சீமான் பல்டி-விவேக் ஓபராய்க்கு மன்னிப்பு

விவேக் ஓபராய்க்கு மன்னிப்பு – சீமான் பல்டி

Posted Image

கா‌ரியவாதி அரசியல்வாதிகளுக்கு நடுவில் தமிழ் உணர்வை காட்டுவதில் கறாராக இருக்கிறாரே சீமான் என்று மகிழாத தமிழ் மனம் இல்லை. ஆனால் இந்த‌க் கறார் உணர்வாளர் தனது கொள்கையிலிருந்து திடீரென கவிழ்ந்திருப்பது தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இலங்கையில் நடந்த பட விழாவில் கலந்து கொண்ட அனைத்து நட்சத்திரங்களின் படங்களையும் தமிழ்நாடு மட்டுமின்றி தென்னகத்திலுள்ள ஐந்து மாநிலங்களிலும் அனுமதிக்க மாட்டோம் என திரைப்பட சங்கங்கள் அறிவித்துள்ளன. பட விழாவில் கலந்து கொண்ட ஹிருத்திக் ரோஷனின் கைட்ஸ் படத்தை சென்னை திரையரங்குகளிலிருந்து தூக்க வேண்டும் என திரையரங்க உ‌ரிமையாளர்களுக்கு கடிதம் கொடுத்து, இந்த‌ச் செயல் திட்டத்தை தொடங்கி வைத்தவர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சியினர். (அதே நேரம் இலங்கை படவிழாவில் கலந்து கொண்ட கத்‌ரினா கைஃபின் ரா‌ஜ்நீதி திரைப்படம் இன்னும் சென்னையில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது).

இந்த இனத்துரோக படவிழாவில் பங்கேற்றதுடன் தமிழர்களின் உணர்வை கொச்சைப்படுத்தி ராஜபக்சேயின் முதல்தர அடிவருடி என்ற பெயரை தட்டிச் சென்றவர் விவேக் ஓபராய். படவிழா முடிந்த பிறகும் கொலைகாரன் ராஜபக்சேவின் விருந்தினராக இலங்கையில் தங்கியிருந்ததுடன் அவன் ஏற்பாடு செய்த கண் துடைப்பு திருமண விழாவுக்கு சீஃப் கெஸ்டாக சென்று தமிழர்களின் உணர்வை காலில் போட்டு மிதித்த நடிகர் விவேக் ஓபராய்.

இந்த விவேக் ஓபராயை சீமான் மன்னித்துவிட்டாராம். ஏதற்கு?

விவேக் ஓபராய் நடித்த ரத்த ச‌ரித்திரம் ஆகஸ்டில் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு எதிராக சீமான் போராட்டம் நடத்த மாட்டாராம். ரத்த ச‌ரித்திரத்தில் சூர்யா நடித்திருப்பதால் விவேக் ஓபராயை மன்னித்து படத்தை வெளியிட அனுமதிப்பாராம். ரத்த ச‌ரித்திரத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அது சூர்யாவுக்கு எதிரான போராட்டமாகிவிடுமாம்.

பத்து கோடி தமிழர்கள் சம்பந்தப்பட்ட உணர்வுமிக்க விஷயத்தில் தன்னிச்சையாக பொது மன்னிப்பு வழங்க சீமான் யா‌ர்? எப்போது அவர் பாவமன்னிப்பு வழங்கும் பாதி‌ரியானார்?

சொந்த பிள்ளைகளுக்காகவும், உடன்பிறவா சொந்தங்களுக்காகவும் கொள்கையை பறக்கவிடும் மற்ற அரசியல்வாதிகளுக்கும் சீமானுக்கும் என்ன வித்தியாசம்? கட்சி தொடங்கி இரண்டு மாதம்கூட பூர்த்தியாகாத நிலையில், எதற்காக கட்சி தொடங்கினாரோ அந்த‌க் கொள்கையையே ஏதோ ஒரு தம்பிக்காக விட்டுத் தருகிறார் என்றால் நாளை இன்னொரு தம்பிக்காக தமிழர்களையே கை கழுவ மாட்டார் என்று எப்படி நம்புவது?

மற்றவர்கள் ஒரு சயனைடு குப்பியை கழுத்தில் தொங்கவிட்ட போது தனது குடும்பத்தின‌ரின் கழுத்தில் இரு சயனைடு குப்பிகளை தொங்கவிட்ட தமி‌ழீழ தேசிய‌த் தலைவ‌ரின் தம்பி என்று சொல்லிக் கொள்கிற தகுதி தனக்கிருக்கிறதா என்று சீமான் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நன்றி: தமிழ் வெப்துனியா..

//சீமான் அவர்கள் சொன்னதாக குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியிடப்பட்டிருப்பதை கீழே படியுங்கள்.

இதுகுறித்து  ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவர் சீமானிடம் கேட்டோம். ‘‘நாம் தமிழர், தமிழருக்கான இயக்கம். ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கும் தம்பி சூர்யாவின் தமிழுணர்வை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது. கொழும்பு விழாவுக்கு முன்பே தொடங்கப்பட்ட படம், ‘ரத்த சரித்திரம்’. விவேக் ஓபராய்க்காக அந்தப் படத்தை எதிர்த்தால், அது என் தம்பி சூர்யாவுக்கு எதிரான போராட்டமாகிவிடும். சூர்யாவுக்காக விவேக் ஓபராயை இந்தமுறை மன்னித்து அனுமதிக்கிறோம். அதே நேரத்தில் இனிமேல் விவேக் ஓபராய் நடிக்கும் எந்தப் படத்தையும் தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம்’’ என்றார்.

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்//

கூத்தாடிகளின் காத்தாடிகள் கவனத்திற்கு…

http://padaipali.wordpress.com/2010/06/26/கூத்தாடிகளின்-காத்தாடிக/

சினிமா என்ன செய்தாலும்,கூத்தாடிகள் என்ன சொன்னாலும் எமக்கு வேத வாக்கு…எம் ஹீரோ,உமக்காய் பால் சொம்பு தூக்கவும்,பேனர் கட்டவும்,முதல் நாள்,முதல் காட்சி கைதட்டி,விசிலடித்து பார்க்கவும் காத்திருக்கிறோம் என்றிருக்கும் இனமானமுள்ள எம்மினமே!!!நம்மினம் இறந்தாலும் கவலைப் படாது கிரிகெட்டுக்கும்,சினிமாவுக்கும் உயிர் வாழும் உறவே!!!

கூத்தாடிகளின் காத்தாடிகளே வணக்கம்!…நேத்து அதான் முட்டிய போட்டு நட்டுகிட்டு நல்லா டான்ஸ் ஆடுவானே அந்தப் பையன்… அவன் பேரு என்னா…ஆஅம்..அதான் டாக்டர் விசய்..நம்மாளுங்க ஈழத்துல கேக்க ஆளில்லாம செத்துகிடந்தப்ப..நம்ம காச பிச்ச எடுத்து சம்பாதிச்சது பத்தாதுன்னு , திடுதிப்புன்னு கெளம்பி காங்கிரஸ் கிட்ட பதவி பிச்சை கேட்டு ஓடுனான்..அவன எவனும் கண்டுக்கல..அப்புறம் ஓடி வந்தான்..

அப்புறம் திரும்பி பாத்தா அடுத்த ஆளு அட நம்ம சூர்யா..இன்டோ-இலங்கை கூட்டு கம்பெனி கு கையெழுத்து போட்டுட்டு அப்புறம் நம்மாளுக கொஞ்சம் முழிச்சு கிட்டாங்க னு தெரிஞ்ச வுடனே..நான் அப்படிலாம் பண்ணலன்னு ஜகா வாங்கினார் .

அடுத்து பாத்தா ஐஃபா ஆட்டத்துக்கு வர சொல்லி சிங்களவன் ஆள் அனுப்பிருந்தான்.. அத பிரகாஷ்ராஜ் போன்று சில நல்ல மனசுள்ள நடிகர்கள் நிராகரிச்சதால பல கூத்தாடிங்க, நாங்க வரலன்னு பில்ட் அப் கொடுத்துட்டாங்க..உணர்வுள்ளவன்க மாதிரி சீனும் போட்டுட்டாங்க.

அப்புறம் பாத்தா நம்ம சமத்துவ மக்கள் கச்சி தலீவரு பேட்டி கொடுத்துருக்காரு..சிங்கள அரசாங்கத்த ஆதரிச்சி..என்னங்கடா நடக்குது இங்கன்னு கேட்டு முடிகிறதுக்குள்ள…நம்ம சிங்கத்துக்கு என்ன முறுக்கி கிச்சோ தெரியல..சிங்கள மண்ணுல ஐஃபா ஆட்டம் ஆடிட்டு வந்த விவேக் ஒபராயோட தான் நடிச்ச படம் ரத்த சரித்திரம் வெளியாக இருக்க நேரத்துல சூர்யாவின் திமிரான ஒரு பேட்டியை தோழி ஒருவர் இணையதளத்தில் பகிர்ந்திருந்தார்…

ஜூன் 24ஆம் தேதி ‘பெங்களூர் மிர்ரர்’ நாளிதழுக்கு சூர்யா அளித்துள்ள பேட்டி:

“தடையை மீறி கொழும்பில் நடந்த ஐஃபா விழாவில் பங்கேற்ற விவேக் ஓபராயுடன் நீங்கள் நடித்துள்ள ரத்த சரித்திரா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதே?”

“ஐஃபா விழா விவகாரமே செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே… என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்து விடாது. சமீபத்தில் ராவணன் ரிலீஸானபோதுகூட யாரும் ஒன்றும் சொல்லவில்லையே.

ரத்த சரித்திரம் படப்பிடிப்பின்போது நான் விவேக் ஓபராயோடு பேசினேன். அப்போது யுனிசெப் மற்றும் அந்நாட்டின் உள்ளூர் தமிழர்களுடன் இணைந்து புதிய பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகச் சொன்னார். இந்த விஷயத்தில் அவர் என்ன உதவி கேட்டாலும் செய்ய நான் தயாராக உள்ளேன். அவருடன் சேர்ந்து அந்தப் பணியைச் செய்ய விரும்புகிறேன்.

நடிகர்கள் இலங்கை சென்றது வெறும் கேளிக்கைக்காக அல்ல. அங்குள்ள மக்களுக்கு உதவத்தான். இந்தப் பிரச்சனை அன்றோடு முடிந்துவிட்டது. திரும்பத் திரும்ப அதை கிளறுவது ஏன்?” என்று நடிகர் சூர்யா கூறியுள்ளதாக அறிந்தேன்.

இப்படித்தான் உணர்வில்லாம் நேரத்துக்கு ஏத்த மாதிரி கூத்தாடிங்க நிகழ்கால வாழ்க்கையிலும் நடிக்கிறாங்க…இதுப்பற்றி இதுவரை நான் உணர்வாளர் னு மதிக்கிற அண்ணன் சீமானும் சூர்யாவின் பேட்டி பத்தியோ,அந்தப் படம் வெளியாகிறது பத்தியோ ஒன்னும் கண்டுக்கலன்னு கேள்விப்பட்டேன்..ஹிர்த்திக் படத்துக்கு காட்டின எதிர்ப்பை அண்ணன் சீமான் கண்டிப்பா இந்த விசயத்துல காட்டி ஆகணும்..ஹிந்திக்காரன் தப்பு செஞ்சாலும் மன்னிச்சிக்கலாம்..ஆனா நம்ம தமிழனே அத பண்ணானா??

அண்ணன் சீமான் கண்டிப்பா நிகழ்கால வாழ்க்கையிலும் நடிக்கிற கூத்தாடிங்க கூட்டத்துல சேர மாட்டாருன்னு நம்புறேன்..பொறுத்து இருந்து தான் பாக்கணும்..

காத்தாடிகளே…கூத்தாடிங்க நம்ம முதுகுல ஏறியே சவாரி செஞ்சுகிட்டு நம்ம முதுகுலையே குத்துறாங்க…காத்தாடிங்க  கண்டுக்காம விட்டா தானா அடங்குவாங்க இந்த கூத்தாடிங்க..செய்வோமா..உசாரா இருங்க..பால் சொம்பு எடுத்துட்டு கிளம்பிடாதீங்க..

போங்கடா உங்களுக்கு வேற வேலையே இல்ல..இப்படித்தான் எதாவது எழுதுவீங்க..தலைவர கொற சொல்றீங்க..சிங்கத்துக்கு அப்புறம் அவர் என்ன (அ)சிங்கம் பண்ணுவார்னு பாத்துடிருக்கோம் பால் ஊத்த…கிறீங்களா!!.

வாழ்க சமுதாயம்

Advertisements

4 Responses to சீமான் பல்டி-விவேக் ஓபராய்க்கு மன்னிப்பு

  1. சுனாமி தாக்குதல் பொழுது தன் சொந்த காசில், பாண்டி அருகில், தேவனாதன் பட்டினத்தில் மறு வாழ்வு (முதல் உதவி) செய்து கொடுத்தவர்.

  2. ஈழத்தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கிறார் சீமான்! -ஈழத்து எழுத்தாளர் ஷோபா சக்தி குமுறல் வேலைக்காரிகளின் புத்தகம் என்ற தலைப்பில் ஈழத்து எழுத்தாளர் ஷோபாசக்தியின் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது கருப்பு பிரதிகள் பதிப்பகம். அதில், தமிழ்சினிமா குறித்து எழுதியிருக்கும் ஷேபாசக்தி, இயக்குனர் சீமான் பற்றியும், அவரது Ôதம்பிÕ படம் பற்றியும் விமர்சனங்களை வைத்திருக்கிறார். அந்த கட்டுரையின் சில பகுதிகள் நமது வாசகர்களுக்காக… இக்கட்டுரை தொடர்பான விமர்சனங்களை வாசகர்கள் நமது இணையதள மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்… தம்பி தமிழ் தேசியமும் சே குவேரா பனியனும் திரைப்பட நடிகர்களின் கட் அவுட்டுகளுக்குப் பாலாபிஷேகம் செய்வது, அபிமான நடிகைகளுக்காக கோயில் கட்டுவது, அபிமான நடிகர்களுக்காக விரலை வெட்டுவது, அரைவேக்காட்டுத் தனமான மிகை உணர்ச்சித் திரைப்படங்களுக்கும் மலிவுத்தனமாக பாலியல் கிளர்ச்சிகளை உருவாக்கும் விடலைத்தனமான ‘காதல்’ படங்களுக்கும் பல்கலைகழகப் பேராசிரியர்களும் திரைப்பட ஆய்வாளர்களும் பாராட்டுக் கட்டுரைகள் எழுதுவது, உலக இலக்கியத்தைச் சவால் செய்வதாய்ச் சொல்லிக்கொள்ளும் இலக்கிய எழுத்தாளன் பேய் பிசாசு நம்பிக்கைகளையும் சாதி பெருமிதங்களையும் தூக்கி நிறுத்தும், துப்பட்டாக்களைக் கண்காணிக்கும் சமூக விரோதத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது, திரைப்படப் புகழ் நட்சத்திரங்களைத் தேர்ந்த சமூக சிந்தனையாளர்களாக உருவகித்து ஊடகங்கள் நேர்காணல் செய்வது, உணர்ச்சிப் பாவலர்கள் ஆணிய வக்கிரத்துடன் ஆபாசமாகத் திரைப்படப் பாடல்கள் புனைவது, சினிமாக் கவர்ச்சி என்ற ஒன்றை ஆயுதத்தின் துணையுடன் மட்டுமே திரைப்படப் துறையினர் அரசியல், பண்பாட்டு தளங்களின் போக்குகளைத் தீர்மானிக்கக் கூடிய சக்திகளில் ஒன்றாக மாறிவிடுவது போன்ற அட்டூழியங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ முடியும் என அடிக்கடி எமது தமிழகத் தோழர்கள் வருத்தப்பட்டுக் கொள்வதுண்டு, தோழர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரு செய்தி என்னிடம் உண்டு தமிழ்நாட்டில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையேயும் இந்த அட்டூழியங்களில் சிலவாவது நிகழ்ந்து கொண்டு தானிருக்கின்றன.. பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் பாரிஸ் நகரத்தில் ஈழத் தமிழர்கள் நடமாடும் கடை வீதிகளில் எல்லாம் இயக்குனர் சீமானின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட ‘தம்பி’ திரைப்படத்துக்கான விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. நடிகர் மாதவனின் விதவிதமான தோற்ற நிலைகளின் கீழே ‘அச்சந்தவிர்’, ரௌத்திரம் பழகு’ என்ற புதிய ஆத்திசூடியின் வரிகள் அச்சிடப்பட்டிருந்தன. அச்சுவரொட்டிகளில் இப்படியாகவும் ஒரு வரி இருந்தது ‘முக்கிய குறிப்பு ; இத்திரைப்படம் ஈழத் தமிழர்களின் பிரச்சனையைப் பற்றியது”. அதே நேரத்தில் அய்ரோப்பியத் தமிழ்த் தொலைக்காட்சிகளில் தம்பி திரைப்பட முன்னோட்டம் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை காண்பிக்கப்பட்டது. முன்னோட்டத்தில் முத்தாய்ப்பாய் சேகுவேரா, மாவோ இருவரது புகழ்பெற்ற இரண்டு கூற்றுக்கள் திரையில் எழுத்துக்களாய் மின்னின. தம்பி திரைப்படம் வெளியானதும் புலம்பெயர் வாரப் பத்திரிக்கைகள் தம்பி படத்தைக் கொண்டாடின. மின் இலத்திரனியல் ஊடகங்களில் தம்பி திரைப்படமும் இயக்குனர் சீமானும் சேகுவேரா பனியனும் முக்கிய பேசு பொருட்களாயின. மார்க்ஸின் மாணவன், பெரியாரின் பேரன், தம்பியின் தம்பி என்று கிறுக்குத்தனமாகச் சீமான் பெரிய சாமானாக வர்ணிக்கப்பட்டார். இந்த அமளிதுமளிக்குள் சீமான் அவுஸ்ரேலியாவிலுருந்து ஒலிபரப்பாகும் ‘இன்பத்தமிழ்’ வானொலிக்கு 20.10.2005 அன்று வழக்கியிருந்த நேர்காணலை இணையத்தளம் ஊடாகச் சற்றே தாமதமாகக் கேட்க நேர்ந்தது. அந்நேர்காணலில் சீமான் இவ்வாறு கூறினார்; ”சிங்கள அரசு முழுப் பலத்துடன் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் போது அதை ஒரு அரசின் இறையாண்மையாக உலகம் பாக்க்கிறது, ஆனால் நாங்கள் கையில் ஆயுதத்தை எடுக்கும் போது அதை வன்முறையாகத் தீவிரவாதமாக உலகம் சொல்கிறது. அப்படிச் சொல்லக் கூடாது என்பதையே உள்ளர்த்தமாகக் கொண்டு தம்பி திரைப்படத்தை எடுத்து வருகிறேன்”. இவை எல்லாவற்றினதும் உச்சமாகத் தம்பி வெளியானதும் சீமான் ஆனந்த விகடன் இதழுக்கு வழங்கிய நேர்காணலில் ”தம்பியின் வெற்றியைப் பெரியாருக்கும் பிரபாகரனுக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்றார். இனி வருவது தம்பி திரைப்படத்தின் கதை; அன்பே உருவான பெற்றோரும் பாசமுள்ள ஒரேயரு தங்கையும் உள்ள தமிழ் சினிமாவின் மாதிரிக் குடும்பமொன்றில் பிறந்தவன் தம்பி என்ற வேலுத் தொண்டைமான். இவனுக்கு முன்னதாகச் ‘சகலகலாவல்லவன்’, ‘நான் சிவப்பு மனிதன்’, ‘பரமசிவன்’, ‘திருப்பாச்சி’ போன்றவர்களும் இத்தகைய மாதிரிக் குடும்பத்தில் பிறந்தவர்களே. கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவனான தம்பி மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்துடன் உத்தியோகம் பார்க்க தொடங்குகிறான். வேலைக்குப் போய்க் கொண்டிருக்கையில் தெருச்சண்டியன் பாண்டியனின் தம்பி செய்யும் கொலையன்றைத் தற்செயலாகச் சீமானின் தம்பி பார்த்துவிடுகிறான். தம்பி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததால் பாண்டியனின் தம்பி உள்ளே தள்ளப்படுகிறான். இதனால் வெகுண்டெழுந்த தெருச்சண்டியன் பாண்டியன், தம்பியின் மாதிரிக் குடும்பத்தைக் கொன்றொழித்து விடுகிறான். இப்போது தம்பி சினந்தெழுந்து பாண்டியனைப் பழிவாங்க பாண்டியனின் வீட்டுக்குச் செல்லும் போது அங்கே பாண்டியனின் மாதிரிக் குடும்பத்தைக் காண்கிறான். அக்குடும்பம் தான் பாண்டியனைக் கொலை செய்வதால் பாதிக்கப்படக் கூடாது என எண்ணும் தம்பி பாண்டியனைச் சந்தித்து ”நிறுத்திக் கொள்வோம்” என்கிறான். பாண்டியனோ தம்பியை அடித்து முள்ளுக் கம்பியில் காயப் போட்டுவிடுகிறான். காயங்கள் ஆறியதும் தம்பி வன்முறையை ஒழிக்கப் புறப்படுகிறான். வில்லன் குழுவினரை துரத்தி துரத்தி மரண அடி அடிக்கிறான் தம்பி. தம்பி கொலை செய்வதில்லை ஆனால் கொலைக்கும் கோமாவுக்கும் உள்ள மயிரிழையில் தம்பியிடம் அடி வாங்கியவர்களின் உயிர் ஊசலாடுகிறது. இந்த மயிர் இழையில் தான் படமே நிற்கிறது. வன்முறைக்கு எதிராக ஒரு வரையறுக்கப்பட்ட வன்முறைத் தம்பி கையில் எடுக்கிறான். ”உதைக்கணும் உதைக்கணும் உதைப்பேன்” என்று முழிகளைப் புரட்டியவாறு ஒரு சைக்கோ மாதிரித் தம்பி அலைய தம்பியின் சைக்கோவையும் தெருச் சண்டித்தனத்தையும் மாவீரம் என அர்த்தப்படுத்திக் கொள்ளும் அர்ச்சனா, தம்பியை விரட்டி விரட்டிக் காதல் செய்கிறாள். தம்பிக்கு உலகைத் திருத்தும் வேலையிருப்பதால் அவன் அர்ச்சனாவின் திடீர்க் காதலை நிராகரிக்கிறான். என்றாலும், அர்ச்சனா விடாப்பிடியாகக் கனவில் தம்பியோடு இரண்டு காதற் பாடல்களை ஊரைச் சுற்றி மரத்தைச் சுற்றி பாடிவிடுகிறாள். இடையில் தம்பிக்கு மதியுரைஞராக வந்து வாய்க்கிறார் மணிவண்ணன். பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை இடிக்கும் வாலிப வயோதிக அன்பர்களை அடக்கிய தம்பியின் தீரச் செயல்களுக்குப் புரட்சிகர தத்துவார்த்தரீதியான விளக்கங்களை மதியுரைஞர் வழங்குகிறார். ”நான் ஏன் தெருச்சண்டியன் ஆனேன்” என்று பல்கலைக்கழகப் பரிசளிப்பு விழா மேடையில் தம்பி உருக்கமாக உரை நிகழ்த்துகிறான். அப்போது மேடையில் இருக்கும் செட் ப்ரொப்பர்டிகள் பின் வருமாறு; மூன்று நாற்காலிகள், ஒரு மேசை, எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்சினி, ஒரு மைக் ஸ்டாண்ட், பாவலர் அறிவுமதி, ஒரு மின்விசிறி. மீண்டும் தோன்றும் மதியுரைஞர் தம்பியிடம், கார்ல் மார்க்ஸ், சே குவேரா, பிரபாகரன் எல்லோரும் கல்யாணம் செய்ததால் தம்பியும் அர்ச்சனாவை காதலிக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறார். உடனே தம்பி அர்ச்சனாவின் காதலை ஏற்றுக்கொள்ள, அர்ச்சனா தம்பியின் காலில் தடாலென விழுந்து கும்பிடுகிறாள். கடைசி நேரக் கலவரத்தில் பாண்டியனின் மாதிரிக் குடும்பத்தை சீமானின் தம்பி ஆபத்திலிருந்து காப்பாற்றுவதோடு பாண்டியனுக்கு அறிவுரையும் சொல்கிறான். மனம் திருந்திய பாண்டியன் சீமானின் தம்பியைத் தனது குலசாமியாக ஏற்றுக்கொள்கிறான் இது தெரியாத பாண்டியனின் தம்பி சீமானின் தம்பியைவெட்டி விடுகிறான். தம்பி குற்றுயிராக ஆஸ்பத்திரிப் படுக்கையில் கிடக்கத் தம்பியின் காதலியும் நண்பர்களும் சோகத்துடன் நிற்க்கிறார்கள். இவர்களை விடப் படுசோகத்துடன் வில்லனும் வெட்டியவனும் கண்களைக் கசக்கிக் கொண்டு நிற்கிறார்கள். அப்போது அங்கே தோன்றும் மதியுரைஞர் தம்பியின் காதிற்குள் ” தம்பி எழுந்திரு! இன்னமும் பஸ்ஸில் இடித்தபடியேதான் பயணம் செய்கிறார்கள் எழுந்திரு! நமக்கு இன்னமும் வேலையிருக்கிறது.” என்று கூறத் ”தம்பி” பொழைச்சிட்டான்”. மேலேயுள்ளது தம்பி திரைப்படத்தின் கதைச் சுருக்கம் என்று நினைத்து விடாதீர்கள். தம்பி திரைப்படத்தின் முழுக்கதையும் இதைவிடச் சுருங்கியது. நான்தான் வாசிப்புச் சுவாரசியத்துக்காகக் கதையைச் சற்றே மினுக்கி எழுதியுள்ளேன். தறுதலைத் தம்பிக்கும் தாதா பாண்டியனுக்கும் இடையில் நடக்கும் நாய்ச் சண்டையில் தமிழீழ மக்களின் போராட்டம் எங்கே வருகிறது? காதலை ஏற்றுக் கொண்டவுடன் தம்பியின் கால்களில் காதலி விழுந்து தொழும் அசிங்கமான திரைப்படத்தில் ஈரோடுச் சிங்கத்துக்கு என்ன வேலை? இந்த வெங்காயச் சினிமாவை வீரமணி, கொளத்தூர் மணிக்குக் கூட அர்ப்பணிக்க முடியாதே? இதை எந்தத் துணிச்சலில் சீமான் பெரியாருக்கு அர்ப்பணிக்கிறார்? ”தமிழ்த் திரைப்படங்களைக் குறித்துப் பேசுவது சிரங்கைச் சொறிந்து கொடுப்பதைப் போன்றது” எனப் பேராசிரியர் சிவசேகரம் ஒருமுறை எழுதியதாக நினைவு. பேராசிரியர் விரக்தியின் விளிம்பில் நின்று இதை எழுதியிருந்தாலும் கூடத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நேர்முறைப் பண்புகளும் இல்லாமல் இல்லை. திராவிட இயக்கத்தினரின் திரைப்படங்களும் ‘பாதை தெரியுது பார்’, ‘ஏழாவது மனிதன்’, ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ போன்று மாற்றுத் திரைப்படங்களைக் கண்டடைவதற்கான எத்தனங்களிற்குள்ளால் உருவாக்கப்பட்ட திரைப்படங்களும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமானவை. இது தவிர வணிக நோக்கில் தயாரிக்கப்படும் சனரஞ்சக மனோரதியத் திரைப்படங்களிற்கும் பரந்துபட்ட தமிழ்ப் பார்வையாளர்கள் திரளிற்குமிடையே உள்ள உறவும் ரசிக உளவியலும் குறித்த ஒரு உரையாடலை ‘நிறப்பிரிகை’ சில வருடங்களிற்கு முன்பு தொடங்கி வைத்தது. எனினும் அவை குறித்த சிந்தனை வளர்ச்சியும் ஆய்வு முயற்சிகளும், தமிழில் தொடராமலேயே போய் விட்டன. பாடல்கள், நடனங்கள், சண்டைக் காட்சிகள், மிகை உணர்ச்சிகள், போன்ற கேளிக்கைக்கான நேர்மறைக் கூறுகளுடன் நடிகைகளைப் பாலியல் பிரதிமைகளாகக் கட்டமைப்பது, ஆதிக்க சாதிச் சாய்வு, மூடநம்பிக்கைகள், ஆண் மையவாதச் சிந்தனை முறைமை போன்ற எதிர்மறைக் கூறுகளும் சேர்ந்ததாகவே தமிழ்ச் சினிமாவின் பரப்பு இயங்கி வருகிறது. இந்தப் போக்கு தமிழ்ச் சினிமாவில் மட்டுமல்லாமல் உலகச் சினிமாவிலும் தொழிற்படும் ஒரு போக்குதான். ஆனால் பொதுவாகவே தமிழ்த் திரைப்படத் துறையில் மாபெரும் வணிக வெற்றிகளைச் சாதித்த இயக்குனர்கள் தமது திரைப்படங்களுக்கு வெளியே புரட்சிகரமான வாய்ச் சொற்களை உதிர்ப்பதில்லை. ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தின் வெற்றியைக் கத்தாருக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கங்கை அமரன் சொன்ன தில்லை. ‘கப்டன் பிரபாகரன்’ படத்தின் வெற்றியை ஈழப்போராளிகளுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று செல்வமணி சொன்னதில்லை. ஆனால் மேற்சொன்ன படங்களையே கருத்துத் தளத்தில் ஒத்ததாக உள்ள தம்பி திரைப்படத்தின் வெற்றியைப் பெரியாருக்கும், பிரபாகரனுக்கும், அர்ப்பணிக்கிறேன் என்று கூறும் சீமானின் வாய்த் துடுக்குக்குப் பின்னால் இருப்பது எது? தம்பி திரைப்படத்துக்குப் புறத்தே இயக்குனர் சீமான் கட்டமைத்த, கட்டமைக்கும் போலிப் புரட்சிகரப் படிமங்களின் பின்னே, அவர் உதிர்க்கும் வெற்று வீர வசனங்களின் பின்னே இயங்கும் சின்னத்தனமான அரசியலின் வியாபார இலக்கு எது? அந்த வியாபாரத்தின் அரசியல் என்ன? இந்தக் கேள்விகளைப் பரிசீலிப்பதற்கு முன்னதாகத் தம்பி படத்தின் திரைக்கதை வசனத்தைப் பற்றியும் அவற்றுள் பொதிந்திருக்கும் ஆபத்தான சாதிய ஆண்மையவாத அராஜகக் கூறுகளைப் பற்றியும் பார்த்து விடுவோம். தம்பி திரைப்படம் பழிக்குப் பழி என்ற வழமையான தமிழ்த் திரைப்படப் பாணியிலிருந்து வேறுபட்டது, அதனாலேயே அது முக்கியமானது என்று திராவிடப் பாசறையிலிருந்து வரும் ‘உண்மை’ இதழும் எழுதுகிறது. தமிழ்த் தேசியவாதப் பாசறையிலிருந்து வரும் ‘தென் செய்தி’ இதழும் எழுதுகிறது. என்ன இழவு இது? எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களில் 130 படங்களில் இந்த கதை தானே நடந்தது! எழுந்தமானமான எடுத்துக்காட்டாய் கஜேந்திரா பிலிம்ஸின் ‘நாளை நமதே’ திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். அன்பே உருவான தாய், அறிவே உருவான தந்தை, சங்கர், வி.ஜே, கண்ணன் என மூன்று குழந்தைகள்! தென்றல் நடைபயின்ற குடும்பத்தில் திடீரெனப் புகுந்தான் கொள்ளைக்காரன் ரஞ்சித். தென்றல்கள் ஒவ்வொன்றும் திசைக்கொன்றாகப் பிரிந்தன… முடிவு என்ன? எம்.ஜி.ஆர் பெரியவனாக வளரவில்லையா? தன் குடும்பத்தையே நாசமாக்கிய நம்பியாரைக் கண்டுப் பிடிக்கவில்லையா? நம்பியாரைத் தண்டவாளத்தில் ஓடவிட்டுத் துரத்தித் துரத்தி நீதி மொழிகள் பேசவில்லையா? நம்பியாரைப் பழிவாங்க எல்லா வாய்ப்புகள் இருந்தும் இறுதியில் எம்.ஜி.ஆர் நம்பியாரின் உயிரைக் காப்பாற்றி சட்டத்தின் கையில் ஒப்புவிக்கவில்லையா? அப்போது நாகேஷ் போலீசாரை ஜீப்பில் ஆழைத்துக்கொண்டு வரவில்லையா? எல்லாமே நடந்தன. ஒன்று மட்டும்தான் நடக்கவில்லை. இத் திரைப்படத்தின் வெற்றியை அண்ணாத்துரைக்கு அர்ப்பணிப்பதாக எம்.ஜி.ஆர் சொல்லவில்லை! ‘தென்செய்தி’ இதழில் சுப. வீரபாண்டியன் தம்பி திரைப்படத்தைக் குறித்து எழுதும் போது தம்பியின் வீட்டில் பெரியார், கார்ல் மார்க்ஸ், பாரதிதாசன் படங்கள் தொங்குவதாக மகிழ்ந்து போகிறார். இவையெல்லாம் தம்பியின் உள் வீட்டில் மாட்டியிருந்த படங்கள். ஆனால் தம்பியின் வீட்டின் முகப்பில் மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படம் அண்மைக் காட்சிக்குள் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் வரும் ஒரு புகைப்படம் எப்படித்தான் பேராசிரியரின் கண்களுக்குப் படாமல் போனதோ தெரியவில்லை. அம்முகப்புப் படத்திலிருப்பவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். மார்க்ஸின் மாணவர்கள், பெரியாரின் பேரர்கள், ஒரு போதும் முத்துராமலிங்கத்தின் படத்தைத் தூக்கிப்பிடிப்பதில்லை. தலித் மக்களின் தலைமைப் போராளி இம்மனுவேல் சேகரனின் படுகொலைக்கு நேரடிக் காரணியாக இருந்தவர் முத்துராமலிங்கம். முத்துராமலிங்கத்திற்கு அடிப்படைவாத இந்துத்துவ முகமும் உண்டு. இந்து மகாசபைத் தலைவராகவும் முத்துராமலிங்கம் இருந்தார். ”ஒரு வேளை இன்று முத்துராமலிங்கர் உயிருடன் இருந்திருந்தால் அவரே இன்றைய தமிழக இந்துத்துவ சக்திகளின் தலைவராக இருந்திருப்பாரோ என்று ஊகிக்கவும் இடமுண்டு” என்பார் அ.மார்க்ஸ் (அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம் பக். 107) இன்று தென் மாவட்டங்களில் சாதி ஒடுக்குமுறையாளர்களாக விளங்கும் முக்குலத்தோரின் சாதிப் பெருமிதப் படிமமாக, வரலாற்று நாயகனாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டிருக்கிறார். ஆக முத்துராமலிங்கத்தின் படத்தைத் தம்பியின் வீட்டில் சீமான் மாட்டி விட்டதற்குப் பின்னாலிருப்பது சுய சாதி அபிமானத்தைத் தவிர வேறென்ன? இந்த இடத்தில் இயக்குனர் சீமான் திரைப்படத் துறையினுள் நுழைந்த விதத்தையும் நாம் கவனிக்க வேண்டும். சீமான் பாரதிராஜாவின் ‘பசும்பொன்’ திரைப்படத்திற்குக் கதை – உரையாடல் எழுதித்தான் திரைப்படத் துறையில் அறிமுகமாகிறார். தமிழ்ச் சினிமாவின் மொழியை மாற்றிப் போட்ட வகையிலும் ‘கிழக்கே போகும் ரயில்’, ‘கருத்தம்மா’, போன்ற சில படங்களில் சமூகப் பிரச்சனைகளைச் சற்றே ஆழமாகப் பேசியவர் என்ற வகையிலும் தமிழ்த் திரைப்படத் வரலாற்றில் பாரதிராஜாவின் வகிபாகம் முதன்மையானதாக இருக்கிறது. இதற்கு அப்பால் சுயசாதிப் பெருமிதங்களைப் பேசும் படங்களைப் எடுத்ததோடு மட்டுமல்லாமல் சாதிச் சங்கத்தின் நிகழ்வுகளிலும் கலந்து கொள்பவர் பாரதிராஜா. சீமான் கதை உரையாடல் எழுதிய பசும்பொன் திரைப்படமும் சுயசாதிப் பெருமைகளைப் பேசிய ஒரு வன்கொடுமைத் திரைப்படம்தான். இத்திரைப்படத்தின் நாயகப் பாத்திரமான துரைராசுத் தேவர் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் சிவாஜி கணேசன் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. அத்திரைப்படத்தில் தான் ”தென்பாண்டிச் சிங்கமே தேவர் அய்யா எங்கள் தேவர் குலத் தங்கமே தேவர் அய்யா” என்ற பாடல் வருகிறது. இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து என்பது கூடுதற் தகவல். ”நமது மொழி சாதி காப்பாற்றும் மொழி” என்பார் பெரியார். நமது மொழியின் அடுக்குகளில் சாதி நுட்பமாகப் படிந்துள்ளது. சீமானின் தம்பி திரைப்படத்தில் பாத்திரங்கள் பிற பாத்திரங்களைத் திட்டும் போது ‘சண்டாளா’ எனத் திட்டுகிறார்கள். படம் நெடுகவும் இந்த சண்டாளா என்ற சொற்பிரயோகம் வருகிறது. சண்டாளர் என்பது புராணங்கள், இதிகாசங்கள் தோன்றிய காலங்களிலிருந்தே தலித்துக்களை இழித்துரைப்பதற்காக ஆதிக்கச் சாதியினர் பயன் படுத்தும் சொல். மதுரை மீனாட்சி கோயில் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடந்தபோது அடையாளமாகப் பறையர், பள்ளர், நாடார் சாதிகளிலிருந்து இரண்டிரண்டு பேர்களென ஆறு பேர்கள் ஆலயத்துக்குள் நுழைந்தனர். ‘ஆறு சண்டாளர்கள்’ என இவர்களைப் பற்றி ‘பிகிரதி’ என்ற பார்ப்பனப் பெண் வசைப்பாடல் இயற்றிய கொடுமையைத் தமிழவேள் இம்மானுவேல் ‘தேவேந்திரர் வரலாறு’ என்ற நூலிற் குறிப்பிடுகிறார். இவற்றுக்கு மேலாகச் சண்டாளரென்பது இந்தியாவின் அட்டவணைச் சாதிகளுள் உள்ள ஒரு தீண்டப்படாத சாதியின் பெயர் என்பதும் அறிய வருகிறது, இச்சாதியின் பெயரை வசைச் சொல்லாகச் சீமான் தம்பி திரைப்படத்தில் உபயோகித்திருப்பதைத் திரைப்படத் தணிக்கை குழுவினர் எப்படி அனுபதித்தனர்? தணிக்கைக் குழு அனுமதித்திருப்பினும் உண்மையும் தென்செய்தியும் சுபவீயும் கோவி.லெனினும் எப்படி இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்? சீமான் சார்ந்திருக்கும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் குஷ்புவிடம் இருந்து மட்டும்தான் தமிழைக் காப்பாற்றுமா? சாதியிடமிருந்து தமிழைக் காப்பாற்றாதா? பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்திலும் ‘கதாநாயகி’, கதைக்குச் சம்மந்தமில்லாமல் வந்துபோன அறிவுமதி, ஆண்டாள் பிரியதர்சினி போலவே அவளும் வந்து போகிறாள். சற்றுக் காலத்திற்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகள் ஜீன்ஸ், பனியன் போன்ற உடைகளை அணியக் கூடாது என்ற ஒரு கலாச்சார அடிப்படைவாத விதி கொண்டுவரப்பட்டதே, அதை மாணவிகள் கடைப்பிடிக்கிறார்களோ இல்லையோ சீமான் செம்மையாகக் கடைப்பிடிக்கிறார். படம் முழுவதும் கல்லூரி மாணவியான நாயகி சேலையிலேயே வருகிறாள். சீமானைப் போல மாதவனைப் போல அவளால் சே குவேரா படம் பொறித்த பனியன் அணிய முடியாது. விரும்பினால் சே குவேரா படத்தைச் சேலையில் பிரிண்ட் போட்டுக்கொள்ள வேண்டியதுதான். புரட்சியாளனைக் காதலிக்கும் குற்றத்துக்காக அவள் புரட்சியாளனிடமிருந்து லூசு, இம்சை, பேய் போன்ற வசைகளைப் பெறுகிறாள். கடைசியில் சீமானின் தம்பி காதலை எற்றுக் கொண்டதும் அவனின் கால்களில் விழுகிறாள். முற்று முழுதாக ஆணாதிக்கச் சிந்தனை வழியிலேயே சீமான் நாயகியின் பாத்திரத்தைக் கட்டமைத்திருக்கிறார். வெட்கத்தை விட்டு ஒன்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது; கே.பாலச்சந்தர் போன்ற பார்ப்பனப் பிற்போக்குவாதிகள் ‘அவள் ஒரு தொடர் கதை’, ‘அவர்கள்’, ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘அக்னி சாட்சி’, ஆகிய திரைப்படங்களில் அரைகுறையாகவேனும் சித்தரித்துக் காட்டிய பெண் ஆளுமைகளைக் கூட நமது பெரியாரின் பேர்ர்களாலும் தம்பியின் தம்பிகளாலும் உருவாக்க முடியாமலுள்ளது. அவர்கள் தமிழ்க் கலாச்சாரம் என்ற பெயரில் காலில் விழும் கலாச்சாரத்துக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்� ள். மாவோவின் மேற்கோளோடு தொடங்கி, சே குவேராவின் மேற்கோளோடு முடியும் இத் திரைப்படம் முழுவதும் சீமானின் தம்பி கிட்டத் தட்ட ஒரு போலிஸ் உளவாளி போலவே இயங்குகிறான். போலிசார் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் போது போலிஸ் வாகனத்துக்கு முன்னால் தம்பி பாதுகாப்பு அளித்துச் செல்கிறான். போலிசாரும் தம்பி சண்டித்தனம் செய்யும் போது கடைசிவரைக்கும் கண்டும் காணாமலேயே இருந்து விடுகிறார்கள். வரலாற்றிலேயே இல்லாத புரட்சியாய்ப் போலிஸ் அதிகாரி புரட்சியாளனை இரகசியமாய்ச் சந்தித்துச் சிலபல அய்டியாக்களும் கொடுக்கிறான். ‘புரட்சியாளன்’ தம்பியும் போலிசும் கை கோர்த்துச் செயற்படுகிறார்கள். இவ்வாறாகப் போலிஸாருடன் கரங்களைக் கோர்ப்பவர்களைச் சனங்கள் புரட்சியாளன் என்று அழைப்பதில்லை, மாறாக ”போலிஸ் உளவாளி” என்றுதான் காறியுமிழ்வார்கள். இந்தப் படத்தை எடுத்ததற்காகப், போலிஸாரால் காவல் நிலையங்களிலேயே துகிலுரியப்படைட பெண்கள், போலிஸாரால் என்கௌன்டர்களில் சுட்டுத் தள்ளப்பட்டவர்களின் உரித்துகள், வீரப்பன் வேட்டை நிகழ்த்த பகுதிகளிலும், நக்ஸல்பாரிப் புரட்சியாளர்கள் கொடூரமாகப் போலிசாரால் கொன்றொழிக்கப் பட்ட தருமபுரிக் கிராமங்களிலும் வாழும் இரத்த சாட்சியங்களான மக்கள் சீமானை காறியுமிழ்வார்கள். சமூகத்தின் உண்மையான வன்முறையாளர்கள் சீமான் ‘ஆனந்த விகடன்’ நேர்காணலில் கோபப்படுவது போல சாலையில் குப்பை எறியும் இளைஞர்களோ சாலை விதியை மீறும் எளிய மனிதர்களோ அல்ல. அல்லது சீமான் தம்பி திரைப்படத்தில் சித்தரிப்பது போன்ற பேருந்தில் உரசியபடியே பயணம் செய்யும் பாலியல் வறுமையில் உழல்பவர்களோ தெருச்சண்டியர்களோ அடியாட்களாக இயங்கும் விளிம்பு நிலை மனிதர்களோ அல்ல. அவர்கள் இந்தக் கேடுகெட்ட சுரண்டல் சமூக அமைப்பின் விளைவுகள். சமூகத்தின் மிகப் பெரும் வன்முறை நிறுவனங்களாக அரசும் நீதிமன்றமும் காவல்துறையும் இராணுவமும், சிறைச்சாலைகளுமே விளங்குகின்றன. அவையே இந்தச் சமத்துவமற்ற சமூக ஒழுங்குகளையும் சுரண்டலையும் தாங்கிப் பிடித்து நிற்கின்றன். இவற்றின் வன்முறை குறித்துத் தம்பி திரைப்படம் பேசுவதில்லை. மாறாகத் தம்பி ஒரு இளைஞனுக்கு ”நீயும் நானும் அடித்தால் குற்றம். போலிஸ் அடித்தால் சட்டம்” எனவே நீ படித்து போலிஸ்காரனாகு! கலக்டராகு! சமூகத்தை திருத்து” என்கிறான். ‘தாகம்’ பெப்ரவரி 2006 இதழில் சீமான் தனக்குள் இலட்சியங்களை விதைத்தவர்களான மாவோவும், லெனினும், சே குவேராவும் தம்பி திரைப்படம் முழுவதும் விரவியிருப்பதாகக் கூறுகிறார். மாவோவும் லெனினும் அரசு இயந்திரத்தை நொறுக்குவது குறித்தும் அரசின் காவல் நாய்களான அதிகாரிகளையும் ஆயுதப் படையினரையும் செயலிழக்கச் செய்வது குறித்தும்தான் பேசுவார்கள். அவர்கள் புரட்சியாளர்களாக மாறச் சொன்னார்களேயழிய போலிஸ்காரர்களாக மாறச் சொல்லவில்லை. ”நீதி என்பது அரசின் வன்முறை. வன்முறை என்பது மக்களின் நீதி” என்பதே சர்வதேசிய அனார்கிஸ்டுகளின் முதல் முழக்கமாய்த் திகழ்கிறது. அரசுக் கட்டுமானம், நீதியின் வன்முறை, வெகுசனங்களின் கலகம் போன்றவை குறித்த நுண் அரசியற் புரிதல்கள் சே குவேராவின் பனியனைப் போட்டுக்கொண்டு அலைவதினாலோ சித்தித்துவிடப் போவதில்லை. இயக்குனர் சீமான் குத்துமதிப்பாய் மார்க்ஸிஸம், மாவோயிஸம் என அரைகுறையாய் அனர்த்துவதை நிறுத்திக்கொண்டு, குறைந்த பட்சம் அவர் அவரின் இன்னொரு தோழரான தியாகு எழுதிய ‘மார்க்சியம் ஆனா ஆவன்னா’ என்ற நூலையாவது படிக்க வேண்டும். ‘சொல்வது தெளிந்து சொல்லவேண்டும்’ என்று கூடப் புதிய ஆத்திசூடியில் வருகிறது! லெனினையும் பெரியாரையும் பாரதிதாசனையும் புகைப்படங்களாகத் தமிழ்த் திரையில் முதலில் காட்டியவர் சீமான் என்ற சித்தைனையாளன்தான் என்ற சிறுபிள்ளைத்தனமாக சுப. வீரபாண்டியன் மகிழ்ந்து போவதில் எந்த அர்த்தமும் இல்லை. எம்.ஜி.ஆர் கூடத்தான் உலகம் சுற்றும் வாலிபனில் லெனின் சிலையை காண்பிக்கிறார். பாரதிதாசனைப் பற்றியும் பெரியார்ப் பற்றியும் புத்தரைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் பேசாததையா சீமான் பேசிவிட்டார்? எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த நாடோடி மன்னன் திரைப்படத்தில் நாடோடி ஆட்சியில் அமர்ந்தவுடன் கொண்டுவரும் சட்டத் திருத்தங்களில் அரைவாசி கார்ல் மார்க்சும் எங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டவை என்பார்கள். வணிக இலக்குகளுடன் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்குள் இவ்வகையான போலிப் புரட்சிகரப் படிமங்களும் உணர்ச்சி முழக்கங்களும் எழுப்பப்படுவதற்கான நோக்கம் வியாபாரக் காரணங்களைத் தவிர வேறில்லை. தம்பி திரைப்படத்தைப் போலவே 1981ல் போலிப் புரட்சிகர முழக்கங்களுடன் ஏ.வி.எம் தயாரிப்பில் ‘சிவப்பு மல்லி’ என்றொரு திரைப்படம் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்தது. அத் திரைப்படத்தின் போலி முழக்கங்களுக்குப் பின்னாலிருந்த வணிக உத்திகளை அறந்தை நாராயணன் ‘தமிழ் சினிமாவின் கதை’ என்ற நூலில் விமர்சிக்கிறார். இந்த விமர்சனம் ‘நாடோடி மன்னனுக்கும்’ பொருந்தும், ‘உலகம் சுற்றும் வாலிபனுக்கும்’ பொருந்தும், அன்பே சிவத்துக்கும், பொருந்தும், நம் சீமானின் தம்பிக்கும் பொருந்தும். கீழே வருவது அறந்தை நாராயணின் ‘சிவப்பு மல்லி’ குறித்த விமர்சனம்; ”1980ல் ஏ.வி.எம் கூடத்திலிருந்து மெய்யப்பச் செட்டியாரின் மைந்தர்கள் ‘முரட்டுக்காளை’ என்றொரு பிரமாண்டமான பொழுது போக்குப் படத்தை வெளியிட்டனர். அது நடந்து கொண்டிருந்த போது ஆந்திராவில் ஒரு தெலுங்குப் படம் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிப்பட்டது. அந்தப் படம் ‘எர்ரமல்லி’. ஆந்திர மாநிலக் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய படம். சகோதரர்கள் அந்தப் படத்தைப் பார்த்தனர். சிக்கனமான செலவில் தயாரிக்கக் கூடிய ‘ப்ருவ்ட் சப்ஜக்ட்’ என்பதை உணர்ந்தனர். தேசமெங்கும் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியால் அமைதியின்மையும் வாழ்க்கை நெருக்கடியும்… அதனை எதிர்த்து விவசாயிகள் தொழிலாளிகள் இளைஞர்கள் மாணவர்கள் மத்தியதர வர்க்கத்தினர் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் புறச் சூழ்நிலை. இதன் எதிரொலியாக அமிதாப்பச்சன் நடிக்கும் இந்தி மசாலாப் படங்களிலும் ஏன் ரஜினிகாந்த் நடித்த தமிழ் ‘காளி’ படத்திலும் போராட்டக்கார இளைஞன் கம்யூனிஸ்டாகவும் கையில் செங்கொடி பிடிப்பவனாகவும் படங்களில் வரத் தொடங்கியிருந்தான். எர்ரமல்லி ப்ரூவ்ட் சப்ஜெக்டை ஏ.வி.எம் சகோதரர்கள் வாங்கினர். தமிழுக்கு தகுந்த மாதிரி திரைக்கதை எழுத வைத்து ‘சிவப்பு மல்லி’ என்ற படத்தை 1981ல் வெளியிட்டனர். தமிழ்த் படத்துக்கு வசனம் எழுதி இயக்கியவர் இராம. நாராயணன். நிலப்பிரபுத்துவத்தையும் முதலாளித்துவத்தையும் எதிர்த்து எழுந்த இரு கோபம் கொண்ட இளைஞர்களின் கதை. கடிகாரத்தைப் பின்னுக்குத் தள்ளிச் சுரண்டும் முதலாளி அவனுக்கு நல்லவளான ஒரு மனைவி கோமாளிகளான மூன்று நிலப்பிரபுகள். நிலப்பிரபுவுக்கு ஒரு மகள்… என்று தமிழில் (மாற்றப்பட்ட) திரைக்கதை. வண்ணத்தில் நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிகள், ஊர்வலத்தில் லெனின் படம் கூடவே பெரியார், அண்ணாத்துரை படங்கள். கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிகளையும், சில வசனங்களையும் நீக்கி விட்டால் ‘சிவப்பு மல்லி’ ஒரு எம்.ஜி.ஆர் பாணிப்படம்; அபாரமான வசூல்.” (தமிழ் சினிமாவின் கதை பக்;714) தம்பி திரைப்படத்திலும் இரு மேற்கோள்களையும் ஒரு வசனத்தையும் நீக்கி விட்டால் சீமானின் தம்பி அசலான விஜயகாந்த் பாணிப்படம். இராம.நாராயணனுக்கு ‘முரட்டுக்காளையை’த் தயாரித்த ஏ.வி.எம் நிறுவனமென்றால் சீமானுக்கு ‘ஜீன்ஸ்’ படத்தை தயாரித்த முரளி மனோகர். ஏவி.எம்மும் இராம.நாராயணனும் சேர்ந்து தமிழகத் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் தலையில் மிளகாய் அரைத்தார்களென்றால்; முரளி மனோகரும் சீமானும் தமிழகத் தமிழர்களுடன் சேர்ந்து ஈழத் தமிழர்களின் தலையிலும் மிளகாய் அரைக்கிறார்கள். இன்று புலம் பெயர்ந்த தேசங்களில் ஏறக்குறையப் பத்து இலட்சம் ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களே தமிழ்த் திரைப்படங்களின் வருவாயில் கணிசமான பகுதியைத் தீர்மானிப்பவர்களாக விளங்குகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஈழத்தமிழர்களின் சினிமாக் கிறுக்கு மற்ற எந்தத் தேசிய இனத்திவர்களின் சினிமாக் கிறுக்கை விடவும் சற்றும் குறைந்ததல்ல. ‘காதலுக்கு மரியாதை’ ‘ஆட்டோ கிராப்’ போன்ற கிறுக்குத்தனமான திரைப்படங்களைப் புகலிடங்களில் பெரும் வெற்றியோடு ஓட வைத்தவர்கள் இவர்கள். பாரிஸ் நகரத்தில் இதுவரை திரையிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிக காட்சிகள் ஓடிய திரைப்படம் ‘கப்டன் பிரபாகரன்’. அந்தப் பெயருக்காகவே அத்திரைப்படம் ஓட்டமாக ஓடியது. இதே வணிக உத்தியோடு சீமானின் தம்பி திரைப்படமும் புகலிட தேசங்களில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. இப்படியாக தொடர்கிறது அக்கட்டுரை… https://polldaddy.com/js/rating/rating.js
  3. சூர்யா மீது சீமானின் ரத்த சரித்திரம் படம் தொடர்பான நிலைப்பாடு எனக்குப் பிடிக்கவில்லை..மற்றபடி அவர் நல்ல உணர்வாளர்…உண்மையாக உழைப்பவர் என்றே எண்ணுகிறேன்.. ஈழத்து எழுத்தாளர் ஷோபா சக்தி, சீமானைப் பற்றி விமர்சிக்கும் அளவுக்கு தகுதியானவர் இல்லை..ஷோபா சக்தி எழுத்துக்காக எதையாவது எழுதுபவர்…மாவீரர்களின் தியாகத்தைக் கொச்சைப் படுத்துவதே இவருடைய பிரதான வேலையாகக் கொண்டிருப்பவர்..இவரது பின்னணி தெரியாமல் சிலர் அவரை உணர்வாளர் என்றெண்ணி ஏமாற்றம் அடைகிறார்கள்..raw வோட pay roll இல் இருக்கிறாரா என்ற சந்தேகம் நெடுநாளாக உணர்வாளர்கள் மத்தியில் இருக்கிறது..இவரின் இரட்டை வேடம் புலிகளையும் எதிர்ப்பார்,தமிழீழமும் வேண்டுமென்பார்..அவர் விடுதலைப்புலிகளின் எதிரி..அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..

  4. kavi says:

    காங்கரஸ் எதிராக குரல் கொடுப்பவர் சீமான் தான்.அவரும் ஏமாற்றினால்,கடவுளுக்குதான் எங்கள் விடிவு வெளிச்சம்.தமிழரின் சாபமே காட்டியும் கூட்டியும் கொடுக்கும் மக்களை கொண்ட இனம்.எத்தனையோ இன துரோகங்களை தாங்கி விட்டோம் ஈழத்தில்.நம்புகிறோம் சீமானை,கடவுளே இப்பவாவது எங்களை ஏமாற்றாமல் கை கொடு.வேற ஒன்றுமே செய்ய முடிதயாத நடை பிணங்கள் தான் நாங்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: