Kodaikanal Head Master Molesting Children for 25 years caught

கொடைக்கானல் உல்லாச கிருத்துவக் காமப் பெண்பித்தன்.

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2010,01:34 IST

கொடைக்கானல்:மாணவிக்கு பாலியல் தொந்தரவு

மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம் – கொடைக்கானல் பள்ளி தாளாளர்[1]! மதுரை: பள்ளி மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம் செய்து விட்டு கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூல் என்ற பள்ளியின் தாளாளர் எம். எல். பிரைட் (76) தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியான கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூலில் சிறப்பு சலுகையின் கீழ் படித்து வரும் ஆதவற்ற மாணவிகளிடம், அப் பள்ளியின் தாளாளர் பிரைட் தவறாக நடந்து கொண்டார் என்று புகார் எழுந்தது.

Young-girls-of-KPSYoung-girls-of-KPS

பெண் பிரின்ஸிபாலே உதவியாகச் செயல்படுவது: உதவியாக அந்த பள்ளியின் பிரின்ஸிபால், ஒரு பெண், செயல்படுவதும் வினோதமாகவே இருக்கிறது[2]. இது பி.ஏ.எம்.எஸ். டிரஸ்டின் கீழ் செயல்படும், ஒரு கிருத்துவ பள்ளியாகும்[3]. 1970ல் பிரைட் அஸாரியா மெமோரியல் ட்ரிரஸ்ட் – மறைந்த பிரைட் டேவிட் மற்றும் எட்வின் பால் அஸாரியா அவர்களின் நினைவாக எற்படுத்தப்பட்டதாகும். சகல வசதிகளைக் கொண்ட இது ஒரு ரிஸிடென்ஸியல் பள்ளியாகும். டைம்ஸ்-நௌ டிவிக்காரர்கள் கேட்டக்கேள்விகளுக்கு, இந்த பெண் நக்கலாகவே பதில் அளித்தார்.

chapel-inside-school-KPSchapel-inside-school-KPS

டிவி பார்த்துக் கொண்டே இளம்பெண்ணிடம் சில்மிஷம்: பூடான் நாட்டை சேர்ந்தவர் பானு (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், ஏற்காட்டில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் போதகர் சார்லஸ் சாம்ராஜ் பாதுகாப்பில் உள்ளார். கொடைக்கானலில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். இப்பள்ளியில் கல்வி கட்டண சலுகை பெறும் மாணவ, மாணவிகள் 17 பேர், தாளாளரின் பங்களாவில் தனி அறையில் தங்கியுள்ளனர். இரவு நேரங்களில் மாணவிகளை தனது அறைக்கு அழைத்து தாளாளர் டிவி பார்ப்பது வழக்கம். அப்போது சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்[4].  கடந்த 3ம் தேதி பானு தங்கியிருந்த இடத்துக்கு வந்த தாளாளர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதனால் பானுவுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. இதுதொடர்பாக சார்லஸ் சாம்ராஜுக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து, பானுவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.  அங்கு குணமடைந்தவுடன், பள்ளிக்கு சென்று பானுவின் டி.சி.யை வாங்கினார். பின்னர், சில்மிஷம் குறித்து கொடைக்கானல் டிஎஸ்பி பாஸ்கரனிடம் சார்லஸ் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் தாளாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Swimming-pool-KPSSwimming-pool-KPS

இதையடுத்து, பிரைட் திடீரென தலைமறைவானார். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அவருடை பாஸ்போர்ட்டை போலீசார் முடக்கி வைத்துள்ளனர். அவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அவர் மீது நில மோசடி புகாரும் பதிவாகி உள்ளது. காமுத்தாய் என்ற பெண்மணிக்குச் சொந்தமான நிலத்தை, தனக்கு 99 வருட குத்தகைக்கு அவர் விட்டுள்ளதாக கூறி போலியான ஆவணங்கள் மூலம் தனது பெயருக்கு பத்திரப் பதிவு செய்து பெரும் மோசடி செய்துள்ளார் பிரைட் என்பது அந்தக் குற்றச்சாட்டு.

NE-music-KPSNE-music-KPS

பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான்: இந்தப் புகார் குறித்தும் கொடைக்கானல் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரைட் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அப்படி ஒரு மனு இதுவரை தாக்கலாகவில்லை என்று மதுரை கிளை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. எம். எல். பிரைட் என்பவன் ஒரு பெண்கள் பைத்தியம். அவன் பல பெண்களிடம் ஜாலியாக இருக்கும் மனப்பாங்கைக் கொண்டவன். உள்ளூர் போலீஸாரின் கூற்றுப்படி, பல பெண்களை, குறிப்பாக ஆசிரியைகளை, அவன் அவ்வாறு பலவந்தப்படுத்தியுள்ளான்[5]. மதர் தெரஸா பல்கலைக்கழகத்தில் “விசிட்டிங் லெக்சுரர்” என்ற நிலையை ஏற்படுத்திக் கொண்டு, அங்கு “கெஸ்ட் ஹவுஸில்” தங்கும் வழக்கமும், ஒத்துப்போகும் பெண்களுடன் உல்லாசமாக காலம் கழிப்பதும் சகஜம்மாக இருந்தது. முதன் முதலாக, இப்பொழுதுதான் புகார் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.

NE-girls-at-KPSNE-girls-at-KPS

பூடானிலிருந்து எந்த பெண்ணும் அந்த பள்ளியில் படீக்கச் சென்றதில்லை என்று பூடான் அரசாங்கம் கூறுகிறது. ஆனால், வடகிழக்குப் பகுதிகளிலிருந்து வந்துள்ள பெண்கள் நிறையவே காணப்படுகின்றனர்.

Dancing-girls-at-KPSDancing-girls-at-KPS

இவர்களை மாநிலம் வாரியாக அடையாளங்காணும் திறமை அந்த பிரைட்டிற்குத்தன் இருந்தது என்பது தெரிகின்றது.


[1] மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம்-கொடைக்கானல் பள்ளி தாளாளர் தலைமறைவு[1]! புதன்கிழமை, ஜூன் 23, 2010, 12:39[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/06/23/kodaikanal-school-official-facing-sexual.html

[2] http://www.timesnow.tv/articleshow/4348014.cms

[3]http://www.kodaikanalpublicschool.org/Kodaikanal%20Public%20School-%20Introduction.htm

[4] http://www.newindianews.com/view.php?2bdmmAQ00ae0dcXXlm44e0ec4rNDYAA04b43oo46ee2cd33Ae0AK44dc23cAmfRcca400A4OXvdde2ee60MmYbb0

[5] http://www.kuenselonline.com/modules.php?name=News&file=article&sid=15845

முதியவனுக்கு வந்த சபலம்!

Reporter shockan.blogspot.com

முதியவர்கள், எல்லா வகையிலும் மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையை நாசம் செய்திருக்கிறார் இந்த 70 வயது தாளாளர்.

மலைகளின் இளவரசியான கொடைக் கானலில், 300-க்கும் அதிகமான மாணவ- மாணவிகள் பயிலும் கே.பி.எஸ். (கொடைக் கானல் பப்ளிக் ஸ்கூல்) பள்ளியின் தாளாளர் 70 வயதைத் தாண்டிய பிரைட்.

பிரைட்டின் கெஸ்ட் ஹவுஸில் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டிருந்த 10-ஆம் வகுப்பு ஏழை மாணவி கர்த்தவ்யா, தனது உறவினரான ஏற்காடு சி.எஸ்.ஐ. சர்ச் பாதிரியார் சார்லஸ் சாமுராஜுக்கு போன் செய்தாள்.

“”அங்கிள்… வார்டன் ரத்தினம் செல் ஃபோன்ல பேசுறேன்… கரஸ்பாண்டண்ட் பிரைட் சார்… ரொம்ப அசிங்கமா… ஆபாசமா நடத்து கிறார். செக்ஸ் டார்ச்சர் பண்றார்… ப்ளீஸ் அங்கிள் உடனே வந்து என்னை கூட்டிட்டுப் போயிடுங்க. இல்லைனா… செத்துப் போயிடுவேன் அங்கிள்!” கதறினாள் கர்த்தவ்யா.

கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூலுக்கு காரமடை, கன்னிவாடி, கோத்தகிரியிலும் பள்ளிக்கூட கிளைகள் உள்ளன. காரமடைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை படித்த கர்த் தவ்யாவை, கூட்டி வந்து இந்த கே.பி.எஸ்.சில் சேர்த்திருந்தார் சார்லஸ் சாமுராஜ்.

“”என் மனைவியின் சொந்தக்கார மாணவி இந்த கர்த்தவ்யா. ரொம்ப ஏழ்மையான குடும்பம். ஏழை மாணவிகளை மிகக் குறைந்த கட்டணத்தில் கே.பி.எஸ். பள்ளியில் பிரைட் சேர்த்துக் கொள்கிறார் என்று ஃபாதர் கிறிஸ் டோபர் சொன்னார். அதனால்… அங்கு 9-ஆம் வகுப்பில் சேர்த்தேன். ஹாஸ்டலில் தங்க வைத்தார். மாதா மாதம் 500 ரூபாயை தவறாமல் செலுத்திக் கொண்டிருந்தேன். திடீரென்று கர்த்தவ்யா எனக்குப் போன் செய்து பதட்டத்தோடு சொன்னதும் உடனே கொடைக்கானல் போனேன்…. அந்த 70 வயதுப் பெரியவர் நடந்து கொண்ட விதத்தை நீங்களே கர்த்தவ்யாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!” கர்த்தவ்யாவை நம்முன் நிறுத்தினார் பாதிரியார் சார்லஸ் சாமுராஜ்.

“”நான் ஸ்கூல்ல இருந்து ஹாஸ்டலுக்குப் போகும் போது வழிமறிச்ச பிரைட் சார் “இனிமே நீ ஹாஸ்டல்ல தங்கக் கூடாது. உன்னை மாதிரி ஏழைப்பசங்க 16 பேர் என் கெஸ்ட் ஹவுஸ்ல தான் தங்கிப் படிக்கிறாங்க. நீயும் தங்கிக் கொள்’னு கூட்டிப்போனார். அன்னைக்கி நைட்… நைட்டியை போட்டுக்கிட்டு படம் பார்க்க மாடிக்கு வாங்கனு கூப்பிட்டார்.

எல்லாரும் மாடிக்குப் போனோம். அசிங்கமான இங்கிலீஷ் படத்தை டி.வி.யில போட்டுக் காட்டி… “இந்த மாதிரி படங்களைப் பாருங்க அப்பத்தான் இங்கிலீஷ் சரம் சரமா பேச வரும்’ என்றார் பிரைட்.
மறுநாளும் அதே மாதிரி படம்… 4-ஆம் வகுப்பு, 5-ஆம் வகுப்பு மாணவிகள் எல்லாரும் படம் பார்த்தபடியே தூங்கிட்டாங்க. அப்ப எங்க நடுவில வந்து உட்கார்ந்த பிரைட் சார்… முதல்ல தோள்ல கையைப் போட்டார். பிறகு, கண்ட கண்ட இடத்தில எல்லாம் தொட்டாரு… நான் அழுதுகிட்டே எழுந்து கீழே ஓடி வந்துட்டேன். காய்ச்சல் வந்துவிட்டது. மறுநாள் கிளாசுக்கு போக முடியலை. படுத்துக்கிடந்தேன். கெஸ்ட் ஹவுஸ்ல நான் மட்டும் இருந்ததை தெரிஞ்சுக்கிட்டு பிரைட் சார் வந்தார்… கட்டிப் புடிச்சு டார்ச்சர் செஞ்சாரு… எழுந்து சுவரோரமாப் போய் நின்னேன்…

“உன் மாமன் மாதம் 500 தான் கொடுக்கிறான்… மீதியை நான்தான் போடுறேன்… என் இஷ்டப்படி நடக்கலைனா வெளியே போடி’னு மிரட்டினாரு… அதுக்குப் பிறகு தான் வெளிய ஓடினேன். ஹாஸ்டலுக்கு போய் வார்டன்ட்ட செல்ஃபோனை வாங்கி அங்கிள்ட்ட சொன்னேன்!” திக்கித் திணறி கண் கலங்கியபடி சொன்னார் மாணவி.

இனிமேல் “பிரைட்’ டின் கட்டுப்பாட்டில் கர்த்தவ்யாவை படிக்க வைக்க விரும்பாத பாதிரியார் சார்லஸ் சாமுராஜ் மாணவியின் டி.சி.யை வாங்குவதற்காக தலைமையாசிரியர் சீபாபால் அறைக்குச் சென்றிருக்கிறார்.

“”ஹெச்.எம்.மிடம் பேசிக் கொண்டிருக் கும் போது ரொம்ப கோபமா அங்கே வந்த பிரைட் “டேய்… இந்த புள்ளை உடம்பில எங்கெங்கே நான் தொட்டம்னு சொல்லச் சொல்லுடா’னு என்னை அடிக்க வந்தார்… நான் சத்தமா பேச ஆரம்பிச்சதும் உடனே டி.சி.யை கொடுத்துவிட்டார்கள். சின்னஞ்சிறுமிகளை பாழ்படுத்தும் இப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட முதியவரை சும்மாவிடக் கூடாது. காவல் துறையில் புகார் கொடுக்க விரும்புகிறேன். நக்கீரன் எனக்கு உதவி செய்யணும்!” -நடந்ததை விளக்கி, நமது உதவியைக் கேட்டார் பாதிரியார் சார்லஸ் சாமுராஜ்.

பாதிரியாரை, டி.எஸ்.பி. பாஸ்கரனிடம் அழைத்துச் சென்றோம். நடந்த விஷயங்களை பொறுமையாகக் கேட்ட டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ், எஸ்.ஐ. ராஜபுஷ்பம் தலைமையில் ஒரு டீமை அந்த ஸ்கூலுக்கு அனுப்பினார்.

தாளாளர் பிரைட் டின் கெஸ்ட் ஹவு ஸில் தங்கியிருந்த மாணவிகளிடம் விசாரணை நடத்திய ஸ்பெஷல் டீம் பிரைட் மீது எஃப். ஐ.ஆர். போட்ட தும் தலைமறை வாகி விட்டார் பிரைட்.
பள்ளியின் முதல்வர் சீபா பாலோ “”அந்த மாணவி வேண்டுமென்றே பொய் சொல்கிறார்!” என்கிறார்.

“”பிரைட்டைத் தேடிக் கொண்டிருக்கிறோம். அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவருடைய பாஸ்போர்ட்டையும் முடக்கப் போகிறோம்!” என்கின்றது போலீஸ். யாரைத் தான் நம்புவதோ?

CHENNAI: The 73-year-old correspondent of the reputed Kodaikanal Public School, M L Brite, is on the run, charged with the molestation of a Class IX student, who joined the residential school just over a month ago.

The 14-year-old, a citizen of Bhutan, was sexually molested by the 73-year-old correspondent, says the complaint filed with the Kodaikanal police by the student’s guardian.

Brite asked the girl to visit his room in her nightgown late in the night along with another girl on June 1. The other girl ignored the call but the new girl went ahead.

She was asked to serve coffee to Brite, who then allegedly misbehaved with her. When the girl refused to give in to his demands, Brite threatened her, using abusive language.

The frightened girl fell ill and she was admitted to hospital. The correspondent went to the hospital and when no one was around allegedly molested her. The girl called her guardian, who came and filed a police complaint on June 18.

The officer in charge of Kodaikanal Police Station told Express that preliminary investigations said that the educationist, running the school in the hill station for 27 years, had a history of harassing women, particularly teachers, for several decades, and at the Mother Teresa University, where he was a visiting lecturer. This was the first time a formal complaint had being lodged against him, the officer said.

Advertisements

5 Responses to Kodaikanal Head Master Molesting Children for 25 years caught

 1. Bhutanese girl accuses Kodaikanal school head of misbehaviour

  TIMES NEWS NETWORK

  Madurai: A 14-year-old Bhutanese girl,studying in class 9 in Kodaikanal Public School,has alleged that the 73-year-old principal sexually molested her while she was recouping in the sick room on June 13.
  The school,situated in Kodaikanal town in Dindigul district,was established in 1982 and is reputed to be one of the best co-educational institutions in the region.
  On June 15,on hearing the childs complaint,father Charles Samraj,a CSI priest in Yercaud,and the girls guardian,demanded that the school issue a transfer certificate for his ward.
  Samraj also took the girl to the Kodaikanal police to lodge a complaint.According to sources,the principal,known only as Bright,even on the website of the school,had mentioned fee concessions to 17 students,who had been provided with boarding facilities in his living quarters.
  Bright was in the habit of asking the children to watch television in the late evenings.The girl complained that on June 13,the principal,who had come to the sick room in the absence of other staff,had allegedly touched her inappropriately,sub-inspector of police Catherine Mary told The Times Of India.
  The police have registered a case against Bright under IPC sections 294 (B),(use of obscene language) and 354 (assault or criminal force to woman with intent to outrage her modesty) and section 4 of the Women Harassment Act.
  Bright is absconding and the police are on the lookout for him.
  The girl also complained that the principal had demanded Rs 40,000 for handing over the TC.
  timeschennai@timesgroup.com

 2. paul suresh says:

  brite started his first orphaneg school near melmaruvathoor in 1978.he had a bad history of raping young girls and haressing staffs.he was a animal when he was young.all the children went missing.some were found in thindivanam red light area.lot sad stories to remember.he is a sycopath.call me if u need more evidence .and a great thanks to the brave girl andto Fr.charles the whisil blover.my number9943070990 9443232325

 3. மாணவிக்கு பாலியல் தொந்தரவு தாளாளர் “பாஸ்போர்ட்’ முடக்கம்
  பதிவு செய்த நாள் : ஜூன் 24,2010,01:34 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=25201

  கொடைக்கானல்:மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளர் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கேரளா சென்றுள்ளனர்.பூடான் நாட்டைச் சேர்ந்தவர் விஜி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஏற்காட்டிலுள்ள பாதிரியார் சாம்ராஜ் பாதுகாப்பில் உள்ளார். கொடைக்கானலிலுள்ள பள்ளி ஒன்றில் 9ம்வகுப்பு படித்து வந்தார்.

  இப்பள்ளியில் கல்விக் கட்டண சலுகை பெறும் 17 மாணவ, மாணவியர் தாளாளர் பிரைட்(70) வீட்டில் தங்கி படித்து வந்தனர்.இரவு நேரத்தில் விஜியை தனது அறைக்கு “டிவி’ பார்க்க வரச்சொல்லி, தாளாளர் பிரைட் அடிக்கடி “பாலியல் தொந்தரவு ‘ கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி, இது குறித்து பாதுகாவலர் சாம்ராஜுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

  அவர் பள்ளிக்கு வந்து, மாணவியின் “டிசி’யை வாங்கி விட்டு, கடந்த 21ம்தேதி கொடைக்கானல் டி.எஸ்.பி., பாஸ்கரனிடம் புகார் கொடுத்தார். போலீசார் தாளாளர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தகவலறிந்த தாளாளர் தலைமறைவானார். அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதாகவும், இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் கேரளாவிற்கு சென்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்

 4. Priya says:

  Mr. Paul Suresh.. if wat u have mentioned above is true then why did u keep silent for so long ??? why dint u take the first step and save a few girls from being molested???

  • You could be correct but would practical situation would always not allow you say it first

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: