செக்ஸ் மோசடி மேட்டுப்பாளையம் மதபோதகர் சார்லஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

சிறுமியைப் பலாத்காரம் செய்ததாகப் புகார்: தலைமறைவான மதபோதகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கோவை, ஜன. 10:

See full size imageசிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் போலீஸாரால் தேடப்பட்டு வந்த தனியார் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகியும் மதபோதகருமான சார்லஸ் (45), ரயில் முன் பாய்ந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

மேட்டுப்பாளையம் அருகே கரட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் மாராத்தாள். மகள்கள் லட்சுமி (13), சித்ரா (10), மகன் ஆறுச்சாமி (5) ஆகியோருடன் வசித்து வந்தார்.

மாராத்தாளின் கணவர் மாரியப்பன் 2001-ல் இறந்துவிட்டார். இந் நிலையில், மாராத்தாளை அணுகிய மதபோதகர் சார்லஸ், தான் நடத்தி வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளைச் சேர்த்தால் சாப்பாடு, கல்வி, துணி ஆகியன இலவசமாக வழங்கி வளர்ப்பதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து, தனது குழந்தைகளை அந்த இல்லத்தில் மாராத்தாள் சேர்த்தார்.

Ohlson_ecceh5சென்னாமலை கரட்டுமேட்டில் செயல்பட்டு வந்த இல்லம், பின்னர் மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலையில் உள்ள மொங்கம்பாளையம் கிராமத்துக்கு மாற்றப்பட்டது.

மாதமொரு முறை குழந்தைகளைப் பார்த்து வருவாராம் மாராத்தாள். கடந்த நவம்பரில் லட்சுமி பருவமடைந்து விட்டதாகக் கூறி, அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு மாராத்தாளிடம் மதபோதகர் சார்லஸ் கூறியுள்ளார்.நடக்க முடியாத நிலையில் சிறுமி: இதையடுத்து, மகள்கள் லட்சுமி, சித்ரா ஆகியோரை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அடிவயிறு வலிப்பதாகவும், சிறுநீர் கழிக்க முடியவில்லை என்றும் லட்சுமி கூறவே மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தாள்.

அங்கு 45 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது லட்சுமிக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.மேலும் பாலியல் ரீதியாக சித்ரவதை நடந்திருக்கலாம் என்றும் இதையடுத்து கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கருக்கலைப்பு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி லட்சுமியை மாராத் தாள் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். வீட்டுக்குச் சென்றதும் லட்சுமியின் இடுப்புக்கு கீழ் செயல்பட வில்லை. மேலும் புண் ஏற்பட்டு சீழ் வடியத்தொடங்கியது.

அப்போதுதான் லட்சுமி தனது தாயிடம் அனாதை விடுதியில் தங்கியிருந்தபோது தனக்கு மாத்திரை கொடுத்து மயங்கச் செய்து விடுதி நிர்வாகி சார்லஸ் தன்னை கற்பழித்து விட்டார் என்று கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாராத்தாள் அழுது புலம்பினாள்.

இந்த விஷயம் மெல்ல மெல்ல அக்கிராமம் முழுவதும் பரவியது. உடனே சேவாபாரதி மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியம், வக்கீல் கணேசபாண்டியன், ஆண்கள் சுயஉதவிக் குழுவினர் மாராத்தாள் வீட்டுக்குச் சென்று நடந்த சம்பவம் பற்றி விசாரித்தனர்.

அதேபோல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக செயலாளர் பசீர் மற்றும் நிர்வாகிகளும் மாராத்தாள் வீட்டுக்கு சென்று விசாரித் தனர். அவர்கள் மீண்டும் லட்சுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இடுப்புக்கு கீழ் செயலிழந்து புண் ஏற்பட்ட நிலையில் லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவளது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை அறிந்த கோவை குற்ற பதிவேடு துணை போலீஸ் சூப்பிரண்டு தண் டாயுதபாணி, அவினாசி டி.எஸ்.பி. முருகேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், வின்சென்ட் பால்ராஜ், கென்னடி, சப்- இன்ஸ்பெக்டர்கள் மாரசாமி, பெண் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் அனந்தலட்சுமி, சந்திரலேகா, தவ்லத்நிஷா மற்றும் போலீசார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்கள். பாதிக்கப்பட்ட லட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது லட்சுமி போலீ சில் வாக்குமூலம் கொடுத்தார்.

அதில், பாதிரியார் சார்லஸ் தனக்கு மாத்திரைகள் கொடுத்ததாகவும் அதனை சாப்பிட்டபின் தன்னை கற்பழித்ததாகவும் அதன்பிறகேதான் பெரியமனுஷி ஆனதாகவும் தொடர்ந்து பலமுறை மாத்திரைகள் கொடுத்ததாகவும் கூறி இருக்கிறாள்.

உடனே போலீஸ் அதிகாரிகள் முறைப்படி போலீசில் புகார் கொடுக்கும்படியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

அதன்பேரில் மாராத்தாள் காரமடை போலீசில் புகார் செய்தார். போலீசார் பாதிரியார் சார்லஸ் மீது வழக்குப்பதிவு செய்து சிறுமி கூறுவது உண்மையா? உண்மையிலேயே சிறுமி கற்பழிக்கப்பட்டாளா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் மேட்டுப் பாளையம், காரமடை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடியவனுக்கு என்ன தண்டணை கொடுப்பது
மாலை மலர்

சில நாள்களிலேயே லட்சுமியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

லட்சுமியின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இடுப்புப் பகுதி முழுவதும் சீழ் பிடித்து இருந்தது. நாளடைவில் இடுப்புக்குக் கீழ் உணர்வுகள் இன்றி நடக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் லட்சுமி.

பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்தபோது மதபோதகர் சார்லஸ், இரவு நேரங்களில் தன்னைப் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதற்காக பல மாத்திரைகளைச் சாப்பிடக் கொடுத்ததாகவும் லட்சுமி தன் தாயிடம் கூறியுள்ளார்.

மதபோதகர் தலைமறைவு: இது குறித்து, காரமடை போலீஸில் ஞாயிற்றுக்கிழமை மாராத்தாள் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார் தலைமறைவாக இருந்த மதபோதகரைத் தேடி வந்தனர்.

இதற்கிடையே, வடகோவை ரயில் நிலையத்துக்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்குச் சென்று கொண்டிருந்த பாலக்காடு டவுன் – திருச்சி பாசஞ்சர் ரயில் முன் சார்லஸ் பாய்ந்தார்.

படுகாயம் அடைந்த நிலையில் தூக்கி வீசப்பட்ட சார்லûஸ அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். சார்லûஸப் பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக அறிவித்தனர்.

கோவை ரயில்வே சப் – இன்ஸ்பெக்டர் சுல்தான் ஷெரீஃப் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். மதப் போதகரைத் தேடி வந்த காரமடை போலீஸக்கு ரயில்வே போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர். விசாரணை தொடர்கிறது.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3963

http://ennar.blogspot.com/2006/01/blog-post_09.html

Advertisements

7 Responses to செக்ஸ் மோசடி மேட்டுப்பாளையம் மதபோதகர் சார்லஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

 1. vedaprakash says:

  இந்த பிரச்சினையை, பல கோணங்களில் ஆராய்ந்து வரும் எனக்கு பல கேள்விகள் எழுகின்றன.

  நேற்றே, உங்கள் பதியைப் படித்துவிட்டு, கூகுள் தேடலில் முயற்சி செய்து, மேலும் யாதாவது விவரங்கள் கிடைக்குமா என்று பார்த்தால், நேரம்தான் சென்றது. ஒன்றும் கிடைக்கவில்லை. மாறாக, மற்ற “சார்லஸ்கள்” தற்கொலை செய்து கொண்ட செய்திகள் நிறையவே கிடைத்தன.

  எனவே, ஒன்று ஊடகங்கள் இதை இருட்டடிப்புச் செய்திருக்க வேண்டும், இல்லை ஜனவரி 2010ல் வெளியிட்டு, பிறகு இணைத்தளத்திலிருந்து எடுத்துவிட்டிருக்கவேண்டும். இவ்வாறாகயெல்லாம் நடக்கின்றன, என்பது பார்க்கும்போது, உண்மையினை மறைக்க எப்படியெல்லாம், தொழிற்நுட்பம் பயன் படுகிறது, பயன் படுத்தப் படுகிறது என்பது தெரிகிறது [இந்து நாளிதழ் ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தப்பட்ட சில ஆவணங்களை வெளியிட்டு 24 மணி நேரத்தில் எடுத்துவிட்டது].

  இந்நிலையில், இந்த விவரம் முக்கியமாகிறது. அதாவது, பாலியிலில் ஈடுபட்டு வந்த கிருத்துவக் காமுக மிருகங்கள், தற்கொலையில் கூட ஈடுபடலாம்.

  இதுவும் – ஒன்று அந்த மனிதனின் முழுவதுமான ஆதரவற்ற நிலையைக் காட்டுகிறது, அல்லது, அவ்வாறு அவனைத் தூண்டி உண்மையை மறைக்கவும் செய்திருப்பதாகக் கருதவேண்டியுள்ளது. கிருத்துவ சரித்திரத்தைப் படித்து வருபவர்களுக்கு, இதெல்லாம் சாதாரண விஷயம் தான்.

  மேலே, விவரங்கள் கிடைத்தால், வெளியிடவும்.

 2. Pingback: சிறுமியைப் பலாத்காரம் செய்ததாகப் புகார்: தலைமறà¯

 3. Pingback: சிறுமியைப் பலாத்காரம் செய்ததாகப் புகார்: தலைமறà¯

 4. The event happened in 2007. Please note that.

 5. vedaprakash says:

  No, it happened in 2005-06.

  After a through search and verification, I found that the news first appeared in the Indian Express and then, http://www.christianaggression.com, reproduced.

  For more details, see here:
  http://christianityindia.wordpress.com/2010/07/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/

 6. மனைவி விஜயாவிற்கு கொஞ்சம்கூட இரக்கம் இல்லையா? பாஸ்டர் சார்லஸ் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவன். திருமணமான அவனுக்கு டிட்டோ மற்றும் டேனியல் என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள், மனைவி விஜயா கூனூரில் வாழ்ந்து வருகிறாராம். கணவன் அனாதை இல்லம் நடத்தினால், தானும் சளைக்காமல், ஒரு ஜெபக்கூடத்தை மேட்டுப்பாளையத்தில் நடத்தி வருகிறாளாம்.

  சரி, புருஷன் இப்படி காமக்களியாட்டத்தில் ஈடுபட்டு இளம்பெண்களை வதைத்து, சித்திரவதைப் படுத்துகின்றானே என்று விஜாவிற்குத் தெரியவில்லையா?
  தட்டிக்கேட்கவில்லையா?
  அல்லது ஷீபாபால் மாதிரி, பிரைட்டுக்கு உடைந்தையாக இருந்து செயல் பட்டாளா?
  கர்த்தரைத்தான் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும் போலிருக்கிறது!

 7. sathish says:

  pls open the video

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: