தோமா இந்தியா வருகை – போர்த்துகீசியர் கட்டிவிட்ட கட்டுக்கதை- முனைவர் மு.தெய்வநாயகம்

 http://tamizhthoothu.com/karuththukalam/

(பேராசிரியர் எஸ்றா சற்குணம்) கேள்வி: முதலில் தோமா தமிழ் நாட்டிற்கு வந்தாரா என்பதற்கு நேரடியாகப் பதில் கூறுங்கள்!
முனைவர் மு.தெய்வநாயகம் . பதில்: தமிழகத்திற்குத் தோமா வந்தாரா என்ற கேள்வியிலேயே தமிழகத்திற்கு தோமா வரவில்லையா என்ற கேள்வியும் தொக்கி இருக்கிரது அல்லவா?
[மு.பெ.சத்தியவேல் முருகனார் கருத்து: கேட்ட கேள்விக்கு இது எப்படி பதிலாகும் என்று தெரியவில்லை]
தெய்வநாயகம் கலாட்டா பேய், பூதம், பிசாசு

தெய்வநாயகம் கலாட்டா பேய், பூதம், பிசாசு
கேள்வி: இதற்கு ஆதாரம் என்ன?
மு.தெ. பதில்: போர்த்துக்கீசியர் இந்தியாவிற்கு வந்தபின் தான் தோமாவைப் பற்றி இன்று நாம் கேட்கும் வரலற்றினை அறிய வருகிறோம். அது வரலாறில்லை; போர்த்துகீசியர் கட்டிவிட்ட கட்டுக் கதை. அவர்கள் இதனால் பெற்ற லாபம் என்ன என்பதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. தோமா வந்தார்; மயிலையில் சமாதி ஆனார் என்ற கதை போர்த்துகீசியர் தமிழகத்திற்கு வந்த போது அதாவது ஏறத்தாழ கி.பி. 12ஆம் நூற்றாண்டு தான் வெளிவருகிரது.  எனவே இது உண்மையா அல்லது பொய்யா என்பதை நிரூபிப்பது போர்த்துகீசியர்கள் தொடர்புடைய கத்தோலிக்கத் திருச்சபை அடியார்கள் திருச்சபையிடம் தான் கேட்டுத் தெளிய வேண்டுமே அல்லாது எனக்கு இதில் பதிலளிக்கும் பொறுப்பு இல்லை.
 

மு.பெ.சத்தியவேல் முருகனார்  கருத்து: தோமா தமிழகத்திற்கு வந்தார் என்பதை கி.பி.12-ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கதை கட்டி விட்டார்கள் என்கிறார். ஆனால் இவரோ பல்லாண்டுகளாக, அவரே கூட்டத்தில் ஒரு சமயத்தில்சொன்னபடி 45 ஆண்டுகளாக, தோமா தமிழ்நாட்டிற்கு கி.பி. 52ல் வந்து 20 ஆண்டுகளாக சமயக் கொள்கைகளைப் பரப்பினார் என்று போர்த்துகீசியர்கள் 12 ஆம் நூறாண்டில் கட்டிய கதையை நம்பியும் அதைப் பரப்பியும் அதையொட்டி ஒரு நூல் எழுதி முனைவர் பட்டமும் பெற்றவர். ஆனால் இப்போது அது கட்டுக்கதை என்கிறார்; அதற்குத் தான் பதிலளிக்க வேண்டியதில்லை என்று அடாவடியாகத் தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது எந்த வகை நியாயம் என்று நடுநிலையாளர்களைத் திகைக்கச் செய்கிறார்.]
மு.தெ. பதில்:இன்னும் சொல்லப் போனால், கத்தொலிக்கத் திருச்சபையில் யாரும் எவரும் எவரையும் கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்டால் தண்டனை தான். அதனால் தான் மக்கள் இன்று உலகெங்கணும் திருச்சபைகளில் இருந்து விலகிச் செல்கிறார்கள். அதனால் சர்ச்சுகள் எல்லாம் தியேட்டர்களாக்கிக் கொண்டிருக்கின்றன. காரணம், இந்த ஐரொப்பியர்களுக்கு கிறித்துவிடம் இயல்பாகவே எப்போதும் விசுவாசமில்லை.
மு.பெ.ச கருத்து: தோமா கிறித்து காலத்தவர்; அவர் பெயர் எப்படி பழைய ஏற்பட்டில் வரும்? இப்படியே அவரது உரை கத்தோலிக்கத் திருச்சபைகளைச் சாடுவதாகவே தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் சென்றது. அதற்குள் அவையிலிருந்து கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை என்றும் பதிலைச் சொல்லச் சொல்லுங்கள் என்று நீதிபதிகளாகிய எங்களுக்கு சீட்டு வந்தது. இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அவையில் இருந்த அனைவரும் கிறித்துவர்கள்; அவர்களில்70 விழுக்காடு கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் தெய்வநாயகத்தின் கருத்துக்களுக்கு எதிரானவர்கள்; மீதி 30 விழுக்காட்டினர் தெய்வநாயகத்தின் ஆதரவாளர்கள்.]
கேள்வி: தாங்கள் தோமா தமிழகத்திற்கு வந்தார என்பதற்கு ஆதாரங்களுடன் நேரடியாக பதிலளியுங்கள்! இது அவையினர் அனுப்பியுள்ள சீட்டில் வந்துள்ள வேண்டுகோள் அல்லது முணுமுணுப்பு.
முனைவர் தெய்வநாயகம் இதற்கு கோபப்பட்டுப் பேசினார். மேலும் சுமார் 20 நிமிடங்கள் அவரது பேச்சு அதே பாணியில் மற்றொன்று விரித்தலாய்ச் சென்று கொண்டிருந்தது. அப்போது ககல் 1.00 மணி ஆனதால் உணவு இடைவேளி அறிவிக்கப்பட்டு மேடை கலைந்தது. 
இடைவேளையில் அவையிலிருந்த பலரும் வந்து தெய்வநாயகம் அவர்கள் செய்வது கொஞ்சமும் சரியல்ல என்ரும் இது முறையாக நடைபெறுகிற ஆய்வரங்கமாகத் தெரியவில்லை என்றும், கேள்விகளுக்கு விடை அளிக்கப்படும் என்று அறிக்கையில் சொல்கிறார்; இன்னும் பேச்சிடையேயும் கூறுகிறார்; ஆனால்எந்த கேள்விக்கும் அவரிடமிருந்து சரியான பதில் வரவில்லை என்றனர்.
கேள்வி: கிறித்துவத்தில் மூவொருமைக் கோட்பாடு உள்ளதாகக் கூறுகிறீர்கள். இந்த Trinity என்ற கோட்பாடு கான்ஸ்டள்ளடன் மன்னன் (கி.மு. 4 ஆம் நூற்றாண்டு) காலத்திலேயே கிறித்துவத்தை உலக மதங்களில் காணப்படும் மூன்று கடவுள் கோட்பாட்டைப் போலப் புகுத்திப் போதிக்கப்பட்டது என்பது வரலாற்றுச் செய்தி. இதனை மறுக்கமுடியுமா?
மு.தெ. பதில்: (இதற்கும் அவர் நேரிடையான பதில் கூறாமல் சுற்றி வளைத்துப் பேசினார்.) அவர் பேசியதின் சாரம் இது: அதாவது Trinity என்பது இறைவன், பரிசுத்த ஆவி, குமாரன் என்பதாம்.
மு.பெ.ச இடைமறிப்பு: ஐயா! இந்த Trinity பற்றி கிறித்துவச் சபைகளிலேயே வேறு ஒரு கருத்து நிலவுகிறது. அதைப் பற்றிக் கேட்கலாமா?
[மீண்டும் அவையோர் தோமா தமிழகத்திற்கு வந்தாரா என்பதை பற்றி ஆதாரத்துடன் கூறுங்கள் என்று கூச்சலிடுகிறார்கள்.]
Photo   
இதன் பிறகு உப்புக் சப்பில்லாமல் சில கேள்விகளும் அதற்கு தெய்வநாயகத்தின் பதிலும் நடந்தேறின. இறுதியில் தெய்வ நாயகம் நீதிபதிகள் தீர்ப்பு எழுதுவதற்கு முன் தான் பேச வேண்டும் என்று ஏற்பாட்டாளர்களிடம் அனுமதி கேட்டு பேசத் தொடங்கினார்.
மு.தெ: இன்னும் சிறிது நேரத்தில் நீதிபதிகள் தீர்ப்பு எழுதப் போகிறார்கள். முதல் நாள் வந்த ஷம்சுதீன் என்ற இஸ்லாம் பெரியார் வயிற்று வலி காரணமாக இன்று இரண்டாம் நாள் வரவில்லை. [இவர் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போது இவரது வழக்கறிக்கை நீதிபதிகள் மேசைமீது வழங்கப்பட்டது.] இப்போது எனது வழக்கறிக்கையை அளித்துள்ளேன். நீதிபதிகளுக்கு வழக்கின் சாராம்சங்களை அறிய எனது 5 நூல்களை அளித்துள்ளேன். அவற்றை முழுவதுமாகப் படித்தால் தான் நீதிபதிகள் தீர்ப்பளிக்க முடியும்.  ஏறத்தாழ ஒன்றரை நாட்களில் இந்த ஐந்து நூல்களையும் நீதிபதிகளால் படித்து முடிக்க முடியாது. இருந்தாலும் அவற்றைப் படிக்காமல் தீர்ப்பளித்தால் அது ஒரு தீர்ப்பாகவே இருக்க முடியாது. எனவே வேறு ஒரு சமயத்தில் சுமார் 15 நாட்கள் விவாதிக்கலாம். நீதிபதிகளும் அவற்றைப் படித்து விட்டு விவாதத்தில் கலந்து கொள்ளலாம். இந்தச் சூழ்நிலையில் தீர்ப்பு இன்றே வழங்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதை அவையே சொல்லட்டும்!
[அவையில் சிலர் தீர்ப்பு பின்னர் வைத்துக் கொள்ளலாம் என்றும், இரு நாட்கள் பணம் கொடுத்துக் கலந்து கொண்ட காரணத்தால் இன்றேதீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் பலரும் கூறினர்.]
தீர்ப்பு வழங்குவதற்கு முன் அரைமணி நேரம் நீதிபதிகள் நால்வருக்குள்ளே விவாதித்து முடிவுக்கு வரலாம் என்று அனுமதிக்கப்பட்டோம். நாங்கள் எங்களுக்குள் விவாதித்தோம். நீதிபதிகளை அழைத்து வந்து திரு.தெய்வநாயகம் அவமதித்ததை மிகவும் வருத்தத்தோடு ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டோம். படித்து விட்டு வா என்பதும், மேலும் 15 நாட்கள் விவாதிக்க வேண்டும் என்பதும், இரு நாட்களாக தமிழகத்திற்கு தோமாவின் வருகை பற்றியே எவ்வித ஆதாரமும் காட்டாததையும், ‘இந்தியா புனித தோமா வழிக் கிறித்துவ நாடே’ என்று இவரே தேற்றேகாரம் கொடுத்து தமக்குத் தாமே தீர்ப்பு செய்து கொண்டு போலியாக ஆய்வரங்கத்தைக் கூட்டியதும் ஆகிய இவற்றை மிகுந்த கவலையோடும் வேதனையோடும் பேசி, இது முறையற்ற ஓர் ஆய்வரங்கம் என்று முடிவு செய்தோம்.
Icon of the Martyrdom of St. Thomas (taken from the Metropolis of Artis website: http://www.imartis.gr/imartis/texni.php)


The martyrdom of St. Thomas the Apostle(http://pravicon.com/images/sv/s2173/s2173006.jpg)
இறுதியில் நீதிபதிகள் பிரதிநிதியாக பேராசிரியர் ப.ஜீவானந்தம் அவர்கள் தீர்ப்பை வழங்குமுன் சிற்றுரை ஆற்றி தீர்ப்பை வழங்கினார். அது இது தான்:
   
முறைமாறாக வழக்கறிக்கையே தீர்ப்பு சொல்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னால் தான் வழங்கப்பட்டதாலும், 5 நூல்கள் படித்துவிட்டு வந்த பிறகு 15 நாட்கள் விவாதம் வைத்தப்பின் தான் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆய்வுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்பவர் கூறுவதாலும்தீர்ப்பைத் தள்ளி வைக்கிறோம்”
வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டியதே ஏற்புடையது என்றாலும் ஏற்பாட்டாளர்கள் மனம் புண்பட வேண்டாம் என்று தள்ளி வைக்கப்பட்டது என்றோம். [29-08-2013 ஆம் நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.]
ஆய்ந்து பார்த்தால் இயேசு கிறிஸ்து கூறியவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சைவ சித்தாந்தக் கருத்துக்கள் இருப்பது உண்மை. ஆனால் இயேசு வழி, தோமா வழியில் சைவம் உருவானது என்பது பாட்டியை பேத்திதான் பெற்றெடுத்தாள் என்பதாக அல்லவா இருக்கிறது??!! இந்தப் பொருளில்லா கூற்றை ஒருவர் 45 ஆண்டுகளாக அறைகூவி வருவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!
சரி! தோமா தமிழகத்திற்கு வந்தது பற்றி ஒன்றும் கூறவில்லையே என்று முணுமுணுக்காதீர்கள்!. இதன் தொடர்ச்சியாக அந்த ஆய்வை மேற்கொள்கிறோம்! விரைவில் எதிர் பாருங்கள்!!!
Advertisements

16 Responses to தோமா இந்தியா வருகை – போர்த்துகீசியர் கட்டிவிட்ட கட்டுக்கதை- முனைவர் மு.தெய்வநாயகம்

 1. Ant says:

  தங்கள் ஆய்வையும் அதன் முடிவையும் அறிய ஆவலாய் உள்ளேன். ஆதராபூர்மான கட்டுரைகளாக உள்ளது தயவு கூர்ந்து எழுத்து நடையை கிருஸ்தவர் அல்லாதவர்களும் புரியும்படி (இக்கட்டுரை தரம் போல்) இருந்தால் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

 2. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  தங்கள் கருத்தை ஏற்கிறேன். ஆனால் இது பலரின் நம்பிக்கைக்கு எதிரான ஆய்வுக் கட்டுரை என்பதால் பைபிள் வாசகஙளைத் தர வேண்டிய்ள்ளதே என்பதால் குழப்பம் போலவும். திருத்திக் கொள்கிறேன்.

 3. Richard says:

  கேள்வி: தோமா தமிழ் நாட்டிற்கு வந்தார் என்றால் அது பற்றி ஏன் விவிலியத்தில் செய்தி இல்லை?

  மு.தெ. பதில்: நல்ல கேள்வி. பழைய ஏற்பாடு இன்றுள்ள நிலையில் முதலில் இல்லை. எட்டுவிதமான திரித்தல், மறைத்தல், வெட்டல் போன்ற செயல்களால் பழைய ஏற்பாடு பெரிய சிதைவான மாற்றங்களை அடைந்தது. இம்மாற்றங்களைச் செய்தவர்கள் ஐரோப்பியர்கள். இருப்பதைத் திரிப்பதில் இவர்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் காணப்பெறும் பிராம்மணர்களுக்கு ஒப்பானவர்கள். ஐரோப்பியர்கள் இப்படிச்சிதைவு செய்ததற்குக் காரணம் அவர்கள் இயல்பில் கிறித்துவர்கள் அல்லர். ஐரோப்பியர்க்கும் கிறித்துவத்திற்கும் என்ன சம்பந்தம்? ஏசு கிறிஸ்து ஐரோப்பியாவை சேர்ந்தவர் அல்லர்; அவர் ஒரு ஆசிய ஆன்மிக சோதி.

  இன்னும் சொல்லப் போனால், கத்தொலிக்கத் திருச்சபையில் யாரும் எவரும் எவரையும் கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்டால் தண்டனை தான். அதனால் தான் மக்கள் இன்று உலகெங்கணும் திருச்சபைகளில் இருந்து விலகிச் செல்கிறார்கள். அதனால் சர்ச்சுகள் எல்லாம் தியேட்டர்களாக்கிக் கொண்டிருக்கின்றன. காரணம், இந்த ஐரொப்பியர்களுக்கு கிறித்துவிடம் இயல்பாகவே எப்போதும் விசுவாசமில்லை.

  [என் கருத்து: தோமா கிறித்து காலத்தவர்; அவர் பெயர் எப்படி பழைய ஏற்பட்டில் வரும்? இப்படியே அவரது உரை கத்தோலிக்கத் திருச்சபைகளைச் சாடுவதாகவே தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் சென்றது. அதற்குள் அவையிலிருந்து கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை என்றும் பதிலைச் சொல்லச் சொல்லுங்கள் என்று நீதிபதிகளாகிய எங்களுக்கு சீட்டு வந்தது. இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அவையில் இருந்த அனைவரும் கிறித்துவர்கள்; அவர்களில்70 விழுக்காடு கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் தெய்வநாயகத்தின் கருத்துக்களுக்கு எதிரானவர்கள்; மீதி 30 விழுக்காட்டினர் தெய்வநாயகத்தின் ஆதரவாளர்கள்.]

  கேள்வி: தாங்கள் தோமா தமிழகத்திற்கு வந்தார என்பதற்கு ஆதாரங்களுடன் நேரடியாக பதிலளியுங்கள்! இது அவையினர் அனுப்பியுள்ள சீட்டில் வந்துள்ள வேண்டுகோள் அல்லது முணுமுணுப்பு.

  முனைவர் தெய்வநாயகம் இதற்கு கோபப்பட்டுப் பேசினார். மேலும் சுமார் 20 நிமிடங்கள் அவரது பேச்சு அதே பாணியில் மற்றொன்று விரித்தலாய்ச் சென்று கொண்டிருந்தது. அப்போது ககல் 1.00 மணி ஆனதால் உணவு இடைவேளி அறிவிக்கப்பட்டு மேடை கலைந்தது. தெய்வநாயகத்தின் ஆதரவாளர்களில் ஒருவர் என்னை நீங்கள் இப்படியெல்லாம் பேச்சின் இடையே இடைமறிக்கக் கூடாது. முழுமையான பேச்சு நிகழ்ந்தபின் தான் கேள்விகளைக் கேட்கவேண்டும் என்று சினத்துடன் கூறினார். உடன் திரு.தெய்வநாயகமும் இருந்தார். ஆய்வரங்கத்தில் பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களது கேள்விகளை முதலில் முன் வைக்க வேண்டும் என்பதுதான் திரு.தெய்வநாயகம் அவர்களின் வேண்டுகோள். காரணம் பேராயர் சற்குணம் அவர்கள் ஆய்வரங்கத்தில் காலைப் பகுதிக்குப் பின் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை என்று கூறிவிட்டார். எனவே அவரது கேள்விகள் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆக, உரைக்குப்பின் கேள்வி என்பதற்குப் பதிலாக கேள்விக்குப் பதில் என்றுநிகழ்ச்சி மாறிவிட்டதை அவையறிந்து தானே செய்தோம்? அப்படியானால் கேள்விக்குபதில் வரவேண்டாமா? வரவில்லை என்று அவை சுட்டிக்காட்டினால்அதை நீதிபதிகள் உரையாளருக்குச் சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? என்று ஆதரவாளரைக் கேட்டபோது உடன் திரு.தெய்வநாயகம் விளக்கம் தந்தார். அதாவது தான் பேசியது அவைக்காகவோ அல்லது நீதிபதிகளுக்காகவோ அல்ல என்றும் தன்னுடன் மாறுபட்ட தனது நன்பரானபேராய சற்குணத்திற்கு சில விளக்கங்கள் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கவே அப்படி பேசியதாகக் கூறினார்.

  இது மேலும் விசித்திரமாக இருந்தது. அவையைக் கூட்டிவிட்டு இவரும் பேராயரும் தங்களிடையே உள்ள பிணக்குக்களை அவையறியாமல் பேச அவையைப் பயன்படுத்திக் கொள்வது அநாகரிகமான செயலாகாதா? அதிலும் அவையில் ரூ.2000/- பணம் செலுத்திவிட்டு வந்து அமர்ந்திருக்கிறார்கள். அவையும் வெறும் உரையரங்கம் அல்ல; ஆய்வரங்கம் என்று அறிவிக்கப்பட்டு அதற்கு நீதிபதிகளையும் அமர்த்திவிட்டு இருவர் தமக்குள் ஒருவர்பேசுவது மற்றவருக்கு மட்டும் பொருள் விளங்க என்று குறிப்பாகப் பேசுவது சரியல்ல அல்லவா? அப்படியும் சற்குணம் அவர்கள் கேட்ட கேள்விக்குத் தான் பதில் வரவில்லை என்பது அவையின் ஆதங்கம். அதைவிட்டு எதையோ மற்றொன்று விரித்தலாய் நீட்டிப் பேசுவது என்ன நியாயம்?

 4. Richard says:

  உணவு வேளைக்கு மேடை கலைந்த போது பேராயர் சற்குணம் நீதிபதிகளாகிய எங்கள் ஐவருக்கும் கை கொடுத்துவிட்டு, ‘அபாரப் பொறுமை உங்களுக்கு’ என்று கூறிவிட்டு சென்றார்.

  இடைவேளையில் அவையிலிருந்த பலரும் வந்து தெய்வநாயகம் அவர்கள் செய்வது கொஞ்சமும் சரியல்ல என்ரும் இது முறையாக நடைபெறுகிற ஆய்வரங்கமாகத் தெரியவில்லை என்றும், கேள்விகளுக்கு விடை அளிக்கப்படும் என்று அறிக்கையில் சொல்கிறார்; இன்னும் பேச்சிடையேயும் கூறுகிறார்; ஆனால்எந்த கேள்விக்கும் அவரிடமிருந்து சரியான பதில் வரவில்லை என்றனர். அப்போது அது கேட்டு எங்களை அணுகிய திரு.தெய்வநாயகம் அவர்கள் காலையில் பேசியது சற்குணத்திற்காக என்று மீண்டும் கூறினார். அங்கிருந்தவர்கள் புன்னகை பூத்துக் கலைந்தனர்.

  அதன் பிறகு மாலை 5.00 மணிக்கு அவை கூடியது. திரு.தெய்வநாயகம் மீண்டும் 1 மணி நேரம் சொற்பொழிவாற்றினார். அதிலும் தோமா தமிழகம் வந்தது பற்றிய ஆதாரங்கள் எதையும் கூறவில்லை. வேண்டுமென்றால் தன்னுடைய 5 நூல்களைப் படியுங்கள் என்றார். எனக்கு அவை தரப்படவில்லை என்றபோது அவை தரப்பட்டன. சொற்பொழிவில் குறிப்பாக அவர் சொன்னது கீழே தரப்படுகிறது.

  மு.தெ.சொற்பொழிவு: தோமா தமிழகத்திற்கு வந்தபோது நாட்டில் சிவலிங்கம் இருந்தது. ஆனால் சிவவழிபாடு இல்லை. அதைப் பரப்பியவர் தோமா தான். அவர் தான் தமிழ்நாட்டில் சைவ வைணவ சமயங்கள் உருவாவதற்குக் காரணமானவர்.

 5. Richard says:

  [என் கருத்து: சிவலிங்கம் இருந்தது ஆனால் சிவவழிபாடு இல்லை என்பதை போன்ற கருத்து அறிவுக்கு பொருந்தாத கருத்தாகாதா? அப்படியென்றால் சிவலிங்கம் என்பதை ஒரு பொம்மை போல தமிழர்கள் வீட்டிலெ வைத்து விளையாடினரா? அது சரி! தோமா ஏசு கிறித்துவின் சீடரானால் அவர் தமிழகத்திற்கு வந்து கிறித்துவின் பரப்புரைகளை அல்லவா பரப்ப வேண்டும்? அதைவிட்டு தமக்கு ஒரு தொடர்பும் இல்லாத சிவ வழிபாட்டைத் தமிழர்களுக்க் எப்படி கற்றுக் கொடுக்க முடியும்? சிந்து வெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதும் அது கி.மு. 7500 காலத்தைச் சேர்ந்தது என்றும் பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்திலேயே மனிதவளப் பண்பாட்டுத்துறை விஞ்ஞான அய்வு அடிப்படையில் அறிக்கை வெளியிட்டதே! அங்கே ஏராளமாக சிவலிங்கங்களும, சிவன் கோயில்களும் இருந்ததாக அகழ்ந்து அறிந்த சர் ஜான் மார்ஷல் அவைகளைப் பட்டியலிட்டு அருங்காட்சியகத்தில் வைத்துள்ளாரே! அப்படியானால் தோமா தமிழகம் வருவதற்கு முன்னே ஏறத்தாழ 7500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிவ வழிபாடு செய்திருப்பதற்கான ஆணித்தரமான சான்று கிடைத்திருக்க, தோமா வந்து தான் சிவ வழிபட்டைத் தமிழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் என்பது அது வரை தமிழர்கள் சிவலிங்கத்தைப் பொம்மை போல வைத்து விளையாடினர் என்பதும் எவ்வளவு அண்ட புளுகு என்பதைக் கேட்போர் அனைவரும் உணர்வர் என்பது திண்ணம்.

  அதுமட்டுமா, முதல் கடல்கோளில் மூழ்கிப் போன பஃறுளி ஆற்றினை உள்ளடக்கிய தமிழ்நாட்டை ஆண்ட முதுகுடுமிப் பாண்டியன் சிவபெருமானை கோயில் கட்டி வணங்கினான் என்று புறநானூறு கூறுகிறதே!

  “பணியியர் அத்தை நின்குடை முனிவர்

  முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே”

  என்று புறநானூற்று வரிகளுக்கு இவர் என்ன பதில் சொல்லுவார்?

  சிவ வழிபாடும், சைவ சித்தாந்தமும் திராவிடருக்கே (தமிழருக்கே) உரியது என்று G.U.Pope அவர்களே கூறும் போது இவர் தோமா வந்து தமிழர்களுக்குசிவ வழிபட்டைக் கற்றுக் கொடுத்தார் என்பது நகைக்கத் தக்கதாய் உள்ளது!

  சரி! தோமா சைவத்தை உருவக்கினார் என்பதே நகைப்புக்கு உரியதாக இருக்கும் போது அவர் வைணவத்தையும் ஏன் உருவாக்க வேண்டும் என்ற கேள்வி எழாதா? எப்படி சிறிது கூட காரண காரிய அறிவுக்குப் பொருந்தாமல் இப்படி எல்லாம் பேச முடிகிறதோ??!! இது இவரால் மட்டுமே முடியும்! இதை 45 ஆண்டுகளாகச் செய்து வருகிறார் என்பது இன்னும் வேடிக்கை! ]

  கேள்வி: கிறித்துவத்தில் மூவொருமைக் கோட்பாடு உள்ளதாகக் கூறுகிறீர்கள். இந்த Trinity என்ற கோட்பாடு கான்ஸ்டள்ளடன் மன்னன் (கி.மு. 4 ஆம் நூற்றாண்டு) காலத்திலேயே கிறித்துவத்தை உலக மதங்களில் காணப்படும் மூன்று கடவுள் கோட்பாட்டைப் போலப் புகுத்திப் போதிக்கப்பட்டது என்பது வரலாற்றுச் செய்தி. இதனை மறுக்கமுடியுமா?

  மு.தெ. பதில்: (இதற்கும் அவர் நேரிடையான பதில் கூறாமல் சுற்றி வளைத்துப் பேசினார்.) அவர் பேசியதின் சாரம் இது: அதாவது Trinity என்பது இறைவன், பரிசுத்த ஆவி, குமாரன் என்பதாம்.

  எனது இடைமறிப்பு: ஐயா! இந்த Trinity பற்றி கிறித்துவச் சபைகளிலேயே வேறு ஒரு கருத்து நிலவுகிறது. அதைப் பற்றிக் கேட்கலாமா?

  மு.தெ. பதில் : தாராளமாகக் கேளுங்கள்!

  என் கேள்வி: ஸ்வீடிஷ் விஞ்ஞானியும் தத்துவவாதியும் ஆன ஸ்வீடன்பர்க் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

  மு.தெ.: (பதில்லை)

  என் கேள்வியின் தொடர்ச்சி: ஸ்வீடன்பர்க் அவர்களின் காலம் கி.பி. 1688 – 1772. இவர் கடவுளை Triune God என்று கூறுகிறார். இதன் அடிப்படையில் விஞ்ஞான விளக்கங்களைக் கொடுத்து New Jerusalem Church என்ற ஒன்றை உருவாக்கினார். அது பற்றி உங்கள் கருத்து என்ன? Trinity சரியா? Triune சரியா?

 6. Richard says:

  மு.தெ. பதில்: இதுபற்றி தாங்களே கூறிவிடுங்கள்!

  என் விளக்கம்: Triune God என்பது பரம்பொருளின் மூன்று குணங்களைக் குறிக்கும் எஙிறார் ஸ்வீடன்பர்க். அறிவி, இச்சை, செயல் என்ற இம்மூன்று குணங்களை இயற்கையாக உடைய ஒரு சித்துப் பொருள்தான் பரம்பொருளாகிய கடவுள். (இதையொட்டி சைவ சித்தாந்தக் கருத்துக்களுக்கு ஏற்ப ஸ்வீடன்பர்க் உலகத் தோற்றத்தை விளக்கியதைச் சுருக்கமாக விளக்கினேன்)

  மு.தெ: அவையோரே! பாருங்கள்! நாம் அழைத்து வந்திருக்கிற நீதிபதிகள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்லர் என்பது தெரிகிறதா? (குறிப்பாக என் பெயரைச் சொல்லி) இவர் மிக நுண்மாண் நுழைபுலம் உடையவர். இறைவன், பரிசுத்த ஆவி, குமாரன் ஆகிய இந்த Trinity தங்களுக்குள் பேசிய மொழி என்ன தெரியுமா? தமிழ் தான்! தமிழே உலகத்தின் முதல் மொழி. இதற்கு விவிலியத்தில் ஆதாரம் இருக்கிறது. ஆதியாகமம் 11 – ஐப் படியுங்கள்! ஆனால் Trinity கோட்பாடு விவிலியத்தில நேரடியாகக் கூறப்படவில்லை.

  [என் கருத்து: Trinity கோட்பாடு விவிலியத்தில் நேரடியாக கூறப்படவில்லை என்றால் இவர் அதை அறிந்தது எப்படி? அதை விவிலியத்தில் எப்படி இவர் ஏற்றி கூறலாம்? இவரை அடியொற்றி சில கிறித்துவர்கள் நூலே எழுதியிருக்கிறார்கள். இதற்கு கிரித்துவ திருச்சபைகளின் ஆதரவு உண்டா? அடுத்து, உலகின் முதல் மொழி தமிழ்மொழி என்று இவர் கூறியது இன்று மானிடவியலாளர்கள், கடலடி ஆய்வறிஞர்கள், உலகப் பழமையான எழுத்தினை கணினி மூலம் ஆய்வு செய்பவர்கள் ஐயத்திற்கு இடமின்றி நிறுவி வருவது உண்மை. ஆனால் இதற்கு இவர் கூறும் ஆதியாகமம் 11 சரியான மேற்கோள் ஆகுமா என்றால் ஆகாது என்பது தான் உண்மை.

  “ஆதியாகமம் 11: 1 : பூமியெங்கும் ஒரே பாஷையும் ஒரே விதமான பேச்சும் இருந்தது.

  ஆதியாகமம் 11: 6 : அப்பொழுது கர்த்தர் இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது. அவர்கள் இதைச் செய்யத் தொடங்கினார்கள். இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைப்பட மாட்டாது என்று இருக்கிறார்கள்

  ஆதியாகமம் 11: 7 : நாம் இறங்கிப் போய் ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு அங்கே அவர்கள் பாஷையைத் தாறு மாறாக்குவோம்”

  விவிலியத்தில் இப்பகுதியில் ஆதியில் ஒரே பாஷை பேசப்பட்டது என்று தான் வருகிறதே தவிர அது தமிழ் என்ற குறிப்பு தினையளவும் இல்லை. அத்துடன் அம்மொழியை இறைவனே தாறுமாறக்கினான் என்பதும் தமிழுக்கு ஆதரவாக இல்லை.

  எனவே இது ஒரு தவறான மேற்கோள். அதை விட விஞ்ஞான ரீதியாக தமிழை உலக முதன்மொழி என்பதற்கு சான்றுகள் பலவுள என்றாலும் இவர் சொல்கிற Trinity தமிழ் தான் தமக்குள் பேசிக் கொண்டது என்பதற்கும் விவிலியத்தில் சான்றுகள் ஏதுமில்லை.

  இதைவிட இயேசு கிறித்து பேசிய அறமாயிக் மொழி தமிழோடு நெருங்கிய தொடர்புடைய தமிழின் கிளைமொழி என்பதைக் கூறலாம். அண்மையில் திரு.ம.சோ.விக்டர் என்ற கிறித்துவ அறிஞர் ஒரு ஓளிப்பதிவுக் காட்சியை பேஸ்புக்கில் அளித்தார். அதில் இயேசு சிலுவையில் இறுதியாகக் கூறியவை தமிழே என்று அறுதியிட்டிருக்கிறார்.

  இயேசு இறுதியாகக் கூறியது இது என்று விவிலிய புதிய ஏற்பாட்டில் காணப்படும் சொற்கள் இவை “எலியோ! எலியோ ! லாமா! சாபக்தா நீ!”

  இதில் எல் என்பது ஓலிக் கடவ்யுளைக் குறிக்கும் தமிழ்ச்சொல். அக்கடவுளை அழைப்பதாக “எலியோ!” என்று அழைத்தார் இயேசு. அடுத்து “சாபக்தா நீ” என்பதை “சாவைத் தா நீ” என்ற தமிழின் திரிபு அது என்கிறார் விக்டர். சிலுவையில் வலி தாங்க முடியாமல் சாவை இறைவனிடம் இயேசு வேண்டினார் என்பது அவர் கருத்து. இயேசு அறமாயிக் பேசியவர் என்பதனால் அவர் இறுதியில் பேசியது திரிந்த தமிழ் என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது.

  எனவே இது போன்ற ஓரளவிலாவது ஏற்றுக்கொள்ளக் கூடிய சான்றுகளைக் காட்டாமல் தவறான ஒரு மேற்கோளை திரு.தெய்வநாயகம் கூறியது அவருக்கே உரிய பாங்கு எனலாம்.]

 7. Richard says:

  கேள்வி: திருக்குறள் சைவ – வைணவ இலக்கியங்களில் நேரடியாகக் கூறப்பட்டுள்ளதா? (திரு தெய்வநாயகம் திருவள்ளுவர் தோமாவின் சீடராய் அவரிடம் கற்று திருக்குறள் எழுதினார் என்று கற்பித்துக் கூறுபவர்.)

  மு.தெ. பதில்: இது பற்றி நாளை ( 28-08-2013) ஆய்வுரையில் பேசுவேன். அப்போது இதற்கு விடை வரும்.

 8. Richard says:

  28-08-2013 ஆம் நாள் காலை

  மு.தெ. ஆய்வுரை: இதில் திரு தெய்வநாயகம் கூறிய சில முக்கிய கருத்துக்களாவன:

  புற வழிபாடு எல்லா மதத்திலும் வன்முறைக்கே வித்திடுகிறது

  புதிய ஏற்பாட்டில் யாக்கோபு, ஜெஹோவா பற்றிய பெயர் குறிப்பாகக் கூட இல்லை.

  பழைய ஏற்பாடு முழுதும் அரசியல்தான்; அதில் காணப்படும் பல தகவல்கள், தரவுகள் கிறித்துவத்திற்கு எதிரானவை.

  ரட்சிப்பிற்கும், ஆசீர்வாதத்திற்கும் உள்ள உண்மைத் தெளிவு பழைய ஏற்பாட்டில் இல்லை.

  இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலிருந்து நடிப்படைகள் இணைக்கப்பட்டு வடக்கே சமஸ்கிருதம் தோன்றி பொதுமொழி ஆயிற்று.

  [மீண்டும் அவையோர் தோமா தமிழகத்திற்கு வந்தாரா என்பதை பற்றி ஆதாரத்துடன் கூறுங்கள் என்று கூச்சலிடுகிறார்கள்.]

  மு.தெ. விளக்கவுரை: [தோமா தமிழகத்திற்கு வந்தார் என்பதை விளக்க முற்படுகிறார்.] தோமா தமிழகத்திற்கு வருமுன் இங்கே இருந்தது சமணமும் பௌத்தமும் தான். அப்புறம் உருவானது தான் சைவ – வைணவக் கோட்பாடுகள். இப்போதுள்ள கிறித்துவ மதம் எங்கோ கீழே உள்ளது. சைவ சித்தாந்தமோ மிக உயர்ந்த நிலையில் உள்ளது. சித்தாந்தம் கூறாத வேதம் – வேதாந்தத்தை உருவாக்கியவர் வியாசர். அவர் ஒரு தாழ்த்தப்பட்டவர் தான். இராமாயணம் எழுதிய வால்மீகியும் தாழ்த்தப்பட்டவர் தான். வேத வியாசர் தான் ரிக், யசுர், சாம, அதர்வண வேதத்தை எழுத்துருவில் கொண்டு வந்தார்.

  [பேச்சு உணவு இடைவேளை வரை நீண்டு கொண்டு மேலே சென்ற பாணியிலேயே தோமாவின் தமிழக வருகை பற்றிய கேள்வியைத் தொடாமலே சென்று முடிந்தது.]

 9. Richard says:

  மாலை 4.30 மணி முதல் மீண்டும் ஆய்வுரை

  மு.தெ.: திருக்குறள் தோமா வழியில் உருவாக்கப்பட்ட நூல் ஆனால் இது சமய வரலாற்று நூள் இல்லை; பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. திருக்குறளில் உயிர் வதைக் கோட்பாட்டிற்கு எதிரான கருத்துக்கள் உண்டு. (சில குறட்பாக்களை மேற்கோள் காட்டுகிறார்) இந்தக் கருத்து விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இல்லை என்றாலும் புதிய ஏற்பாட்டில் இருக்கிறது. ரோமர் 14 பகுதியில் உயிர் வதைக்கு எதிரான வசனங்கள் வருகின்றன (அவற்றை மேற்கோள் காட்டுகிறார்). இவை திருகுறலில் எப்படி வந்தன? தோமா வழிக் கிறித்துவத்தால் திருக்குறலில் இது கூறப்பட்டது. இதை யாராவது மறுக்கமுடியுமா?

  [என் கருத்து: உயிர் வதை செய்யலாகாது என்பது உலகில் உள்ள எல்லா அருளாளர்களின் பொதுக் கருத்து. அதை திருவள்ளுவர் கூறினார் என்பதாலேயே தோமாவிடமிருந்து தான் வள்ளுவர் அதைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதென்ன கட்டாயம்? தோமா வருவதற்கு முன் தமிழர்காள் எல்லாம் உயிர்வாதை செய்வதையே தொழிலாகக் கொண்டிருந்தனரா? தோமா வந்தவுடன் அசைவ உணவுகளை தமிழர்கள் விட்டார்காளா?

  இதற்கெல்லாம் ஏதாவது ஆதாரம் உண்டா? உண்டென்றால் காட்டினாரா? அது ஒரு புறம் இருக்கட்டும்; இவரது மேற்கோளாவது உயிர் வதையை எதிர்க்கிறதா என்றால் அதுவும் இல்லை.

  புதிய ஏற்பாடு ரோமர் 14 :2: ஒருவன் எந்தப் பதார்தத்தையும் புசிக்கலாம் என்று நம்புகின்றான்; பலவீனமானவனோ மரக்கறிகளை மாத்திரம் புசிக்கிறான்

  ரோமர் 14 : 3 : புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; இறைவன் அவனை ஏற்றுக் கொண்டாரே!

 10. Richard says:

  இந்த வசனங்கள் எல்லாம் உயிர் வதையை எப்படி எதிர்க்கின்றன என்று திரு.தெய்வநாயகம் தான் விளக்கம் தர வேண்டும். இதைத்தான் தோமாவிடம் கற்றுக் கொண்டு திருவள்ளுவர் உயிர்வதைக்கு எதிராகக் குறட்பாக்களைக் கொட்டினாரா? நல்ல வேடிக்கை இது!]

  கேள்வி: திருக்குறளில் இன்பத்துப் பால் இருக்கிறதே! தோமாவிற்கும் காமத்துப் பாலுக்கும் என்ன சம்பந்தம்? தோமாவிடம் கற்றுக் கொண்டா காமத்துப் பாலைத் திருவள்ளுவர் எழுதினார்? (இந்த கேள்வி பேராயர் எஸ்றா சற்குணம் எழுப்பி விட்டுச் சென்ற கேள்வி. இது மீண்டும் வேறு ஒரு அவை நண்பரால் கேட்கபட்டது.)

  மு.தெ. பதில்: திருக்குறளில் இன்பத்துப்பால் இருப்பதைப் பற்றி சிலர் மாறுபடப் பேசுகிறார்கள். அதன் உயர்வு தெரியாமலேயே இவர்கள் பேசுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதில் கூறப்படும் தலைவன் – தலைவி இறைவனும் ஆன்மாவும் தான். இறைவனை மணவாளன் என்றும் ஆன்மாவை மணவாட்டி என்றும் கூறும் கருத்துக்கள் விவிலியத்தில் உண்டு. எனவே ஆன்மா இறைவனோடு சேர்ந்து அனுபவிக்கும் பேரின்பம் தான் திருக்குறளில் வரும் இன்பத்துப் பால்.

  [என் கருத்து: இது ஏற்கத்தக்கதே. விவிலியத்தில் பல இடங்களில் மணவாளன் – மணவாட்டி என்ற குறிப்புகள் வருகின்றன. ஆனால் உரிய விளக்கங்கள் இல்லாமல்.]

  மு.தெ: (தொடர்கிறார்) இன்னும் திருக்குறள் பற்றி ஒரு கருத்து சொல்ல வேண்டும். திருவள்ளுவர் கி.மு. 31ல் தோன்றியவர் என்று சிலர் ஆராய்ச்சி முடிவுக்கு வந்து அதை தமிழக அரசும் ஏற்றுக் கொண்டு நாட்காட்டிகளை அச்சிட்டு வருகின்றது. உண்மையில் திருவள்ளுவர் கி.பி.3 முதல் 6அம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவர் இதனை எந்தப் பல்கலைக் கழகத்தில் வேண்டுமானாலும் வந்து ஆதாரங்களுடன் நிரூபிப்பேன். முன்னர் அறிஞர்கள் செய்த ஆராய்ச்சிகள் எல்லாம் ஆராய்ச்சியன்று.

 11. Richard says:

  இன்னும் திருக்குறள் பற்றிக்கூறிய அவரது கருத்துக்கள்:

  ஆதி பகவன் – பகுத்தவன் பகவன்; பகுத்தவன் இறை, பரிசுத்த ஆவி, குமரன் என்று பகுத்தான்.

  வாலறிவு – ஒளி அறிவு

  இருவினை – பிறக்கும் போதே வாரும் வினை. இது உடனிருப்பதால் சகசமலம் எனப்படும்.

  ஐந்தவித்தான் – பேதுரு (St. Peter)

  ஐந்தவித்தான் ஆற்றல் – சாவை வென்ற ஆற்றல்

  [என் கருத்து: வள்ளுவரை கிறித்துவிற்கு முந்தி 1 ஆண்டுகள் மூத்தவர் என்று சொல்வதை ஏற்க இவருக்கு மனம் இல்லை. ஏனென்றால் முன்னவரானால் தோமாவிற்கு சீடராக முடியாதே! எனவே இதுவரை யாரும் கூறாதவாறு வள்ளுவர் 3 –ஆம் நூற்றாண்டிற்கும், 6 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டவர் என்கிறார். ஏன் அவ்வளவு பெரிய மூன்று நூற்றாண்டு இடைவெளி! இதில் இவருக்கே தெளிவில்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. அடுத்து தோமாவோ கி.பி. 52 லிருந்து 72 வரை அதாவது 20 ஆண்டுகள் மட்டுமே தமிழகத்தில் இருந்தார் என்றும் அவரை பிராம்மணர்கள் கொலை செய்துவிட்டனர் என்பதும் இவர் போன்றவரின் நம்பிக்கை. எனில் தோமாவின் சீடர் வள்ளுவர் என்றால் அவரும் தோமாவின் காலத்தில் தானே வாழ்ந்திருக்க வேண்டும்? பின் வள்ளுவர் எப்படி கி.பி. 3 – 6 நூற்றாண்டுகளின் இடையில் பிறந்தவராக இருக்க முடியும்? சிறுவரும் நகைக்கும் படி ஒரு தகவல் கூறி அதைப் பல்கலைக் கழகத்தில் ஆதாரத்துடன் நிறுவுவேன் என்கிறார். ஏன், இந்த ஆய்வரங்கம் ஆய்வரங்கம் இல்லையா? இங்கே ஒரு தகவலைக் கூறிவிட்டு ஆதாரங்களை கற்பனையாக ஏதோ ஓர் பல்கலைக் கழகத்தில் எதிர்காலத்தில் கூறுவேன் என்பது எந்த விதத்தில் நியாயமானது என்று தெரியவில்லை. இன்னுமொன்று : பேதுரு தான் ஐந்தவித்தான் என்கிறார்; ஐந்தவித்தான் ஆற்றல் என்பது சாவை வெல்லும் ஆற்றல் என்கிறார். ஆனால் பேதுருவோ சாவை வென்றதாக வரலாறில்லை. பேதுரு கொலையுண்டார் என்று விவிலியம் சான்று பகர்கின்றது.]

  மு.தெ. நிறைவுரை: பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கருதப்பட்ட பல கருத்துக்கள், இயேசு பிறந்த பிறகு வந்த வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டுக் காலத்தில் மறுக்கப்பட்டன. பழைய ஏற்பாட்டில் பணக்காரனுக்குத் தான் பரலோக சாம்ராஜ்ஜியம் என்று கூறப்பட்டது. ஆனால் இயேசுவோ ஊசி நுழையும் இடத்தில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையலாம்; ஒரு பணக்காரன் பரலோக சாம்ரஜ்ஜியத்தில் நுழைய முடியாது என்று கூறியது புதிய ஏற்பாட்டில் வருகிறது. பழைய ஏற்பாட்டில் கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல், கைக்கு கை, கலுக்கு கால் என்று பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று யாத்திராகமத்தில் வருகிறது. ஆனால் புதிய ஏற்பாட்டில் இயேசுவோ, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுக்கன்னத்தைக் காட்டு என்று கூறுகிறார். எனவே பழைய ஏற்பாட்டு யூத மதம் வேறு; புதிய ஏற்பாட்டு கிறித்துவ மதம் வேறு.

 12. Richard says:

  பழைய ஏற்பாட்டில் பலி உண்டு; புதிய ஏற்பாட்டில் பலி நிறைவேற்றக் கொள்கை உண்டு. இயேசுவே உலக மக்களை மீட்க தானே பலியுண்டார். அத்துடன் பலி நிறைவேறிவிட்டது. இந்தக் கொள்கையைத் தான் தோமா தமிழகத்திற்கு தந்து தமிழகத்தில் பலிகளை நிறுத்தினார். அதற்கு முன் தமிழகக் கோயில்களில் பலி இடப்படுவது காணப்படுகிறது. அதன்பின் தோமா வழியைத் தமிழகம் ஏற்றுக் கொண்டபோது பலி நிறுத்தப்பட்டது. திருநீறு கூட தோமாதான் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தினார்.

  [நீதிபதிகள் இறுதிக் கேள்வி-பதில் பகுதிக்குப் பின் அளிக்கப் பட வேண்டிய தீர்ப்புகளைப்பற்றிக் கலந்து பேசினோம். அதற்கு நீதிபதிகளை அவர் கடிந்து கொண்டார். நீதிபதிகளைக் கடிந்து கொள்வது எந்த அரங்கமும் காணாத செயல். அதை அவர் செய்தார்.] நான் பேசுகிற பேச்சை நீதிபதிகள் கவனிக்காமல் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தால் தீர்ப்பு எப்படி வழங்க முடியும்?

  [இடையில் ஒரு வாலிபர் எழுந்து விவிலியத்தை மேற்கோள் காட்டி ஒரு சந்தேகத்தை கேட்டார். அதெல்லாம் கேட்காதே, போய் நன்றாகப் படி! என்னுடைய நூல்களையும் படி! உட்கார்! என்று அதட்டி அவரை அமர வைத்துவிட்டார்.]

  மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை

  கேள்விகள் நேரம்

  [கேள்விகள் குவிந்திருந்தன. அவற்றை நீதிபதிகள் கலந்தாய்வு செய்து கொண்டிருக்கையில் ஒரு கேள்வி எப்படியோ திரு.மு.தெய்வநாயகம் அவர்களுக்கு நேரிடையாக சேர்ந்துவிட்டது. அதனை அவரே படித்துவிட்டுப் பதிலளிப்பதாக சீறினார்.]

  மு.தெ.: தோமா தமிழகதத்திற்கு வந்தார் என்பதர்கு historical evidence, archeological evidence, epigraphic evidence காட்டுங்கள் என்று ஒரு கேள்வி என்னிடம் வந்திருக்கிறது. இதையெல்லாம் இந்த குறைந்த நேரத்தில் கூற முடியாது. வேண்டுமானால் என்னுடைய ஐந்து நூல்களைப் படியுங்கள்! இன்னும் தேவையானால் இதற்கெனவே 15 நாட்கள் வேறு ஒரு சமயத்தில் கூடி விவாதத்தில் சரியான் சான்றுகளை அப்போது என்னால் காட்ட முடியும்.

  [இடையில் சலசலப்பு செய்து இரு வாலிபர்கள் கடைசி இருக்கைகளிலிருந்து எழுந்து, “சான்றுகளைக் காட்டுங்கள்! இதுவரை அது பற்றி நீங்கள் எதையுமே தொடவில்லை!” என்று கூக்குரலிட்டார்கள். உடனே திரு.தெய்வநாயகமும் அவரது ஆதரவாளர்களில் சிலரும் எழுந்து சத்தமிட்டு அவர்களை அமர வைத்து விட்டார்கள்]

 13. Richard says:

  மு.தெ. : (தொடர்ந்தார்) நான் எல்லாவற்றையும் இரண்டு நாளாகத் தெளிவாகக் கூறிவிட்டேன். எனவே தோமா தமிழகத்திற்கு வந்தார் என்பது உண்மை. தோமா தமிழகத்திற்கு வரவில்லை என்பவர்கள் கையைத் தூக்குங்கள்!

  [சலசலப்பிற்கு அஞ்சி யாருமே கையைத் தூக்கவில்லை. அனால் எதிர்க் கேள்விகள் பல சீட்டுகளில் வந்திருந்தன.]

  மு.தெ.: யாருமே கையைத் தூக்கவில்லை எனவே தோமா தமிழகத்திற்கு வந்தார் என்ற கொள்கையை இந்த அவை ஏற்றுகொண்டது.

  [என் கருத்து: இது மிகப்பெரும் ஊழி வேடிக்கை! இப்படியே ஆதாரங்கள் எதையும் கூறாமல் எதை வேண்டுமானலும் நிறுவியதாகக் கொள்ளலாம் போலிருக்கிறது. ஆட்டைப் பலி கொடுப்பவர்கள் அதன் தலையில் தண்ணீரைத் தெளிப்பார்கள். உடனே ஆடு தலையை அசைக்கும். உடனே தன்னை வெட்ட ஆடு சம்மதம் தெரிவித்து விட்டது என்று பூசாரி கத்த ஆட்டின் தலை வெட்டப்படுமாம்! சரி சபை ஏற்றுக் கொள்வதை இப்படி நேரடியாகச் செய்வதானால் எதற்கு ஆய்வரங்கம்? எதற்கு நீதிபதிகள்? அவர்களுடைய தீர்ப்பு எதற்கு? அவையும் இவருமே சேர்ந்து முடிவெடுத்துக் கொள்வதுதானே! ]

  கேள்வி: (நான் வாசித்தது) அவையிலிருந்து வந்த மற்றுமோர் கேள்வி! “பழைய ஏற்பாட்டையும், திருச்சபையையும் மிகவும் தாக்கிப் பேசுகிறீர்கள். என்மனம் புண்படுகிறது. நான் குடிகாரனாய் இருந்து திருச்சபையினால் திருந்தி நலமுடன் வாழ்கிறேன். இப்படி நீங்கள் பேசுவது நியாயமா?

  மு.தெ.: (காட்டமாக) இது என்ன கேள்வி? இதை நீங்கள் வாசிக்கலாம்? இது ஆய்வரங்கத் தலைப்புக்குப் பொருத்தமானதா? எதை எதை வாசிப்பது என்று தெரியாதா?

  நான்: என்ன பேசுகிறீர்கள்? கேள்விக்குழு தேர்ந்தெடுத்து அனுப்பியதைத் தான் நான் வாசித்தேன். நீதிபதி எதை வாசிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதைத் தான் வாசிக்க வேண்டும் என்று நீதிபதியை நிர்பந்திப்பது ஓர் ஆய்வரங்க நெறிமுறைக்கு உட்பட்டதாய் இல்லையே! இது பொருத்தமில்லாத கேள்வி என்றால் கேள்வி கேட்டிருப்பவர் உங்கள் பேச்சிலிருந்துதான் அந்தக் கேள்வியை கேட்டுள்ளதாக தெரிவிக்கிறார். நீங்கள் அதைத் தலைப்புக்குப் பொருத்தமில்லாதது என்று சாடினால் அந்தக் குற்றம் உங்களையே சாரும்! காரணம் உங்கள் பேச்சிலிருந்து தான் அந்தக் கேள்வி எழுந்துள்ளது. எனவே தலைப்புக்குப் பொருத்தமில்லாமல் பேசியது தாங்களே என்பதைத் தயவு செய்து உணருங்கள்!

  [உடனே அந்த கடைசி இருக்கை வாலிபர் இருவரும் எழுந்து, நீதிபதி ஐயா சொன்னது முற்றிலும் உண்மை! இரண்டு நாட்களாக தலைப்புக்கும் கேள்விகளுக்கும் பொருத்தமில்லாமலே பேசி வருபவர் தாங்கள் தான் என்றனர். அவர்களை அடக்குவாரும் அவர்களுக்கு ஆதரவாய்ப் பேசுவாரும் என சிறிது நேரம் கூச்சல் நேர்ந்தது.]

  மு.தெ.: (காட்டமாக) இந்த மாதிரி கலவரம் செய்யத்தான் நீங்கள் வந்தீர்களா? (என்று என்னைப் பார்ர்த்துக் கேட்டார்)

  நான்: ஒரு நீதிபதியாக என்னை அழைத்து வந்து விட்டு இப்படி பேசுவது தகுதிக்கு தக்கதல்ல.

  [அவையிலிருந்து ஒருவர் எழுந்து வந்து என்னிடம், ‘ஐயா! அவர்களை அடக்குங்கள்!’ என்றார்]

 14. Richard says:

  நான்: “ அவையை அடக்குவது ஏற்பாட்டாளர்கள் வேலை.” என்று கூறிவிட்டு, ‘பாஸ்டர் ஸ்டீபன் ! பாஸ்டர் நல்லதம்பி! உடனே மேடைக்கு வாருங்கள்! என்று அழைத்தேன்.

  [உடனே பாஸ்டர் ஸ்டீபன் நிலைமையக் கட்டுக்குள் கொண்டுவந்து தங்கும் மாறுபாடான கருத்து உண்டு என்றாலும் திரு.தெய்வநாயகம் அவர்கள் தான் கொண்ட கொள்கைகளுக்காக இழந்த இழப்புகளுக்காகவும், தியாகத்திற்காகவும் மதிப்பு வைத்தே இந்த ஆய்வரங்கை ஏற்பாடு செய்ததாகக் கூறி அமைதிப்படுத்தினார்.]

  இதன் பிறகு உப்புக் சப்பில்லாமல் சில கேள்விகளும் அதற்கு தெய்வநாயகத்தின் பதிலும் நடந்தேறின. இறுதியில் தெய்வ நாயகம் நீதிபதிகள் தீர்ப்பு எழுதுவதற்கு முன் தான் பேச வேண்டும் என்று ஏற்பாட்டாளர்களிடம் அனுமதி கேட்டு பேசத் தொடங்கினார்.

  மு.தெ: இன்னும் சிறிது நேரத்தில் நீதிபதிகள் தீர்ப்பு எழுதப் போகிறார்கள். முதல் நாள் வந்த ஷம்சுதீன் என்ற இஸ்லாம் பெரியார் வயிற்று வலி காரணமாக இன்று இரண்டாம் நாள் வரவில்லை. [இவர் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போது இவரது வழக்கறிக்கை நீதிபதிகள் மேசைமீது வழங்கப்பட்டது.] இப்போது எனது வழக்கறிக்கையை அளித்துள்ளேன். நீதிபதிகளுக்கு வழக்கின் சாராம்சங்களை அறிய எனது 5 நூல்களை அளித்துள்ளேன். அவற்றை முழுவதுமாகப் படித்தால் தான் நீதிபதிகள் தீர்ப்பளிக்க முடியும். ஏறத்தாழ ஒன்றரை நாட்களில் இந்த ஐந்து நூல்களையும் நீதிபதிகளால் படித்து முடிக்க முடியாது. இருந்தாலும் அவற்றைப் படிக்காமல் தீர்ப்பளித்தால் அது ஒரு தீர்ப்பாகவே இருக்க முடியாது. எனவே வேறு ஒரு சமயத்தில் சுமார் 15 நாட்கள் விவாதிக்கலாம். நீதிபதிகளும் அவற்றைப் படித்து விட்டு விவாதத்தில் கலந்து கொள்ளலாம். இந்தச் சூழ்நிலையில் தீர்ப்பு இன்றே வழங்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதை அவையே சொல்லட்டும்!

  [அவையில் சிலர் தீர்ப்பு பின்னர் வைத்துக் கொள்ளலாம் என்றும், இரு நாட்கள் பணம் கொடுத்துக் கலந்து கொண்ட காரணத்தால் இன்றேதீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் பலரும் கூறினர்.]

 15. Richard says:

  தீர்ப்பு வழங்குவதற்கு முன் அரைமணி நேரம் நீதிபதிகள் நால்வருக்குள்ளே விவாதித்து முடிவுக்கு வரலாம் என்று அனுமதிக்கப்பட்டோம். நாங்கள் எங்களுக்குள் விவாதித்தோம். நீதிபதிகளை அழைத்து வந்து திரு.தெய்வநாயகம் அவமதித்ததை மிகவும் வருத்தத்தோடு ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டோம். படித்து விட்டு வா என்பதும், மேலும் 15 நாட்கள் விவாதிக்க வேண்டும் என்பதும், இரு நாட்களாக தமிழகத்திற்கு தோமாவின் வருகை பற்றியே எவ்வித ஆதாரமும் காட்டாததையும், ‘இந்தியா புனித தோமா வழிக் கிறித்துவ நாடே’ என்று இவரே தேற்றேகாரம் கொடுத்து தமக்குத் தாமே தீர்ப்பு செய்து கொண்டு போலியாக ஆய்வரங்கத்தைக் கூட்டியதும் ஆகிய இவற்றை மிகுந்த கவலையோடும் வேதனையோடும் பேசி, இது முறையற்ற ஓர் ஆய்வரங்கம் என்று முடிவு செய்தோம்.

  இறுதியில் நீதிபதிகள் பிரதிநிதியாக பேராசிரியர் ப.ஜீவானந்தம் அவர்கள் தீர்ப்பை வழங்குமுன் சிற்றுரை ஆற்றி தீர்ப்பை வழங்கினார். அது இது தான்:

  “முறைமாறாக வழக்கறிக்கையே தீர்ப்பு சொல்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னால் தான் வழங்கப்பட்டதாலும், 5 நூல்கள் படித்துவிட்டு வந்த பிறகு 15 நாட்கள் விவாதம் வைத்தப்பின் தான் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆய்வுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்பவர் கூறுவதாலும், தீர்ப்பைத் தள்ளி வைக்கிறோம்”

  வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டியதே ஏற்புடையது என்றாலும் ஏற்பாட்டாளர்கள் மனம் புண்பட வேண்டாம் என்று தள்ளி வைக்கப்பட்டது என்றோம். [29-08-2013 ஆம் நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.]

  ஆய்ந்து பார்த்தால் இயேசு கிறிஸ்து கூறியவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சைவ சித்தாந்தக் கருத்துக்கள் இருப்பது உண்மை. ஆனால் இயேசு வழி, தோமா வழியில் சைவம் உருவானது என்பது பாட்டியை பேத்திதான் பெற்றெடுத்தாள் என்பதாக அல்லவா இருக்கிறது??!! இந்தப் பொருளில்லா கூற்றை ஒருவர் 45 ஆண்டுகளாக அறைகூவி வருவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!

  சரி! தோமா தமிழகத்திற்கு வந்தது பற்றி ஒன்றும் கூறவில்லையே என்று முணுமுணுக்காதீர்கள்!. இதன் தொடர்ச்சியாக அந்த ஆய்வை மேற்கொள்கிறோம்! விரைவில் எதிர் பாருங்கள்!!!

  ***************************************************

 16. நன்றி திரு.ரிச்சர்ட் அவர்களே.

  முழு கட்டுரையும் சேமிப்பது நல்லதே. மூலம் தொலைந்தாலும் இங்கே இருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: