அப்ரோ டிரஸ்ட் யேசுதாஸ்150 கோடி ரூபாய் மோசடி

சென்னை கொளத்தூரில் இயங்கி வரும் அப்ரோ டிரஸ்ட் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் பெயரை தவறாக பயன்படுத்துவதாகவும், அந்த நிறுவனத்தை நம்ப வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.

அதன் பிறகும் இந்நிறுவனம் டி வி மற்றும் பத்திரிகைகளில் எக்கச்சக்கமான் விள்ம்பரங்களை கொடுத்து மக்களிடம் பணம் வசூலித்து வந்தது

இந்நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு எஸ்ஐ ஆறுமுகம், கமிஷனர் திரிபாதியிடம் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில் ”எண்ணூர், கொளத்தூர் உள்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் அப்ரோ டிரஸ்ட் என்ற பெயரில் அதன் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஏசுராஜ் உள்பட பலர் ரிசர்வ் வங்கியின் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் வங்கி போன்று பொதுமக்களிடம் பணம் பெற்று வருகின்றனர்.

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ”என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து விசாரிக்க கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப் பதிவு செய்து அப்ரோ டிரஸ்ட்டை சேர்ந்த ராஜேஷ் (35), கொளத்தூரை சேர்ந்த செல்வதுரை (38), கேபிரியேல் (25), வேலூரைச் சேர்ந்த அகஸ்தியநாதன் (32) ஆகிய 4 பேரை நேற்று மாலை கைது செய்தனர்.
.
அவர்கள் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நுண்கடன் வழங்குவதாக கூறி மோசடி செய்ததாகவும் அப்ரோ டிரஸ்ட் நிறுவனம் மீது குற்றச்சாட்டு உள்ளது.

ஆனால் கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும் என்று பெண் முகவர்கள் ஆணையர் அலுவலகத்தில் வந்து வலியுறுத்திய காட்சியும் நேற்று அரங்கேறியது.

அப்ரோ இயக்குநராக வலம் வந்த ஏசுராஜிம் கைது செய்யப்ப்ட்டு விசாரணையில் இருக்கிறார் என்றும் இல்லையில்லை அவ்ர் தலைமறைவாக இருக்கிறார் என்வும் தகவல் வந்துள்ளது.

மேலும் இந்நிறுவனம் தமிழக்த்தில் மட்டும் 150 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கலாம் என்றும் இந்த அப்ரோ மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்ரும் வட மாநிலங்களிலும் அலுவலகம் போட்டு மேசடியில் ஈடுபட்டு வந்த்தாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது!

முன்னதாக் இந்த ஏசுதாஸ் பற்றி தனக்கு கிடைத்த தகவல்களை தருகிறார் கட்டிங் கண்ணையா:

கறுப்புக் குல்லா, கறுப்புக் கண்ணாடி, மிகப் பெரிய புன்னகையுடன் சுவரொட்டிகளில், செய்தித் தாள்களில், தொலைக்காட்சியில் நாள்தோறும் காட்சி தரும் இந்த மனிதரின் பெயர்தான் ஐ.பி.யேசுதாஸ்.

உற்சாகமாகத் தோன்றி அசத்தும்.அவர் நடந்து வரும்போது பெண்கள் பூ போட்டு வரவேற்பதை பாருங்கள்.

இவர்தான் வட்டியே இல்லாமல் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன், வீட்டுக்கடன், தொழில்கடன், வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்குக் கடன் தரும் நிறுவனம் நடத்துகிறாராம்..

‘இவரிடம் வாங்கும் கடனுக்கு வட்டியே கிடையாது என்பதுதான் கூடுதல் அட்ராக்‌ஷன்

எப்ப்டி? எப்ப்டி? இது சாத்தியம் என்று ஃபைனான்ஸ் தொழில் நட்த்தும் ஒரு பிரமுகரிடம் விசாரித்தோம்:

அவ்ர், ””இந்த அப்ரோ குரூப் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் மைக்ரோ ஃபைனான்ஸ் என்பதை, நுண்கடன் என்று சொல்லலாம். இப்படிப்பட்ட நுண்கடன் வழங்கு​வதற்கு, ரிசர்வ் வங்கி ஏராளமான விதிமுறைகளை வகுத்​துள்ளது.

அதன்படி, கடன் வழங்கும் நிறுவனத்தின் நிகரமதிப்பு (பங்கு மூலதனம் உட்பட) 5 கோடி ரூபாயாக இருக்க வேண்டும். மேலும், கடன் என்றாலே அதில் வட்டி இருக்க வேண்டும்.

வட்டி இல்லை என்றால், அதை முன்பணம் அல்லது கைமாற்று என்றுதான் சொல்ல முடியும்.

இதை எந்த ஒரு மைக்ரோ ஃபைனான்ஸும் செய்ய முடியாது.

ஆனால், அப்ரோ மைக்ரோ நிறுவனம் வட்டி இல்லாத கடன் வழங்குவதாக விளம்பரம் செய்கிறது.

இது முற்றிலும் தவறான உதாரணம். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கும் பல வரையறைகள் உள்ளது. அதன்படி அதிகபட்சமாக அதில் ஒரு உறுப்பினருக்கு 50 ஆயிரம் மட்டுமே வழங்க முடியும். அதுவும் வேறு எந்தக் கடனும் அவர் பெயரில் இல்லாதபோதுதான் அதையும் வழங்க முடியும்.

ஆனால் இந்த அப்ரோ குரூப், ஆறு லட்சம் முதல் 33 லட்சம் வரை கடன் வழங்குவதாகச் சொல்கிறது. இது முறையற்றது. அதிலும் வட்டி இல்லா சுற்றுலாக் கடன் என்பதெல்லாம் இதுவரை யாரும் கேள்விப்படாதது.

இது ஏமாற்று வேலையாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது.

ரிசர்வ் வங்கி உடனடியாக இதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில லாய்ர்கள் மூலம் தகவல் சொல்லியிருக்கிறோம் “ என்று தெரிவித்திருந்தார்..

இதன் பிறகே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் :அப்ரோ டிரஸ்ட் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள், எண் 27/49, 5வது மெயின் ரோடு, 3வது லே -அவுட், ஆசிரியர்கள் குடியிருப்பு, கொளத்தூர், சென்னை-99 என்ற முகவரியில் இயங்கி வருகின்றன.

அவை, http://www.aphrofin.com என்ற இணையதளத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்குட்பட்டு கடன் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளன.இந்த டிரஸ்ட், ரிசர்வ் வங்கியின் பெயரை, உரிய அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தி வருவது வங்கியின் கவனத்துக்கு வந்துள்ளது.

அப்ரோ டிரஸ்ட் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியால் நெறிமுறைப்படுத்தப்படவில்லை.

  

மேலும், இந்த நிறுவனங்கள் மின்னணு ஊடகங்கள் மூலம் செய்யும் விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். இந்நிறுவனங்களுடன் யாரும் பரிவர்த்தனை செய்ய வேண்டாம். அவ்வாறு செய்து கொண்டால், அதனால் ஏற்படும் பாதகமான விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பாவர் என்று ரிசர்வ் வங்கி தன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்படி ரிசர் வங்கி பகிங்கர அறிவிப்பு வெளியிட்ட பிறகும் பப்ளிக் யாரும் புகார் கொடுக்க முன்வராத நிலையில்தான் ஒரு போலீஸ்காரரிடமே புகார் வாங்கி நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

ஆரம்பம் சரிதான் ஆனால் தொடர் நடவடிக்கையும் சரியாக – வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று இதே பொது மக்கள் எதிர்பார்க்கிறார்கள்…

Advertisements

One Response to அப்ரோ டிரஸ்ட் யேசுதாஸ்150 கோடி ரூபாய் மோசடி

  1. vignesh says:

    Ethtu roma thavaiyana news

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: