கொடைக்கானல் மாணவியை செய்த பலாத்காரம் பப்ளிக் ஸ்கூலின் தாளாளர் பிரைட் சரணடைந்தார்.

Kodaikanal Public School thumb.cms?msid=6118047&width=300&resizemode=4

கொடைக்கானல்: பூடான் நாட்டு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூலின் தாளாளர் பிரைட் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

முன்னதாக அந்தப் பள்ளியின் முதல்வர் ஷீபாவை போலீஸார் கைது செய்தனர்.

பாலியல் புகாரில் சிக்கிய பிரைட் கடந்த 2 வாரமாக தலைமறைவாக இருந்தார். அவர் மீது நில மோசடி வழக்கும் பதிவாகியுள்ளது.

தலைமறைவாக இருந்து வந்த அவரைப் பிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் வெளிநாட்டுக்கு ஓடி விடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதால் பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.

இந் நிலையில் பிரைட் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த கோர்ட், சம்பந்தப்பட்ட மாணவியுடன் தங்கியிருந்த 16 மாணவிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறுமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில், பிரைட்டுக்கு உதவியதாக நேற்று நள்ளிரவில் பள்ளி முதல்வர் ஷீபா பால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து பிரைட்டுக்கும் போலீஸார் கடும் எச்சரிக்கை விடுத்தனர். அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர் சரணடைய வேண்டும். அவருக்கு யாரும் உதவக் கூடாது. அப்படிச் செய்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்தனர்.

இதைத் தொடர்ந்து பிரைட் இன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளர் பிரைட் முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு

கொடைக்கானல் : மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளர் பிரைட்டின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பூடான் நாட்டைச் சேர்ந்தவர் விஜி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஏற்காட்டிலுள்ள பாதிரியார் சாம்ராஜ் பாதுகாப்பில் உள்ளார். கொடைக்கானலிலுள்ள பள்ளியில் தங்கிப் படிக்கிறார். இந்தப் பள்ளியில் கல்விக் கட்டண சலுகை பெறும் 17 மாணவ, மாணவியர் தாளாளர் பிரைட்(70) வீட்டில் தங்கி படித்து வந்தனர்.இரவு நேரத்தில் விஜியை தனது அறைக்கு “டிவி’ பார்க்க வரச்சொல்லி, தாளாளர் பிரைட் அடிக்கடி “பாலியல் தொந்தரவு ‘ கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி, இது குறித்து பாதுகாவலர் சாம்ராஜுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் பள்ளிக்கு வந்து, மாணவியின் “டிசி’யை வாங்கி விட்டு, கடந்த 21ம்தேதி கொடைக்கானல் டி.எஸ்.பி., பாஸ்கரனிடம் புகார் கொடுத்தார். போலீசார் தாளாளர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தகவலறிந்த தாளாளர் தலைமறைவானார். அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதாகவும், இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் கேரளாவிற்கு சென்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் பிரைட் முன்ஜாமீன் மனு விசாரணை ஜூலை 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

CAN WE SEE SUCH TRUE POLICE ACTION
Advertisements

2 Responses to கொடைக்கானல் மாணவியை செய்த பலாத்காரம் பப்ளிக் ஸ்கூலின் தாளாளர் பிரைட் சரணடைந்தார்.

  1. கொடைக்கானல் பள்ளி முதல்வர் கைது!
    வெள்ளி, 02 ஜூலை 2010 13:50 தமிழ் Tamil Nadu
    பூடான் மாணவி ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் பள்ளி முதல்வர் ஷீபா பால் கைது செய்யப்பட்டார்.

    கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியான கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூல் எனும் பள்ளியின் தாளாளர் பிரைட் தன்னிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அப்பள்ளியில் படிக்கும் பூடான் மாணவி கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    தனக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டுள்ளதை அறிந்த பிரைட் தலைமறைவாகிவிட்டார். அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்கு அவருடைய பாஸ்போர்ட்டை காவல் துறையினர் முடக்கி உள்ளனர்.

    எந்த நேரமும் தாம் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்த பிரைட் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், பூடான் மாணவியுடன் தங்கியிருந்த 16 மாணவிகளிடமும் வாக்குமூலம் வாங்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டது.

    அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பள்ளியின் முதல்வர் ஷிபா பால் என்பவரை கொடைக்கானல் காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்தனர். இவர் பள்ளியின் தாளாளர் பிரைட்டின் மகளாவார்.

    பால் கைது செய்யப்பட்டவுடன் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறினார். காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் சான்று அளித்தனர். பின்னர் அவரை நீதிமன்றம் அழைத்துச் சென்று, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதி பெற்றுள்ளனர்.

  2. Updated

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: