இந்துக்களின் புனித இடங்களைப் பாதுகாக்க வேண்டும் : இராம.கோபாலன்

http://www.inneram.com/201007019113/save-hindu-holy-places-rama-gopalan

வியாழன், 01 ஜூலை 2010 09:49

இந்துக்களின் புனித இடங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கலியுகத் தெய்வமான திருவேங்கடமுடையான் எழுந்தருளியிருக்கும் திருப்பதி மலை மீது கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிக்கும் சதிக்கு ஆந்திராவின் முதல்வராக இருந்த சாமுவேல் ராஜசேகர ரெட்டி துணைபோனார். அதனைக் கண்டித்து பெரும் போராட்டம் வெடித்தது. அதன் பிறகு அரசும், அரசியல்வாதிகளும் பின்வாங்கினர். கிறிஸ்தவர்கள் சதி முறியடிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் உள்ள தென்கயிலாயம் தலத்திற்குக் கிறிஸ்தவர்களால் ஏற்பட்ட ஆபத்தை அடுத்து தென்கயிலாய பாதுகாப்பு மாநாடும், போராட்டமும் நடைபெற்றது. அதற்குப் பின் அந்தச் சதி தடுத்து நிறுத்தப்பட்டது.

பிருங்கி மகா முனிவர் வாழ்ந்து தவம் செய்த தலம் பிருங்கி மலை, பேச்சு வழக்கில் பரங்கிமலை என்று அழைக்கப்பட்டது. அங்கு புனிதமான பிருங்கீஸ்வரர் ஆலயம் பல நூற்றாண்டுகளாக வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த மலை ஆங்கிலேய கிறிஸ்தவர்கள் சூழ்ச்சியால் ஆக்கிரமிக்கப்பட்டது.

தோமையர் (தாமஸ்) என்பவர் அந்த இடத்திற்கு வரக்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை எதிர்த்து இந்து முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது. அச்சிறுப்பாக்கம் மலையைச் சுற்றி கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்களோடு இணைந்து அச்சிறுப்பாக்கம் மலையையும், அங்குள்ள ஆலயத்தையும் பாதுகாத்திட இந்து முன்னணி போராடி வருகிறது.

இதுபோல் குறுமுனி அகத்தியர் வாழ்ந்து தமிழ் பரப்பிய பொதிகை மலையிலும் கிறிஸ்தவ சதி வேலை வெளிப்பட்டது. அதனை எதிர்த்தும் போராடியது இந்து முன்னணி. தற்போது சித்தர்கள் என்றென்றும் வாழும் சதுரகிரி மலை கிறிஸ்தவர்களின் சதிக்கு இலக்காகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சதுரகிரி, சித்தர்கள் வாழ்ந்து வருகிற பூமி. இங்கு கிறிஸ்தவர்கள் இடைïறு செய்தால் சிவ பக்தர்கள் வெகுண்டெழுவார்கள், விளைவுகள் மோசமாகும் என எச்சரிக்கிறோம்.

இந்துக்களின் புனிதமான இடங்கள் பாதுகாக்கப்படவும், வழிபடவும் தக்க ஏற்பாடு செய்வது தமிழக அரசின் கடமை. தமிழக அரசும், காவல்துறையும் உடன் நடவடிக்கை எடுத்து கிறிஸ்தவர்களின் சூழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: