பங்காரு அடிகளாரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை 120 கோடி தங்கம், ரூ11.5 கோடி

Melmaruvathur

சென்னை, ஜூலை 2: சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, கணக்கில் காண்பிக்கப்படாத ரூ.19 கோடி ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர்.

கூடுதல் கட்டணம், வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது, கணக்கில் வராமல் ரொக்கமாகவும், வங்கி வைப்புத் தொகையாகவும் வைக்கப்பட்டிருந்த ரூ. 19 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்த விவரம்:

பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணங்களை சில தனியார் மருத்துவ மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்கள் நன்கொடையாக வசூலிப்பதாகப் புகார் எழுந்தது. இவ்வாறு கூடுதலாக வசூலித்த தொகையை உரிய வகையில் கணக்கில் காண்பிக்காமல் வரி ஏய்ப்பு உள்ளிட்ட முறைகேடுகளில் இந்த நிறுவனங்கள் ஈடுபட்டதாகப் புகார்கள் கூறப்பட்டன.

இதையடுத்து சென்னை, ஆரணி, கொடைக்கானல், கொச்சி, பெங்களூர், தில்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள கல்லூரிகள், மாணவர் சேர்க்கைப் பிரிவு அலுவலகங்கள் என 45 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணி அளவில் ஒரே சமயத்தில் தங்களது அதிரடி சோதனைகளைத் தொடங்கினர்.

இந்தச் சோதனையின்போது சென்னைக்கு அருகில் உள்ள ஒரு பிரபல குழுமத்தின் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலகங்களில் இருந்து கணக்கில் காண்பிக்கப்படாத ரூ.10 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போன்று கோவையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை செய்ததில், உரிய கணக்கு இல்லாமல் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்ட  ரூ. 7.5 கோடி மற்றும் ரொக்கம் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டன என சென்னையில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு கூடுதல் இயக்குநர் எஸ்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னை, ஆவடி, மதுரவாயல், மேற்கு தாம்பரம், கும்மிடிப்பூண்டி, மேல்மருவத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 15-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் வெவ்வேறு அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வருமான வரி சோதனை தொடர்ந்து இரவிலும் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, ஜூலை 2, 2010, 14:26[IST]

சென்னை& மேல்மருவத்தூர்: தமிழகம் முழுவதும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் ரெய்ட் நடத்தி வருகின்றனர்.

மாணவர் சேர்க்கைக்காக பல்வேறு கல்லூரிகள் ஏராளமான அளவி்ல் நன்கொடை வசூலித்து வரும் நிலையில் இந்த ரெய்ட் நடந்து வருகிறது. இதனால் இன்று பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் நடக்கவில்லை.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அந்தக் கல்லூரிகளின் தாளாளரும் பங்காரு அடிகளாரின் மகனுமான செந்தில்குமாரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பின்னர் கோவிலில் வைத்து பங்காரு அடிகளாரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பங்காரு அறக்கட்டளை தான் இந்தக் கல்லூரிகளையும் கல்வி நிறுவனங்களையும் நடத்துகிறது. அவை உரிய வரி செலுத்தாததால் இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

செந்தில்குமார் தனது தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருவது குறி்ப்பிடத்தக்கது. இந்த வீட்டிலும் மேல்மருத்துவத்தூர் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் ஒரே நேரத்தில் சுமார் 200 அதிகாரிகள் சோதனைகள் நடந்தினர்.

அதே போல நாகர்கோவில் சன் கல்லூரியிலும் சோதனை நடக்கிறது. இந்தக் கல்லூரிக்கு சமீபத்தில் அங்கீகாரத்தை ரத்து செய்தது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னையில் ஆவடியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கல்லூரியின் நிர்வாக அலுவலகம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ளது. அந்த அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல கும்மிடிப்பூண்டி ஆர்.எம்.கே. கல்லூரி, தாம்பரம் சாய்ராம், மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர். கல்லூரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல பொறியியல் கல்லூரிகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கோவை கற்பகாம்பாள் நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் சோதனை நடக்கிறது.

இந்த சோதனைகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சோதனை நடைபெறுவதால் பல கல்லூரிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடக்கவில்லை.

மேல்மருவத்தூர் அடிகளார் வீட்டில் சோதனை


பங்காரு அடிகளார் வீட்டின் முன் சோதனை நடத்துவதற்காக குழுமியிருந்த வருமான வரித் துறையினர்

மதுராந்தகம்,ஜூலை 3: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் நடத்தப்படும் பொறியியல்,மருத்துவக் கல்லூரிகளில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை தொடங்கி 17 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர்.

÷அறநிலைய நிறுவனர் பங்காரு அடிகளார்,அவரது மூத்த மகன் அன்பழகன், அவரது மகள் ஸ்ரீதேவி ஆகியோரது வீடுகளிலும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை 6 மணி வரை வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

÷இதையறிந்து பங்காரு அடிகளாரின் வீட்டு முன்பு பத்திரிகையாளர்கள் குழுமினர். அப்போது அடிகளாரின் பாதுகாப்பு ஊழியர்கள் திடீரென பத்திரிகையாளர்களைத் தாக்கத் தொடங்கினர். இச்சம்பவத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் கேமிராமேன், நிருபர்கள் தாக்கப்பட்டதுடன் செய்தியாளர்கள் சிலரின் செல்போன்கள் பறிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மதுராந்தகம் டி.எஸ்.பி.தணிகைவேலிடம் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸôர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

÷இச் சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் மதுராந்தகம் தாலூகா அலுவலகம் முன்பு சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Advertisements

2 Responses to பங்காரு அடிகளாரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை 120 கோடி தங்கம், ரூ11.5 கோடி

 1. மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு
  சனிக்கிழமை, ஜூலை 3, 2010, 10:11[IST]
  http://thatstamil.oneindia.in/news/2010/07/03/cbi-files-case-against-melmaruvathur-college.html
  மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

  இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெற கல்லூரி நிர்வாகம் கோடிக்கணக்கில் லஞ்சம் தந்தது தெரியவந்துள்ளது. முன்னாள் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய்க்கு லஞ்சம் கொடுத்தே இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

  இதையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்ததையடுத்தே நேற்று அந்தக் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதும் தெரியவந்துள்ளது.

  லஞ்ச வழக்கில் கேத்தன் தேசாய் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கக்து.

  இந் நிலையில் மேல்மருத்தூர் பீடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என அனைத்துக் கல்வி நிலையங்களிலும் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர்.

  நேற்று அதிகாலை தொடங்கிய ரெய்ட் நள்ளிரவை தாண்டியும் நடந்தது.

  அடிகளாரிடம் 17 மணி நேரம் விசாரணை:

  பங்காரு அடிகளார், அவரது மகன் அன்பழகன், மகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் பலரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்தது.

  அடிகளாரிடம் நேற்று பகல் 12 மணிக்குத் தொடங்கிய விசாரணை இன்று அதிகாலை 5 மணிக்குத் தான் முடிவடைந்தது. அதே நேரத்தில் அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.

  விசாரணையின்போது கேத்தன் தேசாய்க்கு தரப்பட்ட லஞ்சப் பணம், கல்லூரியின் வரவு செலவுகள், நன்கொடை கட்டணத்துக்குரிய ரசீதுகள் ஆகியவை குறித்து சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன.

  நிருபர்களுக்கு அடி, உதை:

  இந் நிலையில் இந்த வருமான வரி விசாரணை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் பயங்கரமாக தாக்கப்பட்டனர்.

  நிருபர்களின் டிவி கேமராக்கள், வாகனங்களை அங்கிருந்தவர்கள் பறிமுதல் செய்து கொண்டனர். பின்னர் நிருபர்களுக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது.

 2. மேல்மருவத்தூரில் நிருபர்கள் மீது தாக்குதல் – செல்போன், தங்கச் சங்கிலி பறிப்பு

  First Published : 03 Jul 2010 09:51:17 AM IST

  சென்னை, ஜூலை 3: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் நடந்த வருமான வரித் துறை சோதனை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் அந்த வளாகத்துக்கு வெளியே சனிக்கிழமை அதிகாலை தாக்கப்பட்டனர். தொலைக்காட்சி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டன. கல்லூரி ஊழியர்கள் நிருபர்களின் செல்போன்களையும் பறித்துச் சென்றனர். அப்போது அவர்கள் கைகளில் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளும் பறிக்கப்பட்டதாக சில நிருபர்கள் தெரிவித்துள்ளனர்.
  இந்தக் கல்லூரி உள்ளிட்ட சில தனியார் கல்லூரிகளில் வெள்ளிக்கிழமை காலை வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
  சனிக்கிழமை அதிகாலை 5.30 மணி வரையில் சோதனை தொடர்ந்து நடந்தது.
  அதுவரை கல்லூரி வளாகத்துக்கு வெளியே நிருபர்கள் காத்திருந்தனர். வருமான வரித் துறை அதிகாரிகள் வெளியே வந்தபோது படம் எடுக்க முயன்ற தொலைக்காட்சி நிருபர்களைத் தாக்கிய கல்லூரி ஊழியர்கள், கேமராக்களை சேதப்படுத்தினர்.
  தகவல் அறிந்து அங்கு சென்ற பத்திரிகை நிருபர்களிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன்களைப் பறித்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
  பல்வேறு புகார்களின் அடிப்படையில் மாநிலம் முழுக்க வருமான வரித் துறையினர் இதுபோல சோதனை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை மாலை வரையில் ரூ.19 கோடி பறிமுதல் செய்தனர். சோதனை முடிவில் எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்ற விவரத்தை சனிக்கிழமை பிற்பகலில் அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  செய்தி சேகரிக்கச் சென்ற தங்கள் மீது நடந்த தாக்குதல், கேமரா உடைப்பு, செல்போன்கள், தங்க சங்கிலி பறிப்பு குறித்து நிருபர்கள் காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளனர்
  http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D,+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&artid=266115&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: