சினுஜோசப் வீட்டில் வேலை செய்த சிறுமி மாயமான வழக்கு சி.பி.சி.ஐ.டி., மாற்றம்.


சென்னை : இரண்டு ஆண்டுகளுக்கு முன், சிறுமி மாயமான வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓசூர் தாலுகா வெங்கடேசபுரம் ஊராட்சியை சேர்ந்த குன்னப்பா என்பவர் தாக்கல் செய்த மனு: எனது மகள், சேலம் கைலாஷ் நகரில் உள்ள சினுஜோசப் என்பவர் வீட்டில் வேலை செய்தார். 2008 ஜூன் 20ம் தேதி முதல் என் மகளை காணவில்லை. இது குறித்து சேலம் மாவட்ட போலீசில் புகார் கொடுத்தோம். அழகுபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதுவரை கண்டுபிடிக்கவில்லை. எனது மகளை கண்டுபிடித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சொக்கலிங்கம், சத்தியநாராயணன் அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: பலமுறை வாய்தா அளித்தும், போலீசாரால் உறுதியளித்தும், இதுவரை சிறுமியை கண்டுபிடித்து ஆஜர்படுத்தவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருப்பதாக போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக சிறுமியை காணவில்லை. அதேநிலை தான் இன்னும் தொடர்கிறது.போலீசாரின் மெத்தனப் போக்கை இது காட்டுகிறது.
இந்த வழக்கை அழகுபுரம் போலீசார் தொடர்ந்து விசாரிப்பது சரியாக இருக்காது. சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு இதை மாற்ற வேண்டும். இன்ஸ்பெக்டர் ஒருவரை நியமிக்குமாறு சென்னையில் உள்ள கூடுதல் டி.ஜி.பி., (கிரைம்)க்கு உத்தரவிடப்படுகிறது. சிறுமியை கண்டுபிடித்து செப்., 23ம் தேதிக்குள் ஆஜர்படுத்த வேண்டும். திறமையான புலன் விசாரணை செய்ய டி.எஸ்.பி., அந்தஸ்திலுள்ள அதிகாரி, கண்காணிக்க வேண்டும். இவ்வாறு “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.

Advertisements

One Response to சினுஜோசப் வீட்டில் வேலை செய்த சிறுமி மாயமான வழக்கு சி.பி.சி.ஐ.டி., மாற்றம்.

 1. Jesuraj says:

  HC pulls up police for not tracing missing girl

  TIMES NEWS NETWORK

  Chennai: Flaying the Salem city police for their lethargic attitude and inability to trace a teenaged girl,who was working as a domestic help and had gone missing from her employers home in June 2008,the Madras high court has entrusted the matter to the CBCID for action.
  A division bench comprising Justice M Chockalingam and Justice M Satyanarayanan,passing orders on a habeas corpus petition filed by the girls father,E Kunappa,said: She was neither rescued nor produced till date despite a number of adjournments given by this court and the assurances given by the police that she will be rescued and produced before the court. Renuka was 16 years old when she went missing.
  The judges directed the additional director-general of the CB-CID to nominate an inspector-rank officer to unravel the mystery and produce the girl on or before September 23.A DSP-level officer shall monitor the probe,the judges added.
  Renuka disappeared from the home of her employer Sinu Joseph in Salem on June 20,2008.The next day,her father Kunappa,accompanied by her employer,lodged a complaint with the Alagupuram police station in Salem.Though a case was registered,police could not make much headway in the matter.Left with no other option,Kunappa filed a petition,seeking a direction to the Salem city police to trace his daughter and produce her in court.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: