கோவை குண்டு வெடிப்பு திரு.அத்வானி கொலை செய்ய பயங்கரவாத முஸ்லிம்களுக்கு ஜாமீன் தருவது ஆபத்து: திமுக அரசு

கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கினால் ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் தமிழக திமுக அரசு மனு  https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=741306

https://www.blogger.com/video.g?token=AD6v5dybaspatQbe87-zVSaIAogB_54ixAcDfV_TbkOHy7T33k6O3A33lCMFn-pZdWZRUCAOrB3ec7QgXYQvcN1ZsKxy3-N3bzZTfEpJn4gmBsaJCSKjGhWV9iPJrmnQp16AFBl_SPQ

2022-02-09புதுடெல்லி: ‘கோவை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கினால் மதரீதிரான ஆபத்தை விளைவிப்பார்கள் என்பதால் எந்த நிவாரணமும் வழங்கக் கூடாது,’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கோவையில் கடந்த 1998ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றது. இதில், பலர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் அல் உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில், ஒரு சிலர் மட்டும் மேல்முறையீட்டு வழக்கில் விடுதலை ஆகியுள்ளனர். ஆனால், அல் உம்மா இயக்கத்தை சார்ந்தவர்கள் மட்டும் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்டையில் தற்போது வரையில் குற்றவாளிகளாக கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் அல் உம்மா இயக்கத்தை சார்ந்தவர்கள் உட்பட 5 பேர், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இது, கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் மனுவை அடுத்து பட்டியலிடப்படும் போது விசாரிக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கில் தமிழக அரசு நேற்று தாக்கல் செய்துள்ள மனுவில், ‘சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரும் இப்போதும் தங்களின் பழைய சித்தாந்தத்தில் இருக்கின்றனர். அவர்களின் செயல்பாடுகள் சிறையில் கூட திருப்திகரமாக இல்லை. செல்போன்களை பயன்படுத்துவது உள்ளிட்ட அனைத்து விதிமுறை மீறல்களிலும் ஈடுபடுகின்றனர். 

இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், மீண்டும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவார்கள்.  அதனால். அவர்களின் ஜாமீன் மனுக்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

கோவை குண்டுவெடிப்பு கைதியை விடுவிக்க அரசு வக்கீல் எதிர்ப்பு; 16 ஆண்டுக்கு பிறகு சிக்கியவர்

 Added : ஜன 01, 2015 

கோவை : தலைமறைவாக இருந்து, 16 ஆண்டுக்கு பிறகு சிக்கிய, கோவை தொடர் குண்டு வெடிப்பு கைதியை வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கோவையில், 1998, பிப்.,14ல், 19 இடங்களில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் 58 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, ‘அல் உம்மா’ இயக்க தலைவர் பாட்சா உள்ளிட்ட ௧௬௮ பேர் கைது செய்யப்பட்டனர். தனிக்கோர்ட் விசாரணையில், பாட்சா, அன்சாரி உள்பட ௪௨ பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.வழக்கில் தொடர்புடைய சிலர், போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்தனர். அவர்களில், கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பனங்காராவை சேர்ந்த, குஞ்சு முகமது, ௫௬, கடந்த 16 ஆண்டுக்கு பிறகு, கடந்தாண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்டார்.குஞ்சு முகமதுவை வழக்கில் இருந்து விடுவிக்கவும், ஜாமினில் விடக்கோரியும், தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. அப்போது, குஞ்சுமுகமது தரப்பு வக்கீல் அபுபக்கர் வாதிடுகையில், ‘குண்டுவெடிப்புக்கு பயன்படுத்திய வெடிமருந்தை, காரில் கடத்தி வருவதற்காக, ஊம்பாபுவிற்கு துணையாக குஞ்சுமுகமது செயல்பட்டார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


குண்டுவெடிப்பு வழக்கில் ஊம்பாபு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதில் இருந்தே, இந்த வழக்கில் குஞ்சு முகமதுவிற்கு தொடர்பில்லை என்பது தெளிவாகிறது’ என, வாதிட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு தரப்பு வக்கீல் செல்வராஜ் வாதிடுகையில், ‘ஊம்பாபு உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. 

அதில் தீர்ப்பு வராத நிலையில், குஞ்சு முகமதுவை விடுவிக்க கூடாது; ௧௬ ஆண்டாக போலீசிக்கு தெரியாமல் தலைமறைவாக இருந்தவரை ஜாமினில் விடுவித்தால் தப்பி விடுவார்’ என, வாதிட்டார்.இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி சக்திவேல் (பொறுப்பு), மனு மீதான உத்தரவை வரும் 7ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

HINDUISM AND SANATAN DHARMA

Hinduism,Cosmos ,Sanatan Dharma.Ancient Hinduism science.

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் உள்ளபடியே

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

Tamilar Kural - Devapriya- தேவப்ரியா- (Based on Archaelogical,Historical & Theological)

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: