கத்தோலிக்க பாதிரியார் 14 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திவிட்டு, ஊட்டியில் உல்லாசமாக வாழ்ந்து வருகிறார்

ootyfather.jpgஅமெரிக்காவில் பணியாற்றிய கத்தோலிக்க பாதிரியார் 14 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திவிட்டு, வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ளாமல் ஊட்டியில் உல்லாசமாக வாழ்ந்து வருகிறார் என்ற புகார் எழுந்துள்ளது.

2.jpgஅமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள மின்னசோடா மாகாணத்தில் கத்தோலிக்க பாதிரியாராக இருந்தவர் ஜோசப் பழனிவேல் ஜெயபால்.

Jesus-wanted.jpgவேலை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜெயபால் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இதுபற்றிய தகவல் வாட்டிகனை எட்டியதும், பாதிரியார் ஜோசப் பழனிவேலுக்கு சிறிய அளவிலான தண்டனை கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் தற்போது அவர், ஊட்டியில் உள்ள அல்மராஜ் என்ற பிஷப்பின் கீழ் பணியாற்றி வருவதாகவும், கிறிஸ்தவ பள்ளிகளின் ஆசிரியர் நியமனங்களை அவர் தான் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மின்னசோடாவில் பாதிரியார்களால் பாதிக்கப்பட்டோர் பலர் ஒன்று கூடி ஜோசப் பழனிவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் சர்ச் பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளனர்.

நேற்று செயின்ட் பால் நகரில் ஒன்று கூடிய இந்த அமைப்பினர், ‘ஜோசப் பழனிவேல் போன்ற ஏராளமான பாதிரியார்கள் செய்த தவறுக்கு முழுமையான தண்டனை அனுபவிக்காமல் உள்ளனர்.

தவறின் பலனை அவர்கள் பெற்றால் தான் மற்றவர்களுக்கு அது ஒரு பாடமாக அமையும். எனவே ஜோசப் பழனிவேல் அமெரிக்கா வுக்கு வந்து முறைப்படி வழக்கை சந்திக்க வேண்டும்’ என வலியுறுத்தினர்.

இவ்விவகாரம் குறித்து ஊட்டியில் உள்ள பிஷப் அலம்ராஜ் குறிப்பிடுகையில்,

“பாதிரியாரை எளிதாக நாங்கள் விரட்டிவிட முடியாது. அவர் பிஷப் இல்லத்திலேயே தங்கி இருக்கிறார். ஆசிரியர்கள் நியமனத்தில் எனக்கு உதவியாக இருக்கிறார்.

இதுபற்றி அவரிடம் விசாரித்த போது தான் குற்றமற்றவன் எனக் கூறுகிறார். எனக்கு வேறு வழி தெரியவில்லை”.

கிறித்துவர்களின் பதினாறாவதுபெனடிக்ட் போப் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார், சமீபகாலமாய் உலகம் முழுதும் கிறித்துவ பாதிரியார்கள் பாலியல் புகாரில் அடிக்கடி சிக்கிக்கொள்வதை. எனவேதான் மனம் நொந்து போய் பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாதிரியார்கள் மீது சரியான முறையில் விசாரணை நடத்த வேண்டும். நடந்ததா? என திருச்சபைகளுக்கு போப் அறிவிப்பு செய்தபோதுதான் அமெரிக்காவில் உள்ள தொண்டு நிறுவனமொன்று கடந்த 2004-ம் வருடத்தில் ஒரு பதினான்கு வயது சிறுமி ஒரு பாதிரியாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட புகார் கிடப்பில் போடப்பட்டிருப்பதை எடுத்து நீட்டியிருக்கிறது.

அமெரிக்காவில் மின்னிசோட்டா மாகாணத்தில் உள்ள க்ரூக்ஸ் டன் திருச்சபையில் பாதிரியாராய் பணியாற்றி 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாருக்கு உள்ளான ஜோசப் பழனிவேல் ஜெயபால் என்ற அந்த பாதிரியார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். திருச்சியைச் சேர்ந்த இவர் இப்போது நீலகிரி மாவட்டம் ஊட்டி யில் ஆயர் அலுவலகத்தில் பொறுப் பாளராக பணியாற்றிக்கொண்டிருப்ப தாகவும் தகவல் வெளியாக… இப்போது ஜோசப் பழனிவேல் ஜெயபால் ஊட்டி யிலிருந்த தன் குளிருடல் வெப்பமானா லும் பரவாயில்லை என சென் னைக்கு பறந்துவிட்டார்.

அவர் சென்னைக்கு பறந்துவிட்டாலும் பங்குத் தந்தை ஜோசப் பழனிவேல் ஜெய பாலைப் பற்றியான உபரித் தகவல்கள் ஊட்டி முழுக்க விரவிக் கிடக்கிறது. அதில் 1993-ம் ஆண் டில் நீலகிரி மஞ்சூரில் உள்ள எமரால்டு திருச்சபையில் பணி யாற்றியபோது அங் குள்ள மக்களிடம் வீடு கட்டித் தருவதாக பணம் வசூலித்து ஏமாற்றிவிட்ட தக வல்கூட சப்பை மேட் டர்தான். அதைவிட பெண்கள் விஷயங் களில் பங்குத் தந்தை பலான பலான வித்தை தெரிந்தவர் என்பதுதான் ஊட்டி மக்களின் டாபிக்.

அங்குள்ள மக்க ளிடம் பேசியபோது… “”மஞ்சூரில் உள்ள சிட்டர் அல்போன்ஸ் ஆப் ஸ்கூலில் கரஸ் பாண்டன்டாக பணி புரிந்த இந்தப் பங்கு தந்தை கம்ப்யூட்டர் டீச்சராக தமிழ் என தொடங்கும் பெய ரைக் கொண்ட பொண்ண வேலை யில் சேர்த்துக்கிட்ட வரு, அந் தப் பொண்ணை தன் மடியில் போட்டுக்கிட்டு ஏக சேட்டை பண்ண ஆரம்பிச்சிட்டாரு. அந்தப் பெண் தனக்கு செய்ற சேவைக் காக அந்தப் பொண்ணுக்கு நிறைய காசை வாரி இறைச் சாரு. அந்தப் பொண்ணு திருமணம் ஆன பின்னால வேலையை விட்டு நின்னுட்டாலும் எப்போதும் இவரோடுதான் இருக்க விரும்பும்.

அந்தப் பெண்ணோட தங்கைகளுக்கும் அதே பள்ளியில் டீச்சராக வேலை போட்டுக் கொடுத்த இந்த பங்குத் தந்தை… அவுங்க ரெண்டு பேரையும் தன் வலையில் வீழ்த்தி அனுபவிச்சிட்டாரு. அதுக் காக பல லட்சங்களை அக்கா, தங்கச்சிகிட்ட இறைச்சு விட்டிருக்காரு இந்த பங்குத் தந்தை.

இதுமட்டுமில்ல, அவரோட கட்டுப்பாட்டின் கீழ் இயங்கற இந்தப் பள்ளியில டீச்சரா செலக்ட் செய்யறதுக்கு பெண்களுக்கு ரெண்டு தகுதியிருக்க ணும். ஒண்ணு அப்பா இல்லாம இருக்கோணும். இல்லைன்னா கணவனுக இல்லாத பெண்களாயிருக் கோணும். இந்த குவாலிபிகேஷன் இருந்தாத்தான் பங்குத் தந்தையோட பார்வையில் பள்ளி வேலைக் காக… இல்லை… தன் வேலைக்காக செலக்ட் செய்வாரு.

இப்படியான புகார்கள் மெது மெதுவாய் பொதுமக்கள்கிட்ட கசியத் தொடங்குனதுக்குப் பின்னாலதான் இங்கிருந்து தன் ஜாகையைக் கிளப்பிட்டு அமெரிக்காவுக்கு போயிட்டாரு ஜெயபால்.

அங்க போய்தான் ஒரு சிறுமியிடம் தவறா நடந்திருக்கறாரு. அந்த சிறுமியோட தரப்புல புகார் கொடுத்திருக்கறாங்க. அந்த விசாரணைக்குப் பயந்துபோய்தான் ஃபாதர் ஜெயபால் திருச்சியில இருக்கற தன் அப்பா, அம்மா நோய்வாய்ப்பட்டு இருக்கறாங்க. பார்க்கப் போகோணும்னு சொல் லிட்டு 2005 கடைசியில தமிழ்நாட்டுக்கு வந்தவரு… ஊட்டிக்கு வந்து இங்குள்ள பிஷப் அலுவலகத் துலயே தங்கிட்டாரு” என்கின்றனர் கோரஸாய்.

ஆனால் ஃபாதர் ஜெயபாலால் செட்டிலாகி விட்டதாகச் சொல்லப்படும் சில பெண்களைத் தேடி கண்டுபிடித்து ஃபாதர் ஜெயபால் குறித்து கேட்டோம். அவர்களோ… “”கடவுளைப் பற்றி யாராவது தவறாக சொன்னால் ஏற்றுக்கொள்வார் களா? அதுபோலத்தான் நாங்கள் யாரும் ஃபாதரைப் பற்றி மீடியாக்களில் வரும் செய்தியை நம்பவில்லை. புனிதமான அவரைப் பற்றிக் கெட்ட ஆவிகள் இல் லாததும் பொல்லாததுமாய் சொல்லிக்கொண்டி ருக்கின்றன. எங்களிடத்தில் அவர் சகோதரனாக, நல்ல ஒரு தந்தையாகத்தான் பழகினார், பழகுவார். எங்களிடத்தில் மட்டுமல்ல, எல்லோரிடத்தும்” என்கிறார்கள் ஃபாதர் ஜெயபாலுக்கு நன்னடத்தை சான்றிதழை வாசித்தபடி.

ஆயர் அலுவலகத்தின் பிஷப் அமல்ராஜோ, “”முதலில் ஜோசப் பழனிவேல் ஜெயபால் மீது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தபோதே விசாரித்தோம். அவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால்தான் என் நேரடி கட்டுப்பாட்டில் அவரை என் அலுவலகத்தின் பொறுப்பாளராக நியமித்தேன். இப்போது இவர் வகிக்கும் பங்குத் தந்தை பதவியை பறித்துவிட்டு அமெரிக்காவின் விசாரணைக்கு அனுப்ப விருக்கிறோம். அவர் மீது மீண்டும் எழுப்பப்பட்டிருக்கும் சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதான புகார் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் இவர் மீது திருச்சபையினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்கிறார் பொறுப்பாய்.

ஃபாதர் ஜெயபால் மதுரையிலிருக்கிறார் என்ற தகவலின்படி ஃபாதரை எப்படியும் நேரில் சந்தித்துவிட வேண்டும் என்று மதுரையில் உள்ள கிறிஸ்டோபர், பீட்டர் பெர்னாண்டஸ் போன்ற முக்கிய பிஷப்புகளின் திருச்சபைகளில் தேடினோம்… இல்லை. அவர் இங்கே வரவில்லை என்ற பதிலுக்குப் பின்னரே அவரை அலைபேசியில் தொடர்புகொண்டு அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து கேட்டோம்.

அனைத்தையும் மறுத்தவரிடம் அமெரிக்காவிற்கு போய் விசாரணையை எதிர்கொள்ள தயாரா என்றோம்.

“”நிச்சயமாக! சட்டரீதியில் எனக்கு அழைப்பு வந்தாலும் எந்த விசா ரணைக்கும் நான் தயார்” என்றார் தலைமறைவாக இருக்கும் ஜோசப் பழனிவேல் ஜெயபால்


Advertisements

2 Responses to கத்தோலிக்க பாதிரியார் 14 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திவிட்டு, ஊட்டியில் உல்லாசமாக வாழ்ந்து வருகிறார்

  1. Sex

    • 14years sex tamil

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: