அமெரிக்க சிறுமிகளிடம் பாதிரியாரின் பாலியல் கொடுமை-பாதிரி ஜோசப் பழனிவேல் கைது

சனிக்கிழமை, மார்ச் 17, 2012, 16:51

ஈரோடு: அமெரிக்காவில் சிறுமிகளை பாலியல் வன்முறைக்குள்ளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு தப்பி ஓடிவந்து தமிழகத்தில் பதுங்கி இருந்த அரியலூரைச் சேர்ந்த பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஈரோடு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூரை சேர்ந்தவர் ஜெயபால் என்கிற ஜோசப் பழனிவேல். பாதிரியாரான இவர் கடந்த 2004-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். பின்னர் அங்குள்ள மினிசோடா மாகாணம் ரோசாசிட்டி நகரில் சமுதாய சேவை பணியில் ஈடுபட்டார். அப்போது விடுதியில் தங்கி இருந்த அமெரிக்கா சிறுமிகளை ஜெயபால் பாலியல் சித்ரவதை செய்ததாகக் கூறப்ப்டுகிறது.இதுகுறித்து அமெரிக்கா ரோசாசிட்டி காவல்துறையினர் பாதிரியார்

ஜெயபால் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடினர். இதை அறிந்த ஜெயபால் இந்தியாவுக்கு தப்பி ஓடிவந்துவிட்டார்.

அமெரிக்கா டூ ஈரோடு

இது குறித்து அமெரிக்கா போலீசார் டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைதொடர்ந்து டெல்லி இன்டர்போல் போலீசார் பாதிரியார் குறித்து விசாரித்து வந்தனர். அதில் பாதிரியார் ஜெயபால் தமிழகத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. ஆனால் அவரை பிடிக்கமுடியவில்லை. இதையடுத்து டெல்லி மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து கைது வாரண்டு பெற்றனர். இதைத்தொடர்ந்து

தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதில் அமெரிக்கா தேடிய ஜெயபால் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள சிமிட்டஹள்ளி தேவாலயத்தில் அந்தோணி சாமி பாதிரியாளரிடம் உதவியாளராக பணியாற்றி வருவது தெரிய வந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பன்னீர் செல்வம், தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், உளவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிமிட்டஹள்ளியில் பதுங்கி இருந்த ஜெயபாலை கைது செய்தனர். கைதான பாதிரியார் கூறும்போது, நான் எந்த தவறும் செய்யவில்லை. இது பொய் வழக்கு. அமெரிக்காவில் நடந்து வரும் கறுப்பர் இனத்தை வைத்து

பிரச்சினை ஜோடிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெயரை கெடுப்பதற்காக இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை எனது வக்கீல் மூலம் சந்திப்பேன் என்றார்.

கைதான பாதிரியார் ஜெயபாலை இன்று காலை 8 மணிக்கு ஈரோடு போலீசார் ரெயில் மூலம் சென்னை அழைத்து சென்றனர். பின்னர் அவர் அங்கிருந்து டெல்லி கொண்டு செல்லப் படுகிறார். அங்கு கைது வாரண்டு பிறப்பித்த டெல்லி மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். பின்னர் விசாரணைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்படுகிறார்.

கைதான ஜெயபால் அமெரிக்கா செல்வதற்கு முன்பு ஊட்டியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றியுள்ளார். ஆனால் அவர் மீது எந்த வழக்கும் தமிழகத்தில் இல்லை என சத்தியமங்கலம் போலீசார் தெரிவித்தனர். அமெரிக்கா தேடிய தமிழக பாதிரியார் தாளவாடி பகுதியில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

3 Responses to அமெரிக்க சிறுமிகளிடம் பாதிரியாரின் பாலியல் கொடுமை-பாதிரி ஜோசப் பழனிவேல் கைது

 1. செக்ஸ் புகாரில் சிக்கிய ஊட்டி பாதிரியார் அமெரிக்கா செல்ல பிஷப் உத்தரவ

  செக்ஸ் புகாரில் சிக்கிய ஊட்டி பாதிரியார் அமெரிக்கா செல்ல பிஷப் உத்தரவு சென்னை: அமெரிக்காவில் பாலியல் புகாரில் சிக்கிய, ஊட்டி பாதிரியார் முறைப்படி விசாரணையை எதிர்கொள்ளுமாறும், இதற்காக அமெரிக்காவுக்குச் செல்லுமாறும் பிஷப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள மின்னசோடா மாகாணத்தில் கத்தோலிக்க பாதிரியாராக இருந்தவர் ஜோசப் பழனிவேல் ஜெயபால் வேலை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜெயபால் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதுபற்றிய தகவல் வாட்டிகனை எட்டியதும், பாதிரியார் ஜோசப் பழனிவேலுக்கு சிறிய அளவிலான தண்டனை கொடுக்கப்பட்டது. தற்போது அவர், ஊட்டியில் உள்ள அமல்ராஜ் என்ற பிஷப்பின் கீழ் பணியாற்றி வருவதாகவும், கிறிஸ்தவ பள்ளிகளின் ஆசிரியர் நியமனங்களை அவர் தான் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயபாலால் பாதிக்கப்பட்டோர், மின்னசோடாவில் ஒன்று கூடி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் சர்ச் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர் ஆனால், ‘பாதிரியாரை எளிதாக நாங்கள் விரட்டிவிட முடியாது. அவர் பிஷப் இல்லத்திலேயே தங்கி இருக்கிறார். ஆசிரியர்கள் நியமனத்தில் எனக்கு உதவியாக இருக்கிறார். இதுபற்றி அவரிடம் விசாரித்த போது தான் குற்றமற்றவன் எனக் கூறுகிறார். எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என்றார். இந்நிலையில், பாதிரியார் ஜெயபால் அமெரிக்கா சென்று வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை உயர் மறைமாவட்ட ஆர்ச் பிஷப் ஏ.எம்.சின்னப்பா உத்தரவிட்டிருக்கிறார் பாதிரியார் ஜெயபாலை வழக்கு விசாரணைக்காக அமெரிக்கா அனுப்பி வைக்குமாறு ஊட்டி பிஷப்பிடம் பேசியிருப்பதாகவும் பேராயர் சின்னப்பா கூறினார். Source : http://thatstamil.oneindia.in/news/2010/04/07/accused-abuse-catholic-priest-ask.html

  செக்ஸ் புகாரில் சிக்கிய ஊட்டி பாதிரியார் அமெரிக்கா செல்ல பிஷப் உத்தரவு சென்னை: அமெரிக்காவில் பாலியல் புகாரில் சிக்கிய, ஊட்டி பாதிரியார் முறைப்படி விசாரணையை எதிர்கொள்ளுமாறும், இதற்காக அமெரிக்காவுக்குச் செல்லுமாறும் பிஷப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள மின்னசோடா மாகாணத்தில் கத்தோலிக்க பாதிரியாராக இருந்தவர் ஜோசப் பழனிவேல் ஜெயபால். வேலை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜெயபால் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதுபற்றிய தகவல் வாட்டிகனை எட்டியதும், பாதிரியார் ஜோசப் பழனிவேலுக்கு சிறிய அளவிலான தண்டனை கொடுக்கப்பட்டது. தற்போது அவர், ஊட்டியில் உள்ள அமல்ராஜ் என்ற பிஷப்பின் கீழ் பணியாற்றி வருவதாகவும், கிறிஸ்தவ பள்ளிகளின் ஆசிரியர் நியமனங்களை அவர் தான் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயபாலால் பாதிக்கப்பட்டோர், மின்னசோடாவில் ஒன்று கூடி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் சர்ச் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர். ஆனால், ‘பாதிரியாரை எளிதாக நாங்கள் விரட்டிவிட முடியாது. அவர் பிஷப் இல்லத்திலேயே தங்கி இருக்கிறார். ஆசிரியர்கள் நியமனத்தில் எனக்கு உதவியாக இருக்கிறார். இதுபற்றி அவரிடம் விசாரித்த போது தான் குற்றமற்றவன் எனக் கூறுகிறார். எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என்றார். இந்நிலையில், பாதிரியார் ஜெயபால் அமெரிக்கா சென்று வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை உயர் மறைமாவட்ட ஆர்ச் பிஷப் ஏ.எம்.சின்னப்பா உத்தரவிட்டிருக்கிறார். பாதிரியார் ஜெயபாலை வழக்கு விசாரணைக்காக அமெரிக்கா அனுப்பி வைக்குமாறு ஊட்டி பிஷப்பிடம் பேசியிருப்பதாகவும் பேராயர் சின்னப்பா கூறினார். Source : http://thatstamil.oneindia.in/news/2010/04/07/accused-abuse-catholic-priest-ask.html

 2. http://www.dnaindia.com/india/report_indian-priest-pays-750000-to-setltle-case-of-assaulting-girl-in-us_1584652-all
  Catholic priest pays $7,50,000 to setltle case of assaulting girl in US

  Indian priest pays $7,50,000 to setltle case of assaulting girl in USPTI / Himani Kumar / Thursday, September 8, 2011 12:14 ISTA Roman Catholic Diocese in the US where an Indian priest is alleged to have sexually assaulted an American girl several times when she was a teenager has agreed to pay $750,000 to settle a lawsuit against him.Father Joseph Palanivel Jeyapaul, who now serves as Secretary of Education Commission in the Diocese of Ootacamund (Tamil Nadu) had been charged with sexually assaulting two girls while he was posted at the Crookston Diocese in Northern Minnesota in 2004.The victim, Megan Peterson, 20, said Jeyapaul sexually abused her when she went to speak to him about becoming a nun.Jeyapaul ministered three parishes in Crookston where he was accused of misappropriating church funds and sexual abuse.
  Charges were filed by the girl after the Church refused to answer her calls. Jeyapaul returned to India before the charges came to light.

  “Right now Jeyapaul is a fugitive from justice in the United States. The Vatican and Bishop of Ootacamund in India are admitting him to remain in the ministry in India and are putting their reputation over the well being and safety of children of whom we are concerned right now,” the woman’s attorney Jeff Anderson said.

  The plaintiff, Megan Peterson, and the Diocese of Crookston agreed to terms of settlement on July 13, 2011, prior to a trial.

  A payment of USD 750,000 was agreed upon, an amount covered by Diocese’s insurance.

  Peterson says she was 14 and aspiring to become a nun when she was raped several times by Jeyapaul.

  Jeyapaul has said he is innocent and denied ever knowing the two girls. The other girl was 16-years-old at the time of alleged abuse.

 3. அமெரிக்க பெண்ணை கற்பழித்ததாக தமிழ்நாட்டு பாதிரியார் மீது வழக்கு
  வழக்கை திரும்ப பெறுவதற்காக ரூ.3 கோடி கொடுக்கப்பட்டது
  http://www.dailythanthi.com/article.asp?NewsID=672797&disdate=9/9/2011
  சிகாகோ, செப்.9-
  அமெரிக்காவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த போது தமிழ்நாட்டு பாதிரியார் ஒருவர் அந்த நாட்டை சேர்ந்த இளம் பெண்ணை கற்பழித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை திரும்பப் பெறுவதற்காக அந்த பெண்ணுக்கு ரூ.3 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.
  கன்னியாஸ்திரியாக விரும்பிய பெண்
  தமிழ்நாட்டை சேர்ந்த பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபால். இவர் இப்போது ஊட்டி பேராயத்தில் கல்வி கமிஷன் செயலாளராக இருக்கிறார். இவர் 2004-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதிரியராக பணியாற்றினார். மின்னசோட்டாவில் உள்ள குரூக்ஸ்டன் பேராயத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
  அப்போது அந்த நகரை சேர்ந்த இளம் பெண் மேகன் பீட்டர்சன் கன்னியாஸ்திரியாக ஆசைப்பட்டு அதற்கான வழிகளை தெரிந்து கொள்வதற்காக ஜெயபாலை சந்தித்தார். அப்போது அவர் மேகனை கற்பழித்து விட்டார் என்று கூறப்படுகிறது.
  கோர்ட்டில் வழக்கு
  அப்போது மேகனுக்கு வயது 14 தான். இப்போது அவரது வயது 20 ஆகும். அதன் பிறகு பல முறை அவர் என்னை கற்பழித்தார் என்று அந்த பெண் கூறினார். இது குறித்து தேவாலயத்தில் மேகன் புகார் செய்ததாகவும் இதற்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஜெயபால் இந்தியா திரும்பி விட்டார்.
  இந்த வழக்கில் ஜெயபாலுக்கு சம்மனும் அனுப்பப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த ஜெயபால் தான் அப்பாவி என்றும் எந்த தவறும் செய்யவில்லை என்றும் கூறினார். கோர்ட்டில் ஆஜராகி பதில் அளிப்பதாகவும் தெரிவித்தார். பிறகு அவர் தன் மனதை மாற்றிக் கொண்டார். அமெரிக்கா வர மறுத்து விட்டார்.
  ரூ.3 கோடி இழப்பீடு
  இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்ணான மேகனுக்கு இழப்பீடு கொடுக்க குரூக்ஸ்டன் பேராயம் முன்வந்தது. அதற்கு பதிலாக அவர் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதற்கு மேகனும் சம்மதித்தார். அதன்படி அவருக்கு ரூ.3 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: