சகோ. மோகன் சி லாசரஸ் சாதனைகள்
March 30, 2014 1 Comment
மோகன் சி பெரிய வீட்டைக் கட்ட அவரது ஆண்டவர் அனுமதி கொடுத்திருக்க, வேதாகமக் கர்த்தரோ இப்படிச் சொல்கிறார்.
ஆமோஸ் 3:15 மாரிகாலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழிப்பேன்; அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அப்புறம், (மோகன் சி-யின்) தேவனுடைய வீட்டிற்குச் ஜெபிக்கிற யாராயினும், அவர்களின் வியாதி குணமாகுமென ஆண்டவர் வாக்குக் கொடுத்துள்ளாராம். மோகன் சி-யின் இக்கூற்றை நம்புகிற ஜனங்களே! இனி உங்களுக்கு வியாதி வந்தால் மருத்துவனைக்குச் செல்லாதீர்கள்; நாலுமாவடி தேவனுடைய வீட்டிற்குச் செல்லுங்கள்.
வியாதி குணமானால், மோகன் சி-க்கு காணிக்கைகளை அள்ளி வழங்குங்கள்; குணமாகாவிடில், இவர் ஆண்டவர் பெயரில் பொய் சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
பொதுவாக நாம் செய்கிற ஜெபத்தையும் தருமங்களையும் விளம்பரமில்லாமல் செய்யவேண்டும் என்பது இயேசுவின் ஆலோசனை/கட்டளை. ஆனால் நம் மோகன் சி-க்குத் தான் எல்லா விஷயத்திலும் ஆண்டவர் விதிவிலக்கு கொடுக்கிறாரே!
எனவே மோகன் சியின் ஆரம்ப கால ஊழியத்திலிருந்து, அவர் எப்படி எப்படி ஊழியம் செய்தார், ஜெபித்தார், தருமம் செய்தார் என்பதையெல்லாம் படம்/வீடியோ பிடித்து காட்டி, விளம்பரம் செய்கிறார். இவையெல்லாம் விளம்பரமாக வேண்டும் என அவர் விரும்புவதால், நான் இந்த வீடியோவை share செய்து அவருக்கு விளம்பரம் கொடுத்துள்ளேன்; நீங்களும் அப்படியே share செய்து விளம்பரப்படுத்தினால், மோகன் சி மிகவும் மகிழ்வார்.
நல்ல முயற்சி, ” உன் அப்பா உனக்கு பணம் தரவில்லை அவர் புகை பிடிக்க மட்டும் எப்படி பணம் வருகிறது, ஆகவே உன் அப்பாவிற்கு உன் மேல் அக்கறை இல்லை, உன் அம்மா உனக்கு சரியாக சாப்பாடு கொடுக்க வில்லை ஆகவே அவருக்கு உண்மேல் அக்கறை இல்லை, உன் தம்பி உன்னிடம் சரியாக பேசுவதில்லை, ஆனால் பெண்களிடம் பேசுகிறான், மோசமானவனாக இருக்கிறான்” இப்படி ஒரு சில தவறுகளையும் பெரிதாக பேசி உன் குடும்பமே மோசமானது போல் காட்ட பார்க்கிறீர்கள். ஒரு கட்டுரையில் கார்டுவேல் எழுதிய நூல் சிறப்பானது ஆனால் அவரின் நோக்கம் சரி இல்லை என்று எழுதி இருக்கிறாய், இதனை மேலே சொல்ல பட்டதோடு ஒப்பிட்டால், உனது தனத்தை புகைப்பது தவறு, நல்லதும் செய்கிறார் அது போலதான். இவைகளை போன்றே இந்து இஸ்லாம் எல்லாமத்த்திலும் உள்ளவற்றை கதைகளாக எழுத முடியும். இவ்வளவு கீழ்த்தனமாக எழுதும் உன் உள்நோக்கமும் கத்தோலிக்க சபையின் நோக்கம் போலதான் இருக்கும்… ஆகவே நீயும் திருடன். முழுபெயருடன் முகவரியுடன் எழுங்கள் உண்மை என்றால். உன்னையும் தமிழனாய் பார்ப்பது அருவருப்பாகுள்ளது.. மன நோய் உள்ள மரமே!