ரூ.800 கோடி மதிப்பிலான அரசு, தனியார் நிலத்தை ஆக்கிரமித்த “தென் இந்திய அசெம்ப்ளி ஆப் காட்’ -“புதுவாழ்வு கொண்டாட்ட மையம்’

புதுவாழ்வு கொண்டாட்ட மையம் கிறிஸ்துவ “சர்ச்”

8oo crore land by church 17_11_2012_007_016

Chruch lands 20121117c_013101005 Pallavaram Lands  by church 17_11_2012_001_050

20121117c_013101006

images

சென்னை:பல்லாவரம் – துரைப்பாக்கம் வட்ட சாலையில், 800 கோடி ரூபாய் மதிப்புள்ள, அரசுக்கு சொந்தமான நிலம், மண் கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி, அந்த நிலம் நேற்று அதிரடி யாக மீட்கப்பட்டது.பல்லாவரம் – துரைப்பாக்கம் வட்ட சாலையில், கீழ்க்கட்டளை பெரிய ஏரி அருகில், “தென் இந்திய அசெம்ப்ளி ஆப் காட்’ என்ற அமைப்பின் கீழ், “புதுவாழ்வு கொண்டாட்ட மையம்’ என்ற ஆலயம் இயங்கி வருகிறது.நிலம் மீட்புபல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலத்தை, ஆலய நிர்வாகம் ஆக்கிரமித்து உள்ளதாக, பல்வேறு பொது நல அமைப்புகள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சித்திரசேனன் உத்தரவின்படி, தாம்பரம் வருவாய் கோட்ட அதிகாரி எட்டியப்பன் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று காலை, “பொக்லைனர்’ உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்தி அறிவிப்பு பலகைவைத்தனர்.மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதுகுறித்து, தாம்பரம் வருவாய் கோட்ட அதிகாரி எட்டியப்பன் கூறியதாவது:ஆலந்தூர் வட்டம், கீழ்க்கட்டளை ஏரிக்கு அருகில், சர்வே எண், 100, 101ல் 40 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன.இதையடுத்து, மாவட்ட கலெக்டர் சித்திர சேனன் உத்தரவின்படி, ஆய்வு மேற்கொண்டோம்.800 கோடி ரூபாய் மதிப்பு
இதில், ஏரிக்கு அருகில் உள்ள சர்வே எண், 13, 77, 78, 22, 73 மற்றும் 75 ஆகியவற்றில் உள்ள, 1.48 ஏக்கர் நிலம் உட்பட ஆறு ஏக்கர் நிலமும், தனியாருக்கு சொந்தமான பட்டா இடம், 12 ஏக்கரும் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரிய வந்தது.ஆலயம் உள்ள, 15 ஏக்கர் நிலத்திற்கும் பட்டா உள்ளதாக கூறினர். ஆனால், இதுவரை எந்த ஆவணமும் சமர்பிக்கப்படவில்லை.அந்த நிலமும் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கலாம். மொத்தமாக, 40 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு, 800 கோடி ரூபாய்.மீட்கப்பட்ட இடம், அதன் உரிமையாளர்களிடமும், பல்லாவரம்நகராட்சி வசமும்
ஒப்படைக்கப்பட உள்ளது.ஆவணம் உண்டா?ஆலயத்திற்கு சொந்தமானதாக கூறப்படும், 15 ஏக்கர் நிலத்திற்கு உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டால், ஆய்வு நடத்தபட்டு, அந்த ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படும்.இவ்வாறு, எட்டியப்பன் தெரிவித்தார்.ஆலய வழக்கறிஞர் ஜான்பீட்டர் கூறுகையில், “”2002ம் ஆண்டு முதல், நன்கொடையாளர்கள் மூலம் அவ்வப்போது நிலம் வாங்கினோம். இதுவரை, 38 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது. அதற்கு உரிய ஆவணங்கள் உள்ளன. இந்த பிரச்னையை சட்டப்படி சந்திப் போம்,” என்றார்.பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல்
நிலம் மீட்கப்படும் தகவல் கிடைத்ததும். பத்திரிகையாளர்கள் அங்கு சென்றனர். அதிகாரிகளால் மீட்கப்பட்ட நிலத்தை, புகைப்படம் எடுத்தனர். அப்போது, ஆலயத்தை சேர்ந்த சிலர், புகைப்படம் எடுப்போர் மற்றும் பத்திரிகையாளர்களை தனித்தனியாக புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்து கேள்வி கேட்ட சிலரை, அவர்கள் மிரட்டினர். இதை பார்த்த மற்றபத்திரிகையாளர்கள் அங்கு கூடியதால், மிரட்டியவர்கள், அங்கிருந்து விலகினர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: