திருச்சி புனித ஜோசப் கல்லூரி ரெக்டார் சூசை மர்ம மரணம்-கொலையா?

படுக்கை அறையில் பிணமாக கிடந்தார்
Tiruchirappalli ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 19, 3:39 PM IST
திருச்சி ஜோசப் கல்லூரி அதிபர் “மர்ம” சாவு: படுக்கை அறையில் பிணமாக கிடந்தார்
திருச்சி, டிச. 19-
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஜோசப் கல்லூரி உள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மத்திய மந்திரி நெப்போலியன் உள்பட பல பிரபல பிரமுகர்கள் படித்த கல்லூரி இது.
இந்த கல்லூரி அதிபராக சூசை (வயது55) இருந்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள அதிபர் அறையில் தங்கி இருந்து பணிகளை கவனித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை அவரை கல்லூரி ஊழியர்கள் போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் நீண்டநேரமாகியும் போன் எடுக்கப்படவில்லை.
ஊழியர்கள் நேரில் சென்ற பார்த்தபோது சூசை கட்டிலில் பிணமாக கிடந்தார். துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ் பெக்டர் கோடிலிங்கம், சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். உள்புறமாக கதவு பூட்டப்பட்டு இருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதிபர் சூசையின் மூக்கில் ரத்தம் வழிந்து இருந்தது. துர்நாற்றம் வீசியது. அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. அதிபர் சூசை தினமும் அங்குள்ள கேண்டீனுக்கு சென்று சாப்பிடுவார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் அறைக்கு சென்றவர் கேண்டீயனுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
பிணத்தின் மீது துர்நாற்றம் வீசுவதால் அவர் வெள்ளிக்கிழமை இரவு இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் மரடைப்பு ஏற்பட்ட இறந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2 நாட்கள் அவர் இறந்து கிடந்தது தெரியாமல் இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இக்கல்லூரியில் பணியாற்றிய பாதிரியார் ராஜரத்தினம் மீது கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி கொடுத்த கற்பழிப்பு புகாரால் பரபரப்பு ஏற்பட்டது இந்நிலையில் அதிபர் சூசை இறந்து கிடந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி ஜோசப் கல்லூரி அதிபர் `மர்ம’ சாவுதனி அறையில் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடந்தார் 

திருச்சி, டிச.20-
திருச்சி ஜோசப் கல்லூரி அதிபர் மர்மமான முறையில் தனி அறையில் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.
கல்லூரி அதிபர் சூசை திருச்சி ஜோசப் கல்லூரியின் அதிபராக (ரெக்டர்) இருந்தவர் சூசை (வயது52). சேசு சபை பாதிரியார்கள் வளாகத்தில் உள்ள புனித லூர்துமாதா ஆலயத்தின் பின்புறம் தங்குவதற்கு என தனித்தனி அறைகள் உள்ளன. அங்குள்ள தங்கும் விடுதியில் அறை எண் 11 மற்றும் 12 ஆகியவற்றில் சூசை தங்கி இருந்து கல்லூரி நிர்வாகம் மற்றும் திருச்சபை பணிகளை கவனித்து வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபயிற்சிக்கு சென்று வந்த அவர் தனது அறைக்கு சென்றார். அதன்பின் இவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை.
சந்தேகம்
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வழக்கம் போல் கோவிலில் நடைபெறும் பிரார்த்தனை நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. கேண்டீனில் சாப்பிடுவதற்கும் அவர் வரவில்லை. இதனால் கல்லூரி பணியாளர்கள் சந்தேகம் அடைந்து அவர் அறைக்கதவை தட்டிபார்த்தனர். கதவு திறக்கப்படவில்லை. உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து அவரது 2 செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டனர். இரண்டு செல்போன்களும் அவரது அறையில் இருந்தபடியே ஒலித்தன. செல்போன்களை யாரும் எடுக்கவில்லை.
கட்டிலில் பிணமாக கிடந்தார்
தகவல் அறிந்து வந்த போலீசார் கதவை திறக்க முயன்றனர். முடியாமல் போனதால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அதிபர் சூசை கட்டிலில் பிணமாக கிடந்தை பார்த்தனர். அவரது மூக்கில் இருந்து லேசாக ரத்தம் வழிந்து உறைந்த நிலையில் காணப்பட்டது. அவர் கைலியும், கை வைத்த பனியனும் அணிந்து இருந்தார். காலில் செருப்பு மாட்டப்பட்ட நிலையில் இருந்தது.
போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி அதிபர் சூசை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது மர்மமாக உள்ளது.
மர்மமாக இறந்த கல்லூரி அதிபர் சூசையின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் மூங்கில் துரைப்பட்டு அருகில் உள்ள மைக்கேல்புரம் என்ற கிராமம் ஆகும். இவர் திருச்சி ஜோசப் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி ஆகியவற்றில் பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார். திருச்சி ஜோசப் கல்லூரியின் அதிபராக பொறுப்பேற்று சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாகிறது.
பரபரப்பு
ஜோசப் கல்லூரியின் முதல்வராக இருந்த ராஜரத்தினம் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பிளாரன்ஸ் மேரி என்ற கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் தெரிவித்து இருந்தார். இதுபற்றி கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனை தொடர்ந்து ராஜரத்தினம் முதல்வர் பதவியில் இருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில் கல்லூரி அதிபர் சூசை மர்மமான முறையில் இறந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

3 Responses to திருச்சி புனித ஜோசப் கல்லூரி ரெக்டார் சூசை மர்ம மரணம்-கொலையா?

  1. செயின்ட் ஜோசப் கல்லூரி: சாதியைக் கேடயமாகப் பயன்படுத்தும் பாதிரி ராஜரத்தினம் !!
    http://www.vinavu.com/2010/11/12/st-josephs-trichy-2/

  2. புனித ஜோசப் கல்லூரியில் பாதிரியாராகவும், முதல்வராகவும் இருக்கும் ராஜரத்தினம் கன்னியாஸ்திரி ஃபிளாரன்சை கடந்த நான்கு ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்முறை செய்திருக்கிறார்.
    http://www.vinavu.com/2010/10/15/st-josephs-trichy/

  3. robert says:

    i doknow

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: