மதபோதகர் போர்வையில் வீட்டு மனை மோசடி? : ரூ.10 கோடி சொத்தை மீட்டு தர கோரிக்கை

ஜூன் 21,2008,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=2684&ncat=DI&archive=1&showfrom=6/21/2008

விழுப்புரம் : திண்டிவனம் பகுதியில் ரூ. 10 கோடி மதிப்புள்ள வீட்டு மனைகள், மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. திண்டிவனம் பகுதியில், நிலத்தின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், திண்டிவனம் பகுதியில் மேலும் ஒரு நில மோசடிப் புகார் எழுந்துள்ளது.

திண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சேர்ந்த கண்ணன், தமிழரசி, பூங்காவனம், ராமச்சந்திரன், வித்தியாசந்த், வக்கீல்கள் பாலன், ரமேஷ், செசிலீ, தம்புமுத்து, பாலசுப்ரமணி, சுப்ரமணி, ராமதாஸ், கைலாஷ், முனுசாமி, எல்லுசாமி, கிருஷ்ணமூர்த்தி, பாலம்மாள், வரதராஜன் ஆகியோர், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நில மோசடி நடந்துள்ளதாக புகார் மனு கொடுத்தனர். அந்த புகாரில், “தங்களுக்கு கிடங்கல் பகுதியில் ரூ. 10 கோடி மதிப்பிலான 15 ஏக்கர் நிலங்கள் (வீட்டு மனைகளாக பயன்படுத்தக் கூடிய இடங்கள்) உள்ளன. இவற்றை மதபோதகர் என்ற போர்வையில் உள்ள ஜெயபால் என்பவர் போலி ஆவணம் தயார் செய்து, மோசடியாக விற்பனை செய்துள்ளார். மேலும், மனித உரிமை ஆணையம் என்ற போர்வையிலும் சிலர் நில மோசடியில் ஈடுபட்டுள்ளனர்’ என தெரிவித்துள்ளனர். எனவே தங்களது நிலங்களை மீட்டு தருவதுடன், நில மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரின் உத்தரவின் பேரில், நில மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்ட ஜெயபாலும் அவரது தரப்பினரும் எஸ்.பி., அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: