IAS Officer Uma sankar says Karunanithi Family Harassment

என்னை சட்டவிரோதமா முறையில் தமிழக அரசும், முதல்வர் கருணாநிதி குடும்பத்தாரும், மாறன் சகோதரர்களும் மிரட்டி வருகின்றனறர். அவர்களிடமிருந்து எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், மத்திய அரசின் பாதுகாப்புப் படை மூலம் பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரியுள்ளார் சமீபத்தில் தமிழக அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர்.

இதுதொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.

அதில் உமாசங்கர் கூறியிருப்பதாவது…

பொதுமக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு நான் பணியாற்றி வந்தேன். நேர்மையாகவும்,நியாயமாகவும் நான் பணியாற்றியதை விரும்பாமல் தொடர்ந்து என்னை இடமாற்றம் செய்து வந்தனர்.

என் மீது, அகில இந்திய அரசுப் பணி சட்டம், மக்கள் சேவகர் விசாரணைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றுக்கு உட்பட்டு எந்தவிதமான விசாரணையையும் தமிழக அரசு எடுக்கட்டும். ஆனால் அதைச் செய்ய அரசுக்குத் தைரியம் இல்லை.

மாறாக என் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யுமாறு முதல்வர் காவல்துறையை நிர்பந்தித்து வருகிறார். தற்போதைய முதல்வர் தலைமையிலான தமிழக அரசு சகிப்புத்தன்மை அற்றதாக உள்ளது. காரணம், மாறன் சகோதரர்களுக்கு எதிராகவும், இடிஎல் இன்பிராஸ்டிரக்சரில் நடந்த முறைகேடுகளை நான் அம்பலப்படுத்தியதுமே காரணம். இதில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கும் தொடர்பு உண்டு. இந்த ஊழலில் மத்தியில் உள்ள ஒரு திமுக அமைச்சருக்கும் பங்கு உண்டு.

இதன் காரணமாகவே அரசு அதிகாரத்தை தமிழக அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது.

எனது ஜாதிச் சான்றிதழ் தொடர்பாக என் மீதான விசாரணை எதுவாக இருந்தாலும், அதை மத்திய ஊழல் ஆணையமோ அல்லது சிபிஐயோ நடத்த வேண்டும். அல்லது தமிழக அரசு சம்பந்தப்படாத ஏதாவது ஒரு ஏஜென்சி விசாரணையை நடத்த வேண்டும்.

மேலும், நான் மத்திய அரசின் துறை ஏதாவது ஒன்றில் பணியாற்ற உத்தரவிட வேண்டும்.

எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் மத்திய படைகள் மூலம் போதிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் உமாசங்கர்.

_______________________________________________

25_07_2010_004_010.jpg

Advertisements

One Response to IAS Officer Uma sankar says Karunanithi Family Harassment

  1. ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்காரே?”

    “”தலித் கிறிஸ்தவரான அவர், இந்து தாழ்த்தப்பட்டவர்னு சர்டிபிகேட் கொடுத்து பணியில் சேர்ந்ததாகச் சொல்லி சஸ்பெண்ட் செய்திருக்குது அரசாங்கம். ஏற்கனவே தன் மீதான நெருக்கடிகளுக்காக கோர்ட்டுக்குப் போன உமாசங்கர், அரசு கேபிள் கார்ப்பரேஷன் பொறுப்பில் இருந்தபோது சுமங்கலி கேபிள் விஷனை அரசுடைமையாக்க முயற்சி எடுத்தேன் னும், அதற்கு எதிரா அந்த நிறுவனமும் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியும் இடையூறு செய்ததாகவும், அதனால எஸ்.சி.வி நிர்வாகத்தையும் அமைச்சரையும் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும், அதனால தன் மீது சொத்துக் குவிப்பு வழக்கைப் போடவைத்ததோடு, சான்றிதழ் சம்பந்தமான பிரச்சினையையும் கிளப்புவதா கோர்ட்டில் சொல்லியிருந்தார். இப்ப அந்த சர்டிபிகேட் விவகாரத்தில்தான் அவரை சஸ்பெண்ட் பண்ணி யிருக்காங்க.”

    “”சர்ட்டிபிகேட் பற்றி சட்டம் என்ன சொல்லுது?”

    “”1964-ல் பிறந்த உமாசங்கர் 1984-ல் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள செங்கோல் மடம்ங்கிற இடத்தில் கிறிஸ்துவரா இருந்து இந்து மதத்திற்கு மாறிட்டார். அதற்கான சான்றிதழை மத்திய தேர்வாணைய மான யு.பி.எஸ்.சி. மூலம் தேர்வெழுதி ஐ.ஏ.எஸ். ஆன போது கொடுத்திருக்கிறார். சட்டம் என்ன சொல்லுதுன்னா, இந்துவா இருந்த ஒருத்தர் கிறிஸ்துவ மதத்தைத் தழுவி, பிறகு மறுபடியும் இந்துவா மாறினா அவரோட உறவினர் அஃபிட விட்டும் அரசாங்க நோட்டிஃபி கேஷனும் கொடுத்தால் அவர் இந்துவா ஏற்றுக்கொள்ளப் படுவார். ஆனா, கிறிஸ்துவரா பிறந்தவர் இந்துவா கன்வர்ட் ஆவதை சட்டம் அங்கீகாரம் பண்ணலை. உமாசங்கர் இப்படித் தான் கன்வர்ட் ஆகியிருக்கிறார். பேங்க்கில் வேலை பார்த்தபோது இந்து தாழ்த்தப்பட்டவர் என்ற சலுகையை அவர் பெறலை. ஐ.ஏ.எஸ். ஆகும்போது மட்டும் அதைப் பயன்படுத்தியது சட்டப்படி தப்புன்னு அரசுத் தரப்பு சொல்லுது.”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: