ஆக்டோபஸ் கொடூர கொலை: டிவியில் நேரடி ஒளிபரப்பு

பியூனஸ் அயர்ஸ்: தென்ஆப்ரிக்காவில் சமீபத்தில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரின்போது, ஜெர்மனி அருங்காட்சியகத்தை சேர்ந்த பால் என்ற 2 வயது ஆக்டோபஸ் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே சரியாகக் கணித்து உலகப் புகழ் பெற்றது. ஜெர்மனி அணி விளையாடிய 7 போட்டிகள் மற்றும் ஸ்பெயின் & நெதர்லாந்து மோதிய பைனல் என 8 போட்டியிலும் பால் சொன்ன அணிதான் வெற்றி பெற்றது. தனது துல்லியமான ஆரூடத்தால் ஆதரவாளர்களை மட்டுமல்ல, எதிர்ப்பாளர்களையும் சம்பாதித்தது அந்த ஆக்டோபஸ். ஜெர்மனி அரைஇறுதியில் ஸ்பெயினிடம் தோற்கும் என்று கணித்ததால், உள்நாட்டில் அதற்கு ‘துரோகி’ பட்டம் கிடைத்தது. அதே சமயம் ஸ்பெயினில் இந்த ஆக்டோபஸை குலதெய்வமாக வணங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

Octopus Pictures கால்இறுதியில் ஜெர்மனியிடம் அர்ஜென்டினா உதை வாங்கும் என்று ஆக்டோபஸ் கணித்தது அப்படியே நடந்ததால் அந்நாட்டு ரசிகர்களும் ஆத்திரத்தில் உள்ளனர். இந்நிலையில், அர்ஜென்டினா டிவி சேனல் ஒன்றில் ‘எ பர்பெக்ட் வேர்ல்டு’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் ராபர்டோ என்பவர், நேரடி ஒளிபரப்பில் ஒரு ஆக்டோபஸை வெறித்தனமாக கொலை செய்து ரசிகர்களை திருப்திப் படுத்தியிருக்கிறார். ‘நம் அணியை தோற்கடித்த ஆக்டோபஸ் பால் அல்ல இது. ஆனாலும், அதுவாகவே இதை நினைத்துக் கொள்ளுங்கள். இதை கொடூரமாக கொல்லப் போகிறேன். இப்போது கழுத்தை திருகுகிறேன். தலையை வெட்டி துண்டு துண்டாக்கி மிக்சியில் போட்டு அரைக்கிறேன்’ என்று நேர்முக வர்ணனை கொடுத்தபடியே அந்த கொடூரத்தை அரங்கேற்றியிருக்கிறார். அர்ஜென்டினா ரசிகர்கள் ஏராளமானோர் இதை கைதட்டி ரசித்தனர்.

He's Paolo, an Italian, Not Paul the Briton : The...இந்த கொடூர கொலைக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “கணிப்பு என்பது சுவாரசியத்துக்காக நடத்தப்பட்டது. அதற்காக அப்பாவி ஜீவன் ஆக்டோபஸ் மீது ஆத்திரத்தை காட்டுவதா?” என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். டிவி சேனல் மீது வழக்கு தொடர்வது பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஆச்சரிய ஆக்டோபஸ்:

ஆக்டோபஸ் ஆச்சரியமான உயிரினம். கதைகள், திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவதுபோல ராட்சத ஆக்டோபஸ்கள் இருப்பதாக தெரியவில்லை. நன்கு வளர்ந்த ஆக்டோபஸ் 15 கிலோ எடை இருக்கும். அதிகபட்சமாக 71 கிலோ எடை கொண்ட ஆக்டோபஸ் ஒருமுறை பிடிபட்டுள்ளது. ஆக்டோபஸ் உடலை பாதியாக வெட்டினால், 2 பக்கமும் ஒன்றுபோல இருக்கும். ஆக்டோபஸ் மிகவும் புத்திசாலி. எந்த விஷயத்தையும் உடனே கற்றுக் கொள்ளும். நம்மை போலவே குறுகியகால, நீண்டகால நினைவாற்றல் கொண்டது. இரண்டு வெவ்வேறு வடிவங்கள், டிசைன்களை வேறுபடுத்தி பார்க்கும் திறன் கொண்டவை. ஒரே நிறம் அல்லது டிசைனை காட்டிக் காட்டி பழக்கப்படுத்தினால் அதை மீண்டும் தேடி கண்டுபிடித்துவிடும். கால்பந்து போட்டியின்போது அணிகளின் கொடிகளை கண்டுபிடித்ததுகூட இதன் அடிப்படையில்தான் என்றும் கூறப்படுகிறது. ஆக்டோபஸுக்கு எலும்புக் கூடு கிடையாது. எல்லா ஆக்டோபஸ்களுமே விஷத் தன்மை கொண்டவை என்றாலும், நீல நிற வளையங்கள் கொண்ட ஆக்டோபஸ் மட்டுமே மனிதனைக் கொல்லும் அளவுக்கு விஷமுடையது. 6 மாதத்தில் இருந்து அதிகபட்சமாக 5 ஆண்டு மட்டுமே உயிர் வாழும். செக்ஸ் உறவு கொண்ட ஆண் ஆக்டோபஸ் அடுத்த சில மாதங்களில் இறந்துவிடும். முட்டைகள் பொறித்த கொஞ்ச நாளில் பெண் ஆக்டோபஸும் அவுட். ஆக்டோபஸ் 3 இதயம் கொண்டது. ஹீமோசயானின் என்ற ரசாயனம் இருப்பதால் ஆக்டோபஸ் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்…………………..

http://www.indiatvnews.com/news/World/Argentina_TV_Crushes_Octopus_Live_In_Revenge_Attack-1667.html

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: