ஹெவன்லி இன்டர்டினாமினல் மிஷன் டிரஸ்ட்-இம்மானுவேல் சர்ச் பாதிரியார் கைவரிசை -ரூ.13 கோடி மோசடி

இரட்டிப்பு ஆசை காட்டி ரூ.13 கோடி மோசடி அம்பலம்! 12,500 பேரிடம் பாதிரியார் கைவரிசை

06_02_2012_151_011.jpg Padri

இரட்டிப்பு பணம் தருவதாக, மாநிலத்தில், 105 முகவர்களை நியமித்து, 12,500 பேரிடம், 13 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக, திருவள்ளூர் அருகே கைதான பாதிரியார், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி,58. பாதிரியாரான இவர், அங்குள்ள இம்மானுவேல் சர்ச்சில் ஊழியம் செய்து வந்தார். இவர், பட்டாபிராம் பகுதியில், “ஹெவன்லி இன்டர்டினாமினல் மிஷன் டிரஸ்ட்’ என்ற அறக்கட்டளை பெயரில், 2010 ஜனவரியில் தொடங்கப்பட்ட சீட்டு கம்பெனியில், மாநில பொறுப்பாளராக இருந்து வந்தார்.

இவரால், கமிஷன் அடிப்படையில் நியமிக்கப்பட்ட முகவர்கள், 10,500 ரூபாய் செலுத்தினால், முதல் இரண்டு மாதங்கள், 2,700 ரூபாய் தருவதாகவும், 3வது மாதம் முதல், 10வது மாதம் வரை, இரட்டிப்பாக, 5,400 ரூபாய் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி, மக்களிடம் பணம் வசூலித்தனர்.

ஆனால், கூறியபடி அவர்களுக்கு பணம் தரவில்லை. இதையடுத்து, செவ்வாப்பேட்டை போலீசில், பாதிக்கப்பட்ட, 75 பேர் புகார் கொடுத்தனர். தொடர்ந்து, வேப்பம்பட்டு பவானி நகர் வினோத்குமார்,44, அவரின் மனைவி எஸ்தர்,31, மாமியார் குளோரி,48, ஆகிய மூன்று முகவர்களை, போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

பாதிரியார் கைது : விசாரணையில், “மாநில அளவில் அறக்கட்டளையின் பொறுப்பாளரான திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் அந்தோணி தான், எங்களை முகவர்களாக நியமித்தார்’ என கூறினர். இதையடுத்து, பாதிரியார் அந்தோணியை, நேற்று முன்தினம் செவ்வாப்பேட்டை போலீசார், திருவள்ளூர் பஸ் நிலையத்தில் கைது செய்தனர். பின், டி.எஸ்.பி., பாலச்சந்தர் முன்னிலையில், பாதிரியார் அந்தோணி வாக்குமூலம் அளித்தார்.

105 முகவர்கள் மூலம்… : வாக்குமூலத்தில், “நான், ஹெவன்லி இன்டர்டினாமினல் மிஷன் டிரஸ்ட் சீட்டு கம்பெனியின் மாநில பொறுப்பாளராக உள்ளேன். இதற்கு, உரிமையாளராக பட்டாபிராமைச் சேர்ந்த ஜான் பிரபாகர் உள்ளார்.

சீட்டுப்பணம் வசூலிக்க, பட்டாபிராம், ஆவடி, அம்பத்தூர், அயனம்பாக்கம், பேரம்பாக்கம், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், 105 முகவர்களை, கமிஷன் அடிப்படையில், கடந்த, 2010ம் ஆண்டு நியமித்துள்ளேன்’ என்றார்.

ஏமாந்தது 12,500 பேர் : மேலும், “அவர்கள் மாநிலம் முழுவதும், இதுவரை, 12,500 பேரை உறுப்பினர்களாக நியமித்து, பணம் வசூலித்துக் கொடுத்துள்ளனர். இவ்வாறு, 31 கோடி ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதில், முறைப்படி உறுப்பினர்களுக்கு, 18 கோடி ரூபாய், செப்டம்பர் மாதம் வரை, மாதந்தோறும் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

அறக்கட்டளையில் இருந்து பணம் வராததால் தான், கொடுக்க முடியவில்லை என்றும் கூறினார். “கடந்த, அக்டோபர் மாதம் முதல், ஐந்து மாதங்களாக, சீட்டு கம்பெனியின் உரிமையாளரான ஜான் பிரபாகரிடம் இருந்து, பணம் வரவில்லை. இதனால், மீதமுள்ள, 13 கோடி ரூபாய் பணத்தை, உறுப்பினர்களுக்கு கொடுக்க முடியவில்லை. அவர் பணம் கொடுத்தால் தான், நான் உறுப்பினர்களுக்கு பணம் தர முடியும்’ என, வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

ஆந்திராவில் கம்பி எண்ணும் உரிமையாளர் : இதுகுறித்து, திருவள்ளூர் டி.எஸ்.பி., பாலச்சந்தர் கூறும்போது, “”சென்னை புறநகர் பகுதியான பட்டாபிராமைச் சேர்ந்த முதல் குற்றவாளியான ஜான் பிரபாகர், ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராமங்களில், இதேபோல் இரட்டிப்பு பணம் தருவதாக, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதும், அவர் மீது மங்காபுரம், காவாளி, நெல்லூர், பட்டர்குண்டா ஆகிய போலீஸ் நிலையங்களில், வழக்குகள் உள்ளதும் தெரிய வந்துள்ளது” என்றார்

மேலும், “”இவ்வழக்குகள் சம்பந்தமாக, ஆந்திர மாநில போலீசார், கடந்தாண்டு அக்டோபர் 15ம் தேதி, ஜான் பிரபாகரை கைது செய்து, கர்னூல் மாவட்டம், நந்திகோட்டூர் சிறையில் அடைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இவரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய உள்ளோம். அதன் பின் தான், பணம் இரட்டிப்பு மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த முழுத் தகவல்கள் கிடைக்கும்” என்றார்.

Advertisements

3 Responses to ஹெவன்லி இன்டர்டினாமினல் மிஷன் டிரஸ்ட்-இம்மானுவேல் சர்ச் பாதிரியார் கைவரிசை -ரூ.13 கோடி மோசடி

 1. http://www.complaintboard.in/complaints-reviews/heavenly-interdenominal-mission-trust-l153919.html
  User619346
  ,
  Nov 30, 2011
  heavenly interdenominal mission trust
  hellllo frnds, iam HIM agent at Nellore district presently in Chennai velacherry. My name is jacob.iam a frnd to krupakar pastor and his wife. i joined and collection money is above Rs. 55,00,000/- from my side. This is all money is my relations and friends joined june and july. june people were take first pesion on july and august. July peoples takes august only. after HIM caused problems, my friends and relatives was came to my home and scared me and my family about this scheme and me. My 3 lakhs property were saled and submitted some money one who high pressures. i read all this messages on this website about this scheme. all of you one thing. krupakar pastor and his wife is escaped. he is not in chennai and andhra pradesh. he was going to bangalore some days and goa the same. if chennai peoples seen him, truly all are be angry with him.krupakar pastor is seperate. and his wife and childred is seperate in safe custody. he did not come to chennai. alwasys his mobile not reachable and swiched off. some minutes his mobile is swiched on for recharging, some imoprtant person calling when that minutes.anybody unknown person call to him, is on waiting – not attanding the call by him.

  i think any one person is helping to krupakar for money. not in thousand. only in lakhs. when he came from jail on bail, he said to his related person for going to some thing place and not to trace out him by anyone. some body calls to him, the operator says only in english on ‘ not reachable, switched off’. not in regional languages. i think he is goa right now.

  he crossing – kovuur – thirputai – velacherry – bangalore-goa now a days. he will returned back once a month and when the case comes to court, he attend the case.

  i say to people, think your money, think your future. Nobody leave krupakar and prabhakar. They have lot of money for save his future.

 2. Raja says:

  இயேசு கிறிஸ்துவால் இது போன்ற பிராடுகளை ஏன் திருத்த முடியவில்லை. என்னென்னவோ அற்புதங்கள் செய்தாராம்? தன்னுடைய சிஷ்யர்களை திருத்த முடியவில்லை. இந்த பிராடு பாதிரியார்களை நம்பி பணத்தை அள்ளிக் கொடுக்கும் முட்டாள்கள் திருந்த வேண்டும்.

  • You can see in the Acts of Apostles- a story that when a new member gave only half his wealth to Peter and hide the balance the new member and his wife was killed by Holy Ghost- Ananya story. Church frauds cannot be controlled by Holy Ghost?

 3. Anil says:

  திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பட்டர் ஒருவர், கோயிலில் பணியாற்றும் பெண்ணுடன் பெண் தெய்வ சன்னதியில் உல்லாசமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் உத்தரவிட்டுள்ளார்.

  முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோயிலில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக இந்து பக்த சபை சார்பில் மதுரை கலெக்டர் சகாயத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நட்ததி அறிக்கை
  சமர்பிக்குமாறு அவர் தனித் துறை ஆட்சியர் ஒருவருக்கு உத்தரவிட்டார். அவரும் பக்தர் போன்று அந்த கோயிலுக்கு அடிக்கடி சென்று ரகசியமாக விசாரணை நடத்தினார்.

  அப்போது கோயிலில் உள்ள பெண் தெய்வ சன்னதியில் பட்டர் ஒருவரும், ஒரு பெண்ணும் உல்லாசமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அதிகாரி சமர்பித்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பட்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோயில் இணை ஆணையருக்கு கலெக்டர் சகாயம் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: