Engineering Student Killed

எம்.ஜி.ஆர்., பல்கலை மாணவர் படுகொலை : சத்தியபாமா பல்கலை மாணவர்கள் 2 பேர் கைது

சென்னை : கல்லூரியில் கமிஷன் அடிப்படையில் மாணவர்களுக்கு சீட் வாங்கி கொடுப்பது தொடர்பாக, இரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் தொடர்பாக, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த எம்.ஜி.ஆர்., பல்லைக்கழக மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சத்யபாமா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி மாவட்டத்தை சேர்ந்தவர் நந்திஜித் சிங். ரயில்வே போலீசில் எஸ்.ஐ.,யாக வேலை பார்த்து வருகிறார். இவரின் மகன் நிர்பே சிங் (21). இவர் சென்னை மதுரவாயலில் தங்கி எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழகத்தில் பி.டெக்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரின் நண்பர் ஆஷிஷ் குமார் (21). இவர் நீலாங்கரை, எல்லையம்மன் கோவில் தெருவில் தங்கி, சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் பி.டெக்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, நிர்பே சிங் தனது நண்பருடன் ஆஷிஷ் குமார் அறைக்கு சென்றார். அங்கு அவர்களுக்கு இரவு விருந்து நடந்தது. நேற்று அதிகாலை 2:30 மணிக்கு நிர்பே சிங் தனது நண்பர் பங்கஜ் குமாருடன் பைக்கில் மதுரவாயல் திரும்பி கொண்டிருந்தார். அவர்களின் துணைக்காக ஆஷிஷ் குமார் சென்றார். மூவரும் இரண்டு பைக்கில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர். பங்கஜ் குமார் பைக் ஓட்டி செல்ல, நிர்பே சிங் பின்புறம் அமர்ந்திருந்தார்.
பாலவாக்கம் அருகே சென்ற போது, கார்கள் மற்றும் பைக்குகளுடன் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் கும்பல் நிர்பே சிங்கை வழிமறித்தது. அவர்களிடமிருந்து தப்பிய மூவரும் ஈஞ்சம்பாக்கம் நோக்கி பைக்குகளை வேகமாக செலுத்தினர்.அக்கரை செக்போஸ்ட் அருகே நிர்பே சிங் சென்ற பைக்கை, தங்களின் காரால் அந்த கும்பல் இடித்து கீழே தள்ளியது. அதிலிருந்த சிலர் நிர்பே சிங்கை இரும்பு கம்பியால் பின் தலையில் தாக்கினர். ரத்த வெள்ளத்தில் நிர்பே சிங் கீழே விழுந்து துடித்தார்.
இதையடுத்து, கல்லூரி மாணவர்கள் கும்பல், அங்கிருந்து தப்பி தலைமறைவானது. பங்கஜ் குமாரும் பலத்த காயமடைந்தார். அவர்கள் அடையாறிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே நிர்பே சிங் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து, துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி தலைமையில் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம், கவுதமன் மற்றும் போலீசார் மருத்துவமனை விரைந்தனர். நிர்பே சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் நிர்பே சிங் கொலை வழக்கு தொடர்பாக சத்யபாமா பல்கலைக்கழகத்தை சேர்ந்த, சவுரவ் சந்திரா (20), சஞ்சிவ்குமார் சிங்(20) ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சுமன் சவுரவ் (20) உள்ளிட்ட பலரை தேடி வருகின்றனர்.
மாணவர் படுகொலைக்கான முக்கிய காரணம் : சென்னை புறநகரிலுள்ள நிகர்நிலை பல்கலைக்கழங்களில் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.
வடமாநிலத்தில் ப்ளஸ் 2 முடித்த மாணவர் ஒருவரை இங்குள்ள சில பல்கலைக்கழகத்தில் சேர்க்கும் மாணவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு ஆசைப்படும் மாணவர்கள் படிப்பை விட ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை சேர்ப்பதில் அக்கரை காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நிர்பே சிங் இந்தாண்டு சில மாணவர்களை சேர்ப்பதற்காக அட்வான்ஸ் பெற்றிருந்தார். இது தொடர்பாக நிர்பே சிங்கிற்கும் கொலை செய்த மாணவர்களுக்கு விரோதம் ஏற்பட்டதாக தெரிய வருகிறது. கடந்த ஒரு மாதமாக இரு பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ராஜிவ்காந்தி சாலையில் வசிக்கும் சத்யபாமா பல்கலைக்கழக மாணவர் விவேக் என்பவர் தாக்கப்பட்டார். அவர் பெருங்குடியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது சக மாணவர்களுக்கு தெரிந்ததும் அவர்கள் மருத்துவமனை சென்று நலம் விசாரித்துவிட்டு, கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் ஒன்று கூடியிருந்தனர். அந்நேரம் நிர்பே சிங் அந்த கும்பலிடம் சிக்கி பலியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: