மேட்டூர் செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவியர் மாயம்-பெற்றோர் முற்றுகை

மேட்டூர் : மேட்டூரில், அரசு நிதி பெறும் மேல்நிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவியர் மூவர், கடந்த 8ம் தேதி மாயமாகினர். நேற்று முன்தினம் மற்றொரு மாணவியும் மாயமானதால், பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்; இதனால் திடீர் பதட்டம் நிலவியது.

மேட்டூரில், அரசு நிதி பெறும் செயின்ட் மேரீஸ் மகளிர் மேல்நிலை பள்ளியில், 2,550 மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில், ஏழை மாணவியருக்காக, “கருணை இல்லம்’ என்ற பெயரில், ஹாஸ்டல் நடத்தப்படுகிறது; அதில், 240 மாணவியர் தங்கியுள்ளனர். இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும், மேட்டூர், தூக்கணாம்பட்டியைச் சேர்ந்த ஜோசப் மகள் காயத்ரி (13), ஆண்டிகவுண்டர் நகர் சிவகுமார் மகள் சுபலட்சுமி (13) சவரியம்மாள் நகர் லூகாஸ் மகள் பியூலா ஜெனிபர் (13) ஆகிய, மூன்று பேரும் தோழிகள். அக்., 8ம் தேதி மாலை, பள்ளியில் இருந்து புறப்பட்ட இவர்கள் மூவரும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து, மாயமான மாணவியரை தேடி வருகின்றனர். கொளத்தூர் அடுத்த தண்டா கிராமத்தைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி ஆறுமுகம் மகள்கள் ஜோதி (17), கார்த்திகா (14). செயின்ட் மேரீஸ் பள்ளி ஹாஸ்டலில் தங்கி இருவரும், பிளஸ் 2 மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றனர்.

நேற்று முன்தினம் (அக்., 10) மதியம், பிளஸ் 2 மாணவி ஜோதியும், ஹாஸ்டலிலிருந்து மாயமானார். அடுத்தடுத்து மாணவியர் மாயமானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். டி.எஸ்.பி., தலைமையில், பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பள்ளி தாளாளர் லடிஸ்காமேரி, தலைமையாசிரியர் ஜோஸ்பின் ஆகியோரிடம், விசாரணை நடத்தப்பட்டது. ஹாஸ்டலில் தங்க விருப்பமில்லாததால் வெளியேறுவதாக மாணவி ஜோதி, தன் தங்கையிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, யாரையேனும் காதலித்து ஜோதி, ஹாஸ்டலில் இருந்து மாயமாகி இருக்கக் கூடும் என, போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், மாயமான மூன்று மாணவியரும், வேளாங்கண்ணியில் இருப்பதாக, நேற்று மதியம் தகவல் கிடைத்தது. மாணவியரை மீட்க போலீசார், நேற்று மாலை, வேளாங்கண்ணி விரைந்தனர். மாயமான பிளஸ் 2 மாணவியையும் விரைவில் கண்டுபிடித்து விடுவதாக, போலீசார் தெரிவித்தனர்.

Advertisements

One Response to மேட்டூர் செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவியர் மாயம்-பெற்றோர் முற்றுகை

  1. jegan says:

    Goyya mavane! Moodikittu irungada. Idhe news’a marupadium parthena “Yevana Irundhalum vettuven”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: