொரு பெயர். அப்பெயர் வரக் காரணத்தை ஆராய்ந்தனர் வேத பண்டிதர் பலர். சுயம்பு என்றால் தானே உண்டானது என்று அர்த்தம். வேதம் ஒருவராலும் ஆக்கப்படாமல் தானே யுண்டானது. அதனால் சுயம்பு எனப்பட்டது என்றனர் ஒரு சாரார். சுயம்பு எனபது சிவபெருமானுக்குப் பெயர், வேதம் அவரால் ஆக்கப்பட்டதால் ஆசிரியர் பெயர் நூலுக்காய் வேதமும் சுயம்பு எனப்பட்டது என்றனர் பிறிதொரு சாரார். அப்புலவருக்கு முற்கருத்துச் சம்மதமன்று, பிற்கருத்தே உடன்பாடு, அதை உலகிற்குத் தெரியப்படுத்த வேண்டும். சுயம்புவென்னும் சிவபெருமானாற் செய்யப்பட்ட வேதம் சுயம்பு எனப்படும் என்ற கொள்கையை அங்கீகரிக்கும் பிற்கால சந்ததியார்க்குத் திருட்டாந்தமொன்றுந் தேவை. திருவள்ளுவர் என்ற ஆசிரியர் பெயரைத் திரிவு செய்யாமல் திருக்குறளுக்கும் இட்டுவைத்து அவ்விரண்டையும் பூர்த்தி செய்தார் அப்புலவர். வேதத்துக்குச் செய்யாமொழி யெனவும் பெயருண்டு. செய்யாமொழியென்பது மனிதராற் செய்யப்படாத நூல் என்ற பொருளுடையது. வேதம் அபெளருஷேயம் என்றதன் பொருளும் அதுவே.

வேதம் கடவுளாற் செய்யப்பட்டதென்பது திருக்குறளிலுங் கண்டவுண்மை.

‘பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்’ (6)

என்றது நூல். ‘அவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறி – அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண்’ என்பது உரை. ஒழுக்க நெறி ஐந்துவித்தானாற் சொல்லப்பட்டமையின் ஆண்டை ஆறனுருவு செய்யுட் கிழமைக்கண் வந்தது. ‘கபிலரது பாட்டு என்பது போல’ என்பது குறிப்பு.

‘நல்லாற்றா னாடி—‘ (242)

என்றது நூல். ‘நல்லாற்றான் – அளவைகளானும் பொருந்துமாற்றானும் நன்றான நெறியி§லே நின்று’ என்பது உரை. அளவைகளாவன —-காட்சியும், —-அனுமானமும் கருத்தா மொழியாககிய ஆகமுமென மூன்று என்பது குறிப்பு.

‘யாமெய்யா —–‘ (300)

என்றது நூல். ‘யாம் மெய்யாக் கண்டவற்றுள் – யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள்’ என்பது உரை. ‘மெய்யுணர்த்துவனவற்றை மெய்யென்றார். அவையாவன தங்கண் மயக்கமின்மையின் பொருள்களை யுள்ளவாறுணரவல்லராய்க் காமவெகுளிகளின்மையின் அவற்றை யுணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர். அருளான் உலகத்தார் உறுதி யெய்துதற் பொருட்டுக் கூறிய வாகமங்கள்’ என்பது குறிப்பு.

‘பற்றுக பற்றற்றான் பற்றினை—‘ (350)

என்றது நூல். ‘பற்று அற்றான் பற்றினைப் பற்றுக – எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை இதுவே நன்னெறியென்பது மனத்துக் கொள்க’ என்பது உரை. ‘பற்றற்றான் பற்றென்புழி ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது’ என்பது குறிப்பு. இப்பிரமாணங்கள் அவ்வுண்மையைப் புலப்படுத்தும்.

உத்தர வேதம்

 உத்திர வேதம் என்பதும் திருக்குறளுக்குப் பெயர். வேதம் என்ற சொல் சம்ஸ்கிருதம். அச்சொல் யோகப் பெயர். யோகப் பெயரெனினும் காரணப் பெயரெனினும் ஒன்றே. வேதம் என்பது அறிதற் கருவி, அறிவு நூல் என்னும் பொருளுடையது. ஆயினும் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கிற்கும் அ·து ரூடியுமாம். ரூடிப் பெயர் – இடுகுறிப் பெயர். எவ்வித அடையுமின்றி வேதம் என்று சொன்ன மாத்திரத்தில் அதற்கு இருக்காதி நான்குமே பொருள். ஆகையால் வேதம் என்ற சொல் இருக்காதியவற்றுக்குக் காரண இடுகுறி அல்லது யோகரூடிப் பெயராயிற்று. ஆயுள் வேதம், தனுர்வேதம், காந்தர்வவேதம் முதலியவை அடையடுத்து வெவ்வேறு நூல்களைக் குறிக்கும்.

இக்காலத்தில் அவ்வேதத்தை நிந்திக்கச் சிலர் தலைப்பட்டனர். வேதம் என்பது காரணப் பெயர், அறிவு நூலென்பது அதற்கருத்தம். ஆகலின் அறிவு நூல்களெல்லாம் வேதமே என்பரவர். அவர் காரண இடுகுறிப் பெயரென்னும் இலக்கணப்பகுதிக்கு உலைவைக்கும் இலக்கணக் கொலைஞராவர். அவருள் சாத்தனென்பானொருவன். ஒரு நாள் அவன் அமர்வதற்கு நாற்காலியொன்று வேண்டியிருந்தது. அதனை யெடுத்துவரச்சொல்லி தன் பிரதம மாணாக்கனை ஏவினானவன். அவனிடம் வேதமென்னுஞ் சொற்பொருளைக் கேட்டிருந்த அறிவோடு அம்மாணாக்கன் நாற்காலியைக் கொண்டுவரச் சென்றான். கழுதையொன்று எதிர்ப்பட்டது. அதுவும் நாற்காலிதானேயென்பது அவனுடைய எண்ணம். அவன் அதைக் கொண்டுபோய்த் தனக்கு இலக்கணஞ் சொல்லிக் கொடுத்த குருவாகிய அச்சாத்தன் முன் நிறுத்தி அக்குருவை அதன்மேல் அமரும்படி வேண்டினான். அக்குரு கோபிக்கலாமா? காரண இடுகுறிப் பெயரைக் காரணப் பெயரளவில் வைத்துப் பொருள் கூறித் திரிவதற்கு அப்பதவியே தகும். வேதம் இருக்காதிகளுக்குக் காரண இடுகுறிப் பெயராயிருந்துவருவது சித்தம். திருக்குறள் உத்தரவேதமாயின், இருக்கு முதலிய நான்கும் பூர்வவேதமாகும். உத்தரம் – பின்னர் வந்தது. பூர்வம் – முன்னருள்ளது. பூர்வவேதமில்லையாயின் திருக்குறளுக்கு உத்தரவேதமெனப் பெயர் கொடுக்கப்பட்டிராது. பூர்வத்தை உத்திரம் எதிர்த்துச் சொல்வதில்லை. அநுசரித்தே செல்லும். எதிர்த்துச் செல்வது உத்தரமெனப்படாது. அப்பெயரிட்ட புலவர் இருமொழியிலும் வல்லவராய் அவ்வேத பண்டிதராயுமிருந்திருப்பரென

பல கடவுளர்

‘இந்திரன்’ (25), ‘செய்யபவள்’ (167), ‘தவ்வை’ (167), ‘அடியளந்தான்’ (610), ‘கூற்று’ (765)

முதலிய பல கடவுளரின் பிரஸ்தாபம் திருக்குறளிலுண்டு. அவரும் இருபாலாராயிருக்கின்றனர்.

‘வானோர்க்கும்’ (18), ‘அகல் விசும்புளார்’ (25), ‘தேவரனையர்’ (1073)

என்ற பிரயோகங்களால் எண்ணிறந்த கடவுளருண்மை அதிற் சம்மதிக்கப் பட்டது புலனாம். ‘மூவரு முப்பத்து மூவரு மற்றொழிந்த தேவரும்’ என்ற திருவாசகத்தோடு அவற்றையியைத்துக் காண்க. ஆனால் ஒரே கடவுள் தானுண்டு என்கிற சமயங்களும் பலவே. தோட்டியின் குடில்போல்வன அவை. அக்குடிலில் தோட்டி தலைவன் தான். ஆனால் அடிமைகள் கிடையா. திருவள்ளுவர் கொண்ட சமயமோ அரசமாளிகை போல்வதுஅங்குத் தோட்டி முதல் மந்திரி வரை ஆயிரக் கணக்கான ஊழியர் இருப்பர்அரசன் அத்தனை பேருக்கும் ஆண்டவன்அதிகாரிதலைவன்அச்சமயத்திலும் மாணிக்கவாசகர் அருளியது போல் கணக்கிலடங்காக் கடவுளரிருப்பர்அவரெல்லாந் தொண்டர்கள்அச்சமயத்து இறைவன் ஒருவனேஅவனே தலைவன்அக்கடவுளரடங்கலும் அவனுக்கு உடைமையே. அங்ஙனமாகத், தோட்டிக் குடில்கள் போன்ற மதங்கள் திருக்குறளைத் தமக்கும் உரியதாக எப்படிச் சொல்லலாம்? மேலும் அந்நூலில் வருகிற கடவுளர் அம்மதங்களுக்கு உடன்பாடுமல்ல.

பொய்ச் சமயங்களும் மெய்ச் சமயமும்

 பொய்வந்துழலுஞ் சமயங்கள் பலவாயிருக்கலாம். ஆனால் மெய்ச் சமயம் ஒன்றே தான் இருக்க முடியும் என்பது ஆசிரியரின் அழுத்தமான கொள்கை.

‘இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’ (5)

என்றது நூல். இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து’ என்பது உரை.

‘இறைமைக் குணங்களிலராயினாரை உடையரெனக் கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேரா வாகலின், அவை முற்றவுமுடைய இறைவன் புகழே பொருள்சேர் புகழெனப்பட்டது’ என்பது குறிப்பு.

வேதசிவாகமங்களிற் பிரஸ்தாபிக்கப்படும் இறைவன் ஒருவனுளன், அவனே முழுமுதற் பொருள், அவ்விறைவன்பாலுள்ள குணங்கள் அவனுக்கேயுரியன. அவையே இறைமைக் குணங்கள். அவனைக் கண்டு அக்குணங்களைச் சொல்லிச் சொல்லிப் புகழ வேண்டும். அவனைக் காண்டலாலது வேதாகமங்கள் கூறும் அவனுண்மையை அளவைகளால் துணிதல். அங்ஙனம் கண்டு அக்குணங்களாற் புகழ்வது அவன் விஷயத்தில் பொருள்சேர் புகழாகும். அதற்கு ஒரே சமயந்தான் இருக்க முடியும். இரண்டு மூன்று இருக்கலாமென்பது அறியாமை. மற்றைச் சமயங்கள் எத்தகையன? அவ்விறைவனல்லாத பிற சேதனங்கனைத்தும் உயிர்கள். அவற்றுள் தத்தமக்கு இஷ்டமான ஒவ்வொருயிரை அச்சமயங்கள் எடுத்துக் கொண்டு அதன்மேல் அவ்விறைமைக் குணங்களையேற்றி அந்தந்தவுயிரையே தந்தம் இறைவனெனப் புகழும். அப்புகழ்களெல்லாம் பொருள் சேராப் புகழ்கள். அங்ஙனம் புகழ்பவர் அறிவிலார். ஒருவனைப் புகழ் விரும்பினால் முதலில் அவனையும் அவனிடமுள்ள குணங்களையும் ஆராய்ந்து கண்டுகொள்ளவேண்டும். பிறகு அக்குணங்களே கொண்டு அவனை புகழ வேண்டும். அவனைத் தெரியாமல் பிறனுக்குரிய குணங்களை அவனிடம் ஆரோபித்துப் புகழ்வது மடமை. இவ்வுண்மை கடைப்பிடிக்கற்பாலது. மெய்யான இறைவனை வணங்குஞ்சமயம் ஒன்றேயுண்டு. மற்றவையெல்லாம் போலியிறைவரை வணங்குஞ் சமயங்களே யென்ற வுண்மையைப் ‘பொருள்சேர் புகழ்’ என்ற தொடரால் ஆசிரியர் சூசிப்பித்தனர். அழகர் அதைப் பலருமறியப் பகிரங்கப்படுத்தினர். பொய்ச் சமயங்களில்லையானால் அத்தொடர் தோற்றற் கவசியமேயில்லைஅச்சமயங்கள் திருக்குறளிற் பாத்தியதை கொண்டாடலாமா?

இறைமைக் குணங்களும் இறைவனும்

 ஆதிபகவன்‘ (1) ‘வாலறிவன்‘ (2) ‘மலர்மிசையேகினான்‘ (3) ‘வேண்டுதல் வேண்டாமையிலான்‘ (4) ‘இறைவன்‘ (5) ‘பொறிவாயிலைந்தவித்தான்‘ (6) ‘தனக்குவமையில்லாதான்‘ (7) ‘அறவாழியந்தணன்‘ (8)

எனத் திருக்குறளில் எட்டுப் பிரயோகங்கள் வருகின்றன.

அவை இறைமைக் குணங்களை விளங்குவனவாகும். அக்குணங்கள் அந்த வரிசைப்படி தன்வயம், இயற்கையறிவு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேராற்றல், தூயவுடம்பு, வரம்பிலின்பம், பேரருள் என்பன. எண்குணத்தான் (9) என்பது அந்த எட்டு வகைப்பட்ட குணங்களையுடையான் என்னும் பொருளுடையதாய் அக்குணங்களின் தொகுப்புணர்த்தியவாறு. இறைமைக் குணங்களெனப் படுவனவெல்லாம் அவ்வெட்டினுள் அடங்கும்ஒன்பதாவதாக எண்ணத் தகுந்த, கருதத் தகுந்த குணம் வேறில்லை. எச்சமயத்திலுஞ் சொல்லப்பட்டிலதுஆகலின் எண் குணத்தான் என்பதற்குத் கருதத் தகுந்த குணமுடையான் எனப் பொருள் கூறுவது பயனற்றது. அப்பொருள் கூறுவார் தம் கருத்தை அத்தொடருக்குட் புகுத்துகிறாரென்க. மனிதனது கருத்தைக் கடந்தது இறைமைக்குணம். அந்த எட்டுக் குணங்களுஞ் சைவாகமத்திற் கூறப்பட்டன என்பதை நூலோடியைந்து அழகர் தங்கருத்தாகக் கொண்டார். அவை வைணவாகமத்திற் கூறப்படாமை அவருக்குத் தெரியும். ஆகலின் அவ்வாகமந் தள்ளப்பட்டது. அணிமா முதலியன சித்திகளே. குணங்களல்ல. கடையிலா வறிவு முதலியன ஆருகத நூற் கொள்கை. ஆருகதமோ நாத்திகம். ஆகலின் குறிப்பில் அவையெல்லாம் எடுத்துக் காட்டித் தள்ளப்பட்டன.

உலகில் உயிர்கள் பிறக்கின்றனபிறப்புச் சுகமுடையதாதுன்பமுடையதா?

‘பிறவிப் பெருங்கடல் —-‘ (10),

‘மாணாப் பிறப்பு’ (351),

‘பிறப்பென்னும் பேதைமை —-‘ (358),

‘வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை —‘ (362)

என்றது நூல். ‘காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின், பிறவிப் பெருங்கடலென்றார்’.

‘நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப் பிறப்பினுமுள்ளது துன்பமேயாகலின், மாணாப் பிறப்பென்றார். இதனாற் பிறப்புத் துன்பமென்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சையென்பதூஉங் கூறப்பட்டன’.

‘ஐவகைக் குற்றங்களுள் அவிச்சை ஏனைய நான்கிற்குங் காரண மாதலுடைமையின், அச்சிறப்புப் பற்றி அதனையே பிறப்பிற்குக் காரணமாக்கிக் கூறினார்’ என்பது குறிப்பு.

வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் – பிறப்புத் துன்ப மாதலறிந்தவன் ஒன்றை வேண்டிற் பிறவாமையை வேண்டும்‘ என்பது உரை.

இதனால் எவ்வகைப்பட்ட பிறப்புக்கும் அவிச்சையே காரணம், பிறப்புக்களெல்லாந் துன்பமே தருவன என்பது ஆசிரியர் கொள்கை. வினைகளில் தீவினை மாத்திரந்தான் பிறப்பைத் தருமென்பதில்லை. நல்வினையும் பிறப்புத் தருவதே.

‘இருள்சே ரிருவினையுஞ் சேரா —-‘

என்றது நூல். ‘இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினையென்னுமிரண்டு வினையும் உளவாகா’ என்பது உரை.

‘நல்வினையும் பிறத்தற்கேது —‘ என்பது குறிப்பு. ஆகவே இறைவனாயுள்ளவனுக்கு அவிச்சையும் இருவினையுங் காரணமாக வரும் பிறப்பு இருக்கமுடியாதென்பது திண்ணம். ஆனால் கடவுள் பிறக்கலாம், அவர் பிறப்பதற்கு அவிச்சையும், இருவினையுங் காரணமாகா, அவர் சுவேச்சையாற் பிறக்கிறார் என்று கூறி மகிழுஞ் சமயங்களுமுள. அவிச்சையும், இருவினையுங் காரணமாகாத பிறப்பும் உண்டெனத் திருவள்ளுவர் யாண்டுஞ் சொன்னதில்லை. தம் கடவுள் பிறப்பதற்கு அவரது சுவேச்சையே காரணம் எனக் கூறுகிற சமயங்கள் பிறப்பின் காரணத்தில் முரண்பாட்டையேற்றி மக்களுக்குப் பிறப்புப் பற்றிய கவலையும்அதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியும் உளவாகாதபடி தடுத்துவிடும்.

மேலும் ஆஸ்திகராயிருக்க விரும்புவாருக்கு ஒரு பொறுப்பான வேலையுண்டு. மெய்யான இறைவனாவான் எவன்? போலியிறைவராவார் எவர்? என்பதைக் கண்டு கொள்வதே அவ்வேலை. காண்டலாவது இதுவென்பதும், போலியிறைவராவார் இவரென்பதும் முன் சொல்லப்பட்டன. அவ்விருவகையாரையும் பிரித்தறிவதற்கு வாயில் ஒன்றேயுண்டு. மெய்யான இறைவன் பிறக்கமாட்டான். போலியிறைவரெல்லாம் பிறப்பர். பிறப்பின்மையும், பிறப்புண்மையுமே அவ்வாயில், சித்தியார் சூத்திரம் 2 செய்யுள் 25ல்

‘நால்வகை யோனியுள் ஒரு யோனிவாய்ப்பட்டுப் பிறப்பனயாவை அவையெல்லாஞ் சீவவர்க்கம். அவ்வாறு பிறத்தலில்லது யாது அது பதிப்பொரு ளென்னு மிது வொன்றே ஏனைச் செயல்களான் வேற்றுமையறிய வாராத வவ்விரண்டற்குந் தம்முள் வேற்றுமையறிய நிற்பதாகலின், ஏனைத் தேவரெல்லாம் அங்ஙனம் பிறந்திறத்தல் கேட்கப்படுதலானும்,’… என்றருளிய சிவஞான முனிவரின் உரையைக் காண்க. ‘வேதனைப்படு மிறக்கும் பிறக்கு மேல் வினையுஞ் செய்யும்’ என்ற குறைபாடுடைய உயிர்களுள் ஒன்றை இறைவனெனக் கொண்ட மதம் அக்குறைகள் தன் கடவுளுக்கில்லாதது போற் காட்டிப் பிரசார வேலைகள் பல செய்யும். அவையெல்லாம் வெற்றிரைச்சல். மாதாவுதரத்துட் கருவாய்த் தங்கி யோனிசனாக வெளிப்படுதல் என்னும் பிறப்பு உயிர்களுக்கேயுண்டு. இறைவனுக்கும் அ·திருந்தால் அவன் உயிர்களின் பிறவித் துன்பத்தை யொழிப்பதெப்படி? ஓட்டை மரக்கலம் பிறிதோரோட்டை மரக்கலத்தைக் கரையேற்றுமா?

இனிப், பிறவாமையைக் குணமாகவுடைய அம்மெய்யான இறைவன் யார்? திருவள்ளுவர் வேத சிவாகமங்களை இறைவன் வாக்கெனக் கொண்டு விசுவசித்தவர். அவர் கூறும் விடையைக் காணாலாம். வேதம்,

‘அஜாதோஜாத இத்யேவம் கச்சித் பீரு: ப்ரபத்யதே! ருத்யத்தே

தக்ஷ¢ணம் முகம் தேந மாம் பாஹிநித்யாச: !!’ (சுவேதா)

என்றது அதற்குத் தமிழ்

‘பெரும்பிணி யிதனைத் தீர்க்கு மருத்துவன் பிறவியில்லாப்

பரம்பொரு ளான முக்கட்பரமனே யென்று தேறி

முரண்பயில் விடையோன் றென்பான் முகத்தினைச் சரண்மெய்தி

விரும்பிவீ டுறுதற் பாலார் பிறப்பினை வெருவப் பெற்றார்’

என்ற காஞ்சிப்புராணம். அதனால் பிறப்பில்லாத இறைவர் சிவபிரானெ யென்பதும்அவரே உயிர்களைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து கரையேற்றுபவரென்பதும் பெறப்பட்டன.

 வேதம்,

 ‘தமீச்வராணாம் பரமம் மஹேச்வரம் தம் தைவதாநாம்

பரமஞ்ச தைவதம்! பதிம் பதீநாம் பரமம் பரஸ்தாத் விதாம

தேவம் புவநேச மீட்யம்!! நதஸ்ய காரியம் கரணஞ்ச

வித்யதே நதித் ஸமாச்சாப் யதிகச்சத்ருச்யதே’ (சுவேதா)

‘பராத் பரதரம் ப்ரஹ்ம யத் பராத் பரதோ ஹரி: ! தத்

பராத் பரதோ ஹீசஸ் தஸ்மாத் துல்யோ திகோநஹி! ‘ (சரபம்)

என்றது. அதற்குத் தமிழ்

‘மற்றாருந் தன்னொபா ரில்லான்’ (தேவாரம்)

‘……….கச்சிமயானத்தான்……………….

‘சங்கரோ பகவா நாத்யோ ராக்ஷ ஸகலா: ப்ரஜா:’,

‘மஹேசோ பகவா நாதி தேவ:’ (சரபம்)

எனக் கூறி வலியுறுத்துகிறது. ஆதிபகவன் என்பது அவ்விறைவனுக்கு உத்தேசம். உத்தேசம் – பெயர். பெயரை முதலிற் கூறாமல் இலக்கணங்காணவும், பரி¨க்ஷ செய்யவுங் கூடாது. அ·து உத்தேசம் என்பதைக் காட்டவே ‘ஆதிபகவன் – ஆதிபகவன்’ என்று உரை கூறினார் அழகர்.

‘சீர் கொளிறை யொன்றுண்டத் தெய்வநீ யென்றொப்பாற்

சோர்விலடை யாற்றெனிந் தேஞ் சோமேசா – வோரி

லகரமுதல வெழுத்தெல்லா மாதி

பகவன் முதற்றே யுலகு’

என்ற சிவஞான முனிவரர் திருவாக்கு அவ்வுண்மைகளனைத்தையும் விளக்கி நிற்பதறிக.

திருக்குறள் புணர்ச்சி மகிழ்தல் என்னும் 111 -ஆவது அதிகாரத்தில்,

‘தாழ்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொ

றாமரைக் கண்ணா னுலகு’ (1103)

என வருகிறது. அதில் செங்கண்மாலுலகம் நிரதிசயவின்பமுடையது என்றாரழகர். அங்ஙனமாயின் தாமரைக் கண்ணனாகிய திருமாலே பரம்பொருளெனக் கொண்டவராதல் வேண்டும் ஆசிரியர். அப்படியா? அன்று. ஏன்? ஊடலுவகை என்னும் 133-ஆவது அதிகாரத்தில் ஆசிரியர்

‘புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னா ரகத்து’ (1323)

என்றார். அதன் குறிப்பில் ‘அப்புலவி பின்னே பேரின்பம் பயவா நின்றது’ என்று காணப்படுகிறது. பேரின்பமும் நிரதிசயவின்பமும் ஒன்றே. புத்தேர் நாடென்பது எது?

‘புத்தேளுலகத்தும் – தேவருலகத்தும்’ (213)

என்ற உரையால் தேவருலகமே அதுவாம். இவ்வுலகத்தது சிற்றின்பம். அதை நோக்கத் தேவருலகம் பேரின்பத்தது. அதிற் சிறந்தது தாமரைக் கண்ணானுலகம். அவ்வளவே. அவ்வுலகை முத்தியுலகென்பதும், அக்கண்ணானைப் பரம்பொருளென்பதும் செல்லா. தாமரைக் கண்ணான் என்ற பிரயோகமே அதனை விளக்கும். திருமால் தம் கண்ணொன்றைப் பிடுங்கித் தாமரை பூவாகக் கொண்டு சிவபிரான் திருவடியில் அர்ச்சித்து அப்பிரானிடமிருந்து சக்கரத்தைப் பரிசாகப் பெற்றார். தாமரைக் கண்ணன் என்ற பெயரும் அவருக்குக் கிடைத்தது. அவ்வரலாற்றை,

‘யோவாம பாதார்ச்சித விஷ்ணு நேதரஸ் தஸ்மை ததெள

சக்ரமதிவ ஹ்ருஷ்ட:! தஸ்மை ருத்ராய நமோ அஸ்து!’ (சரபம்)

என்றது வேதம். அங்ஙனம் சிவபெருமானால் அநுக்கிரக்கிக்கப்பட்டவர் திருமால். அடுத்து,

‘அடியளந்தான் றாஅயது’ (610)  என்று தொடரைக் கவனிக்கலாம்.

‘அடியளந்தான் தாயது எல்லாம் – தன்னடியளவானே எல்லாவுலகையுமளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்’ என்றது உரை. திருமால் திரிவிக்கிரமவதாரத்தில் உலகைத் தம் பாதத்தால் அளந்தார்இறுதியில் அவ்வவதாரம் சிட்சிக்கப்பட்டதுசிட்சித்தவர் சிவபெருமானேவேதம் அச்சரிதத்தை.

‘யோ மத்ஸ்ய கூர்ம வராஹ ஸிம்ஹாந் விஷ்ணும்

க்ரமந்தம் வாமந மாதிதேவ:! விவிக்லபம் பீட்யமாநம்

ஜகாந பஸ்கீசகார மந்மதம் யமஞ்ச! தஸ்மை ருத்ராய

நமோ அஸ்து!’                                                                            என்று கூறி விளக்கியது.

‘குறளா யணைந்து மூவடிமண் கொண்டு நெடுகி மூவுலகுந்

திறலா னளந்து மாவலியைச் சிறையிற் படுத்து வியந்தானை

யிறவே சவட்டி வெரிநெலும்பை யெழிற்கங் காளப் படையென்ன

வறவோர் வழுத்தக் கைக்கொண்ட வங்க ணாளன் றிருவுருவம்’

 என்றது காஞ்சிப்புராணமும். அங்ஙனம் சிவபெருமானால் நிக்கிரகிக்கப் பட்டவர் திருமால். சிவபெருமான் செய்யும் நிக்கிரக அனுக்கிரகங்களுக்கு இலக்காயவர் திருமால். அடியளந்தான், தாமரைக்கண்ணான் என்பவற்றை அவ்வுண்மை விளக்கத்திற்காகவே ஆசிரியர் எடுத்தாண்டார். தாமரைக் கண்ணானுலகு மாயைக்குட்பட்டதொரு போகத்தானம். சிவலோகமே. மாயையைக் கடந்த முத்தித்தானம். அச் சிவபெருமானே மெய்யான இறைவனெனக் கொள்ளாத மதம் திருக்குறளுக்குப் புறம்பே.

 கடவுள் வாழ்த்தில் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை யேகினான் முதலிய ஆண்பாற் சொற்களே வருகின்றன. அவனைப் பெண்ணெனக் கொண்டு வணங்கும் மதம் அந்நூலுக்கு அயலே.

 

உயிர்

உயிரென்னுஞ் சொல் தனக்கெனப் பொருளில்லாதது என்கிறது ஒரு சமயம். உயிர் பிரமத்தின் விசேடணம் என்கிறது இன்னொரு சமயம். இறைவன் மனிதவுடலையுண்டாக்கி அதன் மூக்கில் தன் சுவாசத்தை ஊதி உயிரை இடையில் சிருட்டித்தான் என்கிறது மற்றொரு சமயம். இப்படிப் பட்ட சமயங்கள் இன்னும் பல. ஆனால் திருக்குறள்.

‘மன்னுயிர்’ (244), ‘மன்னுயிர்க்கு’ (318), ‘உடம்போ டுயிரிடை நட்பு’ (338) என்றது.

‘மன்உயிர் – நிலைபேறுடைய உயிர்கள்’ என்பது உரை.

‘உயிர்களெல்லாம் நித்தமாகலின், மன்னுயிரென்றார்’ என்பது குறிப்பு.

‘மன்உயிர்க்கு – நிலைபேறுடைய உயிர்கட்கு’ என்பது உரை.

‘சேதனமாய் அருவாய் நித்தமாய உயிரும், அசேதனமாய் உருவாய் அநித்தமாய உடம்பும் தம்முண் மாறாகலின், வினை வயத்தாற் கூடிய தல்லது நட்பில் வென்ப தறிக.’

என்பது குறிப்பு. உயிரைப் பற்றி விபரீத புத்தி கொண்டுள்ள மேற்காட்டிய சமயங்கள் உயிர் நித்தப் பொருளென்கிற திருக்குறளைத் தமக்கும் உகந்ததென்றல் வீண்பேச்சென்க.

இன்னும், உயிர் மனிதனுக்கேயுண்டு, மிருக முதலிய பிற பிராணிகளுக்கில்லை. அவற்றினிடங் காணப்படுவது இயற்கையுணர்ச்சி (Instinct) யே, அவையறந்தால் அப்போதே அவ்வுணர்ச்சியும் நசித்துச் சூனியமாய்ப் போம் எனக் கூறும் சில சமயங்கள். ஆனால்

‘தன்னுயிர் நீப்பினும் செய்ற்க தான்பிறி

தின்னுயிர் நீக்கும் வினை’ (327)

என்றது நூல். அதனால், ஏனைப் பிராணிகளுக்கும் உயிருண்டு, அவற்றிற்கு அவ்வுயிர் இனியதுமாகும் என்பது தெரிகிறது. பிராணிகளை வதை செய்வதும், வதைக்கப்பட்ட பிணங்களைத் தின்பதுமாகிய பாவங்களைச் செய்யத் தூண்டும் அச்சமயங்கள் திருக்குறளில் உரிமை கொண்டாடலாமா?

பிறப்பு

 மனிதன் ஒருமுறையே பிறப்பான் எனச் சில சமயங் கூறும், திருக்குறளோ,

‘பிறவிப் பெருங்கடல்’ (10)

 ‘எழுபிறப்புத் தீயவை தீண்டா’ (62)

 ‘உயிருடம்பி னீக்கியா ரென்ப செயிருடம்பிற்

செல்லாத்தீ வாழ்க்கை யவர்’ (330)

 ‘உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி

விழிப்பது போலும் பிறப்பு’ (339)                                   என்றது. ‘காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின், பிறவிப் பெருங்கடலென்றார்’ என்பது குறிப்பு.

எழுபிறப்பும் தீயவை தீண்டா – ‘வினை வயத்தாற் பிறக்கும் பிறப்பேழின்கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா’ என்பது உரை.

‘செயிர் உடம்பிள் செல்லாத் தீவாழ்க்கையவர் – நோக்கலாகா நோயுடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை யுடையாரை, உயிர் உடம்பின் நீக்கியார் என்ப – இவர் முற்பிறப்பின்கண் உயிர்களை அவை நின்ற வுடம்பினின்று நீக்கினவரென்று சொல்லுவார் வினை விளைவுகளையறிந்தோர்’ என்பது உரை.

‘உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறி மாறி வருகின்றாற்போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறி மாறி வருமென்பது கருத்து’ என்பது குறிப்பு. ‘உயிருடம்பின்’ என்ற திருக்குறள் உரையநுமானமுமாம். உயிர்கள் மாறி மாறிப் பிறக்கும் என்ற திருக்குறளுக்கு உயிர்கள் ஒரு முறை தான் பிறக்கும் என்ற சமயங்கள் உவப்புடையவாமா?

சுவர்க்க நரகம்

 சுவர்க்க நரகம் என வேறுலகங்களில்லை என்கின்றன சில சமயங்கள்.

 ‘புத்தே ளுலகத்தும் —-‘ (213)

‘தேவ ரனையர் கயவ ரவருந்தா

மேவன செய்தொழுக லான்’ (1073)

 ‘அண்ணாத்தல் செய்யா தளறு’ (255)

 என்றது நூல். ‘ஈவாரும் ஏற்பாருமின்றி எல்லாரும் ஒரு தன்மைய ராதலின், புத்தே ளுலகத் தரிதாயிற்று’ என்பது குறிப்பு.

அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் – அ·தியாதனானெனின், தேவரைப் போன்று தம்மை நியமிப்பாரின்றிக் கயவருந் தாம் விரும்புவனவற்றைச் செய்தொழுகலான்’ என்பது உரை.

 ‘நெடுங்காலம் நிரயத்து ளழுந்தும்’ என்பது குறிப்பு. அவற்றில் சுவர்க்கம் அங்குள்ள தேவர்களின் ஒழுகலாற்றோடு வர்ணிக்கப்படுவது காண்க. இவ்வுலகத்தில்லாத் நீண்ட கொடிய துன்பங்கள் நிறைந்தது நரகம் எனத் தெரிகிறது. அவற்றை மறுக்கும் மதங்கள் அந்நூலைத் தொடலாமா?

இறைவன் நிமித்த காரணம்

இறைவன் வேதாகமங்களை யியற்றினானென்ற விஷயம் முன் விளக்கப்பட்டது. ‘கற்றீண்டு’ (356) என்றதன் குறிப்பில் ‘வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை’ என்பதும் ‘பிறப்பென்னும்’ (358) என்றதன் உரையில் ‘வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளை’ என்பதும் காணப்படுகின்றன. ‘உலகியற்றியான்’ (1062) என்ற நூற்றொடருக்கு ‘இவ்வுலகத்தைப் படைத்தவன்’ என்பது உரை. அவனுக்குத் தனித்த உபாதான காரணத்தன்மையாவது, நிமித்தோபதான காரணத்தன்மை யாவது உண்டெனத் தொனிக்கும்படி தானும் ஒரு பாக்கூடச் செய்தாரிலர் ஆசிரியர். ஆகலின் அவன் உலகிற்கு நிமித்த காரணமேயாவானென்கிற திருக்குறளுக்கு நிமித்தோ பாதான காரணமாவா னென்கிற சமயங்கள் முற்றிலும் புறகே.

விச்சை

‘இன்ன தன்மைத்தென ஒருவராலுங் கூறப்படாமையின் அவிச்சையை இருள்’ என்றது 5இன் குறிப்பு. ‘ஒரு பொருளுங் காட்டா திருவளுருவங்காட்டு மிரு பொருளுங் காட்டாதிது’ என்பது திருவருட்பயன். இருள் பொருளைக் காட்டாது, தன்னை காட்டும்; ஆணவமலம் தன்னையுங் காட்டாது என்பது கருத்து. அங்ஙனமாய அவிச்சையை (ஆணவத்தை) இன்ன தன்மைத்தென யாராற் கூற முடியும்? ஒருவராலுமாகாது. ‘காமம், வெகுளி’ (360) என்றதன் குறிப்பு ‘அநாதியாய அவிச்சை’ யென்கின்றது. ஆணவம் அநாதியாய தொரு மலமென்பது கொள்ளப்பட்டது. அம் மலம் இல்லையென்ற சமயங்களுக்குத் திருக்குறளின் தொடர்பு ஏன்?

                                                                   வினை

வினை அல்லது கருமமலம் என்பதொன்றில்லையென்பர் சில சமயிகள். ‘இருள்சே ரிவினையும்’ (5) என்ற தொடருக்கு ‘மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினை யென்னு மிரண்டு வினையும்’ என்பது உரை. ‘அளவின்கண்’ (2860) என்றதன் உரைக் குறிப்பில் ‘அதற்கு (உயிர்ப் பொருளுக்கு) அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக்குற்ற விளைவுகள்’ என வருகின்றது. 338 – இன் குறிப்பு முன்னர்க் காட்டப்பட்டது. கருமமலம், உயிர்க்கு அநாதியாய் வருவதென்பது காண்க. அம்மலத்தை யில்லையென்பவர்க்குத் திருக்குறளிலுந் தொடர்பில்லையென்பது.

மாயை

 தத்துவ வுணர்வு, தத்துவ ஞானம், மெய்யுணர்தல் என்பன ஒன்று அ·தாவதென்னை?

‘சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே யுலகு’ (27)

என்றது நூல். தத்துவம் இருபத்தைந்து. அவற்றையறிந்தவனே உலகை யறிந்தவன். அவ்விருபத்தைந்தும் பிரகிருதி பிரகிருதியின்பாற்பட்டவை. சாங்கிய நூல் அவ்வளவே சொல்லும். புருடதத்துவமாவது பஞ்ச கஞ்சுகத்தோடு கூடியது. பஞ்ச கஞ்சுகங்களாவன காலம், நியதி, கலை, வித்தை அராகம் என்பன. அவை அசுத்த மாயா காரியங்கள். சுத்தமாயா காரியங்கள் வேறு. சைவ சமயத்தில் தத்துவங்கள் முப்பத்தாறு. அவை மாயேயாம். தோன்றி நின்று மறைவன. அவற்றிற்கு உபாதாநம் மாயை. அது நித்தம். அதனை உடன்படாத சமயிகளுக்குத் திருக்குறள் அயலாகும்.

உயிர் சேதனமாய் அருவாய் நித்தமாயுள்ள பொருள் என்பது முன்காட்டப்பட்டது. ‘புருடன் தானொன்றிற் றோன்றாமையானும்’ தன்கட்டோன்றுவனவின்மையானும் இரண்டுமல்லன்’ என்றது 27- இன் உரைக்குறிப்பு. புருடன் – உயிர், 422 – இன் குறிப்பில் ‘அ·து (அறிவு) உயிர்க்குணம்’ என்றிருக்கிறது. அதனால் உயிர் குணியென்பது சித்தம். அத்தகைய உயிரைச் சத்துப்போலி, சிதாபாசன் என்பவெல்லாம் திருக்குறளுக்கு மாறானவை.

‘பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னுஞ்

செம்பொருள் காண்ப தறிவு’ (358)

என்றது நூல். ‘பிறப்பு என்னும் பேதமை நீங்க – பிறப்பிறகு முதற் காரண மாய அவிச்சை கெட, சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு – வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய்யுணர்வாவது’ என்பது உரை. 352- இன் உரைக்குறிப்பில் ‘வீடாவது நிரதிசய வின்பமென்பதூஉம், அதற்கு நிமித்த காரணம் கேவலப் பொருளென்பதூஉம், கூறப்பட்டன’ என வருகிறது. பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சை கெடப் பெறுதலும், நிரதிசய வின்பம் அடையப் பெறுதலுமே உயிர்க்கு முத்தியாகும். உயிர் அருவுடம்பு உருவுடம்பு என்பவற்றிலிருந்து விடுபட வேண்டும். அதன் சேதனத் தன்மை விளங்கும் அதிற் சிவஞானம் பிரகாசிக்கும். அவ்வுயிர் அதனைக் கண்டு கொண்டிருப்பது நிரதிசய ‘வின்பத்தாய் நிற்ற’ (370 இன் குறிப்பு)லாம். ‘அவ்வுயிர்க்கு உடம்பு மிகை’ (345) யே ‘எற்றைக்கும் எச்சீர் வாய்ந்த காயமும் பகைமையன்றோ’ என்றது தணிக்கைப் புராணமும், காயம் – உடம்பு. ஆகவே முத்தியிலும் உயிர்க்குத் தேகமுண்டெனக் கொள்ளுஞ் சமயங்களுக்குத் திருக்குறளின் தொடர்பு ஏன்?

கேவலப் பொருள்

358இல் செம்பொருள் என்ற சொல் வருகிறது. ‘தோற்றக் கேடுகளின்மையின் நித்தமாய், நோன்மையாற் றன்னை யொன்றுங் கலத்தலின்மையிற் றூய்தாய்த், தானெல்லாவற்றையுங் கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி, அதனைச் செம்பொருளென்றார்’ என்றது அதன் குறிப்பு. அப்பொருளைக் காணகையாவதென்னை? ‘உயிர் தன்னவிச்சை கெட்டு அதனொடு ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தல்’ இதுவும் அக்குறிப்பு. அப்பாவனைக் கவசியமென்னை? ‘உயிர் உடம்பினீங்குங் காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது அ·து அதுவாய்த் தோன்றுமென்பது எல்லாவாகமங்கட்குந் துணிபாகலின், வீடெய்துவார்க்கு அக்காலத்துப் பிறப்பிற்கேதுவாய பாவனை கெடுதற் பொருட்டுக் கேவலப் பொருளையே பாவி’ த்தல் வேண்டும். இதுவும் அக்குறிப்பு. செம்பொருள், ‘மெய்ப்பொருள்’ (356), ‘உள்ளது’ (357) என்பனவெல்லாம் அக்கேவலப்பொருளே. கேவலப்பொருளென்றாலும் அப்பொருளின் சிறப்புப் பெயர் வெளிப்படக் கூறப்பட்டதாகாது. திருக்குறள் தனக்குப் பூர்வமாகிய வேதத்திற்போய் ஆராயும் படி நம்மைச் செலுத்துகிறது. வேதம்,

‘யநா தமஸ்தந் நதிவா ந ராத்ரிர் ந ஸந்த சாஸச்

சிவ ஏவ கேவலா: !’ (சுவேதா)                                             என்றது. அதற்குத் தமிழ்

‘பகலிர விலதுள தெனும்ப குப்பிலா

வகலரு மிருள்பொதி யநாதி காலையி

லுகலரும் பரசிவ னொருவ னேயுளன்

மிகுபொரு ளவனிடை வெளிப்பட் டோங்குமால்’                     என்றது காஞ்சிப்புராணம்ஆகவே அக்கேவலப் பொருள் அல்லது செம்பொருளாவார் சிவபிரானேயென்பது திருக்குறட் கருத்தாதல் ஓர்க. கேவலம்- தனி. கேவலவுணர்வு அல்லது ‘மாசறு காட்சி’ (352) என்பதுஞ் சிவஞானமே. எல்லைவுயிர்களுக்கும் ‘வீடாகிய ஈறிலின்பன்’ (328 இன் குறிப்பு) ஈயவல்ல பிரான் சிவபெருமானேயென்பதைச் சம்மதியாத சமயங்கள் திருக்குறளைச் சம்மதிப்பது நாடகமே.

வேள்வி

 திருக்குறள் வேள்வியைக் கண்டிக்கிறதாவென்பதைப் பார்க்க வேண்டும்.

‘விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்’ (88)

என்றது நூல். ‘விருந்தினரை யோம்பி வேள்விப் பயனை யெய்தும் பொறியிலாதார்’ என்பது உரை. அவ்வேள்விக்கு மானுடயாகம் என்று பெயர்.

‘அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற

னுயிர்செகுத் துண்ணாமை நன்று’ (259)                    என்றது நூல். ‘அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிதென்பதாம்’ என்பது குறிப்பு.

பாவத்தைவிடப் புண்ணியஞ் சிறந்தது என்று சொல்வது அர்த்தமற்றது. ஒரு பாவத்தைவிட இன்னொரு பாவங் கொடியது எனச் சொல்லலாம். புண்ணியங்களுக்குட் பசு புண்ணியத்தைவிடச் சிவபுண்ணியஞ் சிறந்ததெனச் சொல்வது பொருந்தும். இங்கும் வேள்வியும் அறம், கொல்லாமையும் அறம். ஆயினும் முன்னையதைவிடப் பின்னையது மேல். அங்ஙனம் கொள்வதே நியாயம். திருவள்ளுவருக்கும் அதுவே கருத்து. இல்லாவிட்டால் அவ்விரண்டையும் அவர் ஓப்பு நோக்கியாராயமாட்டார். அவர் வேள்வியைப் பாவக் கூட்டத்திற் சேர்த்தாரென்பது மடமை.

‘செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவி

னான்றாரோ டொப்பர் நிலத்து’ (413)                           என்றது நூல். ‘அவியாகிய வுணவு தேவர்க்கு வேள்வித் தீயிற் கொடுப்பன. அறிவானிறைந்தமையான் ஆன்றா ரென்றும் துன்பமறியாமையாற்றேவரோ டொப்ப ரென்றுங் கூறினார்’ என்பது குறிப்பு.

வேள்வியைச் சிறப்பித்தார் திருவள்ளுவர் என்பதை அதனாலுந் தெரிக. வேத வேள்வியை நிந்தனை செய்துழல்பவரைத் திருக்குறள் மதிக்குமோ?

                                                உலகம் அழிவது

 உலகம் அழியாது, நித்தம்: உலகிலுள்ள பொருள்களே அழியும் என்கின்றன சில மதங்கள்,

‘ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் புகழ்’ (156)

என்றது நூல். பொன்றுந்துணையும் – உலக மழியு மளவும்‘ என்பது உரை. ; உலகிற் கழிவுண்டென்பது அதனால் தெரிகிறது. உலகம் அழியாதென்ற சமயங்கள் அந்நூலுக்கு விலக்கன்றோ?

புராணங்கள்

‘ஐந்தவித்தான்’ (25), ‘அன்பிலார்’ (72), ‘கூற்றங் குதித்தலும்’ (269), ‘மடியிலா’ (610), ‘ஏந்திய கொள்கையார்'(899) என்ற பாக்களில் முறையே கெளதமர், ததீசி, மார்க்கண்டேயர், திரிவிக்கிரமன், நகுஷன் என்பவரின் சரித்திரங்கள் வருகின்றன. அவையெல்லாம் புராணங்களே. ‘திங்களைப் பாம்பு கொண்டற்று’ (1146) என்ற புராணப் பகுதியைக் கண் திறந்து நோக்குக. திருக்குறள் முழுவதிலும் இலெளகிகர் சிலரால் இப்போது மதிக்கப்பட்டு வருகிற வரலாற்றுக் கதைகளிலிருந்து ஒன்றேனும் எடுத்தாளப்படவில்லை. அதையுங் கருதுக. அங்ஙனமாகப் புராண நிந்தை கூறுஞ் சமயிகள் திருக்குறளிற் செல்லாமா?

சாதி

  பாரத தேசத்தில் சாதிபேதம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இத்தேசத்தை யாண்ட முந்திய வேற்றரசுகள் அதையழிக்கக் கடும் பிரயாசையெடுத்தன. இன்றைய அரசுக்கும் அப்பிரயாசையுண்டு. சதாசார அனுஷ்டானங்களைப் பரம்பரையாகக் கொண்டு வாழ்ந்த சாதிகள் சில. அங்ஙனம் வாழ மற்றைச் சாதிகள் இடங்கொடுத்தன. போதுமான அளவு சகாயமும் புரிந்தன. அவற்றிடம் அப் பழக்க வழக்கங்கள் இல்லாமற் போனாலும் மதிப்புப் பெற்றிருந்ததிற் குறைவில்லை. சாதி பேத மிகுந்த நாட்டில் வரவரச் சாதித் துவேஷங் கிளம்பலாயிற்று. எல்லாருக்கும் லக்ஷியம் ஒன்றானால் பேதத்தால் துவேஷ முண்டாகாது. லக்ஷியம்பிளந்தது. துவேஷமும் புறப்பட்டது. நல்ல பழக்க வழக்கங்கள் மதிக்கப்படவில்லைஅவற்றையுடைய சாதிகள் அவற்றைக் கைவிடுமளவுக்குப் பரிகசிக்கப் படுகின்றனஅச்சுறுத்தப்படுகின்றன. கலவைகளால் அவ்வொழுக்கங்கள் மறைகின்றனவே யன்றித் தாமில்லாத சாதிகளிற் பரவுவதாகத் தெரியவில்லை. புலாலுணவு கொள்ளாமை நல்ல பழக்கம்புலாலுண்ணாத சாதிகளிலும் இப்போது அவ்வுணவு புகுவது போலிருக்கிறது. பல்லாயிர வருடங்களாகக் காப்பாற்றப்பட்டு வந்த வொழுக்கம் அது. எவ்வளவு நெருக்கடியில் எவ்வளவு சிரமத்தோடு அது பரிபாலிக்கப்பட்டிருக்கும்! எவ்வளவு சிறந்த பாக்கியம் அது! அதனை யறியமாட்டாத, பொறுப்பற்ற சில விருதாக்கள் அச்சாதிகளில் தோன்றின. குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்புகளாயின அவை. அவை சகவாச தோஷத்தால் ‘புலால்மறுத்த’லை விட்டன. ‘சாதி வித்தியாசந் தொலைக’ என்ற கூச்சலே அதற்குக் காரணம். அதற்குமுன் புலாலுணவு தொலைக‘ என்றன்றோ கூவ வேண்டும். அ·துண்டா? உண்மையில் உலக சுகானுபவத்துக்குச் சாதி வித்தியாசம் வேண்டாம். சாதி வித்தியாசமென்ன, முறை வித்தியாசமும் அநாவசியம். மிருக முதலிய பிற வர்க்கங்களில் அவ்விரண்டுமில்லை. அவையடையுஞ் சுகமும் அதிகம். ஆனால் உலக சுகத்தையுத்தேசித்ததல்ல அவ்விருவகை வித்தியாசங்களும். அதை நினைவிற் கொள்வது நலம். நல்ல பழக்க வழக்கமுள்ள சாதிகளின் இன்றைய நிலையைக் கவனித்தால் கந்தபுராணம், அசுரகாண்டம், தேவரையேவல் கொள்படலத்தில் இந்திரன் முதலிய தேவர்கள் பட்ட துயரத்தை அவையும் எய்த நேர்ந்திடுமோவென அஞ்சவேண்டியதிருக்கிறது.

சாதிபேதம் வேண்டுமா? வேண்டாமா? அது பற்றிய பேச்சு இங்கில்லை. அதனை வேண்டாமென்பவர் தம் கொள்கைக்கு சாதகமாக அறிஞர் பலரின் வாக்கியங்களையெடுத்துக் காட்டுகின்றனர். மேலை நாட்டார் எழுதியவற்றிலிருந்து அவர் எடுத்துக் காட்டலாம். அக்கொள்கையில் ஊறிப் போன இந்நாட்டவரெழுத்துக்களும் அவருக்கு உதவுக. ஆனால் சாதிவித்தியாசத்தைக் கண்டிக்கத் திருக்குறளிலும் ஆதார மிருக்கிறதாமே, அதைத்தான் யோசிக்க வேண்டும். பிறப்பால் சாதிப்பேதமில்லை. உயர்வு தாழ்வில்லையென்பதைப்

‘பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யால்’ (972)                                             என்றமையால் தெரிகவென்கிறாரவர். இச்செய்யுள் ‘பெருமை‘ என்னும் அதிகாரத்தில் வருகிறது. அதற்கேற்ப அழகர் உரை வகுத்தார். ‘செய்தொழில் வேற்றுமையால் சிறப்பு ஒவ்வா’ என்ற பகுதிக்கு உரையு முண்டு. குறிப்பு முண்டு, ‘சிறப்பொவ்வா’ மைக்குக் காரணம் ‘செய்தொழில் வேற்றுமை’ யென நூலே கூறிற்று. ‘பிறப்பொக்கும்’ என்பதற்கு நூலிற் காரணமுண்டா? இல்லை, உரையிலுங் குறிப்பிலும் அழகர் சொல்லியுள்ளார். சாதிபேதம் வேண்டாதார் அதையேற்க வேண்டும். ஏற்பாராயின் சாதிபேதம் அவசியம் என்பது அந்நூலுக்குச் சம்மதமென அவர் கொண்டவராயினர். ஏற்க மறுத்தால் அவர் காரணமொன்று கண்டு வெளியிடுக. பிறகு அதனை ஆராயலாம். அவர் ஓருரை கூறத் துணியும் போது நானும் ஒன்று கூறினாலென்ன? அவருக்காக நானும் ஓருரை கூறுகிறேன். எல்லா உயிர்க்கும் – மனிதன், நாய், பன்றி, கழுதை முதலிய சகல உயிர்களுக்கும், பிறப்பு ஒக்கும் – தாய் வயிற்றிலிருந்து வெளியாவதே பிறப்பாதலால், அப்பிறப்புச் சமமாகவேயிருக்கும். செய்தொழில் வேற்றுமையால் – ஆனால் அவை செய்து, செய்கின்ற செய்யுந் தொழிற்பாடுகளின் வேறுபாட்டால் சிறப்பு ஒவ்வா – பெருமை சிறுமையென சிறப்பியல்புகள் சமமாகா என்பது. இவ்வுரையை அவர் சம்மதித்தால் மனிதன் தன் பிறப்பால் உயர்வடைய முடியாது. உலகில் மற்றைச் சீவவர்க்கங்களை விலக்கித் தனக்கேயுரிமை யுண்டெனக் கூற நியாயமுமில்லை.

சாதி பற்றிய உயர்வு தாழ்வுகளைத் திருவள்ளுவர் உடன்பட்டுள்ளரென்பதை இன்னுங் காண்க.

‘ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க

மிழிந்த பிறப்பாய் விடும்’ (133)                                என்றது நூல். பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்க முடையராக உயர்குலத்தவராவராகலின் குடிமையா மென்றும் உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்திற் றவறத் தாழ்ந்த வருணத்தராவராகலின் இழிந்த பிறப்பாய் விடுமென்றுங் கூறினார். உள்வழிப்படுங் குணத்திலும் இல்வழிப்படுங் குற்றம் பெரிதென்றவாறு’ என்பது குறிப்பு. இதில் குடிமை, இழிந்த பிறப்பு என்றவற்றின் வேற்றுமை நயம் புலப்படுத்தப்பட்டது. பிறப்பில் இழிவு உண்டென்பதனால் உயர்வுண்டென்பதும் பெறப்படும்.

‘மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்

கற்றா ரனைத்திலர் பாடு’ (409)                                        என்றது நூல். ‘மேற்பிறந்தார் – உயர்ந்த சாதிக்கட் பிறந்தார். கீழ்ப் பிறறந்தும் – தாழ்ந்த சாதிக்கட் பிறந்து வைத்தும்’ என்பது உரை.

‘உடலோடொழியுஞ் சாதி யுயர்ச்சியினும் உயிரோடு செல்லுங் கல்வியுயர்ச்சி சிறப்புடைத் தென்பதாம்’ என்பது குறிப்பு. உயிரோடு செல்லுங் கல்வி யுயர்ச்சி என்பது போல் உடலோடு செல்வது சாதியுயர்ச்சி யென்பது சரியே. ஆயினும் உடல் பற்றிய, சாதியின் உயர்ச்சி தாழ்ச்சிகள் உடலுக்குரியவாய்த் திருக்குறளாற் சம்மதிக்கப்பட்டனதானே.

‘விளங்கொடு மக்களனைய ரிலங்குநூல்

கற்றாரோ டேனை யவர்’ (410)

என்றது அடுத்த பாட்டு. ‘விலங்கின் மக்கட் கேற்றமாய் உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார்கண்ணேயாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினரல்ல ரென்பதாம்’ என்பது குறிப்பு. அங்ஙனம் கல்லாதார் பிறப்பும் சுற்றார் பிறப்பும் ஒவ்வா என்றதால் கல்லாதாரை விலங்குக் பிறப்பினரெனச் சொல்லிவிடலாமா? விலங்கைப் போன்று அவரை நடத்தலாமா? நடத்தினால் நடத்துபவரை அவர் சும்மா விடுவாரா? கல்லாதவரைக் கற்றவராக்கி மனிதப் பிறப்பின் உயர்வை அவர் காப்பாற்றிக் கொள்ளும்படி செய்வதே முறை. அப்படியே அந்தந்த வருணத்தாரிடம் தவறுகள் காணப்பட்டால் அவற்றை நீக்கித் தந்தம் வருணத்துக்குரிய மதிப்பை அவரவர் காத்துக் கொள்ளுமாறு செய்யவேண்டும். திருவள்ளுவர் கருத்து அதுவே.

இனிப் ‘பார்ப்பான் பிறப்பு’ (134), ‘அந்தணர்’ (543), ‘அறுதொழிலார்’ (560) என வருகின்றன. அவை வந்துள்ள இடம் பற்றி நடு நிலைப் புத்தியோடு அவற்றை நோக்குக. அவை பார்ப்பனச் சாதிக்குரிய பெயர்களேயென்பது புலப்படும். அச்சாதி ஆண்டுப் போற்றப்பட்டிருப்பதும் உண்மை.

இன்னொரு முக்கிய விஷயம். உத்தமி வயிற்றிற் பிறந்தாரும் விபசாரி பயிற்றிற் பிறந்தாருமுளர். அவ்விருவகைப் பிறப்புக்களும் சமான கெளரவமுடையனவா? உயர்வு இழிவுகள் அவற்றிற் கிடையாவா? கிடையாவென்பவர் உத்தமி வயிற்றுப் பிறப்பையே யிகழ்பவர்ல்லரா? உத்தமிகளையே யிகழ்பவரல்லவா? அல்லது அதனையும் அவரையும் உதாசீனமேனுஞ் செய்பவரல்லவா? கற்பு வரம்பழிந்தவளது வயிற்றுப் பிறப்பைத் திருக்குறள் இகழ்ந்தது. அப்பிறப்புடையார் நல்ல செயல்களில் நாட்டம் வையார். அவர் போன்றார் பல்கிப் பெருகுவது நாட்டின் தரத்தையே கீழ்ப்படுத்திவிடும் என்றும் அது கூறியது.

‘நலத்தின்க ணாரின்மை தோன்றி னவவைக்

குலத்தின்க ணையப் படும்’ (958)                                 என்றது அது. ஆகவே சாதிகுலம் பற்றிய உயர்வு தாழ்வுகள் உளவென்பது திருக்குறளுக்கு முழுக்க அங்கீகாரமேயென்கஅதனை மறுக்குஞ் சமயங்கள் அந்நூலுக்கு அருகில் வரத்தானும் தகுதியுடையவாமா?

முடிப்புரை

இப்படியே எழுதிக் கொண்டு போகலாம். ‘ஒரு பானைச் சோற்றுக்குப் ஒரு சோறு பதம்’ என்றபடி இவ்வளவில் இதனை நிறுத்துகிறேன். இதுவரை இங்குச் சொல்லப்பட்டதென்னை? மெய்யான சமயமாயிருந்து வருவது ஒன்றேயொன்றுதான். அது சித்தாந்த சைவமே. திருக்குறள் அச்சமயத்தையே அதன் சநாதன வுண்மை கெடாதபடி தன்பாற் கொண்டு போற்றுவது, அதனால் அச்சமயத்துக்கே உரியநூல், மற்றைச் சமயங்களெல்லாம் போலியே என்பதாம். திருக்குறள் சைவ சமய நூலேயென முன்னும் பலர் பேசியிருக்கின்றனர். எழுதியுமிருக்கின்றனர். ஆயினுமென்? அக்குறள் தமக்கும் பொதுவெனச் சொல்லிக்கொண்டு தம் ஆபாசக் கடையை விரிப்பதற்கு அந்நூலைப் பயன்படுத்திக் கொள்பவரும் இல்லாமற் போகவில்லை. என் செய்வது? அவருட் பலர் திருக்குறளாற் கடியப்பட்ட ஒழுகலாறுகளைத் தம் கொள்கைகளாகவுடையவர்.

‘காட்சியே அளவை யாவதென்றும், நிலம், நீர், தீ, வளி யெனப் பூதம் நான்கே யென்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தாற் றோன்றிப் பிரிவான் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின்கட் களிப்பு போல வெளிப்பட்டழியு மென்றும், இறந்தவுயிர் பின் பிறவாதென்றும், இன்பமும், பொருளும் ஒருவனாற் செய்யப்படுவன வென்றுஞ் சொல்லும் உலோகாயத முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து அவற்றிற்கேற்ப ஒழுகு’ (281) வாரும்.

‘மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளுமில்லையெனவும், மற்றுமித்தன்மையவுஞ் சொல்லும் மயக்கநூல் வாக்குகளை மெய்ந்நூல் வழக்கெனத் துணி’ (351) வாருமாயிருப்பா ரவர். அவர் திருக்குறளையும் அப்படிப்பட்ட தொரு நூலென உலகிற்குக் காட்டவே அதனைப் பற்றிக் கொண்டு திரிகின்றனர். நாடு கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதென அரசியலார் பலரே இன்றுங் கூறி வருந்துவது பத்திரிகைகளிற் பிரசித்தம். அதற்கேற்பத் தொன்னூல்களையுஞ் சிதைத்துத் திரித்துப் பொருள் கூறி யலைந்தால் அவை இன்றையவுலகைக் கரையேற்றுமா?

போலிச் சமயங்களுக்கும் தம் கொள்கைகளுட் சில பலவற்றிற்கு அந்நூலிலும் பிரமாண வாக்கியங்கள் அகப்படக்கூடும். அவை அவற்றையெடுத்துக் காட்டலாம். ‘அந்நிய நூலின் விதியவிரோதமே லுன்னேல் பழுதென் றுளத்து’ என்றது சைவ சமய நெறி, அவ்விதிபற்றியது அவ்வெடுத்துக் காட்டு.

 பலவூர்களிலும், பாடசாலை முதலிய பலவிடங்களில் திருவள்ளுவரின் பெயராலும், திருக்குறளின் பெயராலும் கழகங்களும், படிப்பகங்களும், நூல் நிலையங்களும் மலிந்துள்ளன. சைவ மக்கள் அது பற்றி மகிழ வழியில்லை. ஏன்? அங்குச் சைவ சமய சேவைக்கு இடங் கிடைப்பது வெகு சிரமம். திருவள்ளுவ நாயனார் திருநீறுங் கண்டிகையும் அணிந்திருப்பவராகப் பெரிய படங்கள் எழுதிப் பல பொது நிலையங்களில் வைக்கப்பட்டிருந்தது ஒரு காலம். இப்போது அச் சின்னங்கள் அழிக்கப்பட்டுப் போன படங்களே அக்கழக மாதியவற்றில் சாத்திவைக்கப்பட்டும் தொங்கவிடப்பட்டுமிருக்கின்ற காடுகளில் மான் முயல் முதலிய் ஏழைப்பிராணிகள் பல திரிகின்றனஅவற்றைப் பாதுகாக்கும் பொறுப்புடையார் அங்கு யாருமிலர்அவற்றை அன்பாலுரிமைகொண்டு பாலிருப்பா ரிருந்தாலும் அவற்றிற்கு அவ்வுணர்ச்சியுங் கிடையாதுநின்றவரை நெடுஞ் சுவர் விழுந்தபிறகு குட்டிச்சுவர் என்ற முதுமொழிக்கேற்ப அவை வாழ்ந்து வருகின்றனஅதனால் அவற்றுட் சில சிங்கங்களுக்கு இரைசில புலிகளுக்கிரைசில வேடர்களுக்கிரைசில பிடிபட்டுக் கூண்டுச் சிறைகளிற் கிடக்கின்றனசில பிடித்தவரது குற்றேவல்களைச் செய்து வயிறு வளர்க்கின்றன. அதை நினைத்துப் பார்க்க. சைவ சமூகத்தின் இன்றைய நிலையையும் எண்ணுக. அச் சமூகத்தவருட் சிலரை இசுலாமியர் கொண்டு போகின்றனர், சிலரைக் கிறிஸ்தவர் கொண்டு போகின்றனர், சிலரைச் சமணர், பெளத்தர் தட்டிக்கொண்டு போகின்றனர், சிலர் கறுப்புச் சட்டைக்குட் புகுத்தப்படுகின்றனர், சிலரை இந்துக்கள், கலவை சமயிகள் அடித்துக் கொண்டு போகின்றனர், சிலரைச் சில தனித்தமிழ் வெறியர் தமிழ்ச் சமயம் அல்லது தமிழர் சமயம் என்றொரு புதுமுக சினிமா நக்ஷத்திரத்தைக் காட்டி இழுத்துக் கொண்டு போகின்றனர். ஆகச் சைவ சமூகம் தன் சமயம் இன்னதென்றே தெரியாமல் தட்டுண்டு தடுமாறிச் சைவ சமயத்தின் விரோதிகளின் மடியில் வீழ்ந்து உறங்கிவிடுகின்றனர். சைவ மக்களுக்கு அது பெருமையா? இலாபமா? வாழ்வா?

சைவ சமயப் பெருமக்களே, நாடு சுதந்திரம் பெற்றது. நீங்களும் இந்நாட்டு மக்களே. உங்களுக்கென உயிர்நிலை இங்கொன்றுமில்லையாஉங்களுக்கெனச் சமயம்பிரமாண சாத்திரம்ஆசாரியர்சின்னங்கள்ஆதீனங்கள்கோயில்கள்வழிபடுமுறைஆசார அனுட்டான வகைகள் எல்லாப் பாக்கியமுண்டுஅவற்றை நீங்களே அறிந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டும். அப்படியில்லாத நிலையில் இப்போது பிறர் கைவசப்பட்டுத் திருக்குறள் படுவது பாருங்கள். அதனாசிரியர் அசைவராக விளம்பரஞ் செய்யப்படுவது பாருங்கள். உங்களுக்காக வேறு யாருங் கைகொடுக்கமாட்டார். மற்றைச் சமயத்தார் உங்களிடம் வருவார், திருக்குறளைக் காட்டுவார், சமய சமரசம் பேசுவார். பணம் முதலிய சகாயங்களை உங்களிடமிருந்து பெற்றுப்போவார். அங்குப் போய்த் தம் சமயங்களின், கொள்கைகளின் வளர்ச்சிக்கே அவற்றைப் பயன்படுத்துவார். உங்களில் இரக்கமும் செல்வமுடையார் பலரிருப்பது தெரிந்ததேயார் வந்தாலும் அவருக்கு நீங்கள் உதவி செய்யலாம்அதைத் தடுப்பாரிலர்ஆனால் அவரது சமயப் பிரசாரத்துக்கு மாத்திரம் நீங்கள் உதவுவது சரியன்றுசரியன்றுஉதவினால் அது உங்கள் கண்ணான சைவ சமயத்துக்குத் துரோகஞ் செய்வதாய் முடியும். ‘பழைய வைதிக சைவம் பரக்கவே’ என்றருளினார் உமாபதி சிவனார். அதைக் கருத்திற் கொண்டு ஒருமுகப்படுங்கள், ஒதுங்காதீர்கள், பதுங்காதீர்கள், பராக்காக இராதீர்கள். மறைந்து கிடக்கும் ஆண்மையையும், அறிவையும் ஆற்றலையும் வெளிப்படுத்துங்கள். ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் சைவ சபை, சைவ சித்தாந்த சபை, சித்தாந்த சைவ சபையெனச் சமயப் பெயர்களாலேயே சபைகள் வைத்துச் சேவை புரியுங்கள். சிவ பரத்துவம்சைவாசிரியன்மார் பெருமைசைவ சாத்திரங்களின் நுண்பொருள்சைவ ஆசார அனுட்டானங்களின் இன்றியமையாமை தமிழ் வடமொழிப் பயிற்சிசிவங் கலந்த இன்னிசைஇலெளகிகத்தில் உங்கள் சமூகத்தின் முன்னேற்றம் முதலிய அனைத்தும் எடுத்துப் பேசப்படுவதற்கு அங்குத்தான் இடமுண்டுசமய வரம்பு அழிந்தால் சமயமே அழிந்துபோம்அவ்வழிவு உங்கள் சமயதிற்றான் தலை காட்டுகிறது. அதற்கு அன்னிய சமயத்தா ரளவுக்கு உங்களிலும் பலர் காரணமாயிருந்து வருகிறார்கள். அவரிடமிருந்து சைவ சமூகம் விடுபட வேண்டும். அதனைச் செய்தற்கு நீங்கள் துணிந்து முன்னுக்கு வருவீர்களாகஸ்ரீபார்வதி சமேத ஸ்ரீபரசிவனார் உங்களுக்குத் துணை புரிவாரென்பது சத்தியம்.

பெருமழுவர் தொண்டல்லாற் பிறிதிசையோம்

பழைய வைதிக சைவம் பரக்கவே

மேன்மைகொள் சைவநீதி விளங்குக வுலகமெல்லாம்

‘திருக்குறள் பொது நூலா?’  என்னும் இந்நூல் முற்றிற்று

தேவநேயப் பாவாணரின் கிறிஸ்துவ மதவெறியும் நச்சுப் பொய்களும்

தேவநேயப் பாவாணர் உச்சக்கட்ட  கிறிஸ்துவ மதவெறி கொண்டு, தமிழ் பற்றாளர் வேடத்தில் பக்கத்துக்கு பக்கம் பொய், திருக்குறளையும் தமிழர் பண்பாட்டை இழிவு செய்தும் வெற்று நச்சுப் பொய்களாய் நூல் எழுதியவர்.

முருகன் வழிபாட்டை இழிவு படுத்தும் வரிகள்
முருகன் வழிபாடு, தொன்ம வரலாறு முழுவதும் சங்க இலக்கியத்தில்ல் உள்ளதே. இவற்றை பார்ப்பனர் அல்லாத பல புலவர்களும் பாடி உள்ளனர்.
பரிபாடல், திருமுருகாற்றுப்படையில் முருகர் பிறப்பு பற்றி உள்ளவையை மறைத்தது ஏன். தமிழ் அலங்கார வார்த்தைகளால் அத்தனையும் பொய்கள்.
13ம் நூற்றாண்டு கச்சியப்ப சிவாச்சாரியர் எழுதிய கந்த புராணம் முதல் நூல் இல்லையே, ஏன் கிறிஸ்துவ வெறி தேவநேயரின் உச்சக் கட்ட நச்சுப் பொய்.
பைபிள் கற்பனை பொய்களும் தேவநேயனும்
விவிலியக் கதைகள் முழு கற்பனை என்பதை சொல்லும் நூல்கள் கிறிஸ்துவ பைபிளியல் கல்லூரியே வெளியிட்டதே.
பைபிள் கதைகளில் 1% கூட உண்மை இல்லை, இஸ்ரேலியர் கடவுளை அறியாத நாடோடி ஆடு மாடு மேய்த்தோர் எனத் தொல்லியல் கூறியதை ஏன் இவர் நூலில் சொல்லவில்லை.
பைபிள் பழைய ஏற்பாடு என்பது தாலிபான் பயங்கரவாதிகள் போன்ற எபிரேய அடிப்படைவாதிகள் புனைந்த பாசீச இனவெறி நச்சுப் பொய்கள் என்பதை பாவாணர் கூறவே இல்லை.
 ஏசு எனும் கிறிஸ்துவத் தொன்மக் கதை நாயகர் – சுவிசேஷக் கதைகளில் தன் வாழ்நாளில் உலகம் அழியும் என உளறித் திரிந்து, இனவெறி பிடித்து அலைந்து கடைசியில் பாவியாய் ரோமன் தண்டனை முறையில் அம்மணமாய் தூக்குமரத்தில் இறந்தவர், மற்றவை கட்டுக் கதை எனச் சொல்லவே இல்லையே. தன் பேரனுக்கு பைபிளின் எபிரேய/லத்தீன் பெயர் (கேலப் ஜெயராஜ்) வைக்கும் கிறிஸ்த்வ மதவெறியர்.
கிறிஸ்துவ மதவெறி பிடித்த தேவநேயப் பாவாணர் பழைய முதல் உரை சமணர் மணக்குடவர் உரை ஒட்டியே அனைவரும் கூறும் ஒரே பொருள் என்பதை மறைத்து பரிமேலழகர்- அந்தணர் என்பதால்  கிறிஸ்துவ பொய் நச்சு திணிக்க ஆரியர் கொள்கை திணிப்பு என பல இடங்களில் பன்றித்தனமாய் உளறி திட்டுவார்.
 
கிறிஸ்துவ தேவநேயப் பாவாணர் சாந்தோம் சர்ச் திருவள்ளுவரை கிறிஸ்துவர் எனத் திரிக்கும் வேலையின் பின்புலம் என்பதை இக்கட்டுரை இவ்வசனங்களில் காணலாம்.-
//புலவர் தெய்வநாயகம் தம் “திருவள்ளுவர் கிறித்தவரா?” என்னும் பொத்தக அட்டை முகத்திற் பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம் திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்- பான்மைக்கோ சற்றும் பொருந்தாமலே யிருந்தன. //http://tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=201&pno=51  பாவாணர்நோக்கில் பெருமக்கள் -தீர்ப்பாளர் மகராசனார் திருவள்ளுவர் பாவாணர் அட்டைப் படம் பற்றி புகழ்ந்தவர் உள்ளே கிறிஸ்துவச் சதி விஷத்தை ஏன் விமர்சனம் செய்யவில்லை.(விளம்பரம் தரும் முயற்சியோ )

‘திருவள்ளுவர் கிறித்தவரா” பக்௧31- “வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர்.

 கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-73
கிறிஸ்துவ ஆங்கிலேய ஆட்சியின் மோசமான ஆட்சியில் செயற்கை பஞ்சங்களால் 10 கோடி இந்தியர் கொல்லப் பட்டனர்.   இந்தியாவிலிருந்து கொள்ளை அடித்து சென்றது ரூ.600 லட்சம் கோடிகள்.
மதச் சார்பின்மை எனும் பெயரில் கல்வியில் நேர்மையற்ற பொய்கள் – கிறிஸ்துவர் மதவெறியில் கிளப்பிய ஊகங்கள் இன்றும் உள்ளன. ஆரியர் – திராவிடர் எனும் மண்ணிற்கு வெளியிலிருந்து வந்தோர் என பிதற்றுகிறது.
கிறிஸ்துவ பைபிள் முழுக்க மனிதக் கற்பனை கட்டுக் கதை என தொல்லியல் நிருபித்தவை கல்வியில் கிடையாது, இனவெறி கொண்டு திரிந்து – தன் வாழ்நாளில் உலகம் அழியும் எனத் திரிந்து ரோம் ஆட்சிக்கு எதிரான கலகம் தூண்டியவராய் அம்மணமாய் தூக்குமரத்தில் தொங்கி செத்த ஏசுவைப் பற்றி கற்பனை கட்டுக் கதை புனையல்களே சுவிசேஷம் எனக் கிடையாது.
1972ல் சென்னையில் பாவாணர் தலைமையில்  ஒரு பெரும் மாநாடு – 1972ல் சென்னையில் ஒரு பெரும் மாநாடு  புலவர் தெய்வநாயகம் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும், அறுவரைக் கொண்ட ஒவ்வோர் அணியாக, ஆறு நூற்களுக்கும், தமிழகம் முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 36 பேரறிஞர்கள் இந்த வாதப்போரில் கலந்து கொண்டு முடிவில் திருக்குறள் கிறிஸ்துவ நூல் இல்லை என முடிவானதாம், ஆனால் இந்த மாநாட்டை நடத்திய சர்ச், மற்றும் பாவாணர் உட்பட யாருமே இதை பதிவு செய்யாதலால் தான் பதிப்பதாக 2006ல் தன் நூலின் 34 வருடம் பின் பதிவு செய்துள்ளார், அப்புலவருக்கு நன்றி.
தேவநேயர் பல இதழ்களில் எழுதியவர், சர்ச்சிற்கும் பல இதழ்கள், ஆனால் வள்ளுவர் கிறிஸ்துவரில்லை எனத் தெள்ளத் தெளிவாய் நிருப்த்த மாநாட்டை ஏன் கிறிஸ்துவ மத பாவாணர் மறைத்தார்?  பின்னரும் சர்ச் பெரும் பணத்தில் மேலும் பல நூல்கள் வெளியிட்டு, பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தில் கிறிஸ்துவ தமிழ் துறை என அமைத்து, அதிலும் எந்த பேராசிரியரும் ஒத்து வராமல் போக, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திரு.ச.வே.சுப்ரமணியம், இவரை அங்கு பணி செய்த அன்னி தாமசு எனும் கிறிஸ்துவப் பெண் மயக்கி வைத்திருக்க (பின் திருமணமும் செய்து கொண்டனர்), வழிகாட்டியாக “திருக்குறள், விவிலியம், சைவ சித்தாந்தம் – ஒப்பாய்வு எனும் முனைவர் பட்டம் விலக்குப் பெறப் பட்டது.

கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி தலித் மாணவர் தினேஷ்குமார் மீது மிருக வெறி தாக்குதல்

கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி தலித் மாணவர் தினேஷ்குமார் மீது மிருக வெறி தாக்குதல்

71922797_10220138993211300_2798684424756002816_n

கடலூர் நகரத்தில் பிரபலமான கல்வி நிறுவனங்களில் ஒன்று செயின்ட் ஜோசப் நிறுவனம். இந்நிறுவனத்தின் பள்ளியில் பயின்ற பள்ளிப்புதுபட்டு அம்பேத்கர் நகரைச் சார்ந்த தலித் மாணவர் தினேஷ்குமார் என்பவர் தமக்கு அளிக்கப்படவேண்டிய மடிகணினியை கேட்க சென்ற போது, குறுக்கிட்ட உடற்கல்வி ஆசிரியரான சந்திர மோகன் என்கிற நபர் சாதிய ரீதியாக இழிவுபடுத்தி திட்டியதோடு அல்லாமல் கடுமையாக தாக்கியுமிருக்கிறான்.

 

 

அந்த மாணவரை விரட்டி விரட்டி தாக்கும் அந்தக் காட்சி கொடுமையாக இருக்கிறது. அந்தக் கொடுமையை தட்டிக் கேட்கமுடியாமல் சிலர் நிற்கிறார்கள். அவர்களும் ஆசிரியர்களாக இருக்கக்கூடும்.

 

5aa.jpgஆனால், அவர்களின் தயக்கத்திற்கு காரணம் சந்திர மோகன் அப்பள்ளியின் ரௌடிந்தனமான நபராக இருப்பான் என்பதாகவே இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. அதாவது கல்வி நிறுவனத்தின் அடியாளாகவும் அவன் இருக்கலாம் என்றுபடுகிறது.

71091983_2421373288084016_4014631881487155200_n

திருச்சி நார்பர்ட் கிறிஸ்துவ கத்தோலிக்க சபை தமிழரை ஏமாற்றி 11 கோடி ஊழல்

புனித நார்பர்ட் சபையின் மோசடி

2
பொறுப்பாளர்கள்
Fர். மார்க்ஸ் சேம்ப் – தலைவர்
Fர். K. ஆரோக்கியசாமி – துணைத் தலைவர்
Fர். ஆ. அருள் ரெட்டின் ராஜ் – செயலர்
Fட். ஆரோக்கியசாமி – பொருளர்

புனித நார்பர்ட் சபை திருவெற்றியூர் மற்றும் ஏ.ஆர். மங்கலத்திற்கு வெளிநாட்டில் இருந்து பெற்ற மொத்த நிதி ₹11,56,78,070.00(11 கோடி) செலவு செய்துள்ளதாகவும்

(திருவாடனை சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்)

இதில் திருவெற்றியூர் பங்கில் சினேகாலாயா மருந்தகத்திற்கு மட்டும் கடந்த 12 ஆண்டுகளில் மருந்து மட்டும் வாங்குவதற்காக ₹ 27,09,903.56 (27 இலட்சம்) மருந்து வாங்கியதாகவும்2a

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏ ஆர்.மங்கலம், புத்தனேந்தல் மற்றும் திருவெற்றியூரில் ஊரணி வெட்டி அதை பராமரிக்க இதுவரை ₹45,23,711.00(45இலட்சமும்) செலவழிக்கப்பட்டதாகவும்

2aa

புத்தனேந்தல் , ஏ ஆர்.மங்கலம் கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்ய ₹35,33,760.00(35இலட்சம்) செலவு செய்துள்ளதாகவும்

2aaa

திருவெற்றியூர் மற்றும் ஏ ஆர்.மங்கலம் பங்கில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு இலவச விதைநெல் மற்றும் உரம் வாங்கி கொடுக்க ₹3,10,70,063.00(3 கோடி ) செலவு செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கணக்கு கொடுத்துள்ளது புனித நார்பர்ட் சபை. வெளிநாட்டு நிதி மோசடியில் கிறிஸ்தவ சபைகளிடையே கடும் போட்டி மோசடி குறித்த ஆய்வில் களமிருங்குகிறது ஆ.ற்.மங்கலம் பங்கு இளைஞர்கள்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே