Kovai CSI Bishop Dorai Scam-New Chief takes over

கோவை சிஎஸ்ஐ வளாகத்துக்குள் பிஷப் அத்துமீறி நுழைந்ததாக புகார்

கோவை, ஜூலை 7: சிஎஸ்ஐ கோவை திருமண்டல தலைமை அலுவலகத்துக்குள் அத்துமீறி பிஷப் மாணிக்கம்துரை நுழைந்ததாக போலீஸில் திருமண்டல உறுப்பினர்கள் புதன்கிழமை புகார் அளித்தனர்.

÷கோவை மாநகரக் காவல் ஆணையர் சி.சைலேந்திரபாபுவிடம் அவர்கள் புதன்கிழமை அளித்த புகார் மனு:

 

÷சிஎஸ்ஐ கோவை திருமண்டல பிஷப்பாக மாணிக்கம்துரை இருந்தார். அவர் மீது பல்வேறு பண மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, சிஎஸ்ஐ திருச்சபையின் உயர்மட்டக் குழுவின் (சினாடு) உத்தரவுப்படி மாணிக்கம்துரை கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.

÷இந் நிலையில், ரேஸ்கோர்ஸில் உள்ள சிஎஸ்ஐ கோவை மண்டல அலுவலகத்துக்குள் உயர்மட்டக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் பிஷப் மாணிக்கம்துரை நுழைந்துள்ளார். அவர் மீது உயர்மட்டக் குழு துறைரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிஎஸ்ஐ கோவை மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் இருந்து அவரை வெளியேற்ற போலீஸôர் உதவ வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

÷இம் மனு குறித்து ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் விசாரணை நடத்தினார். இதனிடையே அலுவலகத்தைவிட்டு மாணிக்கம்துரை சென்றுவிட்டதாகவும், சிஎஸ்ஐ திருச்சபைக்கு சொந்தமான உடமைகளை ஒப்படைப்பதாக அவர் ஒப்புக் கொண்டு விட்டதாகவும் போலீஸôர் தெரிவித்தனர்.

Advertisements

4 Responses to Kovai CSI Bishop Dorai Scam-New Chief takes over

  1. சிஎஸ்ஐ கல்வி நிறுவனங்களில் ரூ.3 கோடி மோசடி: விரைவில் இறுதி அறிக்கை வெளிவரும்

    First Published : 23 Mar 2010 05:51:08 AM IST

    கோவை, மார்ச் 22: கோவை சிஎஸ்ஐ கல்வி நிறுவனங்களில் ரூ. 3 கோடி மோசடி நடந்தது தொடர்பாக விசாரித்து, விரைவில் சிஎஸ்ஐ மண்டலங்களின் தலைமையகத்திடம் அறிக்கையை ஒப்படைப்போம் என்று, உண்மை கண்டறியும் குழுவின் ஒருங்கிணைப்பாளரான ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எப்.சல்தானா கூறினார்.
    சிஎஸ்ஐ கல்வி நிறுவனங்களில் ரூ.3 கோடி மோசடி நடைபெற்றதாக சிங்காநல்லூரை சேர்ந்த பிரேம்குமார், ரேஸ்கோர்ஸ் போலீஸில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து போலீஸôர் விசாரித்து வந்தனர்.
    இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸýக்கு மாற்றப்பட்டது. மோசடி தொடர்பாக விசாரித்த சிபிசிஐடி போலீஸôர், பிஷப் மாணிக்கம்துரை உள்பட 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் 2 பேரை சமீபத்தில் போலீஸôர் கைது செய்தனர்.
    இந்நிலையில், பிஷப் மண்டலங்களின் தலைமையகமான சினாடு (ள்ஹ்ய்ர்க்)உண்மையை கண்டறியும் குழுவை அமைந்தது. அந்தக் குழு கோவை சிஎஸ்ஐ கல்வி நிறுவனங்களில் திங்கள்கிழமை ஆய்வு நடத்தியது.
    அந்தக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எப்.சல்தானா, உறுப்பினர்களாக முன்னாள் டிஜிபி ஆனந்த், வங்கி ஆடிட்டர் சரசம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கோவையில் நீதிபதி சல்தானா கூறியது:
    சிஎஸ்ஐ கல்வி நிறுவனங்களின் ஏற்பட்ட நிர்வாகச் சீர்கேடு குறித்து விசாரித்து வருகிறோம். விசாரணை, ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது. விசாரணையில் கிடைக்கும் தகவல்கள், அவ்வப்போது சினாடு தலைமை நிர்வாகியிடம் அளிக்கப்படும். மற்ற மாவட்டங்களில் உள்ள சிஎஸ்ஐ கல்வி நிறுவனங்களிலும் குழு ஆய்வு நடத்தும். இதுவரை 300 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். இந்தக் குழுவிடம் சிலர் புகாரும் அளித்துள்ளனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கருத்தில்கொண்டு, இறுதி அறிக்கையை சினாடு தலைமை நிர்வாகியிடம் விரைவில் ஒப்படைப்போம். அதற்கு காலகெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை, என்றார்.

  2. குற்றாலத்தில் சிஎஸ்ஐ சினாட் பேரவை தேர்தல்
    சனிக்கிழமை, ஜனவரி 16, 2010, 10:45[IST]

    குற்றாலம்: குற்றாத்தில் நடந்த சிஎஸ்ஐ சினாட் பேரவை கூட்டத்தில் பெங்களூரு பிஷப் புதிய மாடரேட்டராகவும், கன்னியாகுமரி பிஷப் துணை மாடரேட்டராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

    சிஎஸ்ஐ பிரதம பேராயர் (மாடரேட்டர்), துணை பிரதம பேராயர் (துணை மாடரேட்டர்), பொது செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோர் பதவி காலம் முடிவடைந்தது. இப்பதவிகளுக்கு புதிய நபர்களை தேர்வு செய்ய 32வது சினாட் பேரவை கூட்டம் குற்றாலத்தில் துவங்கியது.

    தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, இலங்கை யாழ்பாணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 22 டயோசீசன்களின் பிஷப்புகள், சினாட் உறுப்பினர்களின் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    மாடரேட்டர் கிளாட்சன் தலைமை வகித்தார். 600 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாடரேட்டராக தேர்ந்தெடுக்க விரும்பும் பி்ஷப்புகளின் பெயர்களை சினாட் உறுப்பினர்கள் எழுதி கொடுத்தனர்.

    50 சதவீதத்திற்கும் அதிகமான ஆதரவு பெற்றவர்கள் மாடரேட்டராக அறிவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது.

    இத் தேர்தலில், பெங்களூரு டயோசீசன் பிஷப் வசந்தகுமார் மாடரேட்டராகவும், கன்னியாகுமரி பிஷப் தேவகடாகட்சம் துணை மாடரேட்டராகவும், பொது செயலாளராக மத்திய கேரளாவை சேர்ந்த எம்.எம் பிலிப், பொருளாளராக தெற்கு கேரளா திருவனந்தபுரம் டயோசீசனை சேர்ந்த பெனட் ஆபிரகாம் தேர்வு செய்யப்பட்டனர்.

    புதிதாக தேர்வு செய்யப்படட நிர்வாகிகளுக்கு இன்று மாலை 4.30 மணிக்கு குற்றாலத்தில் பாராட்டு விழா நடக்கிறது. அமைச்சர்கள் மைதீன்கான், எம்பி ராமசுப்பு, உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

  3. கொலை மிரட்டல்: கோவை பேராயர் கைது

    கோவை, மே.7 (டிஎன்எஸ்) கிரிமினல் குற்றம் தொடர்பான வழக்கில் சி.எஸ். ஐ., பிஷப் கைது செய்யப்பபட்டிருப்பது கோவையில் கிறிஸ்தவ சமுதாய மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே திருச்சபைக்கு சொந்தமான ரூ 3 கோடியை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுடன் வழக்கில் முன் ஜாமீன் பெற்றவர் பேராயர் மாணிக்கம் துரை.

    இந்நிலையில் தேவர் சோலையில் வைத்து பாதிரியார் கவிராஜ் என்பவருக்கு பேராயர் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்டம் கூடலூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. பேராயர் மாணிக்கம்துரை பல முறை ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனால் நீதிமன்றம் இவரை ஆஜர்படுத்துமாறு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவையடுத்து சப்.இன்ஸ்பெக்டர் பஸ்வராஜ் தலைமையில் சென்ற போலீஸ் படையினர் பேராயர் மாணிக்கம் துரையை கோவையில் கைது செய்தனர்.

    கோவையில் சி.எஸ்.ஐ., சபையின் பேராயராக இருக்கும் மாணிக்கம் துரை தலைமையின் கீழ் கோவை சி.எஸ்.ஐ., சபை இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள், சிறிய அளவிலான மருத்துவமனைகள், ஆதரவற்றோருக்கான நிலையங்கள் செயல்படுகின்றன.

    இந்த திருமண்டலத்தில் பல திருச்சபைகளாக பிரிக்கப்பட்டு, அந்தந்த எல்லைக்குட்பட்டு செயல்பாடுகள் இருக்கும். இந்த திருச்சபையை சேர்ந்தவர்கள் இணைந்து தேர்தல் மூலம் பேராயரை தேர்வு செய்வர்.

    இந்நிலையில் கோவை பேராயர் மாணிக்கம் துரை, கூடலூர் அருகே உள்ள நடுவட்டம் பகுதியை சேர்ந்த திருச்சபையினர் இடையே அறக்கட்டளை பண வசூல் தொடர்பாக கருத்து வேற்றுமை இருந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    கைது செய்யப்பட்ட மாணிக்கம் துரை, போலீஸ் வேன் மூலம் கூடலூர் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படுகிறார். (டிஎன்எஸ்)

    May 08, 2010

  4. தமிழகத்தில் கிறிஸ்தவ இட ஒதுக்கீடு ரத்து!
    கிறிஸ்துவர்களுக்கு ஒரு நீதி, முஸ்லீம்களுக்கும் ஒரு நீதி, இந்துக்களுக்கே அநீதி

    தமிழகத்தில் கிறிஸ்தவ இட ஒதுக்கீடு ரத்து!
    திங்கள்கிழமை, அக்டோபர் 13, 2008
    சென்னை: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டிலிருந்து, கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 3.5 சதவிகித இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

    அதேசமயம் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவிகித தனி இடஒதுக்கீடு தொடரும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

    பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு இரு பிரிவினருக்கும் தலா 3.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி முன்பு உத்தரவு பிறப்பித்திருந்தது.

    ஆனால் கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த இடஒதுக்கீட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இது பற்றி பரிசீலிப்பதாக முதல்வர் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், கிறிஸ்தவர்களுக்கான இடஒதுக்கீடு திரும்பப் பெறப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

    இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

    சென்னை மயிலை பேராயர் சின்னப்பா, நாகர்கோயில் பேராயர் ரெமிஜியஸ், சென்னை சிஎஸ்ஐ பேராயர் தேவசகாயம், எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் வின்சென்ட் சின்னத்துரை, பேராயர் எஸ்ரா சற்குணம் உள்ளிட்ட கிறிஸ்துவ சமுதாய பிரதிநிதிகள் இன்று முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தார்கள்.

    அதில், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தலா 3.5 சதவிகித உள்ஒதுக்கீடு தந்து சட்டமாக்கி சரித்திரம் படைத்தீர்கள். ஆனால் அந்த சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் அனுமதியிலும், வேலைவாய்ப்பிலும், முன்பு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பெற்ற வாய்ப்புகளை விட மிகக்குறைவாகவே இப்போது பெற முடிந்துள்ளது.

    எனவே, பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கான 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற்று முன்பு இருந்தபடி, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிலேயே தொடர்ந்து கிறிஸ்தவர்கள் இருக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

    இந்த கோரிக்கையை ஆய்வு செய்த முதல்வர் கருணாநிதி, அறிவித்திருப்பதாவது:

    பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ, முஸ்லீம் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை திமுக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தலா 3.5 சதவிகித இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.

    நல்ல எண்ணத்துடன் கோரிக்கை வைக்கப்பட்டு, அதே எண்ணத்துடன் அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட உத்தரவை நீதிபதி ஜனார்த்தனம் குழு ஆய்வு செய்து அறிக்கை பெற்று தனி இடஒதுக்கீட்டுக்கான அவசர சட்டம் 15.9.2007 முதல் அமலுக்கு வந்தது.

    கோரிக்கை நிறைவேறியது என்ற மகிழ்ச்சியை கிறிஸ்தவ சமுதாயத்தை பொறுத்தவரையில், முழுமையாக அடைய முடியாமல் பின்னடைவு ஏற்படக் கூடும் என்ற ஐயப்பாட்டை தோற்றுவித்துள்ளது.

    எனவே, பின்னடைந்துள்ள முஸ்லீம்களுக்கு தனி ஒதுக்கீடு மூலம் ஆதாயத்தை அவர்கள் வரவேற்கும் நிலையில் கிறிஸ்தவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு மூலம் முன்பு இருந்த வாய்ப்புகள் குறைவதை கருத்தில் கொண்டு, பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பழையபடியே இடஒதுக்கீடு தொடர்ந்திட, அவர்களுக்கு வழங்கப்பட்ட தனி இடஒதுக்கீடு திரும்பப் பெறப்படுகிறது.

    அதோடு, சட்டத்தில் தக்க திருத்தம் மேற்கொள்வது என்றும், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டிய சூழ்நிலையை கருதி அவர்களுக்கு மட்டும் இந்த தனி இடஒதுக்கீடு ஆணையை நடைமுறைப்படுத்துவது என்றும் அரசு முடிவெடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: