சிந்து சமவெளி அநாகரிகம் -பைபிள் கதை எதிர்ப்பு

சிந்து சமவெளி திரைப்படத்துக்கு எதிர்ப்பு: இயக்குநர் சாமியின் கார் மீது தாக்குதல்

http://jezuschrist.wordpress.com/2010/06/29/16/

First Published : 07 Sep 2010 05:48:28 AM IST

மருமகளை மனைவியாக்கிக்கொள்ளும் மாமனார்!!

சென்னை, செப். 6: அண்மையில் வெளியான “சிந்து சமவெளி’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அதன் இயக்குநர் சாமியின் காரை மர்ம நபர்கள் சிலர் கல்வீசித் தாக்கியுள்ளனர்.
இது குறித்து இயக்குநர் சாமி கே.கே. நகர் போலீஸில் திங்கள்கிழமை புகார் அளித்தார்.
இது குறித்த விவரம்:
உயிர், மிருகம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் திரைப்பட இயக்குநர் ஏ.கே. சாமி. இவர் இயக்கிய “சிந்து சமவெளி’ திரைப்படம் அண்மையில் வெளியானது.
மாமனார் – மருமகள் உறவை கொச்சைப்படுத்தும் வகையில் இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
இத்தகைய காட்சிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் இயக்குநர் சாமிக்கு எதிர்ப்பு வந்தது. இது தொடர்பாக சில நாள்களாக தனக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன என்றார் சாமி.
இந் நிலையில் கே.கே. நகர் நியு பங்காரு தெருவில் உள்ள அவரது வீட்டின் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சில நாள்களாக வந்து கொண்டிருந்த மிரட்டல்களின் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் நடந்துள்ளதாக சாமி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து தனக்கும், தனது வீட்டுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இயக்குநர் சாமி போலீஸôரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இயக்குநர் சாமியின் காரை தாக்கியவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸôர் தெரிவித்தனர்.

மாமனாரோடு செக்ஸ் உறவு கொண்ட மருமகள்

மாமனார் யூதா-மருமகளான தாமார் வேசித்தனம் வம்சத்தில் வந்தவர் தான் இயேசு

சர்ச்சையில் சிக்கிய சிந்து சமவெளி படம்: டைரக்டர் சாமியை மிரட்டியவர்களை பிடிக்க போலீஸ் வேட்டை செல்போனில் பேசியவர்களின் பெயர் பட்டியல் சேகரிப்பு

சென்னை, செப். 7-

சர்ச்சையில் சிக்கிய சிந்து சமவெளி படம்:  டைரக்டர் சாமியை மிரட்டியவர்களை  பிடிக்க போலீஸ் வேட்டை  செல்போனில் பேசியவர்களின்  பெயர் பட்டியல் சேகரிப்புடைரக்டர் சாமி இயக்கிய சிந்து சமவெளி திரைப்படம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. மருமகளுடன் மாமனார் கள்ளக்காதலில் ஈடுபடுவது போன்ற கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேற்று முன்தினம் இரவு கே.கே.நகரில் உள்ள சாமியின் வீட்டில் ஒரு கும்பல் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டது. இதில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது கார் கண்ணாடி நொறுங்கியது.

இது குறித்து சாமி கே.கே. நகர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

தென்சென்னை இணை கமிஷனர் சக்திவேல், துணை கமிஷனர் சண்முகவேல் ஆகியோரது மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த 3-ந்தேதி சிந்து சமவெளி படம் திரையிடப்பட்டுள்ள ரோகிணி, உதயம், ஏ.வி.எம். ராஜேஸ்வரி தியேட்டர்களுக்கு டைரக்டர் சாமி சென்றுள்ளார்.

அப்போது தியேட்டர் முன்பு நின்று கொண்டு சிலர் அவரை மிரட்டியுள்ளனர். சாமியின் செல்போனில் தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டே இருந்துள்ளது.

செல்போனில் பேசி மிரட்டியவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். சாமியின் செல்போனை வைத்து துப்பு துலக்கப்பட்டு வருகிறது. மிரட்டல் போன் வந்ததாக கூறப்படும் நேரங்களில் சாமியுடன் பேசியவர்கள் யார்-யார்? என்பது பற்றிய பட்டியலை போலீசார் சேகரித்துள்ளனர். சாமியின் செல்போனில் பதிவான நம்பர்களை வைத்து மிரட்டல் ஆசாமிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மிரட்டல்-கார் உடைப்பு சம்பவங்களை தொடர்ந்து சாமியின் வீட்டுக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisements

7 Responses to சிந்து சமவெளி அநாகரிகம் -பைபிள் கதை எதிர்ப்பு

 1. மாமனார், மருமகள் கள்ளக்காதல் கதையை படமாக்குவதா? டைரக்டர் சாமி வீட்டில் தாக்குதல்; கார் உடைப்பு- போனில் கொலை மிரட்டல்

  உயிர், மிருகம் போன்ற சர்ச்சை கதைகளை படமாக்கியவர் இயக்குனர் சாமி. தற்போது சிந்து சமவெளி என்ற படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். உயிர் படத்தில் கணவன் தம்பி மேல் கள்ளக்காதலில் ஈடுபடும் அண்ணியை காட்டினார். சிந்து சமவெளியில் மாமனார் மருமகள் கள்ளக்காதலை காட்டியுள்ளார்.

  இப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இரு தினங்களுக்கு முன் வடபழனியில் சிந்து சமவெளி படம் திரையிடப்பட்ட தியேட்டருக்கு சென்ற சாமியை சிலர் சுற்றி வளைத்து அடிக்கப்பாய்ந்தனர்.

  கலாசாரத்துக்கு எதிரான கதையை படமாக்குவதா என்று ஆவேசமாக திட்டினார்கள். தணிக்கை குழுவினர் பார்த்துதான் இப்படத்துக்கு அனுமதி அளித்துள்ளனர் என்று அவர்களுக்கு பதில் அளித்தார்.

  இந்த நிலையில் டைரக்டர் சாமியின் வீடு திடீரென்று தாக்கப்பட்டு உள்ளது. மேற்கு கே.கே.நகர் நியூபங்காரு காலனியில் சாமி வீடு உள்ளது. நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் அந்த வீட்டில் கல்வீசி தாக்கினார்கள். உள்ளே நிறுத்தி வைத்திருந்த கார், கண்ணாடியையும் உடைத்தனர்.

  இது பற்றி சாமி இன்று காலை கே.கே.நகர் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் கொடுத்தார். தன் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

  போலீஸ் துணை கமிஷனர், சண்முகவேல், உதவி கமிஷனர் மனோகர் ஆகியோர் தாக்குதல் நடந்த சாமி வீட்டை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சண்முகவேல் நிருபர்களிடம் கூறும்போது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்தவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

  தாக்குதல் சம்பவம் பற்றி சாமி மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

  சிந்து சமவெளி படத்தை 90 சதவீதம் பேர் பாராட்டுகின்றனர். 10 சதவீதம் பேர்தான் சமூக காவலர்கள் என்ற பெயரில் எதிர்க்கின்றனர்.

  எனது வீட்டில் தாக்குதல் நடத்தி காரை உடைத்துள்ளனர். போனிலும், தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது. தியேட்டரில் வைத்தும் என்னை தாக்க முயற்சி நடந்தது. எனவேதான் பாதுகாப்பு கேட்டு போலீசில் புகார் அளித்துள்ளேன்.

  சிந்து சமவெளி படத்தை தணிக்கை குழுவினர் பாராட்டினர். இன்றைய சமூதாயத்துக்கு தேவையான படம் என்றனர். படம் பார்த்த பெண்களும் பாராட்டினர். படத்தில் சூழ்நிலையால் தவறு செய்பவர்களின் குடும்பம் அழிந்து போகும் என்று சுட்டிக்காட்டியுள்ளேன். ஒழுக்கமாக வாழ்வதுதான் நாகரீகம் என்று படத்தை முடித்துள்ளேன். இதை எதிர்ப்பது சரியல்ல.

  இவ்வாறு அவர் கூறினார்.

 2. ram says:

  அவரவர் வீட்டில் நடப்பதை அவரவர் படமாக்குகிறார்கள்! நாம் அதைப் புரிந்து கொண்டால் போதும்.

 3. Jesuraj says:

  கார் உடைப்பு விவகாரம்: இயக்குனர் சாமி விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை

  சென்னை: கார் உடைப்பு விவகாரம் குறித்து இயக்குனர் சாமி ஒத்துழைப்பு தரவில்லை என்று போலீசார் புகார் தெரிவித்துள்ளனர்.

  மேலும் மிரட்டல் ஆசாமி குறித்து சாமி சரியான ஆதாரம் தரவில்லை என்றும் இயக்குனர் சாமி ஒத்துழைத்தால் மட்டுமே உண்மைக் குற்றவாளியைக் கண்டறிய முடியும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். பட விளம்பரத்திற்கு பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் இயக்குனர் சாமி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ‘சிந்து சமவெளி’ பட நாயகி அனகாவையும் 2 மணி நேரம் போலீஸ் விசாரித்தது. ஆனால் மிரட்டல் ஆசாமி குறித்து இயக்குனர் சாமிக்கு தான் தெரியும் என்று நடிகை அனகா நழுவிக் கொண்டார். இதனைத்தொடர்ந்து உண்மையைத் தெரிவிக்காவிட்டால் இயக்குனர் சாமியை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

 4. ஜெகதீஸ்வரன் says:
  7:53 பிற்பகல் இல் செப்டம்பர் 8, 2010
  பெரியதிரைக்கு எதிர்ப்பு பெரிதாக வருவதுபோல சின்னத்திரைக்கும் வந்தால் பராவாயில்லை.

  எல்லா நாடகங்களில் குறிப்பாக சன்டீவில் இரண்டு பொண்டாட்டி, மருமகளின் மீது காதல் என குரூரங்கள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றன. சமூகத்தில் நடப்பதை காட்டுவதுதான் கலை. சமூகமும் அதே அளவு சீர்கெட்டு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது…

 5. This man is a Sex Animal.

 6. Kuppswamy says:

  //இயக்குனர் சாமி ஒத்துழைப்பு தரவில்லை என்று போலீசார் புகார் //

  TOTALLY PUBLICITY STUNT?

 7. j.raj says:

  kettadu yenrum nilainitkaadu.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: