சி.எஸ்.ஐ. ஆலயத்தில் நிர்வாகிகள் மோதல்

கருங்கலில் சி.எஸ்.ஐ.ஆலய நிர்வாகிகள் மோதல்: 6 பேர் மீது வழக்கு

http://www.maalaimalar.com/2010/08/09170008/csi-church-member-clashed.html

கருங்கல், ஆக. 9-

கருங்கல் பாலூரில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்தில் டீக்கனாக இருப்பவர் ஆனந்தராஜ்(வயது30). ஆலயச் செயலாளராக இருப்பவர் கிறிஸ்டின் பெரேசர்(40).

ஆலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் ஆலயக் கமிட்டி எடுக்கும் தீர்மான விபரங்களை செயலாளர் கிறிஸ்டின் பெரேசர் தன்னிடம் சொல்வதில்லை என்று டீக்கன் ஆனந்தராஜ் சி.எஸ்.ஐ. நிர்வாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது. மேலும் ஆலய நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இந்நிலையில் கிறிஸ்டின் பெரேசர் கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதில் ஆலய டீக்கன் ஆனந்தராஜ் தன் னோடு உள்ள முன் விரோதம் காரணமாக என்னை தாக்கிவிட்டார்.

அவருடன் விக்டர், ஜென்சன் முத்துராஜ் ஆகி யோரும் சேர்ந்து என்னை தாக்கி னார்கள் என்று கூறியிருந்தார்.

அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஆனந்தராஜ், ஜென்சன் முத்து ராஜ், விக்டர் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

இது போல ஆனந்தராஜிம் போலீசில் இன்னொரு புகார் கொடுத்தார். அதில் கிறிஸ்டின் பெரேசரும் அவரது நண்பர்கள் டேவிட், ஜோசப்ராஜ் அகிய 3 பேரும் சேர்ந்து தன்னை தகாத வார்த்தைகள் பேசி தாக்கிய தாக கூறி இருந்தார். இப்பு கார் மனுவையும் பெற்று கொண்ட போலீசார் கிறிஸ் டின் பெரேசர், டேவிட், ஜோசப் ராஜ் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள். சி.எஸ்.ஐ. ஆலய நிர் வாகிகள் இடையே ஏற்பட்ட இந்த மோதல் விவகாரம் கருங் கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் நிர்வாகி மீது பல கோடி ரூபாய் மோசடி வழக்கு பதிவு
சேலம்: சேலத்தில் சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த தென்னிந்திய மக்கள் நல மைய சேலம் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லூரி ஒரு மைனாரிட்டி கிறிஸ்துவ மத அறக்கட்டளையான ஐ.எஸ்.ஐ.டி.ஏ., மற்றும் சி.எஸ்.ஐ., டயாசிஸ் கோவை சட்ட திட்டங்களுக்கும் மற்றும் அந்த விதிகளுக்கும் உட்பட்ட நிறுவனம்.
இங்கு உயர் பதவியில் இருப்பவர்கள் அனைவரும் கவுரவ நிர்வாகிகள். அவர்கள் கூட்டாக சேர்ந்து கல்லூரிக்கும், சபை மக்களுக்கும் போலி கணக்கு வழக்குகளை காட்டி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். என்.பி.ஏ., அங்கீகாரம் வாங்குவதாகவும், கட்டுமான பணி நடப்பதாகவும், டி.சி.பி.சி., டிரெயினிங் புரோகிராம் டிரைனிங் என்ற தலைப்பிலும் வுமன் எம்பவர்மென்ட் புரோகிராம் எஞூற தலைப்பிலும், கல்லூரி வாகனத்தை முதல்வர் தன் பெயரில் பதிவு செய்ததும், கல்லூரி நிரந்தர இட்டுவைப்பினை சட்டத்திற்கு புறம்பாகவும், அன்றாட நிர்வாக செலவு பெட்டிகேஸ் என்ற தலைப்பிலும் உள்பட பல்வேறு வகைகளில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதற்குரிய ஆவணங்களையும் இணைத்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில், அஸ்தம்பட்டி போலீஸ் எஸ்.ஐ., அம்பிகா, சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் தாளாளர் துரை, கல்லூரி முன்னாள் முதல்வர் சாம்சன் ரவீந்திரன், நிர்வாக மேற்பார்வையாளர் அனிபால்ட், ஏரியா சேர்மன் பால்ராஜ், கவுரவ செயலாளர் ஸ்டேன்லி குமார், கவுரவ பொறுப்பாளர் அமிர்தம், உயர் மட்ட கல்வி நிறுவன கன்வீனர் பாக்கிராஜ், விரிவுரையாளர் ரவி மனோகரன், ஜோஸ்வா, அசோக், ஜெபக்குமார், சூடாமணி ஆகியோர் மீது ஐ.பி.சி., 420, 403, 409, 468, 471, 477ஏ மற்றும் 120 பி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்
சி.எஸ்.ஐ. நிர்வாகம் மீது பொய் பிரசாரம்: நடவடிக்கை கோரி காவல் துறையிடம் புகார்

First Published : 25 Jul 2010 12:39:17 PM IST

திருநெல்வேலி, ஜூலை 24: தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டல நிர்வாகத்தின் மீது அவதூறு செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருமண்டல கல்வி நிலைவரக் குழு செயலர் டி. வேதநாயகம் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் இதுகுறித்து அவர் சனிக்கிழமை நிருபர்களிடம் கூறியது: இத்திருச்சபை நிர்வாகம் பணபலம் படைத்தோரின் கையில் இருந்து மீட்கப்பட்டு தற்போது மக்களால் சுமுகமான முறையில் செயல்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளாக நிர்வாகம் வெளிப்படையான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது.
திருமண்டல பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதுநாள் வரை பணிவாய்ப்பு இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த 50 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கருணையடிப்படையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
விதவைகள், ஊனமுற்றோர், ஆதரவற்றோருக்கும் வேலை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறப்பாக செயல்பட்டு வரும் நிர்வாகத்துக்கு கெட்டபெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஏ.டி.ஜே. தினகர் அணியினர் பல்வேறு வகையான பொய்யான வதந்திகளை அவ்வப்போது பரப்பி வருகின்றனர்.
19.7.10 அன்று திருமண்டலத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக பல்வேறு தலைப்புகளில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அத்துடன் எதிர் அணியினர் திருமண்டல நிர்வாகத்தை கைப்பற்றி இருப்பதாகவும் வதந்திகளை பரப்பு
கின்றனர். இதன்மூலம் சபை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
திருமண்டலத் தேர்தல்களுக்கு எதிராக 15.4.09 அன்று மதுரை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளில் உள்ள பாதகமான 29-வது பத்தியை, கீழமை நீதிமன்றங்களின் விசாரணையின்போது எவ்விதத்திலும் கருத்தில் கொள்ளக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அது சரியாக புரியாமல் எதிர் அணியினர் நிர்வாகத்துக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வருவது கண்டிக்கத்தக்கது. மேலும் நிர்வாகத்துக்கு எதிராக எதிர் அணியினர் தட்டிபோர்டுகளை சாலையோரங்களில் வைத்துள்ளனர்.
அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள தட்டிபோர்களை அகற்றவும், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க தட்டிபோர்டு வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறைக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார் டி.வேதநாயகம்.
பேட்டியின் போது லே செயலர் தேவதாஸ், வழக்கறிஞர் டேவிட்சன், நிர்வாகிகள் அருள்சாமுவேல், பள்ளித் தாளாளர் தங்கசாமி, ஆர்தர்ராஜா உடனிருந்தனர்.

Advertisements

6 Responses to சி.எஸ்.ஐ. ஆலயத்தில் நிர்வாகிகள் மோதல்

 1. சி.எஸ்.ஐ.​ நிர்வாக தேர்தல்: டிடிடிஏ பணியாளர் நலச் சங்கம் ​குற்றச்சாட்டு

  First Published : 26 Jul 2010 10:51:14 AM IST

  திருநெல்வேலி,​​ ஜூலை 25: திருநெல்வேலி தென்னிந்திய திருச்சபை திருமண்டல நிர்வாகத்திற்கான தேர்தலை நடத்தாமலேயே வெற்றி பெற்றதாகக் கூறி நிர்வாகத்தை வேதநாயகம் அணியினர் கைப்பற்றினர் என டி.டி.டி.ஏ.​ பணியாளர் நலச் சங்கம்
  குற்றம்சாட்டியுள்ளது.
  ​ ​ இதுகுறித்து அச் சங்கத்தின் செயலர் ஏ.​ ஏர்னஸ்ட் பாலசிங் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் மேலும் கூறியது:
  ​ ​ ​ ​ திருமண்டல நிர்வாகத்துக்கான தேர்தல் நடத்தப்படாமல் வேதநாயகம் அணியினர் வெற்றி பெற்றதாக அறிவித்து நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ளனர்.​ இதுகுறித்த தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
  ​ ​ ​ வள்ளியூர் சார்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் 17.12.2007-க்கு முன்பிருந்த நிலை தொடர வேண்டும் என கூறியுள்ளது.​ சென்னை சிட்டி சிவில் நீதிமன்றமும் இதே கருத்தை கூறியுள்ளது.
  ​ ​ ஆனால்,​​ தேர்தல் நடந்து முடிந்ததுபோல் முழு கமிட்டிகளையும் இவர்கள் வைத்துக் கொண்டு நிர்வாகம் நடத்தி வருவது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.​ மேலும் டி.டி.டி.ஏ.​ என்பது கம்பெனி சட்டப்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பு.​ திருமண்டல எல்லைக்குள் கல்வி நிறுவனங்கள்,​​ மருத்துவமனைகள்,​​ ஆலயங்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களும் இந்த அமைப்புக்கு உரிமையானது.​ திருமண்டல தேர்தல் முடிந்துவரும் செயற்குழு உறுப்பினர்களே டி.டி.டி.ஏ.​ அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக முடியும்.
  ​ ​ ஆனால் தேர்தல் முடியாமல் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளை இவர்கள் கைப்பற்றி நிர்வாகம் நடத்துவது தவறு.​ பள்ளிகள்,​​ கல்லூரிகளில் தாளாளர்கள் என்ற பெயரில் இவர்கள் ஏஜென்ட்களை நியமித்து மாணவர் சேர்க்கையின்போது லட்சக்கணக்கான பணம் வசூல் செய்து அதை திருமண்டல தேர்தல் வழக்கிற்காக செலவழித்து வருகின்றனர்.
  ​ ​ ​ இதுகுறித்து திருநெல்வேலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
  செய்யப்பட்டதில் சம்பந்தப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
  ​ ​ நீதிமன்ற உத்தரவுகள்,​​ கருத்துக்கள் ஏ.டி.ஜே.​ அணியினருக்கு சாதகமாக உள்ளதால் விரைவில் நிர்வாகத்தை இவர்கள் ஏற்பார்கள் என தெரிவித்தார்.
  http://www.24dunia.com/tamil-news/shownews/0/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%90-%E2%80%8B-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8F-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/426773.html

 2. டயோசிசன் பணத்தை செலவிட பிஷப் தேவசகாயத்திற்கு தடை

  சென்னை, டிச.9 (டிஎன்எஸ்)

  வழக்கு செலவுகளுக்காக டயோசிசன் பணத்தை செலவிடக்கூடாது என்று பிஷப் தேவசகாயத்திற்கு மாநகர உ‌ரிமை‌யிய‌ல் ‌நீ‌திம‌ன்ற‌‌ம் இடைக்கால தடை விதித்துள்ளது.

  தென்னிந்திய திருச்சபையின் (சி.எஸ்.ஐ.) சென்னை பேராயத்தின் பேராயராக 2.5.99 அன்று வி.தேவசகாயம் (60) பொறுப்பேற்றார். அப்போது, இந்த பதவியை 10 ஆண்டுகள் (1.5.2009 வரை) மட்டுமே வகிப்பதாக சி.எஸ்.ஐ.யின் பிரதம பேராயமான `சினாட்’டிடம் தேவசகாயம் எழுதிக்கொடுத்திருந்தார்.

  ஆனால், 10 ஆண்டுகள் முடிந்த பிறகும் பேராயர் பதவியில் இருந்து தேவசகாயம் விலகவில்லை. இதை எதிர்த்து சி.எஸ்.ஐ. சபை உறுப்பினர் சங்கம் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழக்கு தொடர்ந்தது. வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌‌திம‌ன்ற‌ம் இடை‌க்கால தடை ‌வி‌தி‌த்தது. தேவசாயம் பதவி காலம் முடிந்துவிட்டதால் அடுத்த பேராயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் காபந்து பேராயராகத்தான் நீடிக்க வேண்டும் என்று பேராய‌ர் சினாட் உத்தரவிட்டா‌ர்.

  இடைக்கால தடையையும், சினாட் உத்தரவையும் எதிர்த்து உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தேவசகாயம் வழக்கு தொடர்ந்தார். ஆனால், சினாட் உத்தரவை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தேவசகாயம் மே‌ல்முறை‌யீடு செய்தார். இந்த வழக்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நிலுவையில் உள்ளது.

  இதற்கிடையில் தனிப்பட்ட முறையில் அவர் தனக்காக நடத்தும் வழக்குகளுக்கு திருச்சபையின் பணத்தை எடுத்து செலவழிக்கிறார் என்றும், வழக்கு செலவுக்காக ரூ.40 லட்சம் பணத்தை பேராயத்தில் இருந்து ஒதுக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களை வைத்து நடத்தப்பட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றும் தேவசகாயத்தின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

  இந்த நிலையில், சி.எஸ்.ஐ. கல்வாரி சர்ச் பாஸ்டரேட் தலைவர் எஸ்.டி.சவுந்திரராஜன் பாதிரியார், சென்னை மாநகர உ‌ரிமை‌யிய‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”தேவசகாயம் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்துள்ளார். பல்வேறு சொந்த வழக்குகளையும் அவர் எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில், வழக்கு செலவுகளுக்காக சென்னை சி.எஸ்.ஐ. டயோசிசன் பணத்தை செலவிடக்கூடாது. அவ்வாறு அவர் செலவிடுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

  நீதிபதி இந்த வழக்கை விசாரித்து, பிஷப் தேவசகாயம் வழக்கு செலவுகளுக்காக டயோசிசன் பணத்தை வரும் 14ஆ‌ம் தேதி வரை செலவிடக்கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

  (டிஎன்எஸ்

 3. Eelam India Cinema Poem World
  நல்மேய்ப்பனாக இருக்க வேண்டியவர் ! கொலை மிரட்டல் வழக்கில் கோவை பேராயர் திடீர் கைது
  5/7/2010 12:00:00 AM – 11:49 PM
  கோவையில் சி.எஸ். ஐ., பிஷப் கிரிமினல் குற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பபட்டிருப்பது கிறிஸ்தவ சமுதாய மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
  கோவையில் சி.எஸ். ஐ., பிஷப் கிரிமினல் குற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பபட்டிருப்பது கிறிஸ்தவ சமுதாய மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் சி.எஸ்.ஐ., சபையின் பேராயராக இருப்பவர் மாணிக்கம் துரை. இவர் தலைமையின் கீழ் கோவை சி.எஸ்.ஐ., சபை இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள், சிறிய அளவிலான ஆஸ்பத்திரிகள், ஆதரவற்றோருக்கான நிலையங்கள் செயல்படும். இந்த பேராயர் பொறுப்பு மிக கவுரவமிக்கது. பேராயர் தலைமையில் நடக்கும் பிரார்த்தனையில் பங்கேற்பது என்பது கூடுதல் சிறப்பு.
  இந்த திருமண்டிலத்தில் பல திருச்சபைகளாக பிரிக்கப்பட்டு.அந்தந்த எல்லைக்குட்பட்டு செயல்பாடுகள் இருக்கும். இந்த திருச்சபையை சேர்ந்தவர்கள் இணைந்து தேர்தல் மூலம் பேராயரை தேர்வு செய்வர். இவ்வாறு நடக்கின்ற சபையில் பல பிரிவுகளாக செயல்படுவர். இதனால் யார் ஆதரவாளர் என்ற நிலையில் பிடிக்காதவர்கள் கட்டம் கட்டப்படுவர். இது தொடர்பாக பிரிவினர்கள் இடையே வரும் பிரச்னை . இது பல ஆண்டுகளாக இருந்து வரும் பிரச்னை. குறிப்பாக இது போன்று மாநிலம் முழுவதும் உள்ள சபையில் சர்ச்சைகள் இருக்கும்.
  கோவை பேராயர் மீது என்ன குற்றம் ? : இந்நிலையில் கோவை பேராயர் மாணிக்கம் துரை, கூடலூர் தேவர் சோலை பகுதியை சேர்ந்த திருச்சபையினர் இடையே கருத்து வேற்றுமை இருந்துள்ளது. அறக்கட்டளை பண வசூல் தொடர்பாக கருத்து வேற்றுமை இருந்துள்ளது. இதனால் பாதிரியார் கவிராஜ், மற்றும் துரை ஆகியோருக்கு பேராயர் கொலை மிரட்டல் விட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த விசாரணை நீலகிரி மாவட்டம் கூடலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் பேராயர் மாணிக்கம் துரை பல முறை ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனால் கோர்ட் இவரை பிடித்து ஆஜர்படுத்துமாறு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது.
  ரூ. 3 கோடி மோசடி வழக்கும் உள்ளது : இந்த உத்தரவையடுத்து சப்.இன்ஸ்பெக்டர் பஸ்வராஜ் தலைமையில் சென்ற போலீஸ் படையினர் பேராயர் மாணிக்கம் துரையை கோவையில் கைது செய்தனர். இவர் போலீஸ் வேன் மூலம் கூடலூர் கோர்ட்டுக்கு கொண்டு வரப்படுகிறார். இவர் மீது ஏற்கனவே திருச்சபைக்கு சொந்தமான ரூ 3 கோடியை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றவர் பேராயர் மாணிக்கம் துரை என்பதும் குறிப்பிடத்தக்கது.
  HomePage
  0 Comments

 4. சுனாமி நிவாரண நிதியை தென்னிந்திய திருச்சபை திரும்ப தர வேண்டும்: அமெரிக்க அறக்கட்டளை வழக்கு

  சுனாமி நிவாரண நிதியாக ரூ.18 கோடி வழங்கியதை திருப்பி தரவேண்டும் என்று தென்னிந்திய திருச்சபை மீது அமெரிக்க அறக்கட்டளை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

  அமெரிக்க அறக்கட்டளையை சேர்ந்த ராபர்ட் ராட்கே சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

  2004 ம் ஆண்டு சுனாமியால் இந்தியா, இலங்கை கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன. கிறிஸ்தவ ஆலயங்கள் மூலமாக எங்கள் அறக்கட்டளை சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கி வந்தோம். தமிழகத்தில் உள்ள தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) முன்னாள் பொதுச்செயலாளர் டாக்டர் பாலின் சத்தியமூர்த்தியிடமிருந்து எங்களுக்கு கடிதம் வந்தது.

  இதைதொடர்ந்து சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சி.எஸ்.ஐ.க்கு 50 ஆயிரம் டாலர் வழங்கினோம். நிவாரணம் எந்த அளவில் செய்யப்படுகிறது என்பது குறித்து அவ்வப்போது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்கு சி.எஸ்.ஐ.யும் ஒப்புக்கொண்டது. ஆனால் இந்த ஒப்பந்த அடிப்படையில் பல தகவல்களை எங்களுக்கு தரவில்லை. நாங்கள் கொடுத்த நிதியை சரியாக பயன்படுத்தவில்லை.

  சுனாமி நிதியில் முறைகேடு நடந்ததாக முன்னாள் நிர்வாகிகள் மீது சி.எஸ்.ஐ. புகார் கொடுத்தது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். நாங்கள் இதுவரை ரூ.18 கோடியே 75 லட்சம் வழங்கியுள்ளோம்.

  கொடுத்த பணத்துக்கு சரியான முறையில் கணக்கு காட்டவில்லை. ஆகவே, நாங்கள் கொடுத்த பணத்தை வட்டியுடன் சி.எஸ்.ஐ. திருப்பி தரவேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

  இந்த மனு நீதிபதி ராஜசூரியா முன்பு இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

 5. மார்த்தாண்டத்தில்
  இட ஒதுக்கீட்டை எதிர்த்து கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

  நாகர்கோவில் செப்:22:

  3.5 சதவீதம் இட ஒதுக் கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி கிறிஸ்தவர்களின் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.

  3.5 சதவீத இட ஒதுக்கீடு

  தமிழக அரசு கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்துள்ளது. இதனால் கிறிஸ்தவர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பதவி உயர்வுகளிலும் ஏற்கனவே பெற்று வந்த சலுகைகள் பலவும் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  எனவே இந்த 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து பழைய நிலையான 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை தொடரச்செய்ய தமிழக அரசை வலியுறுத்தி கிறிஸ்தவர்கள் சார்பில் நேற்று ஊர்வலமும், பொதுக்கூட்டமும் மார்த்தாண்டத்தில் நடந்தது.

  கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் நடத்தப்பட்ட இந்த ஊர்வலம் மற்றும் பொதுக்கூட் டத்தில் கத்தோலிக்க, சி.எஸ்.ஐ., பெந்தேகொஸ்தே, லூத்தர் மிஷன், ரட்சண்யசேனை சபைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

  ஊர்வலம்

  தொடக்கத்தில் வெட்டு மணியில் இருந்து மார்த்தாண்டம் வரை ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு திரித்துவபுரம் வட்டார குருகுல முதல்வர் அருட்திரு. எஸ்.வின்சென்ட் தலைமை தாங்கினார். உருவாக இருக்கும் குழித்துறை மறைமாவட்ட ஒருங்கிணைப் பாளர் அருட்திரு. யேசுரெத்தினம் ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசினார். ஊர்வலத்தில் முளகுமூடு வட்டார முதன்மை பணியாளர் ஜார்ஜ் பொன்னையா, மலங்கரை கத்தோலிக்க குருகுல முதல்வர் மரியதாசன் மற்றும் பாதிரியார்கள், அருட் கன்னியர்கள், போதகர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  போக்குவரத்து மாற்றம்

  ஊர்வலத்தில் 10 ஆயிரத் துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர் கள் திரண்டனர். இதனால் நாகர்கோவில்-திருவனந்த புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இதனால் வாகனங் கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

  ஊர்வலம் மார்த்தாண்டம் காந்தி திடலை அடைந்ததும் அங்கு பொதுக்கூட்டம் நடை பெற்றது. ஐக்கிய கிறிஸ்தவ பேரவை தலைவரும், திரித்துவபுரம் வட்டார குருகுல முதல் வருமான அருட்திரு. எஸ். வின்சென்ட் தலைமை தாங்கினார். புலிப்புனம் சி.எஸ்.ஐ. போதகர் அருட்திரு ஜான்மில்டன் வரவேற்று பேசினார். மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. போதகர் வில்லியம் தாமஸ், பாத்திமாநகர் பங்குத்தந்தை பெர்னார்டு நடுத்தேரிவிளை, அன்பியங்களின் இயக்குனர் பால்ரிச்சர்டு ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக்கல்லூரி தாளாளர் டாக்டர் பால்ராஜ், ரட்சண்யசேனை டிவிஷனல் கமாண்டர் மேஜர் சுத்தானந்ததாஸ், மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவை தலைவர் அருட்திரு ஞானதாசன், செயலாளர் அருட்திரு வர்க்கீஸ், பொதுநிலையினர் பணிக்குழு செயலாளர் ராஜா டைட்டஸ், பேராசிரியை கிளாடிஸ் லீமாரோஸ் ஆகியோர் விளக்கி பேசினார்கள்.முடிவில் அருட்திரு. பிரி மஸ் சிங் நன்றி கூறினார்

 6. ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஆண்குழந்தை கடத்தல்; மர்ம பெண்ணுக்கு வலைவீச்சு
  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் சிவா. ஆட்டோ டிரைவர். அவரது மனைவி லட்சுமி (வயது 23). இவர்களுக்கு கார்த்திக்கேயன் (1 1/2) என்ற மகன் உண்டு. லட்சுமியின் தாயாருக்கு திடீர் என உடல் நலகுறைவு ஏற்பட்டது. எனவே தனது தாயாரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்கு இன்று காலை அழைத்து வந்தார்.

  அப்போது தனது மகனையும் கையில் வைத்திருந்தார். புற நேயாளிகள் சிகிச்சை பிரிவில் அனுமதி சீட்டு வாங்கும் போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், லட்சுமியிடம் பேச்சு கொடுத்தார். சிறிது நேரத்தில் 2 பேரும் நட்பானார்கள். அப்போது லட்சுமி தனது மகனை அந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு தாயாரை டாக்டரிடம் காண்பிக்க அழைத்து சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையுடன் அந்த பெண் மாயமானார்.

  பதறிபோன லட்சுமி கதறி துடித்தார். ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தேடியும் குழந்தையை காணவில்லை. அதிர்ச்சியில் உரைந்துபோன லட்சுமி இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: