கிறிஸ்டியன் பள்ளி கூடுதல் கட்டணம் வசூல்

கூடுதல் கட்டணம் வசூல்: அண்ணா நகரில் பள்ளி முற்றுகை; பெற்றோர் போராட்டம்

கூடுதல் கட்டணம் வசூல்:  அண்ணா நகரில் பள்ளி முற்றுகை;   பெற்றோர் போராட்டம்

சென்னை அண்ணாநகரில் சி.எஸ்.ஐ. ஜெசி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை மாணவ- மாணவிகள் 2500 பேர் படித்து வருகிறார்கள்.

தற்போது அரையாண்டு கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து 300-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் காலை 8 மணிக்கு பள்ளி முன் திரண்டு முற்றுகையிட்டனர். பின்னர் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்தனர்.

பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் பேச்சு நடத்த ஏற்பாடு செய்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ஷீலா சுரேஷிடம் பெற்றோர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து விளக்கம் கேட்டனர். அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று கூறினாலும் அதையும் மீறி அதிக அளவில் கட்டணம் வசூலிக்கிறீர்கள் என்று தெரிவித்தனர்.

அதற்கு தலைமை ஆசிரியை, பள்ளி நிர்வாக செலவு அதிகமாக இருக்கிறது. கூடுதலாக கட்டணம் வசூலிக்கவில்லை என்றால் பள்ளியை நடத்த இயலாது. கட்டணம் அதிகமாக இருப்பதாக நீங்கள் கருதினால் வேறு பள்ளியில் உங்கள் குழந்தைகளை சேருங்கள் என்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பள்ளி தலைமை நிர்வாகியிடம் பேசிய பிறகுதான் எந்த முடிவும் எடுக்க முடியும் என்று தலைமை ஆசிரியை தெரிவித்தார்.

அதுவரையில் கல்வி கட்டணம் செலுத்தமாட்டோம். உங்களது முடிவை தெரிவித்த பிறகு நாங்கள் செலுத்த தயாராக இருக்கிறோம் என்று பெற்றோர்கள் தரப்பில் எடுத்து கூறினார்கள்.

பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பெயர்களுடன் கோரிக்கை மனு எழுதி தருமாறு பள்ளி நிர்வாகம் கேட்டது. அதற்கு பெற்றோர்கள் மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து வினோத்குமார் என்பவர் கூறும்போது, எனது மகள் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். அரையாண்டு கல்வி கட்டணம் ரூ.6,431 செலுத்த கூறுகிறார்கள். இது 10 மடங்கு அதிகம் ஆகும். கட்டணம் செலுத்துவது குறித்து வழக்கமாக பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்புவார்கள். இந்த முறை கடிதம் அனுப்பவில்லை

குழந்தைகளுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. ஆனால் கட்டணம் மட்டும் அதிக அளவில் வசூலிக்கிறார்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும். அதற்கு மேல் எங்களால் தர இயலாது என்றார்.

கூடுதல் கட்டணம் வசூல் சேத்துப்பட்டு பள்ளியில் பெற்றோர் முற்றுகை
கூடுதல் கட்டணம் வசூல் சேத்துப்பட்டு பள்ளியில்  பெற்றோர் முற்றுகைவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 03, 3:24 PM IST
சென்னை, செப். 3-
சேத்துப்பட்டில் யூனியன் கிறிஸ்டியன் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இங்கு கோவிந்தசாமி கமிட்டி நிர்ணயித்ததை விட கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்களிடையே புகார் எழுந்தது.இதையடுத்து இன்று காலை 100-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். கூடுதல் கட்டணம் வசூலித்ததை திரும்ப தரவேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.
தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று பெற்றோர்களுடன் சமரச பேச்சு நடத்தினார்கள். பள்ளி நிர்வாகத்துடன் பேசி முடிவு செய்யுங்கள் என்று யோசனை தெரிவித்தனர். இதையடுத்து மறியல் கை
விடப்பட்டது

கூடுதல் கட்டணம் வசூல் மாதவரம் பள்ளி முற்றுகை பெற்றோர்கள் போராட்டம்

கூடுதல் கட்டணம் வசூல் மாதவரம் பள்ளி முற்றுகை  பெற்றோர்கள் போராட்டம்

மாதவரம், ஆக. 17-

மாதவரத்தில் போஸ்கோ அகாடமி மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. எல்.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை வகுப்புகள் இருக்கின்றன. இங்கு சுமார் 2,400 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். இவர்கள் பள்ளியில் சேரும் போது அரசு ஏற்கனவே நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

கீழ்ப்பாக்கம் ஆம்ஸ் ரோட்டில் சி.எஸ்.ஐ. பெயின் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இங்கு தமிழக அரசு நியமித்த கோவிந்தசாமி கமிட்டி சிபாரிசுப்படி கட்டணம் வசூலிக்காமல் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகவும், கட்டிய பணத்தை திரும்ப கேட்டும் பள்ளியின் முன் பெற்றோர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

300-க்கும் மேற்பட்டவர்கள் காலை 8 மணிக்கு மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் உதவி கமிஷனர்கள் விஜயராகவன், அசோக் குமார், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், சுப்பாராஜ், ராயப்பன் ஆகியோர் சென்று சமாதானப்பேச்சு நடத்தினார்கள்.

பள்ளி தரப்பில் உறுதி அளித்தால்தான் மறியலை கைவிடுவோம் என்றனர். இதையடுத்து பள்ளி முதல்வர் ஜெனோரா ஜேம்ஸ் வந்து பேசினார். அவர் கூறுகையில், இந்த விஷயத்தில் தன்னால் எதுவும் செய்ய முடி யாது. பிஷப்தான் முடிவு எடுக்க வேண்டும். எனவே செவ்வாய்க்கிழமை வரை நேரம் தருகிறேன். அதுவரை நீங்கள் பணம் கட்ட வேண்டாம் என்றார். இதையடுத்து காலை 10 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.

செவ்வாய்க்கிழமை நல்ல பதில் கிடைக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று பெற்றோர்கள் அறி வித்தனர். மறியல் காரணமாக அந்த ரோட்டில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன.

கல்வி கட்டணம் குறித்து வக்கீல் முனுசாமி கூறியதா வது:-

இந்த பள்ளியில் எனது மகன் எல்.கே.ஜி. படிக்கிறான். எல்.கே.ஜி.க்கு ஆண்டுக்கு ரூ.3,500 கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது. ஆனால் நான் என் மகனை சேர்க்கும்போது ரூ.22,624 கட்டினேன். 2 முறை 5,110 வீதம் காலாண்டு, அரையாண்டு கட்டணம் செலுத்தி விட்டேன். ஆண்டு முடிவில் ரூ.40 ஆயிரம் வரை கட்ட வேண்டியது வரும்.

வகுப்பு கூட கூட கட்டண மும்கூடும். பிளஸ்-2 மாணவன் ரூ.1 லட்சம் கட்ட வேண்டியது வரும். இங்கு பெற்றோர், ஆசிரியர் கூட்டத்தை கூட்டுவது இல்லை. குறைகளை முறையிட்டால் ஏற்றுக்கொள்வது இல்லை. வேறு பள்ளியில் பிள்ளை யைச்சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். எனவே இதில் அரசு தலையிட்டு பெற்றோர்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

Parents protest against schools higher fees
Chennai: Parents of students at the CSI Bains School in Kilpauk blocked traffic in the area to protest against the school for collecting fees higher than that proposed by the Fee Determination Committee.
A parent on condition of anonymity said,The school collected a high fees in the first term,but it did not give us a receipt for the amount.When they collected the fees for the first term they told us that they had sent a revised fee structure to be approved by the committee and would refund or adjust the fees in the remaining terms in the academic year.But now they are evasive.Every year they put up the fee structure on the notice board,however they have not put it up this year.Why the secrecy.Some parents said that they had complained to the fee determination committee against the school.
Headmistress of the school Lenora James said,We collect the second terms fees around this time.Why should this year be any different The fee structure given by the committee will not suffice to even pay salaries,so we have appealed for a higher fees.The committee promised to respond within a month.It has been three months and we still havent heard from them.So we have started collecting our usual fees.
CHURCH LAND OCCUPATION REMOVED.
Separately,Mylapore zonal officials of the Chennai Corporation were facing a similar ordeal at Sakthi Nagar in Tiruvanmiyur.The members of the nearby church confronted the civic authorities for taking over 100 metres of passageway,which would otherwise serve as a vital link to the adjoining burial ground,being exclusively maintained by them.The war of words finally ended after the Tiruvanmiyur police intervened, sources said.
The zonal office had also served notice to the occupants of a building that encroached upon the passageway.It will be removed shortly, a zonal official said.
timeschennai@timesgroup.com

Advertisements

One Response to கிறிஸ்டியன் பள்ளி கூடுதல் கட்டணம் வசூல்

 1. CONTINUING PROTESTS
  Anxious parents oppose high fees as school fails to abide by govt norm

  M Ramya | TNN

  Chennai: Many parents of children studying in Union Christian Matriculation Higher Secondary School in Chetpet on Friday protested against the management for raising the fees without prior intimation in the middle of the academic year.Around 100 of them staged a protest in front of the school for two hours.
  James Vivek,a parent,said,I paid Rs 2,410 during the first term and was told to pay Rs 2,490 in the second term,but when I went to pay the fees the other day I was told to pay Rs 3,915.The school sends us circulars for even small issues,why couldnt it inform us about this earlier.Even the books are very expensive.I paid Rs 1,500 last year.This year they asked me to pay Rs 5,000.
  The protest is the latest in a series of such incidents during the last couple of months,when parents of several students took to the streets to oppose schools not abiding by the government ruling that they follow the structure proposed by the Fee Determination Committee.Though the government had made it clear that schools can expect the revised fee structure only from the next academic year and that they had to adhere to the proposed fee structure in the meantime,several schools have not paid heed to it.
  Managements plead that they cannot collect the fees proposed by the fee committee because it is too low.S Gunasekaran,president,High Level Committee Federation of Association of Private Schools in Tamil Nadu,said,In the last seven months,schools have been fighting a prolonged battle on several fronts for their survival.This situation has made our day-to-day functioning difficult.All our expansion plans,introduction of new facilities,technology and welfare measures have been put on hold.Teachers and other staff members have been faced with uncertainty too.Parents are also anxious. The stalemate continues.
  Meanwhile,some schools had appealed against the decision of the Fee Determination Committee headed by Justice K Govindarajan,in the Madras high court.The last of the arguments were heard on Friday,and orders have been reserved.All the stakeholders await the verdict in this case eagerly as it will also define the future course of action.
  ramya.m@timesgroup.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: