இயேசு – மனிதன் கடவுளான புனையல்களே சுவிசேஷங்கள்

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகன் இயேசு என்பவர் வாழ்ந்தார் என்பதற்கு ஒரு வரலாற்றுச் சான்று ஏதும்  கிடையாது.  30 வாக்கில் மரணமடைந்த இயேசு பற்றி முதலில் புனையப்பட்டது மாற்கு சுவிசேஷம். 70-75 வாக்கில். 
பவுலால் ஆரம்பிக்கப்பட்டது மதம்

 ஏசு சீடர்களால் அல்ல
   

அதில் சொன்னதை மற்ற கதாசிரியர் மாற்றிப் புனைதல் காண்போம்

   

மாற்கு8: 27 இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, ‘ நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ‘ என்று கேட்டார்.28 அதற்கு அவர்கள் அவரிடம், ‘ சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர் ‘ என்றார்கள்.29 ‘ ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ‘ என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, ‘ நீர் மெசியா ‘ என்று உரைத்தார்.30 தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.
லூக்கா 9:20 ‘ ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்? ‘என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ‘ நீர் கடவுளின் மெசியா ‘ என்று உரைத்தார்.21 இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.
. 

மேசியா- கிறிஸ்து எனில் யூதர்களின் அரசன்(ராஜா) மட்டுமே- அப்படித்தான் இரு கதாசிரியர் சொல்ல மத்தேயு மட்டும் மாற்றிப் புனைவதைப் பார்ப்போம்.

13 இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ‘ மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்? ‘ என்று கேட்டார்.14 அதற்கு அவர்கள், ‘ சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர் ‘ என்றார்கள்.15 ‘ ‘ ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ‘ என்று அவர் கேட்டார்.16 சீமோன் பேதுரு மறுமொழியாக, ‘ நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ‘ என்று உரைத்தார்,அதற்கு இயேசு, ‘ யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்.17 ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா..

மாற்கு சுவிசேஷம் ஒரு இடத்தில் கூட சீடர்கள் ஏசுவை கடவுள் மகன் என அழைப்பதில்லை. யுதரல்லாத ரோமன் படையின் நூற்றுவர் தலைவர்  இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்- கடவுள் மகன் என்றதாக மாற்கு புனைகிறார்
லூக்கா சுவி ரோமன் ஆட்சியைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு எழுதப் பட்டது அதில் கடவுள் மகன் இல்லை, ரோமன் படையின் நூற்றுவர் தலைவர், ‘ இவர் உண்மையாகவே நேர்மையாளர்.  ‘ என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார் என மாற்றப் பட்டது.
      
 மாற்கு 15: .34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ‘ எலோயி, எலோயி, லெமா சபக்தானி? ‘என்று உரக்கக் கத்தினார். ‘ என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ‘என்பது அதற்குப் பொருள்.

39 அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த ரோமன் படையின் நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, ‘ இம்மனிதர் உண்மையாகவே இறைமகன் ‘ என்றார். 

 லூக்கா 23:46 ‘ தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ‘ என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.47 இதைக்கண்ட ரோமன் படையின் நூற்றுவர் தலைவர், ‘ இவர் உண்மையாகவே நேர்மையாளர்.  ‘ என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

மத்தேயு சுவி கதாசிரியரோ , ஒரு பூகம்பம், அதில் இறந்த இறைமக்கள் பலரின்  ஜெருசலேம் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து ஜெருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்,4 நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்த யாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, ‘ இவர் உண்மையாகவே இறைமகன் என்றார்கள்..

    

 மத்தேயு 27: 45 நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று.46 மூன்று மணியளவில் இயேசு, ‘ ஏலி, ஏலி லெமா சபக்தானி? ‘ அதாவது, ‘ என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? ‘ என்று உரத்த குரலில் கத்தினார்.  50 இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.  ர்.51 அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன.52 கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன.53 இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்.54 ரோமன் படையின் நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, ‘ இவர் உண்மையாகவே இறைமகன் ‘ என்றார்கள் .


மத்தேயு : இஸ்ரவேல் மக்களுக்காக எழுதப்பட்டது.எனவே இவர்தேவனுடைய ராஜ்ஜியம்என எழுதாமல்பரலோக ராஜ்ஜியம்என்றே இயேசு சொன்னதாகச் சொல்வார். 10 கட்டளையில் என் பெயரை வீணாக சொல்ல வேண்டாம் என்பதை மனதில் கொண்டு.அப்படி இருக்க பேதுரு மத்தேயுவில் உள்ளபடி சொல்லியிருக்கவே முடியாது.


மாற்கு14:61 61 ஆனால் அவர் பேசாதிருந்தார். மறுமொழி ஒன்றும் அவர் கூறவில்லை. மீண்டும் தலைமைக் குரு, ‘ போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ? ‘ என்று   அவரைக் கேட்டார்.62அதற்கு இயேசு, ‘ நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள் ‘ என்றார்.
யோவான் 20:28 28 தோமா அவரைப் பார்த்து, ‘ நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ‘ என்றார்.29 இயேசு அவரிடம், ‘ நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் ‘ என்றார்.

மேசியா என்றால் யூதர்களின் ராஜாஅவ்வளவே, அப்படியிருக்க  தேவனுடைய ராஜ்ஜியம் என்பதே தவறு என்கையில் தோமோவோ, யூத மதப் பாதிரி சங்கத் தலைவரும் தேவகுமாரன் எனக் கேட்டிருக்கவே முடியாது.
அப்படி பேசியிருந்தால் ஏசுவை நாம் ஆராய்ந்தால் உபாகமம்13:1-18  கூறும்படி தீர்க்கராகத் தான் பார்க்கலாம்.
இவை எல்லாம் கிரேக்க சர்ச் உளறும் புனையல்கள், என நடுநிலை பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர்.


நிலநடுக்கத்தையும் இறந்த இறைமக்கள் பலரின்  ஜெருசலேம் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து  மற்ற எந்த புதிய ஏற்பாடு புத்தகத்திலும் கிடையாதுஅனைத்தும் வெற்றுப் புனையல்கள்.Advertisements

6 Responses to இயேசு – மனிதன் கடவுளான புனையல்களே சுவிசேஷங்கள்

 1. Richard says:

  நான்கு சுவிசேஷங்களும், நான்கு வகையான பிரிவினருக்காக எழுதப்பட்டது என்று வேதபண்டிதர்கள் சொல்கிறார்கள்.

  1. மத்தேயு : இஸ்ரவேல் மக்களுக்காக எழுதப்பட்டது. எனவே தான் யூதர்களின் இலக்கிய மொழியாகிய எபிரேய மொழியில் எழுதப்பட்டது.

  2. மாற்கு : ரோமர்களுக்காக ஏழுதப்பட்டது.

  3. லூக்கா : கிரேக்க மக்களுக்காக அதாவது எல்லாவற்றையும் ஆராய்ந்து, ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களுக்காக எழுதப்பட்டது.

  4. யோவான் : விசுவாசிகளுக்காவும், மற்றும் சாதாரண மக்களுக்காகவும் எழுதப்பட்டது.

 2. RAJA says:

  அப்போ இந்தியர்களுக்காக ஒண்ணுமே எழுதப்படவில்லையா? இங்குள்ள கிறிஸ்தவர்கள் இவர்களுக்காக எழுதப்பட்டது போல பேசுகிறார்கள்.

 3. Richard-//1. மத்தேயு : இஸ்ரவேல் மக்களுக்காக எழுதப்பட்டது. எனவே தான் யூதர்களின் இலக்கிய மொழியாகிய எபிரேய மொழியில் எழுதப்பட்டது.//
  ரிச்சர்ட்- கிழுள்ள பைபிள் இணைய தளம் பக்கம் சொல்வது- மத்தேயு கிரேக்கத்தில் தான் புனையப்பட்டது.
  http://arulvakku.com/biblecontent.php?book=Mat&Cn=1

  தங்கள் பதிவு ஒரு விஷயத்தை சேர்க்கச் செய்தது.மத்தேயு : இஸ்ரவேல் மக்களுக்காக, எனவே இவர் “தேவனுடைய ராஜ்ஜியம்” என எழுதாமல் “பரலோக ராஜ்ஜியம்” என்றே இயேசு சொன்னதாகச் சொல்வார். 10 கட்டளையில் என் பெயரை வீணாக சொல்ல வேண்டாம் என்பதை மனதில் கொண்டு.

  அப்படி இருக்க பேதுரு மத்தேயுவில் உள்ளபடி சொல்லியிருக்கவே முடியாது.
  அதே போல யூத மதப் பாதிரி சங்கத் தலைவரும் மாற்கு14:61 உள்ளபடி கேட்க முடியாது. ஏனெனில் கிறிஸ்து என்றால் யூதர்களின் ராஜா மட்டுமே.
  யோவான்20:28 தோமாவும் சொல்லொவே முடியாது, இவை எல்லாம் கிரேக்க சர்ச் உளறும் புனையல்கள், என நடுநிலை பைபிளியல் அறி-ஞர்கள் ஏற்கின்றனர்.

  ராஜா வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. ஏசு இஸ்ரேலின் வழி தவறிய ஆடுகளுக்கான மேசியா அவர் யூதர்களைத் தவிர யாருக்கும் ஏதும் சொல்லவில்லை. ஏசு தன் வாழ்நாளில் உலகம் அழியும்

 4. jayan says:

  ஜுதாயாவைத்தான் ஏரோது ஆண்டானா? பெத்லஹேமும், ஜெருசலமும் பக்கத்திலுள்ள ஊர்கள்தானா? ஏரோது ரோமானியர்களுக்குக் கட்டுப்பட்ட மன்னனா? அவனுடைய தலைநகரம் எது? பரிசேயருக்கும் அவனுக்குமான உறவு குறித்து விளக்கவும்.
  ஜெருசலம் அகழ்வாராய்ச்சி பற்றி விளக்கமாகத் தமிழில் தரவும்.

 5. jayan says:

  தங்கள் வெப்ஸைட்டில் சமீபத்தில்தான் படித்தேன். மிக நன்றாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். தாங்கள் இதனை அச்சிட்டு ஒரு நூலாக வெளியிடுங்கள். அனைவரையும் சென்றடையும். ஜூதாயா, ஜெருசலம், பெத்லஹேம் , நாசரேத் பற்றி தற்போதைய பூகோள அமைப்புப் படி ஒரு மேப் உடன் தெளிவாக ஒரு கட்டுரை அளியுங்கள்.

 6. பெரிய ஏரோது யூதேயா- கலிலேயாவை முழுதும் ஆண்டான். மரணத்திற்குப்பின் மகன்களிடம் சென்றது-லூக்கா 3:1.

  புத்தகம் எழுதுமுன் முன்னோட்டம் தான் இவ்வலைப்பூ முயற்சி. தவறு இருந்தால் நண்பர்கள் காட்டினால் திருத்திக் கொள்ளவும் தயார்.

  பெத்லஹெம் – கன்னிமேரி இவை அனைத்தும் கட்டுக் கதைகள்;- இயேசு என ஒருவர் வாழ்ந்திருந்தார் எனக் கொண்டாலும். நாசரேத் என்னும் ஊர் முதல் நூற்றாண்டில் இல்லை.

  சதுசேயர்கள் ரோமன் ஆதரவாளர்கள். பரிசேயர் ரோமனியரை அமைதியாய் எதிர்த்தவர்கள். மேலும் பரிசேயர்கள் முன்னிலை பெற்றது பொ.கா. 70க்குப் பின் தான். சுவிசேஷங்கள் தன் காலநிலையை ஏசு மீது புகுத்தியதால் பரிசேயர்கள் அதிகம் காணப்படுகிறது.
  ஜெருசலேம் பற்றிக் காண்போமே. அடிக்கடி வாருங்கள் ஜெயன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: