மருந்து தராமல் ஜெபம்: பெண் பலி : கிறிஸ்தவ அமைப்பு மீது புகார்

ஏமாற்றி மதம்மாற்ற எத்துசெயும் குடிகேடர்
எவருக்கும் நாணமென்ப தில்லை! – அவர்
எவருக்கும் மானமென்ப தில்லை!
ஏமாற்ற வழிமாறி எரிதீயில் வீழுபவர்
எவருக்கும் அறிவேதும் இல்லை! – இவர்
இடர்களுக்கு முறிவேதும் இல்லை!

– அ. நம்பி

மருந்து தராமல் ஜெபம்: பெண் பலி : கிறிஸ்தவ அமைப்பு மீது புகார்

மே 07, 2010

mtm06ஈரோடு: தலைவலி நோயை பயன்படுத்தி கட்டாய மதம் மாற்றம் செய்த பெண், திருப்பத்தூரில் நடந்த ஜெப கூட்டத்துக்கு சென்று மர்மமான முறையில் இறந்ததாகவும், கிறிஸ்துவ அமைப்பினர் சிலர் கட்டாய மதம் மாற்றம் செய்வதாக கருங்கல்பாளையம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த நாகேந்திரன் (35), ஆயில் மில் தொழிலாளி. அவரது மனைவி சுமதி (28). அவர்களுக்கு ஆனந்தகுமார் (12), பொற்கொடி (10) என இரு குழந்தைகள் உள்ளனர். சுமதி சில ஆண்டுகளாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள ‘புது சிருஷ்டி சபை’ என்ற கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள் சிலர், கமலா நகர் பகுதி மக்களிடம் மதம் மாறச் சொல்லி பிரசங்கம் செய்துள்ளனர். சுமதி தலைவலியால் அவதிப்படுவதை அறிந்த நிர்வாகிகள், அவரை சந்தித்தனர். ‘சபைக்கு வந்து ‘ஜெபம்’ செய்தால் உங்கள் நோய் குணமாகி விடும்’ என, கூறியுள்ளனர்.

சுமதியும் கச்சேரி வீதியில் உள்ள சபைக்கு சில வாரங்களாக சென்று ஜெபம் செய்துள்ளார். அமைப்பு நிர்வாகிகள், பல்வேறு இடங்களில் நடக்கும் ஜெப கூட்டத்துக்கு சுமதியை அழைத்துச் சென்றுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டம் திருப்பத்தூரில் ஜெப கூட்டத்துக்காக சுமதி, தன் குழந்தைகள் மற்றும் உறவினர் பெண் ஒருவருடன் சென்றுள்ளார்.

ஜெபக்கூட்டத்தில் இருந்த சுமதிக்கு நேற்று முன்தினம் காலை திடீரென தலைவலி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பாதிரியார், சுமதியின் தலையில் கை வைத்து ஜெபம் செய்து, ‘சிறிது நேரத்தில் சரியாகி விடும்’ என, கூறியுள்ளார். ஆனால், சுமதி திடீரென இறந்து விட்டார். மாத்திரை சாப்பிட அனுமதிக்காமல், ஜெபம் செய்ததால் இறந்து விட்டதாக உறவினர்கள் புகார் செய்துள்ளார்.

சுமதியுடன் சென்ற உறவினர் பெண் கூறியதாவது: சுமதிக்கு அடிக்கடி தலைவலி வரும். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தினசரி மாத்திரை சாப்பிட்டு வருகிறார். புது சிருஷ்டி சபையை சேர்ந்த நிர்வாகிகள், ‘சுமதிக்கு நோய் சரியாகி விடும்’ என கூறி கட்டாய மதம் மாற்றினர். அதைத்தொடர்ந்து ஜெப கூட்டங்களில் சுமதி கலந்து கொண்டார். திருப்பத்தூரில் நடந்த ஜெப கூட்டத்தில் கலந்து கொள்ள சுமதி மற்றும் அவரது குழந்தைகளுடன் சென்றிருந்தேன். நேற்று (நேற்று முன்தினம்) காலை ஜெப கூட்டம் நடந்தபோது, சுமதிக்கு தலைவலி ஏற்பட்டது. இது குறித்து அங்குள்ள பாதிரியாரிடம் கூறினேன். அவர், ‘சுமதிக்கு ‘பேய்’ பிடித்துள்ளது. ஜெபம் செய்தால் போய்விடும்’ எனக் கூறி, சுமதி தலையில் கை வைத்து ஜெபித்து விட்டு சென்றார்.

சிறிது நேரத்தில் சுமதிக்கு அதிகளவில் வலி ஏற்பட்டது. ‘மாத்திரை கொடுக்கலாம்’ என, பாதிரியாரிடம் கேட்டபோது, அவர் மறுத்து விட்டார். தலைவலி அதிகமாகி மயங்கி விட்டார். ஜெப கூட்ட நிர்வாகிகள் ஆம்புலன்ஸ் மூலம் எங்களை அனுப்பி வைத்தனர். வரும் வழியில் சுமதி இறந்து விட்டார். ஆம்புலன்ஸில் ஜெப கூட்டத்தை சேர்ந்த மூன்று பேர் வந்தனர். வெப்படை அருகே இருவரும், ஈரோட்டில் ஒருவரும் இறங்கி விட்டனர். நாங்கள் மட்டுமே வீட்டுக்கு வந்தோம். மாத்திரை சாப்பிட அனுமதித்திருந்தால் சுமதி இறந்திருக்க மாட்டார். இவ்வாறு அவர் கூறினர்.

கமலா நகரை சேர்ந்த மக்கள் கூறுகையில், ”கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்த சிலர் தினசரி வந்து, கட்டாய மதம் மாற்றம் செய்ய வற்புறுத்துகின்றனர். மதம் மாறினால் பல நன்மை ஏற்படும் என பிரசங்கம் செய்கின்றனர்,” என்றனர். சுமதியின் உறவினர்கள் கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க சென்றனர். சுமதி சந்தேக மரணமடைந்ததாக நேற்று மாலை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஈரோடு அருகே சொட்டையம்பாளையத்தில் ஏப்ரல் 25ம் தேதி தாசில்தார் உள்பட ஆறு பேர் கொண்ட கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கட்டாய மதம் மாற்றம் செய்ய வற்புறுத்தினர். இதில் ஆத்திரம் அடைந்த மக்கள் ஆறு பேரை சிறை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். கருங்கல்பாளையத்தில் கட்டாய மதம் மாற்றம் செய்யும் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. – செய்தி: இங்கு

மேலும் ஒரு செய்தி:

mmp01


Advertisements

One Response to மருந்து தராமல் ஜெபம்: பெண் பலி : கிறிஸ்தவ அமைப்பு மீது புகார்

  1. Ganesan says:

    Praise GOD,,, Our Creator JESUS can HEAL anybody,,Who needs Prayer,,/or their main family members (self for my Child shiva; View our fB INFO/Testimony) who Totally Submits & Surrnder to Him,, & also The Prayer Warriers or Pastors Should be PRACTICEING Holy Persons in CHRIST,,Then Surely Our GOD Perform his Miracles,,,,, similar to us,, by Answering our Prayer,,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: