கற்பழிப்பு பாதிரியார் ராஜரத்தினம் -கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரி சபதம்

என் கற்பை பலமுறை சூறையாடிய பாதிரியார் முகமூடியை கிழிக்காமல் விட மாட்டேன்: கன்னியாஸ்திரி சபதம்
என் கற்பை பலமுறை சூறையாடிய    பாதிரியார் முகமூடியை கிழிக்காமல் விட மாட்டேன்:    கன்னியாஸ்திரி சபதம்
திருச்சி, அக்.24-
திருச்சி இந்தியன் பாங்க்காலனியில் உள்ள புனித அன்னாள் சபையில் கன்னியாஸ்திரியாக இருந்தவர் பிளாரன்ஸ்மேரி. 31 வயது நிரம்பியவர். உயரம் குள்ளம், சாந்தமான முகம், நல்ல குரல்வளம் உடையவர்.
இவரது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சவூரான்சாவடி. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
கன்னியாஸ்திரி ஆகவேண்டும் என்றே அவருக்கு சிறுவயதிலேயே விருப்பம் ஏற்பட்டது. தனது ஆசையை பெற்றோருக்கும், தோழிகளிடத்திலும் அவர் அடிக்கடி சொல்வது உண்டு. பிளஸ் 2 முடித்ததும் அவரது விருப்பத்தை பெற்றோர் நிறைவேற்றினர்.
இதைத்தொடர்ந்து திருச்சியில் புனித அன்னாள் சபையில் சேர்ந்தார். அங்கு 2005-ம் ஆண்டு கன்னியாஸ்திரி சபையில் சேர்ந்தபோது ஆசிரியை பயிற்சி படிப்பிலும் சேர்ந்தார். படிப்பு முடிந்ததும் கடந்த 2002-ம் ஆண்டு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள முன்னீர்பள்ளத்தில் ஆசிரியையாக பணி புரிந்தார்.
அப்போது பாளையங்கோட்டை கல்லூரி ஒன்றில் பாதிரியார் ராஜரத்தினம் பணிபுரிந்தார். இசை ஆர்வம் உடையவர். இருவருக்கும் இசை மீது பற்று அதிகம் இருந்ததால் பழக்கம் உருவானது. 2005-ம் ஆண்டு பிளாரன்ஸ்மேரி கன்னியாஸ்திரி ஆனார். இதைத்தொடர்ந்து திருச்சிக்கு மாற்றப்பட்டார். இங்கு வந்தவுடன் “மியூசிக்” கல்லூரியில் சேர்ந்து படித்தார். இதற்காக தினமும் கான்வென்டில் இருந்து செல்வது வழக்கம்.
இந்தநிலையில் பாதிரியார் ராஜரத்தினம் பதவி உயர்வு பெற்று திருச்சி ஜோசப் கல்லூரிக்கு முதல்வர் ஆனார். நெல்லையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் திருச்சியில் நீடித்தது. இசை ஆர்வமாக இருவரும் அடிக்கடி சந்தித்து இசை ஆல்பம் தயாரிப்பது குறித்து விவாதித்தனர்.
பாதிரியார் ராஜரத்தினம் தனது செல்வாக்கை பயன்படுத்தி பிளாரன்சுமேரி பாட “ரதியின் கீதம்” என்ற ஆல்பம் தயாரித்தார். அந்த ஆல்பம் கிறிஸ்தவ மக்களிடையே பிரபலமாக தொடங்கியது. இதனால் இருவரது சந்திப்பும் தினமும் நடக்க தொடங்கியது. அவரை சந்திக்க ஜோசப்கல்லூரிக்கு பிளாரன்சுமேரி செல்வது உண்டு. அவரும் தினமும் விரும்பி அழைப்பது உண்டு.
இந்தநிலையில்தான் 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந்தேதி பிளாரன்சுமேரி கற்பு பறிபோனதாக கூறப்படும் நாள். வழக்கமாக இருவரும் சந்திக்கும் அதே கல்லூரி அறையில் தான் கற்பு பறிபோனதாக பிளாரன்சு மேரி கூறியுள்ளார்.
பாதிரியார் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததும் அவருக்கு தலைகனக்க தொடங்கியது. மயங்கி விழுந்தார். சிலமணிநேரம் கழித்து மயக்கம் தெளிந்தது. நடக்க கூடாதது நடந்து விட்டதாக அறிந்தார். இதுபோன்ற சம்பவம் மீண்டும் மீண்டும் நடந்ததாக பிளாரன்சுமேரி கூறியுள்ளார். சிலநாள் கழித்து அவரது உடலில் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார். வயிறு சற்று பெரிதாக இருப்பதை அறிந்தார். உடனே நம்பதகுந்த பெண் டாக்டர் ஒருவர் உதவியை நாடினார். கர்ப்பம் அடைந்து இருப்பதாக டாக்டர் தெரிவித்தார்.
கன்னியாஸ்திரி கர்ப்பமா? பிளாரன்சுமேரிக்கு உலகமே இருண்டு போனது போல் இருந்தது. வேகமாக சென்று பாதிரியாரை சந்தித்தார். அவர் கூறிய யோசனைப்படி திருச்சியில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் கற்பு இழந்த அதே ஆண்டில் ஏப்ரல் மாதம் கருக்கலைக்கப்பட்டது. இந்த விஷயத்தை வெளியே கசிய விடாமல் இருவரும் பார்த்துக்கொண்டனர். பின்னர் பாதிரியார் அடிக்கடி அழைத்ததாகவும் ஆனால் அவரது ஆசைக்கு இணங்க மறுத்து விட்டதாகவும் பிளாரன்சுமேரி கூறியுள்ளார்.
இதற்கிடையே 4 ஆண்டுகளாக மூடிமறைத்து வந்த கருக்கலைப்பு விவகாரம் கசிய தொடங்கியது. புனித அன்னாள் சபை நிர்வாகிகள் விசாரணையில் ஈடுபட்டனர். பிளாரன்சுமேரியிடம் விளக்க கடிதம் கேட்டனர். கடந்த ஆகஸ்டு 25-ந்தேதி கடிதம் கொடுத்தார். அன்றே சபையில் இருந்து நீக்கப்பட்டார்.
கன்னியாஸ்திரி ஆடை அணியாமல் சொந்த ஊர் செல்ல அவருக்கு தயக்கம். நியாயம் கிடைப்பதற்காக ஜோசப்கல்லூரி கல்லூரி அதிபர் சூசையிடம் ஓடிச்சென்றார். நடந்த சம்பவத்தை தெரிவித்தார். பாதிரியார் ராஜரத்தினம் ஏசு சபையை சேர்ந்தவர். இதன் தலைமையிடம் திண்டுக்கல்லில் உள்ளது. அங்குள்ள சபை நிர்வாகிகளுக்கு கல்லூரி அதிபர் சூசை தகவல் தெரிவித்தார். பிளாரன்சுமேரி உடனே புறப்பட்டு வரும்படி அழைப்பு விடப்பட்டது.
உறவினர்கள் 2 பேருடன் அவர் சென்றார். அங்கும் அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும் பாதிரியார்கள் அனைவரும் சேர்ந்த மிரட்டியதாகவும் பிளாரன்சுமேரி கூறியுள்ளார்.
அதன்பிறகு தான் அவர் போலீஸ் உதவியை நாடினார். இதனால் பாதிரியார் ராஜரத்தினம் கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அவர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். அதன்மீது விசாரணை நடந்து வருகிறது. பிளாரன்சுமேரிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. தற்போது அவர் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியுள்ளார். அவரிடம் கேட்டபோது கூறியதாவது:-
துறவறம் என்பது புனிதமான ஒன்று. சமூகத்துக்கு சேவை செய்யும் நோக்கில் என்னைப்போல் வரும் பெண்கள் ராஜரத்தினம் போன்ற சில பாதிரியார்கள் வலையில் எங்களை அறியாமலேயே சிக்கி விடுகிறோம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள், சத்தம் இல்லாமல் சபையை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.
நான் அப்படிபட்டவர் அல்ல. சட்டத்தின் மூலம் பாதிரியாருக்கு சரியான தண்டனை வாங்கித்தரும் வரை எனக்கு தூக்கம் கிடையாது. அவர் முகமூடியை கிழிக்காமல் விடமாட்டேன். என்னை நீக்கியது போல் அவரையும் சபையில் இருந்து நீக்கும் வரை ஓயமாட்டேன். அதுவரை எதிர்கால சிந்தனை பற்றி நினைத்துக்கூட பார்க்க மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்

கிளினஸ், உஷா, மேரி என தொடரும் பட்டியல்: பலான பாதிரியின் பலே லிஸ்ட்!

அக்டோபர் 23, 2010 by vedaprakash

கிளினஸ், உஷா, மேரி என தொடரும் பட்டியல்: பலான பாதிரியின் பலே லிஸ்ட்!

குறிப்பு: இன்று தினமலரில் “நமது நிருபருக்கு அளித்த பேட்டி” எட்ன்ரு வெளி வந்துள்ள செய்திக்கும் 13-10-2010ல் வந்துள்ள செய்திக்கும் ஒரே ,மாதிரியாக இருந்தாலும் சில வேறுபாடுகள் உள்ளன. அவை சாய்வான எழுதுகளில் கொடுக்கப்பட்டுள்ளன.
ப்ளோரன்ஸ் மேரி-கலைக் காவேரிப்ளோரன்ஸ் மேரி-கலைக் காவேரி

கிளினஸ் அறிமுகப்படுத்திய ராஜரத்தினம்[1] (2004-05): “பாதிரியார் ராஜரத்தினத்துக்கு இன்னும் சில பெண்களுடன் தொடர்பு உள்ளது,” என்று திருச்சி போலீசில், கற்பழிப்பு புகார் கொடுத்துள்ள கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி கூறினார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம் மீது, கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் புகார் கூறியுள்ள கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி (31) நமது நிருபருக்கு அளித்த பேட்டி: “கடந்த 2004ம் ஆண்டு நான் நெல்லையில் பணியாற்றிய போது, கன்னியாஸ்திரி கிளினஸ், பாதிரியார் ராஜரத்தினத்தை[2] அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, எங்களுக்குள் எந்த தவறான தொடர்பும் கிடையாது. அதன் பின் நான் திருச்சி வந்து விட்டேன். அதே காலகட்டத்தில் (2005) தான் பாதிரியார் ராஜரத்தினமும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முதல்வராக திருச்சி வந்தார்[3]கடந்த2006ம் ஆண்டு முதல், திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரியில் இசையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தேன். தூய வளனார் கல்லூரியின் முதல்வர் ராஜரத்தினம், ந்த கல்லூரிக்கு அடிக்கடி வந்தபோது,எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது[4].

மேரியை விருந்தினர் மாளிகைக்கு அழைத்த ராஜரத்தினம் (2006): கிளினஸ் சொன்ன ஏற்கனவே இருந்த அறிமுகத்தை வைத்து என்னை தொடர்பு கொண்டு, கல்லூரி வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு அழைத்தார்.

மயக்க மருந்து கொடுத்து கற்பழித்தார்: நானும் எதார்த்தமாக போனேன். அங்கு, பழக்கத்தின்அடிப்படையில் 2006 ஜன., 22ம்தேதி,ராஜரத்தினத்தைதனியாகசந்தித்தபோது[5], எனக்கு

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கெடுத்துவிட்டார்.

Florence Mary

மேலும் என்னை நிர்வாண படமும் மொபைல் போனில் எடுத்து வைத்துக் கொண்டார். மயக்கம் தெளிந்த பின், ராஜரத்தினத்தை, “ஏன் இப்படி மோசடி செய்தாய்?’ என்று கேட்டபோது, மொபைல் போனில் இருந்த என் நிர்வாண படத்தைக் காட்டி, “இந்த விஷயத்தை வெளியே சொன்னால், நிர்வாண படத்தை அனைவருக்கும் அனுப்பி விடுவேன்’ என, மிரட்டினார்.

RapeRape

கூப்பிடும் போதெல்லாம் விருந்தினர் மாளிகைக்கு சென்று வந்த மேரி (2006-07): அதற்கு பயந்து, நான் அவர் என்னை கூப்பிடும் போதெல்லாம் கல்லூரி விருந்தினர் மாளிகைக்கு சென்று வந்தேன்.தொடர்ந்து என்னை மிரட்டி, பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று கற்பழித்தார்[6]. இதனால், 2008ம் ஆண்டு கர்ப்பமடைந்தேன். அப்போதும் ராஜரத்தினம் மிரட்டியதால், கர்ப்பத்தை கே.எம்.சி., மருத்துவமனை பெண் டாக்டரிடம் மாத்திரை வாங்கி சாப்பிட்டு கலைத்தேன்[7]. மருத்துவமனைக்கு, கன்னியாஸ்திரி ஜான்சி என்பவரும், என்னுடைய அக்காவும் உடன் வந்தனர்.

Kalam-RajarathnM-cCD-release-functionKalam-RajarathnM-cCD-release-function

ருசி கண்ட பூனை மறுபடியும் மிரட்டல் (2008-09): கர்ப்பம் கலைத்த பிறகு ராஜரத்தினம் என்னை தொடர்பு கொண்டு, மீண்டும் என்னை விருந்தினர் மாளிகைக்கு அழைத்தார். “என்ன செய்தாலும் இனிமேல் நான் வரமாட்டேன்’ என்று கூறிவிட்டேன். அந்த ஆத்திரத்தில், பழி வாங்கும் நோக்குடன் நான் சார்ந்திருந்த புனித அன்னாள் சபை தலைமை பொறுப்பில் இருந்த சேவியர் மரியதங்கம் என்பவருக்கு, என்னைப் பற்றிய விவரங்களைதெரிவித்துள்ளார்.

கலாம்-பேசும்போது-சிரிக்கும்-ராஜரத்தினம்கலாம்-பேசும்போது-சிரிக்கும்-ராஜரத்தினம்

சிஸ்டர்கள் கிளினஸ், உஷா போல் உன்னையும் கவனித்துக் கொள்கிறேன்: அதன்பேரில், அவர்கள் என்னை விசாரித்து, கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாகக் கூறி சபையிலிருந்து நீக்கிவிட்டனர். அதன் பின், பாதிரியாரிடம் நியாயம் கேட்டேன். அதற்கு அவர், “சிஸ்டர்கள் கிளினஸ், உஷா போல் உன்னையும் கவனித்துக் கொள்கிறேன்’ என்று, சாதாரணமாக பதில் கூறினார். அப்போது தான், ராஜரத்தினத்துக்கு இன்னும் சில பெண்களுடன் தொடர்பு உள்ளது தெரிய வந்தது.

மத்திய-அமைச்சர்-நெப்போலியனுடன்-ராஜரத்தினம்மத்திய-அமைச்சர்-நெப்போலியனுடன்-ராஜரத்தினம்

இயேசு சபையின் தலைமையகமும் கண்டு கொள்ளாததால் போலீஸிடம் புகார் செய்தேன் (13-10-2010): இதையடுத்தே அவர் மீது, இயேசு சபையின் தலைமையகத்தில் புகார் தெரிவித்தேன்; அங்கும் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை[8]. அதன் பின் தான் கோட்டை போலீசில், பாதிரியார் மீது புகார் அளித்தேன்[9]. பாதிரியாருடன் நான் பழகியது எல்லாம் அவருடைய மிரட்டலுக்கு பயந்து தானே ஒழிய, வேறு எந்த காரணமும் கிடையாது. என்னை ஏமாற்றியது போல் வேறு எந்த பெண்ணும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் தான், பாதிரியார் மீது புகார் கொடுத்தேன். மற்றபடி அவரிடம் நானோ, என் குடும்பத்தாரோ பணம் ஏதும் கேட்கவில்லை. அது பாதிரியார் பரப்பி விடும் கட்டுக்கதை[10].

Rajarathnam-with-NCC-cadetsRajarathnam-with-NCC-cadets

கன்னியாஸ்திரியாக இருந்ததால், சபைக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்று புகார் கொடுக்கவில்லை (ஆகஸ்ட்.25, 2010): கன்னியாஸ்திரியாக இருந்ததால், சபைக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்று, இவ்வளவு நாட்களாக புகார் கொடுக்காமல் இருந்தேன்[11]. என்னுடைய சபையில் நான்கு பக்கம் நான் எழுதிக் கொடுத்தது மன்னிப்பு கடிதம் தான்; புகார் கடிதம் அல்ல. இவ்வாறு ப்ளாரன்ஸ் மேரி கூறினார்.

பாதிரியாரைநீக்கவேண்டும் (அக்டோபர் 2010): பேட்டியின் போது ப்ளாரன்ஸ் மேரி, “பாதிரியாரிடம் நான் இயேசு சபையில் புகார் தெரிவிப்பேன்’ என்று கூறியபோது, “எந்த சாமியாரும் யோக்கியம் கிடையாது; என்னை ஒன்றும் செய்ய முடியாது’ என்று கூறினார். மேலும், தவறு செய்த என்னை, கன்னியாஸ்திரி சபையிலிருந்து நீக்கிவிட்டனர். அதேபோல், யோக்கியம் மாதிரி பேசிக் கொண்டு திரியும் பாதிரியாரையும் சபையிலிருந்து நீக்க, சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்றார்.

Kalaikkaaveri-StudentsKalaikkaaveri-Students

யார் இந்த சிஸ்டர்கள்கிளினஸ், உஷா?: மேரி நியாயம் கேட்டபோது, “சிஸ்டர்கள்கிளினஸ், உஷாபோல்உன்னையும்கவனித்துக்கொள்கிறேன்‘ என்று, சாதாரணமாக பதில் கூறினார். அப்போது தான், ராஜரத்தினத்துக்கு இன்னும் சில பெண்களுடன் தொடர்பு உள்ளது தெரிய வந்தது. கிளினஸ் ஏற்கெனெவே மேரியை ராஜரத்தினத்திற்கு அறிமுகப்படுத்தியவர் என்று மேரியே கூறியுள்ளார். கிலினஸ் பெயரைச் சொல்லித் தான், மேரியை விருந்தினர் மாளிகைக்கு அழைத்திருக்கிறார். ஆக கிளினஸ் அவருடைய ஆள் எனத்தெரிகிறது. உஷா யார் என்று விசாரிக்கவேண்டும். இவர்கள் எல்லொரும் கலைக்காவிரி கல்லூரி மாணவிகளாக இருக்கலாம் அல்லது குறிப்பிட்ட கன்னியாஸ்திரி சபையின் கன்னிகளாக இருக்கலாம்.

மேலும் விவரங்கள் அறிய ராஜரத்தினத்தை அணுகவும்[12]: மேலும் வேடிக்கையென்னவென்றால், தகவல் அறியும் சட்டப்படி, ஏதாவது விவரங்கல் வேண்டும் என்றால், திருவாளர் ராஜரத்தினத்தைத் தான் தொடர்பு கொள்ளவேண்டும். இதோ அவருடைய செல்போன் நெம்பர், ஈ-மெயில்-ஐடி முதலியன:

a. Name of the Information Officer for RTI: Rev. Dr. R. Rajarathinam S.Jb. Designation : Principalc. Phone Number with STD Code : 0431- 4226375, Mobile: 94430 59996

d. FAX Number with STD Code : 0431- 2701501

e. Email : rajasxc@yahoo.comrajasjcppal@yahoo.co.uk

காலக்கிரம காமக்கலவிகள்: பலானப் பாதிரி ராஜரத்தினத்தின் பலே விளையாட்டுகள் கிரமமாகத் தான் உள்ளன:

2004: கிளினஸ் ப்ளோரன்ஸ் மேரிக்கு ராஜரத்தினத்தை அறிமுகப்படுத்துகிறார்.

2005: ராஜரத்தினம் துருச்சிக்கு முதல்வராக வருகிறார்.

2006: 26-01-2006 மேரியைக் கூப்பிட்டு கற்பழிக்கிறார்.

2007: காமக்களியாட்டங்கள் தொடர்கின்றன.

2008: கர்ப்பம் அடைதல், கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் கருக்கலைத்தல்.

2009: ராஜரத்தினம் மறுபடியும் கூப்பிடுகிறார். பிரச்சினை வெடிக்கிறது.

2010: ஆகஸ்டில் சபைக்கு கடிதம் எழுதுதல், வேலை நீக்கம் முதலியன.

(C) வேதபிரகாஷ்

24-10-2010

[1] தினமலர், பாதிரியாருக்கு மேலும் சில பெண்களுடன் தொடர்பு :ப்ளாரன்ஸ் மேரி புகார், அக்டோபர் 22, 2010 ,http://www.dinamalar.com/News_Detail.asp?Id=111920[2] ராஜரத்தினம் அப்பொழுது 1999-2005 பொருளாதாரப் பிரிவின் தலைமையாசியாராக இருந்து வந்தார்.[3] Rev.R. Rajarathinam S.J. became the HOD of Economics department of  St. Xaviers College, Palayankottai in 1999 and in the year 2005 he was transferred to St. Joseph’s College, Trichy as the Principal.http://www.stxavierstn.edu.in/webhost/dept.php?dpt=economics

[4] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105227

[5] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105227

[6] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105227

[7] இதுகுறித்து பாதிரியார் ராஜரத்தினத்திடம் தெரிவித்தபோது, என்னை சமாதானப்படுத்தி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்தார்.

[8] இத்தகவல் நான் சார்ந்த சபைக்கு தெரிந்தவுடன், என்னை சபையிலிருந்து அவர்கள் நீக்கிவிட்டனர். இதையடுத்து, பாதிரியார் ராஜரத்தினத்தை சந்தித்து நியாயம் கேட்டதற்கு, “இனிமேல் என்னை பார்க்கக் கூடாது; இதுதொடர்பாக யாரிடமும் பேசக் கூடாது’ என மிரட்டினார்.
அவருக்கு ஆதரவாக பாதிரியார்கள் தேவதாஸ், சேவியர் பிரான்சிஸ், சேவியர் ஆகியோரும் சேர்ந்து, என்னை மிரட்டினர்.

[9] 02-10-2010ற்குப் பிறகு கொடுத்திருக்கிறார். ஒருவேளை காந்தி செய்த மாயமோ என்னமோ. இந்திய குடியரசு, சுதந்திர, காந்தி பிறந்த தினங்கள் என்ரு தேசிய விடுமுறை நாட்கள், மேரியை ஆட்டிப்படைத்துள்ளது போல இருக்கிறது.

[10] ஆக இத்தகைய விவகாரங்களும் சேர்ந்து விட்டன போலும். இதை திசைத்திருப்ப பலவழிகளில் முயற்ச்சிகள் நடக்கின்றன எனத்தெரிகிறது.

[11] 26-01-2006 அன்று முதலில் கற்பழிக்கப்பட்டதால், 15-08-2010 அன்று ஞானோதயம் வந்ததோ என்னமோ? 25-08-2010 அன்று கடிதம் கொடுக்கப்படுகிறது!

[12]http://www.jim.ac.in/images/mandatory%20disclosure%20final.pdf

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: