மும்பை குண்டு வெடிப்பு-52 பேர் கொல்லப்பட்டனர் :அஷ்ரத், ஹனீப் சயீது மற்றும் அவரது மனைவி பெமிதா மரண தண்டனை: ஐகோர்ட்

மும்பை இரட்டை குண்டு வெடிப்பு வழக்கு:மூன்று பேருக்கு மரண தண்டனை: உறுதி செய்தது ஐகோர்ட்

மும்பை:மும்பை இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில், மூன்று பேருக்கு “பொடா’ கோர்ட் வழங்கிய மரண தண்டனை யை, மும்பை ஐகோர்ட் நேற்று உறுதி செய்தது.
கடந்த 2003ல், மும்பையில், கேட்வே ஆப் இந்தியா, ஜாவேரி பஜார் ஆகிய இடங்களில், சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில், 52 பேர் கொல்லப்பட்டனர்.இது தொடர்பான வழக்கு, பயங்கரவாத தடுப்புச் சட்ட சிறப்பு கோர்ட்டில் (பொடா கோர்ட்) நடந்தது.ஹனீப், அஷ்ரத் அன்சாரி, நசீர் ஆகிய மூவரும், துபாயில் இதற்கான சதித் திட்டத்தை தீட்டியதாக விசாரணையில் தெரியவந்தது. இவர்களில் நசீர் என்பவர், போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். மும்பையின் இரண்டு இடங்களிலும், சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை, இரண்டு டாக்சிகளில் வைத்ததாக, அஷ்ரத், ஹனீப் சயீது மற்றும் அவரது மனைவி பெமிதா சயீது ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கில், மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி, பொடா கோர்ட் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மூவரும், மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த மும்பை ஐகோர்ட், இந்த வழக்கு மீதான தீர்ப்பை, கடந்தாண்டு நவம்பரில் ஒத்தி வைத்தது.
இந்நிலையில், நீதிபதிகள் கான்வில்கார், பி.டி.கோட் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது, குற்றச் சதிசெய்தது, கொலை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மூவருக்கும் வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும், இவர்கள் மூன்று பேரும், இந்த தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக, தண்டனையை எட்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் உத்தரவிட்டனர்.இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, முகமது அன்சாரி லதுவாலா, முகமது ஹசன் பாட்டரிவாலா ஆகியோர் மீதான விசாரணை, இந்திய குற்றவியல் சட்ட நடைமுறைகளின்படி நடக்கும் என்றும், இதற்காக இவர்கள் நான்கு வாரங்களுக்குள் விசாரணை கோர்ட்டை அணுகும்படியும், நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.திருமணமான தம்பதியினருக்கு, பயங்கரவாத வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை.

The Bombay High Court on Friday confirmed the death sentence of three Lashkar-e-Taiba operatives, including a couple, accused of the twin blasts in Mumbai in 2003 claiming the lives of 52 persons and injuring over 100.

File photo shows 2003 Mumbai twin blasts case convict Hanif Sayed. The Bombay High Court on Friday upheld death sentence awarded to Sayed, his wife Fehmida Sayed and Ashrat Ansari in the case.

The HinduFile photo shows 2003 Mumbai twin blasts case convict Hanif Sayed. The Bombay High Court on Friday upheld death sentence awarded to Sayed, his wife Fehmida Sayed and Ashrat Ansari in the case.

Two bombs went off at the Gateway of India and Zaveri Bazaar after the accused left them in the taxis to explode on August 25, 2003. It was the first time that a married couple was involved in the attack. Five accused were arrested in the case. They have been charged with two more terror attacks – a bomb blast in a bus at Ghatkopar in July 28, 2003; and an unexploded bomb at the Seepz Bus Depot planted on December 2, 2002.

On Friday, a Division Bench of Justices A.M. Khanvilkar and P.D. Kode confirmed the death penalty of Ashrat Shafiq Ansari (34), Mohammad Hanif Abdul Rahim Sayyed (46) and his wife Fahmida Sayyed (43).

But the court partially quashed the order of the lower court discharging two other accused, Hassan Batteriwala and Rizwan Ladduwala, on the basis of a report of the POTA review committee. They will have to face trial for the crimes registered against them under IPC. The two accused have been directed by the High Court to appear before the POTA court in four weeks. All the accused have been given eight weeks to file an appeal in the Supreme Court. The conviction order will be stayed till then.

On August 6, 2009, the special POTA court convicted the three accused and sentenced them to death. Ladoowala and Batterywala were discharged from the case after the apex court upheld a POTA review committee report which stated that no case could be made out.

Advertisements

One Response to மும்பை குண்டு வெடிப்பு-52 பேர் கொல்லப்பட்டனர் :அஷ்ரத், ஹனீப் சயீது மற்றும் அவரது மனைவி பெமிதா மரண தண்டனை: ஐகோர்ட்

 1. devapriyasolomon says:

  பெண் ஜிஹாதிகள் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா சிறப்பு முகாம்களில் பயிற்சி!
  ஜனவரி 4, 2012
  பெண் ஜிஹாதிகள் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா சிறப்பு முகாம்களில் பயிற்சி!

  இந்தியாவில் தாக்குதல் நடத்த பெண்கள் பயங்கரவாதப் படை[1]: இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக 21 பெண்களைக் கொண்ட புதிய குழுவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு உருவாக்கி வருவதாக இந்தியா ராணுவ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை (03-01-2012) தெரிவித்தன[2]. ஐந்தாண்டுகள் முந்தைய சமாச்சாரம் என்றாலும், மறுபடியும் இப்பொழுது ஏதோ புதிய செய்தி போல இப்பொழுது வருவது வியப்பே!

  லஷ்கர்-இ-தொய்பா சிறப்பு முகாம்களில் பயிற்சி! இந்தக் குழுவுக்கு துக்தரீன்-இ-தொய்பா (இந்தியாவிற்கு துக்கத்தைத் தரப்போகிறார்கள் போல) எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் காஷ்மீரில், திவாலியா என்ற இடத்தில் (முசபராபாதிற்கு அருகில்) இந்தக் குழு இயங்கி வருவதாகவும் அதனை லஷ்கர் அமைப்பு பயிற்சி கொடுப்பதாகவும் தெரிய வருகிறது[3]. இங்கு பெண்களுக்காக பிரத்யேகமான தீவிரவாத பயிற்சிப் பள்ளி இருக்கிறது[4]. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கிவரும் 42 பயங்கரவாத பயிற்சி முகாம்களில் பெண்கள் பயிற்சி பெற்று வருவதாக ஏற்கெனவே கூறப்பட்டு வந்தது[5].

  தற்கொலைப் படையில் பெண் ஜிஹாதிகள்: ஐந்தாண்டுகளுக்கு முன்பே, பாதுபாப்பு அதிகாரிகளுடன் போரிட்டு தாக்குதலில் இடுபட்டவர்களின் சடலங்களை பார்த்தபோது, இளம்பெண் இருப்பதைப் பார்த்து இந்த உண்மை தெரிய வந்தது. இங்கு பயங்கரவாதப் பயிற்சி பெறும் பெண்கள் வேறு நாடுகளின் வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவத் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக யூரி என்ற எல்லைப் பகுதிக் சவழியாக இந்தியாவில் நுழைந்து தாக்குதல் நடத்தப் போவதாக தெரிய வந்துள்ளது[6]. பெண்களைக் கொண்ட பயங்கரவாதக் குழுவை உருவாக்க வேண்டும் என்பது லஷ்கர் அமைப்பின் உயர்நிலைத் தலைவர்கள் மற்றும் மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய ஷகியூர் ரெஹ்மான லக்வியின் நீண்டகாலத் திட்டமாகும். பல முக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டுவிட்டதால், காஷ்மீர் பகுதியில் அந்த அமைப்புக்கு இப்போது போதிய வலிமை இல்லை என்றும் கூறப்படுகிறது. காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுதலை செய்து பாகிஸ்தானுடன் இணைப்பது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இதைத் தவிர புல்வாமா முதலிய பகுதிகளில் உஸ்மான் பாய் அல்லது சோடா ரஹ்மான் என்பவனின் கீழ் இளைஞர்கள் தீவிரவாதத்திற்கு சேர்க்கப்பட்டு வருவதாக தெரிகிறது[7].

  வேதபிரகாஷ்

  04-01-2012

  [1] http://www.dinamani.com/edition/print.aspx?artid=532470

  http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=532470&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88

  [2] http://www.dailythanthi.com/article.asp?NewsID=699546&disdate=1/4/2012

  [3] தினமலர், லஷ்கர் -இ-தொய்பாவில் 21 பெண் தீவிராவதிகள், 04-01-2012, சென்னை,

  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=379107&Print=1

  [4] http://www.indianexpress.com/news/LeT-training-21-female-terrorists-in-PoK–Army/895385/

  [5] http://islamindia.wordpress.com/2009/12/20/sufia-suphia-jihadhi-female-terrorists/

  [6] http://www.hindustantimes.com/India-news/NewDelhi/LeT-raising-new-female-terror-group-against-India/Article1-790713.aspx

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: