லுத்ரன் திருச்சபை ஆயர் மீது ரூ. 3 கோடி மோசடி புகார்

Tiruchirappalli ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 26, 5:37 PM IST
திருச்சி, செப். 26-
 
திருச்சியை தலைமையிட மாக கொண்டு செயல்படும் தமிழ் சுவிசேஷலுத்ரன் திருச்சபையின் ஆயர்மார்டினுக்கும், நிர்வாகக்குழு செயலர் சார்லசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக பாலக்கரை போலீசில் புகார் உள்ளது.

 
திருச்சபையின் 194-வது விதியை பயன்படுத்தி சார்லஸ் தலைமையிலான நிர்வாகக் குழுவை கலைத்ததாக ஆயர் மார்டினும், நிர்வாகக் குழுவைக் கலைக்க ஆயருக்கு அதிகாரமில்லை என செயலர் சார்லசும் தெரிவித்திருந்தனர்.

 
இந்நிலையில் நிர்வாகக் குழு செயலர் சார்லஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

 
அப்போது அவர் கூறியதாவது:-

 
ஆயர் மார்டின் இதற்கு முன்பு ஆண்டிமடம், பெரம்பலூர், பொன்மலைப்பட்டி. மயிலாடுதுறை, கடலூர் மாவட்டம் செம்மண்டலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் குருவாக பணியாற்றியுள்ளார்.

 
இந்த கால கட்டங்களில் பல லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்துள்ளார். 14-1-09 அன்று ஆயராக பொறுப் பேற்றது முதல் 9.8.10 வரை கல்வி கழக தலைவருக்கு நெருக்கடி கொடுத்து 25 பேருக்கு வேலை வாய்ப்பை பெற்றுள்ளார். இதற்காக ஆயர் 25 பேரிடமும் பணம் பெற்றுள்ளார்

 

இதுவரை சுமார் ரூ.3கோடி வரை ஆயர் மார்டின் கையாடல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஆவணங்களும் எங்களிடம் உள்ளது.

TELC-church-concil-2010 TELC-church-concil-2010  

 இவ்வாறு நிர்வாகக்குழு செயலர் சார்லஸ் கூறினார். பேட்டியின்போது நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 7 பேரும் உடன் இருந்தனர்.  

இன்று (02.10.2010)காலையில் சுமார் 7மணிக்கு தமிழன் டிவி-யில் ஜட்சன் ஆபிரகாம் அவர்களின் சுவிசேஷ நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்தேன்; 

நிகழ்ச்சிக்கு முன்பதாக அவர்களுடைய வீரதீர பராக்கிரமங்களின் தொகுப்பாக வரும் க்ளிப்பிங்ஸ்…அதிலொரு குறிப்பிட்ட காட்சியில் ஒரு பயங்கரமான துணிகரம் அரங்கேறியது;   

மாயாவி ஜட்சன் ஆபிரகாம் தனது வலது கரத்தை உயர்த்துகிறார்;அப்போது அவரது உள்ளங்கையிலிருந்து ஒரு நட்சத்திரம் போன்ற ஒளி தோன்றி வளர்ந்து விஷ்ணு சக்கரம் போல சுழல எதிர்புறம் நிற்கும் அப்பாவி பொதுஜனம் ‘பொத்’தென சரிந்து விழுகிறது;  இதுபோன்ற மோசடிகளைக் கண்டுகொள்ளாமல் விடுவதாலும் என்னைப் போன்ற ஒருசிலர் எங்கோ ஒரு மூலையிலிருந்து புலம்பிவிட்டுச் செல்வதாலும் இதுபோன்ற மோசடியாளர்கள் தினவெடுத்து சுவிசேஷ மேடைகளை மாயதந்திர காட்சி மேடையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்;இவர்கள் வேத சத்தியத்தை மறைத்து அதற்கு விரோதமாக செயல்படுவது இந்துமார்க்கப் பின்னணியிலிருந்து வரும் சாதாரண மக்களுக்கு இது பெரிய குற்றமாக இராது;ஆனால் வேதத்துக்குப் புறம்பான இதுபோன்ற செயல்கள் கண்டிக்கப்படாவிட்டால் அதாவது பணத்துக்காக இவர்களை அழைத்து கூட்டம் போடும் ஒருங்கிணைப்பாளர்கள் அதனைக் குறித்து எச்சரிக்காவிட்டால் தேவ பயங்கரம் இறங்கும்; 

அவர் தமது நாமத்தை வீணிலே வழங்கும் ஒருவரையும் சும்மா விடவே மாட்டார்;வியாதியிலோ விபத்திலேயோ கொலைசெய்யப்பட்டோ இந்த துரோகிகள் வீழ்த்தப்படுவர்;அல்லது இந்து விரோதிகளால் முச்சந்தியில் வைத்து  ;அல்லது வருமான வரி விவகாரங்களில் சிக்கி அசிங்க்ப்படுவர்;அல்லது இவர்களோ இவர்கள் பிள்ளைகளோ
விபச்சார குற்றங்களில் சிக்கி தண்டிக்கப்படுவர்;இவை அன்றாட செய்தியாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. 

 சில நண்பர்கள் கூறுவது போல இவர்களுக்கு எழுதி விளக்கம் கேட்பதோ விளக்கத்துக்காகக் காத்திருப்பதோ வேண்டாத வேலை; இது மோசடி என்பது என்னைப் போன்ற நுனிப்புல் மேயும் முட்டாளுக்கே தெளிவாகத் தெரிகிறதே;  

 இவர்கள் மனம் புண்படாதிருக்கவே மென்மையாகவும் அப்பாவியைப் போலவும் சந்தேகம் கேட்பது போன்ற பாவனையில் எழுதுகிறேன்; இதனால் எந்த ஒரு புது விசுவாசியும் நிச்சயமாக இடறலடையும் வாய்ப்பே இல்லை;சரியானதைக் குறித்து யோசிக்கும் வாசலையே நான் திறக்கிறேன்;  

 இதற்கு நீங்கள் ஆதாரம் கேட்பது அநியாயம்,ஏனெனில் இலட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறார்கள்; வெறும் ரெண்டு பேர் தான் பார்த்ததாக சாட்சி சொன்னாலே போதுமானது;  

 இப்படிப்பட்ட‌ மோசடியும் சத்தியத்துக்கு விரோதமானதுமான  துணிகரமான செயல்களை உண்மையான கிறித்தவர்கள் கண்டித்தாலே இவர்கள் நல்வழி திரும்ப வாய்ப்புண்டு; இன்னும் சொல்லுகிறேன்,இவர்களுடைய இரத்தப்பழியை ஆண்டவர் நம்மிடம் கேட்டால் என்ன செய்வோம்?  

 என்னைப் போன்ற சாதாரணமானவனுக்கு இந்த உணர்வை ஆண்டவர் கொடுக்க என்ன காரணம்,சிந்திப்போமா?  

 ஆண்டவர் இவர்களிடம் கிருபையாகக் கொடுத்துள்ள மந்தையினை சூழ்ச்சியினாலோ இழிவான ஆதாயத்துக்காகவோ மேய்க்காத வண்ணம் சபையார் அனைவரும் இணைந்து ஜெபிக்கவும் போராடவும் உணர்த்தவும் வேண்டும்;  

 சகோதரி ப்ரீத்தா அவர்கள் ஒரு நல்ல சுவிசேஷ பிரசங்கியாளர்;தற்போது அவரையும் இந்த படுபாவி கெடுத்துப் போட்டார்; அபிஷேகம் ஒருவரையும் புழுபோல விழுந்து நெளியச் செய்யாது, சகோதரி.  

 நீங்கள் சிங்கப்பூரில் பென்னிஹின் கூட்டத்தில் பார்த்த காட்சியைக் குறித்த பெருமை மிகுந்த தொலைக்காட்சி பேச்சில் நீங்களும் உங்கள் கணவரும் மாத்திரமே விழவில்லை என்றீர்கள்; பாஸ்டர்களெல்லாம் விழுந்து நெளிந்தது பரிசுத்தாவி இறங்கியதாலே என்றால் நீங்கள் விழாத காரணமென்ன, நீங்கள் பரிசுத்தாவியானவருக்கு இணையானவர்கள் (Super Power) என்பதாலா அல்லது பிசாசுகள் (devil) என்பதாலா?ஒரே குழப்பமாக இருக்கிறது.  

 கொஞ்சம் சரியாகவும் அதிகம் தவறாகவும் கலந்தடிக்கிறீர்கள்;  அவற்றை வகை பிரித்து உங்கள் சூழ்ச்சிகளை இனம் காணுமளவுக்கு எமது ஜனம் விவரமானதல்ல; தயவுசெய்து இயேசுவின் பெயரால் இவற்றையெல்லாம் செய்து அவருடைய தியாகத்தை அவமாக்க வேண்டாம்; சொல்லப்பட வேண்டிய தீர்க்கமான செய்தி சிலுவையைப் பற்றியதே என்பதை அறிவீர்களாக.

குற்றச்சாட்டு சுருக்கமாக:
  

 1. ஆவியில் விழுதல்  

 ஜெபிக்க வருவோரை கீழே தள்ளுவதும் அதைக் குறித்த தெளிவான போதனையை போதிக்காததும்; நெடுநாளாக பலர் கண்டித்தும் எருமை மாட்டு மேல் மழை பெய்தது போல என்னைக் கேட்க யாருண்டு என்று அந்த தவறைத் தொடருவது.  

 2. உள்ளங்கையில் விஷ்ணு சக்கரம்  

 இதில் இன்னும் ஒரு படிமேலேசென்று கணிணியின் தந்திரக்காட்சியின் (Comp.Graphics) உதவியுடன் உள்ளங்கையிலிருந்து விஷ்ணு சக்கரம் சுழன்று வருவதைப் போல சித்தரித்து பார்வையாளர்களை பிரமிக்கச் செய்வது; கொஞ்ச காலத்தில் உங்கள் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் போட்டுக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை; ஆனால் இதுபோன்ற துணிகரங்களை அன்பு சகோதரர் டிஜிஎஸ் அவர்கள் கூட முயற்சிக்கவில்லை.  

   

Advertisements

One Response to லுத்ரன் திருச்சபை ஆயர் மீது ரூ. 3 கோடி மோசடி புகார்

 1. “கிறித்தவ விழிப்புணர்வு இயக்கம்”
  அண்மையில் எனது ஆதங்கத்தை “மாயாவி ஜட்சன் ஆபிரகாம் கையில் விஷ்ணு சக்கரம்” என்ற கட்டுரையாக்கும் போது தீவிரமான ஒரு சிந்தனையிலிருந்தேன்; ஆம், சரியான மாற்றுவழியைச் சொல்லாமல் வெறுமனே கிறித்தவ ஊழியர்களை விமர்சித்து பேசிக்கொண்டிருந்து கெட்டபெயரை எடுப்பதைவிட தீவிரமாக எதையாவது செய்யவேண்டுமென; “கிறித்தவ விழிப்புணர்வு இயக்கம்” போன்ற பெயரில் ஒரு சுயாதீன இயக்கத்தைத் துவங்கவேண்டும்; அது
  தமிழகம் முழுவதும் ஆங்காங்கு துவக்கப்பட்டு ஒரு இயக்கமாகப் பதிவுசெய்யப்பட வேண்டும்; இதன் உறுப்பினர்கள் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ செயல்படலாம்; இவர்களின் பணியானது அஹிம்ஸா வழியில்- ஜனநாயக முறையில் அமைந்திருக்கவேண்டும்.

  அதாவது சத்தியத்துக்கு விரோதமான செயல்களை வரையறுத்துக் கொண்டு முதலாவது அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை எச்சரிக்க வேண்டும்.

  அடுத்து அவர்களை அழைத்து கூட்டம் போடும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு சில ஆலோசனைகளைக் கூறி அவர்கள் கவனமாக இருக்கவேண்டிய காரியங்களை உணர்த்தவேண்டும்.

  இந்த மோசடி ஊழியர்கள் தங்கள் வழியை மாற்றிக் கொள்ளாமலும் நம்முடைய எச்சரிப்பைக் குறித்து மேடையில் பகிரங்கமாக அறிவித்து விளக்கம் கொடுக்காத பட்சத்தில் இவர்கள் நடத்தும் கூட்டத்தில் இவர்களுடைய நடவடிக்கைகள் கிறித்தவ நடைமுறைகளுக்கு விரோதமானது என்பதை துண்டுபிரதிகள் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.

  இன்னும் தேவைப்பட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்; மோசடி நிதிநிறுவனங்களையும் போலி மருத்துவர்களையும் கூட புகாரின் அடிப்படையிலேயே போலீஸார் விசாரிக்கின்றனர்; எனவே பாதிக்கப்படாதிருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிக்கச் சொல்லி காவல்துறையில் புகார் செய்யலாம்.

  இதில் ஒத்த கருத்துடைய சகோதரர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி ‘எது சத்தியம், எது சத்தியத்துக்கு விரோதமானது’ என்ற வரையறைகளையும் நடவடிக்கை எடுக்கவேண்டிய வழிமுறைகளையும் இறுதி செய்யலாம்;

  இதற்கு தலைவர் என்று யாரும் தேவையில்லை; ஜாமக்காரன் ஆசிரியர் போன்ற யாரையாவது கௌரவ ஆலோசகராக வைத்துக் கொள்ளலாம்.

  இது அவசியமா என்று கேட்டால்…

  இந்த தேசத்தில் பத்திரிகை சுதந்தரம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா?

  மனித உரிமை குறித்த விழிப்புணர்ச்சி இருக்கிறதல்லவா?

  தகவல் அறியும் உரிமை சட்டம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா?

  அவ்வளவு ஏன் இயேசுவானவரையே எந்த அதிகாரத்தில் இவற்றை செய்கிறீர் என்று கேள்வி கேட்டனரே?

  அந்நியன் வந்து நம்மை கேள்வி கேட்டு அவமானப்படுத்துவதற்குள் நம்மை நாமே சரி செய்துகொண்டால் என்ன‌?

  http://chillsam.wordpress.com/2010/10/04/christian-revival/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: