மனைவியோடு உயிரோடு கொழுத்தி விடுவோம்-திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு நிலம் தரவில்லை என்றால்

இப்படி மிரட்டி பல கோடி பெருமான நிலத்தை பிடுங்கியதை திமுக ஆட்சியின் போதே உயிலில் எழுதி ரிஜிஸ்ட்ரார் பதிவு அலுவலகத்தில் சீல் செய்த கவரில் கொடுத்த டாக்டர்

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. தனக்கு சொந்தமான இந்த இடத்தை பறித்துக்கொண்டதாக துறையூரைச் சேர்ந்த டாக்டர் சீனிவாசன் மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, சட்டப்பேரவை உறுப்பினர் அ. செüந்தரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, திருச்சி துணை மேயர் மு. அன்பழகன், துணைச் செயலர் குடமுருட்டி டி. சேகர், ஜவுளிக் கடை உரிமையாளர் சுந்தரராஜுலு, நேருவினர் சகோதரர் கே.என். ராமஜெயம் உள்ளிட்டோர் மீது ஆகஸ்ட் 25-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேரு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.


Advertisements

One Response to மனைவியோடு உயிரோடு கொழுத்தி விடுவோம்-திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு நிலம் தரவில்லை என்றால்

  1. திருச்சி கலைஞர் அறிவாலயம் இட பிரச்னை:ஸ்டாலின் கருத்தை மறுக்கும் துறையூர் டாக்டர்

    திருச்சி:திருச்சியில் தி.மு.க., அலுவலகமான கலைஞர் அறிவாலய கட்டடம் தொடர்பாக எழுந்துள்ள புகாருக்கு, முன்னாள் துணைமுதல்வர் ஸ்டாலின் கூறிய தகவலை புகார்தாரர் மறுத்துள்ளார்.

    ருச்சி மாவட்ட தி.மு.க., அலுவலகமான கலைஞர் அறிவாலயம், 2008ம் ஆண்டில் திறக்கப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்ட கலைஞர் அறிவாலயம் கட்டட இடத்தை, தன்னிடமிருந்து மிரட்டி, அடித்து, தி.மு.க.,வினர் எழுதி வாங்கினர் என்று, துறையூரைச் சேர்ந்த டாக்டர் சீனிவாசன், சில நாட்களுக்கு முன் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில், நேரு, துணைமேயர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, லஷ்மி சில்க்ஸ் உரிமையாளர் சுந்தர்ராஜீலு உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், லால்குடி எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன், புரோக்கர்கள் தமிழ்மாறன், தமிழ்ச்செல்வன் ஆகிய நால்வரை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “நில அபகரிப்பு புகார் கொடுத்த டாக்டர் சீனிவாசன், கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவின் போது, அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி கையால் சால்வை கொடுத்து, கணையாழி(மோதிரம்) வழங்கியும் சிறப்பு செய்யப்பட்டார். அவருடைய மகன் திருமணம் இங்கு தான் நடந்தது. ஆகையால் இது வடிகட்டிய பொய்புகார்’ என்றார்.

    ஸ்டாலின் கூறியது குறித்து, திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு வந்த துறையூர் டாக்டர் சீனிவாசனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:நான் கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா அன்று திருப்பதியில் இருந்தேன். அவர்கள் எனக்கு அழைப்பு விடுக்கவும் இல்லை. நான் நிகழ்ச்சியில் பங்கேற்கவும் இல்லை. அப்படி நான் பங்கேற்றதாக போட்டோ ஆதாரம் ஏதும் இருந்தால், அவர்கள் காண்பிக்கட்டும். நான் ஏற்றுக் கொள்கிறேன். என் மகனின் திருமணத்தை மண்டபத்துக்கு உரிய பணம் கட்டித்தான் இங்கு நடத்தினேன். 2007ல் நான் எழுதிய உயில் தொடர்பாக போலீசாரிடம் தெரிவித்துள்ளேன். அவர்கள் தான் நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: