காமுகவெறியில் கொடைகானல் மாணவியிடம் சிலுமிஷம் செய்த பள்ளித் தாளாளருக்கு 15 நாள் சிறை
June 21, 2010 3 Comments
ஸ்ரீவில்லபுத்தூர்: கொடைக்கானல் பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த பள்ளி தாளாளர் பிரைட்,ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை 15 நாள் சிறைக் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் மதுரை
சிறையில் அடைக்கப்பட்டார்.
கொடைக்கானலில் இயங்கி வரும் கொடைக்கானல் பப்ளிக் பள்ளியில் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் ஆதரவற்ற 17 மாணவிகளும் அடக்கம்.
இம்மாணவிகள் பள்ளி தாளாளர் பிரைட் பங்களாவில் தங்கி பயின்றனர். இதில் பூடான் நாட்டு மாணவியிடம் அவர் பாலியல் தொந்தரவு செய்ததாக காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. இதுதவிர காமுத்தாய் என்ற பெண்ணுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனது பெயருக்கு பிரைட் மாற்றிக் கொண்டதாகவும் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து பிரைட் தலைமறைவானார்.
அதனை தொடர்ந்து தி்ண்டுக்கல் எஸ்பி முத்துசாமி தனிப்படைகள் அமைத்து பள்ளி தாளாளர் பிரைட்டை தேடி வந்த நிலையில் நேற்று மதியம் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் 2வது நீதித்துறை மாஜிஸ்திரேட் ராஜ்குமார் முன்பு சரண் அடைந்தார்.
இதையடுத்து அவரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் மதுரை கிளை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டார்
Thank: http://christianityindia.wordpress.com/
மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம் – கொடைக்கானல் பள்ளி தாளாளர்[1]! மதுரை: பள்ளி மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம் செய்து விட்டு தலைமறைவாகியுள்ள கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூல் என்ற பள்ளியின் தாளாளர் எம். எல். பிரைட் (76) தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியான கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூலில் சிறப்பு சலுகையின் கீழ் படித்து வரும் ஆதவற்ற மாணவிகளிடம், அப் பள்ளியின் தாளாளர் பிரைட் தவறாக நடந்து கொண்டார் என்று புகார் எழுந்தது
பெண் பிரின்ஸிபாலே உதவியாகச் செயல்படுவது: உதவியாக அந்த பள்ளியின் பிரின்ஸிபால், ஒரு பெண், செயல்படுவதும் வினோதமாகவே இருக்கிறது[2]. இது பி.ஏ.எம்.எஸ். டிரஸ்டின் கீழ் செயபடும், ஒரு கிருத்துவ பள்ளியாகும்[3]. 1970ல் பிரைட் அஸாரியா மெமோரியல் ட்ரிரஸ்ட் – மறைந்த பிரைட் டேவிட் மற்றும் எட்வின் பால் அஸாரியா அவர்களின் நினைவாக எற்படுத்தப்பட்டதாகும். சகல வசதிகளைக் கொண்ட இது ஒரு ரிஸிடென்ஸியல் பள்ளியாகும்
டிவி பார்த்துக் கொண்டே இளம்பெண்ணிடம் சில்மிஷம்: பூடான் நாட்டை சேர்ந்தவர் பானு (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், ஏற்காட்டில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் போதகர் சார்லஸ் சாம்ராஜ் பாதுகாப்பில் உள்ளார். கொடைக்கானலில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். இப்பள்ளியில் கல்வி கட்டண சலுகை பெறும் மாணவ, மாணவிகள் 17 பேர், தாளாளரின் பங்களாவில் தனி அறையில் தங்கியுள்ளனர். இரவு நேரங்களில் மாணவிகளை தனது அறைக்கு அழைத்து தாளாளர் டிவி பார்ப்பது வழக்கம். அப்போது சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்[4]. கடந்த 3ம் தேதி பானு தங்கியிருந்த இடத்துக்கு வந்த தாளாளர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதனால் பானுவுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. இதுதொடர்பாக சார்லஸ் சாம்ராஜுக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து, பானுவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு குணமடைந்தவுடன், பள்ளிக்கு சென்று பானுவின் டி.சி.யை வாங்கினார். பின்னர், சில்மிஷம் குறித்து கொடைக்கானல் டிஎஸ்பி பாஸ்கரனிடம் சார்லஸ் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் தாளாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்
இதையடுத்து, பிரைட் திடீரென தலைமறைவானார். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அவருடை பாஸ்போர்ட்டை போலீசார் முடக்கி வைத்துள்ளனர். அவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அவர் மீது நில மோசடி புகாரும் பதிவாகி உள்ளது. காமுத்தாய் என்ற பெண்மணிக்குச் சொந்தமான நிலத்தை, தனக்கு 99 வருட குத்தகைக்கு அவர் விட்டுள்ளதாக கூறி போலியான ஆவணங்கள் மூலம் தனது பெயருக்கு பத்திரப் பதிவு செய்து பெரும் மோசடி செய்துள்ளார் பிரைட் என்பது அந்தக் குற்றச்சாட்டு
லநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான்: இந்தப் புகார் குறித்தும் கொடைக்கானல் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரைட் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அப்படி ஒரு மனு இதுவரை தாக்கலாகவில்லை என்று மதுரை கிளை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. எம். எல். பிரைட் என்பவன் ஒரு பெண்கள் பைத்தியம். அவன் பல பெண்களிடம் ஜாலியாக இருக்கும் மனப்பாங்கைக் கொண்டவன். உள்ளூர் போலீஸாரின் கூற்றுப்படி, பல பெண்களை, குறிப்பாக ஆசிரியைகளை, அவன் அவ்வாறு பலவந்தப்படுத்தியுள்ளான்[5]. மதர் தெரஸா பல்கலைக்கழகத்தில் “விசிட்டிங் லெக்சுரர்” என்ற நிலையை ஏற்படுத்திக் கொண்டு, அங்கு “கெஸ்ட் ஹவுஸில்” தங்கும் வழக்கமும், ஒத்துப்போகும் பெண்களுடன் உல்லாசமாக காலம் கழிப்பதும் சகஜம்மாக இருந்தது. முதன் முதலாக, இப்பொழுதுதான் புகார் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது
NE-girls-at-KPS
பூடானிலிருந்து எந்த பெண்ணும் அந்த பள்ளியில் படீக்கச் சென்றதில்லை என்று பூடான் அரசாங்கம் கூறுகிறது. ஆனால், வடகிழக்குப் பகுதிகளிலிருந்து வந்துள்ள பெண்கள் நிறையவே காணப்படுகின்றனர்
இவர்களை மாநிலம் வாரியாக அடையாளங்காணும் திறமை அந்த பிரைட்டிற்குத்தன் இருந்தது என்பது தெரிகின்றது.
[1] மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம்-கொடைக்கானல் பள்ளி தாளாளர் தலைமறைவு[1]! புதன்கிழமை, ஜூன் 23, 2010, 12:39[IST]
http://thatstamil.oneindia.in/news/2010/06/23/kodaikanal-school-official-facing-sexual.html
[2] http://www.timesnow.tv/articleshow/4348014.cms
[3]http://www.kodaikanalpublicschool.org/Kodaikanal%20Public%20School-%20Introduction.htm
[4] http://www.newindianews.com/view.php?2bdmmAQ00ae0dcXXlm44e0ec4rNDYAA04b43oo46ee2cd33Ae0AK44dc23cAmfRcca400A4OXvdde2ee60MmYbb0
[5] http://www.kuenselonline.com/modules.php?name=News&file=article&sid=15845
HUNT
HUNT ON FOR ABSCONDING HEAD MASTER
Bhutanese girl accuses Kodaikanal school head of misbehaviour
TIMES NEWS NETWORK
Madurai: A 14-year-old Bhutanese girl,studying in class 9 in Kodaikanal Public School,has alleged that the 73-year-old principal sexually molested her while she was recouping in the sick room on June 13.
The school,situated in Kodaikanal town in Dindigul district,was established in 1982 and is reputed to be one of the best co-educational institutions in the region.
On June 15,on hearing the childs complaint,father Charles Samraj,a CSI priest in Yercaud,and the girls guardian,demanded that the school issue a transfer certificate for his ward.
Samraj also took the girl to the Kodaikanal police to lodge a complaint.According to sources,the principal,known only as Bright,even on the website of the school,had mentioned fee concessions to 17 students,who had been provided with boarding facilities in his living quarters.
Bright was in the habit of asking the children to watch television in the late evenings.The girl complained that on June 13,the principal,who had come to the sick room in the absence of other staff,had allegedly touched her inappropriately,sub-inspector of police Catherine Mary told The Times Of India.
The police have registered a case against Bright under IPC sections 294 (B),(use of obscene language) and 354 (assault or criminal force to woman with intent to outrage her modesty) and section 4 of the Women Harassment Act.
Bright is absconding and the police are on the lookout for him.
The girl also complained that the principal had demanded Rs 40,000 for handing over the TC.
timeschennai@timesgroup.com
paul suresh Says:
June 22, 2010 at 10:59 am | Reply
brite started his first orphaneg school near melmaruvathoor in 1978.he had a bad history of raping young girls and haressing staffs.he was a animal when he was young.all the children went missing.some were found in thindivanam red light area.lot sad stories to remember.he is a sycopath.call me if u need more evidence .and a great thanks to the brave girl andto Fr.charles the whisil blover.my number9943070990 9443232325
This has been said in http://www.devapriyaji.wordpress.com
பாலியல் புகார்: கொடைக்கானல் பள்ளி தாளாளர் சரண்-முதல்வர் கைது
வெள்ளிக்கிழமை, ஜூலை 2, 2010, 11:01[IST]
கொடைக்கானல்: பூடான் நாட்டு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூலின் தாளாளர் பிரைட் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
முன்னதாக அந்தப் பள்ளியின் முதல்வர் ஷீபாவை போலீஸார் கைது செய்தனர்.
பாலியல் புகாரில் சிக்கிய பிரைட் கடந்த 2 வாரமாக தலைமறைவாக இருந்தார். அவர் மீது நில மோசடி வழக்கும் பதிவாகியுள்ளது.
தலைமறைவாக இருந்து வந்த அவரைப் பிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் வெளிநாட்டுக்கு ஓடி விடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதால் பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.
இந் நிலையில் பிரைட் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த கோர்ட், சம்பந்தப்பட்ட மாணவியுடன் தங்கியிருந்த 16 மாணவிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறுமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில், பிரைட்டுக்கு உதவியதாக நேற்று நள்ளிரவில் பள்ளி முதல்வர் ஷீபா பால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து பிரைட்டுக்கும் போலீஸார் கடும் எச்சரிக்கை விடுத்தனர். அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர் சரணடைய வேண்டும். அவருக்கு யாரும் உதவக் கூடாது. அப்படிச் செய்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்தனர்.
இதைத் தொடர்ந்து பிரைட் இன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை .
காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்
http://thatstamil.oneindia.in/news/2010/07/02/kodaikanal-public-school-correspondent-molestation.html
Updated with latest Photos