உமாசங்கர் ஐ.ஏ.எஸ். திடீர் சஸ்பெண்ட்!

சென்னை: தமிழக சிறுசேமிப்புத் துறை ஆணையராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Image

சென்னை: போலி சாதி சான்றிதழ் தந்ததன் அடிப்படையில் தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1990ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தவர் உமா சங்கர். தற்போது சிறுசேமிப்பு துறையின் இயக்குனராக பதவி வகித்து வந்தார்.

கடந்த 1995ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மதுரையில் சுடுகாட்டு கொட்டகை அமைக்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றதை வெளிக்கொண்டு வந்தவர் அப்போது மதுரை கூடுதல் கலெக்டராக இருந்த உமா சங்கர்.

இதைத் தொடர்ந்து, 1996ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா [^]மற்றும் அவரிடம் அமைச்சராக இருந்த செல்வகணபதி ஆகியோர் மீது சுடுகாட்டு கொட்டகை ஊழல் வழக்குத் தொடரப்பட்டது.

மேலும் உமா சங்கர் இணை கண்காணிப்பு ஆணையாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், முதல்வர் [^] கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூர் கலெக்டராக்கப்பட்டார்.

2006ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, எல்காட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டார் உமா சங்கர்.

இந்த நிறுவனத்தின் பணிகளில் முக்கியமான ஒன்று இலவச கலர் டி.வி. வழங்குவது. இந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்தார் உமா சங்கர்.

இந் நிலையில் 2008ம் ஆண்டு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது, தமிழகத்தின் ஒரு தனியார் கேபிள் டி.வியை தேசியமயமாக்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைத்திருந்தார்.

இந் நிலையில் சமீபத்தில் உமா சங்கர் சிறு சேமிப்புத்துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

மேலும் அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கும் அரசு உத்தரவிட்டது.

இந் நிலையில் நேற்று முன்தினம், உமா சங்கரை தமிழக அரசு திடீரென சஸ்பெண்ட் செய்தது. இதற்கான உத்தரவு  அவரது வீட்டில் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

உமா சங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு அவர் அளித்த போலி சாதிச் சான்றிதழே காரணம் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

ஐஏஎஸ் சேர யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவதற்காக உமா சங்கர் சமர்ப்பித்த சாதி சான்றிதழில், சலுகை பெறுவதற்காக, தலித் கிறிஸ்தவரான அவர், தலித் (இந்து) என்று மாற்றி குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். போலி சான்றிதழ் தந்தமை பற்றியும், சஸ்பெண்டு செய்யப்பட்டது பற்றியும் யு.பி.எஸ்.சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.

உமா சங்கர் வழக்கு:

இந் நிலையில் தமிழக அரசுக்கு எதிராக உமா சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், நான் 1990ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தேன். 95ம் ஆண்டு மதுரையில் கூடுதல் கலெக்டராக பணியாற்றினேன். அப்போது ஜவஹர் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சுடுகாட்டு கொட்டகை தொடர்பான ஊழலை அம்பலப்படுத்தினேன்.

பின்னர் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இணை கமிஷனராக நான் பணியாற்றிய போது, பல்வேறு அமைச்சர்கள், மற்றும் ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தேன்.

பின்னர் திருவாரூர் மாவட்ட கலெக்டர் பதவிக்கு மாற்றப்பட்டு இந்தியாவில் முதல் கணினி நிர்வாக மாவட்டமாக மாற்றினேன்.

இதையடுத்து அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டேன். அப்போது அரசு கேபிள் டி.வியை பலப்படுத்தும் நடவடிக்கையின் போது பிரபல கேபிள் நிறுவனம் இடையூறு செய்தது. எனவே அதன் உரிமையாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டேன்.

இதையடுத்து என்னை அரசு கேபிள் டி.வி. பதவியில் இருந்து சிறு சேமிப்புத்துறை கமிஷனர் பதவிக்கு மாற்றி விட்டனர். தற்போது எந்த அடிப்படை காரணங்களும் இன்றி என் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தில் (1992) 5ம் பிரிவில் ஐ.ஏ. எஸ்- ஐ.பி.எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு அனுமதி கொடுத்தால் மட்டும் ஊழல் விசாரணை நடத்தவோ, வழக்கு பதிவு செய்ய முடியும்.

இந்த விதி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மாற்றி விடுகிறது.

மேலும் தங்களுக்கு வேண்டியவர்கள் மீது விசாரணைக்கு தடை விதிக்கவும், வேண்டாதவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடவும், அரசுக்கு தன்னிச்சையாக அதிகாரம் கொடுக்க வழிவகை செய்கிறது. இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் நியாயமான விசாரணையில் அரசு தலையிடவோ, தடுக்கவோ முடியும்.

எனவே இந்த விதியை உடனடியாக நீக்கவும், இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் உமா சங்கர்.

ஊழலைளிக் காட்டியவர்கள் வேட்டையாடப் படுகிறார்கள்

Posted on ஜூலை23, 2010 by செங்கொடி

கொடி
அண்மையில் பொதுப்பணித்துறையை கையில் வைத்திருந்த அமைச்சர் துரைமுருகன் அதிலிருந்து நீக்கப்பட்டார். அப்போது கேரளாவுடனான முல்லைப் பெரியாறு சிக்கலை சரியாகக் கையாளவில்லை என்பது காரணமாகக் கூறப்பட்டது. ஆனால் அதன் மெய்யான பின்னணிகள் இப்போது அம்பலமாகியிருக்கின்றன. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் வழியாக வழங்கப்பட்ட வீட்டு மனைகளில் நடைபெற்ற முறைகேடுகள் இப்போது வெடித்துப் பரவி வருகிறது.கடந்த 2008 ஆம் ஆண்டில் தலைமைச் செயலாளர் திரிபாதியும், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த உபாத்யாயாவும், அமைச்சர் பூங்கோதையும் பேசிய தொலைபேசி பேச்சுக்கள் ஊடகங்களில் வெளிவந்தன. அரசின் ரகசியச் செயல்பாடுகள் வெளிவந்த அதில் வெளியே கசியவிட்டதாக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளிவந்த லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக இருந்த சங்கர் எனும் அதிகாரி, அரசின் ஊழல்களை முறைகேடுகளை சவுக்கு எனும் பெயரில் அம்பலப்படுத்தி வருகிறார். (இவர் நடத்திவரும் இணைய தளங்கள் சவுக்கு படைப்புகள்தமிழக மக்கள் உரிமைக் கழகம்இலக்கு)

ஜாபர் சேட்

சங்கர் ஜீவால்

நக்கீரன் காமராஜ்

சில நாட்களுக்கு முன்னர் இவர் காவல்துறை உயர் அதிகாரிகளான ஜாபர் சேட், சங்கர் ஜீவால், நக்கீரன் இதழின் துணை ஆசிரியரான காமராஜ் ஆகியோருக்கு வீட்டு மனைகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முறைகேடாகவழங்கியது தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டார். இதைக் கண்டு அதிர்ந்துபோன அதிகாரவர்க்கம், சாலையில் சென்ற ஒருவரை தாக்கி வழிப்பறி செய்ததாக பிணையில் வெளிவரமுடியாத சட்டப் பிரிவுகளில் கடந்த புதன் கிழமை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.இது மட்டுமல்ல, மதுரை ரெங்கசாமி புரத்தில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் விதிமுறைகளை மீறி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருவதை அம்பலப்படுத்திய தினபூமி நாளிதழின் ஆசிரியர் மணிமாறனையும் கைது செய்து சிறையில் அடைத்துளனர்.இது புதியது என்றோ, அதிசயமானது என்றோ கருதிவிடமுடியாது. அதிகாரவர்க்கமும் அரசும் என்றும் மக்கள் நல நோக்கில் எதையும் செய்ததில்லை, செய்வதில்லை. செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டத்திலும், அரசுகளின் ஒவ்வொரு அசைவிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலனே பிரதானமாய் அடங்கியிருக்கும். அதையே சுற்றி வளைத்து மக்களுக்கான திட்டங்களாய் பசப்புவார்கள். அவை மறுக்கவியலாமல் ஆதாரங்களாய் வெளிப்படும் போது எந்த வெட்கமுமின்றி எந்த வரம்புக்கும் சென்று அடக்கி ஒடுக்க முனைவார்கள். இதற்கான அண்மை எடுத்துக்காட்டாகத்தான் பதிவர் சவுக்கு சங்கரும் தினபூமி மணிமாறனும். பத்திரிக்கையாளர்களைக் கைது செய்வது முன்பே நடந்துவரும் ஒன்றுதான். ஆனால் வலைத்தளத்தில் எழுதியதற்காக கைது செய்யப்படும் முதல் ஆளாக சவுக்கு சங்கர் இருக்கக் கூடும்.அரசு எந்திரத்தின் கோரமுகம் எனும் வகையில் மக்களிடம் எடுத்துச் செல்லும் அதேவேளை சக பதிவர் எனும் முறையிலும் சவுக்கு சங்கர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை அனைத்து தமிழ் பதிவர்களும் மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்.

ஊழலுக்கு எதிரான சவுக்கு தன் வேலையை நிறுத்தாது

இரண்டு நாள் காலதாமதத்திற்கு மன்னிக்கவும் காரணம் நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த சம்பவம் நிகழ்ந்து விட்டது. சவுக்கு பலரை வெளுத்து வாங்குகிறதே இவர் கதி என்னவாகுமோ ? என்று பலர் எண்ணியிருக்க கூடும்…ஆனால் அதையெல்லாம் கடந்து இன்று சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு சவுக்கின் சவுக்கடி கொடுக்கப்பட்டு தான் வருகிறது.

நாம் ஏற்கனவே சொல்லியிருந்தது போல் கோவை செம்மொழி மாநாட்டின் போது கூடிய ‘’ டர்டி பாய்ஸ் ’’ சவுக்கை முடக்கிவிட வேண்டும் என்று ஒரு மாஸ்டர் பிளான் (எது பன்னாலும் பிளான் பண்ணி பண்ணனும்) தீட்டப்பட்டது. ‘’I will teach him a lesson‘’ என்று அன்று ஊளையிட்டுக் கொண்டு களத்தில் இறங்கினார் டர்டி பாய்ஸ் டீமின் தலைவர் ஐ.ஜி ஜாபர் சேட். அவருக்கு உறுதுனையாக கர்மம் பிடித்த வீரர் காமராஜ் உள்ளிட்ட பலர் உடன் சேர்ந்து உளையிட்டு செம்மொழி மாநாட்டையே டர்டி பாய்ஸ்ஸின் ஒப்பாரி மாநாடாக மாற்றினர்.

இதன் தொடர்ச்சியாக சவுக்கு உங்களுடன் பகிர்ந்து கொண்ட ‘’ஒரு மகிழ்ச்சி ஒரு சோகம்‘’ என்ற பதிவின் மூலம் நம்ம டர்டி பாய்ஸ் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் செய்து வரும் ‘’ சமூக சேவை ‘’ ஆதாரங்களுடன் அம்பலபடுத்தப்பட்டது.

இந்த பதிவு சவுக்கின் பல்வேறு தரப்பட்ட வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மூத்த பத்திரிக்கையாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் மற்றும் உளவுத் துறை நண்பர்கள், டர்டி பாய்ஸின் எதிரிகள் என்று பலர், சவுக்கை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்த பதிவு அனைத்து துறைகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தங்களின் சமூக சேவை அம்பலமானவுடன் ஆத்திரம் அடைந்த டர்டி பாய்ஸ் தங்களுக்குள் கான்ப்ரன்ஸ் காலில் புலம்பினர் பின்னர் சவுக்கை முடக்கும் புதிய சதி திட்டத்தை நம்ம ஜாபர் அங்கிள் முன்வைக்க ஆலோசனைகள் குவிந்தன, அப்பொழுது புலனாய்வு பத்திரிக்கையின் கர்மம் பிடித்த வீரர் சவுக்கை எழுதுவது சங்கர் தான் என்ற முக்கிய தகவலை கூறினார்.

பின்னர் தொடங்கியது டர்டி பாய்ஸின் தீவிர நடவடிக்கைகள்
இவனை ஆள் வைத்து அடிக்கலாமா இல்ல ‘’உள்ள‘’ வைக்கலாமா ? என்று தொடர்ந்து ஆலோசனையில் இவனை உள்ளே வைப்பது தான் சரி என்று முடிவெடுக்கப்பட்டது.(நாட்டாமை சரியான தீர்ப்பு)

21.07.10 அன்று சங்கரின் வீட்டில் காலை 8.30 மணிக்கு சென்னை புறநகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவலர்கள் சென்றனர். விசாரணைக்காக காவல் நிலையம் வருமாறு சங்கரை அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை என்ன செய்வது என்று தெரியாமல் அந்த காவல் ஆய்வாளர் டர்டி பாய்ஸ்க்கு போன் போட்டுக் கொண்டே இருந்தார். சுமார் 12 மணிக்கு டர்டி பாய்ஸ் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட ஒரு கதை புகாராக மாறியது. (திரைத்துறையினர் டிவிடியை பார்க்காமல் கதை வேண்டுமானாலும், டர்டி பாய்ஸை அணுகலாம்)…

அந்த அளவு சுவாரஸ்யமான கதை சங்கருக்காக முதல் தகவல் அறிக்கையில் ஜோடிக்கப்பட்டது. சவுக்கு வாசகர்களுக்காக அந்த சுவை மிகுந்த கதை இதோ….

இந்த கதையின் ஹீரோ சுதாகர் (நம்ம டர்டி பாய்ஸின் கற்பனை கதாநாயகன்) இவர் ஒரு வீடு புரோக்கர். (வீடு புரோக்கர் மட்டும் தான்) நம்ம ஹூரோ எம்.எம்.டி.ஏ காலணிக்கு வீடு பார்க்க பைக்கை எடுத்துகிட்டு பூந்தமல்லி ஹை ரோடு வழியா வந்த போது எதிரே நம்ம சங்கரு. அது தான் டர்டி பாய்ஸின் நிஜ வில்லன் ஒரு பைக்கை ஒட்டிட்டு வந்து மோதுற மாதிரி மோதாம நின்னாரு….

ஹூரோகிட்ட மோதுற வில்லன் சும்மா விட மாட்டாங்க…அதுவும் நம்ம டர்டி பாய்ஸ் ஹூரோகிட்ட மோதினா ? சும்மாவா விடுவாங்க? கிழிஞ்ச சட்டையும் உடைஞ்ச செங்கலையும் கையில ஏந்தி கண்ணகி மாதிரி காவல் நிலையம் போய் டர்டி பாய்ஸ் ஹூரோ கதற (வழக்கமா வில்லன் தான்யா ஓடுவான்! டர்டி பாய்ஸ் கதையில ஹூரோ கூட டம்மி பீஸாவே இருக்கானே ஹய்யோ ஹய்யோ) சட்டையையும் செங்கலையும் ஆதாரமா வைச்சு நம்ம வில்லன் சங்கரை பொய் வழக்கு பதிவு செஞ்சு சிறையில அடைச்சாங்க…

இன்னிக்கு டர்டி பாய்ஸூக்கு சந்தோஷம் தான்…ஊழலுக்கு எதிரான சவுக்கு தன் வேலையை நிறுத்தாது. டர்டி பாய்ஸூக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே எழுதிய பதிவுகளை அகற்றவும், இனிமேல் எழுதாமல் இருக்கவும் சவுக்கிற்கு லஞ்சம் அளிக்க முயற்சித்தார்கள் நாம் மறுக்கவே நம் மீது வழக்கு போட்டு அச்சுறுத்துகிறார்கள்…

எந்த அடக்குமுறையும் எதிர்க்க சவுக்கு தயாராகவே உள்ளது… புதிய உத்வேகத்தோடு களப் பணிகள் தொடரும்….கொஞ்சம் பொறுத்திருங்கள்…

Advertisements

3 Responses to உமாசங்கர் ஐ.ஏ.எஸ். திடீர் சஸ்பெண்ட்!

 1. பிகாரில் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது ஊழல் வழக்கு
  http://thatstamil.oneindia.in/news/2010/07/22/vigilance-against-tamil-ias-officer-bihar.html
  பாட்னா: பிகார் மாநிலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  பிகார் மாநில ஐஏஎஸ் கேடரைச் சேர்ந்த அதிகாரியான கே.செந்தில்குமார் தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறை இயக்குனராக உள்ளார்.

  முன்பு பாட்னா மாநகராட்சி கமிஷனராக இவர் இருந்தபோது விதிமுறைகளை மீறி 130 கட்டிடங்களுக்கு அனுமதி கொடுத்தது, மற்றும் மாநகராட்சிக்கு தேவையான வாக்கிடாக்கிகள், தெரு விள்க்குகள், பம்புகள் போன்ற பொருட்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

  மேலும் குப்பைகளை அகற்றுவதற்கு காண்ட்ராக்ட் தந்ததிலும், பயோமெட்ரி்க் அடையாள அட்டைகள் வழங்க மிக அதிகமாக நிதியை ஒரு நிறுவனத்துக்கு ஒதுக்கி கமிஷன் அடித்ததும் தெரியவந்தது.

  இது குறித்து பிகார் ஊழல் கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், இந்த முறைகேடுகளால் மாநகராட்சிக்கு ரூ. 8.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது உறுதியானது.

  இதையடுத்து செந்தில்குமார் மற்றும் 13 அதிகாரிகள் மீதும் ஊழல் கண்காணிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 2. Print | Close
  உமாசங்கர் ஐ.ஏ.எஸ் திடீர் இடைநீக்கம்
  தமிழ்நாடு அரசின் சிறுசேமிப்புத்துறை ஆணையர் பணியிலிருந்த உமாசங்கரை இடைநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

  முன்னதாக, அவர் மீது சொத்துக்குவிப்பு புகார் தொடர்பாக விசாரணையையும் அரசு தொடங்கியிருந்தது. அதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்தார்.

  இந்த நிலையில் இரு நாள்களுக்கு முன்பு திடீரென அவர் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.

  அரசு செயலர் அந்தஸ்தில் பணியில் இருக்கும் உமாசங்கர், ஜெயலலிதாவின் முதல் ஆட்சியில் சுடுகாட்டுக் கூரை ஊழலை வெளியில் கொண்டுவரக் காரணமாக இருந்தார். தொடர்ந்து வந்த திமுக ஆட்சியில் ஊழல் வழக்குகளைக் கையாளும் இணை விழிப்பு ஆணையர் என்ற புது பணியில் அமர்த்தப்பட்டார். மூன்று ஆண்டுகள் அந்தப் பணியில் இருந்தவரை, திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, அதன் முதல் ஆட்சியராக நியமித்தனர். பிறகு, டிக், எல்காட் ஆகிய அரசுசார் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் திடீர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.

  ஒரு கட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட உமாசங்கருக்கும் சன் குழுமத்தின் சுமங்கலி கேபிள் விஷனுக்கும் பிரச்னை முறுகல் ஆகி, அதை நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ஒருவரை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யவும் உமாசங்கர் அரசுக்குப் பரிந்துரை செய்தார்.

  முதலமைச்சர் குடும்பத்தில் பிரச்னைகள் தீர்ந்த நேரத்தில் உமாசங்கரை டம்மி பணி எனப்படும் சிறுசேமிப்புத் துறை ஆணையர் பணிக்கு மாற்றப்பட்டார். ஒன்றரை ஆண்டுகளாக இதே பணியில் இருந்தவர், அரசின் வழக்கு நடவடிக்கைகளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 3. “”தலித் கிறிஸ்தவரான அவர், இந்து தாழ்த்தப்பட்டவர்னு சர்டிபிகேட் கொடுத்து பணியில் சேர்ந்ததாகச் சொல்லி சஸ்பெண்ட் செய்திருக்குது அரசாங்கம். ஏற்கனவே தன் மீதான நெருக்கடிகளுக்காக கோர்ட்டுக்குப் போன உமாசங்கர், அரசு கேபிள் கார்ப்பரேஷன் பொறுப்பில் இருந்தபோது சுமங்கலி கேபிள் விஷனை அரசுடைமையாக்க முயற்சி எடுத்தேன் னும், அதற்கு எதிரா அந்த நிறுவனமும் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியும் இடையூறு செய்ததாகவும், அதனால எஸ்.சி.வி நிர்வாகத்தையும் அமைச்சரையும் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும், அதனால தன் மீது சொத்துக் குவிப்பு வழக்கைப் போடவைத்ததோடு, சான்றிதழ் சம்பந்தமான பிரச்சினையையும் கிளப்புவதா கோர்ட்டில் சொல்லியிருந்தார். இப்ப அந்த சர்டிபிகேட் விவகாரத்தில்தான் அவரை சஸ்பெண்ட் பண்ணி யிருக்காங்க.”

  “”சர்ட்டிபிகேட் பற்றி சட்டம் என்ன சொல்லுது?”

  “”1964-ல் பிறந்த உமாசங்கர் 1984-ல் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள செங்கோல் மடம்ங்கிற இடத்தில் கிறிஸ்துவரா இருந்து இந்து மதத்திற்கு மாறிட்டார். அதற்கான சான்றிதழை மத்திய தேர்வாணைய மான யு.பி.எஸ்.சி. மூலம் தேர்வெழுதி ஐ.ஏ.எஸ். ஆன போது கொடுத்திருக்கிறார். சட்டம் என்ன சொல்லுதுன்னா, இந்துவா இருந்த ஒருத்தர் கிறிஸ்துவ மதத்தைத் தழுவி, பிறகு மறுபடியும் இந்துவா மாறினா அவரோட உறவினர் அஃபிட விட்டும் அரசாங்க நோட்டிஃபி கேஷனும் கொடுத்தால் அவர் இந்துவா ஏற்றுக்கொள்ளப் படுவார். ஆனா, கிறிஸ்துவரா பிறந்தவர் இந்துவா கன்வர்ட் ஆவதை சட்டம் அங்கீகாரம் பண்ணலை. உமாசங்கர் இப்படித் தான் கன்வர்ட் ஆகியிருக்கிறார். பேங்க்கில் வேலை பார்த்தபோது இந்து தாழ்த்தப்பட்டவர் என்ற சலுகையை அவர் பெறலை. ஐ.ஏ.எஸ். ஆகும்போது மட்டும் அதைப் பயன்படுத்தியது சட்டப்படி தப்புன்னு அரசுத் தரப்பு சொல்லுது.”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: