ரூ.16 லட்சம் சுருட்டிய பாதிரியார் கூட்டாளியுடன் கைது

சென்னை: அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கூறி பல அப்பாவி பொதுமக்களிடம் 16 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த பாதிரியார் மற்றும் அவரது பெண் கூட்டாளியை போலீசார் கைது செய்தனர். கடந்த 11ம் தேதி நடந்த குறைகேட்கும் நிகழ்ச்சியில், சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங் கிட்டிடம், பழைய பெருங் களத்தூர், பார்வதி நகரை சேர்ந்த அண்ணாமலை என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், “மண்ணிவாக்கம், வண்டலூர் மெயின் ரோட்டில் வசிப்பவர் ரெக்ஸ். பாதிரியாரான இவர் பழைய பெருங் களத்தூர், பார்வதி நகரை சேர்ந்த 13 பேரிடம் பீர்க்கன் காரணை குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டடத்தின் அரசு ஆவணங் களை காட்டி, அதன் நகலை கொடுத்தார்.

குடிசை மாற்று வாரியத்தில் எங்களுக்கு வீடு வாங்கி தருவதாக அவர் கூறியதை தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி 13 பேரும் தலா 60 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக் கத்தை ரெக்ஸ்சிடம் கொடுத்தோம். ஆனால், குறிப்பிட்ட தேதி வரை எங்களுக்கு எந்த விதமான ஆவணங்களையும் தராததால், கடந்த நவம்பர் மாதம் 23ம் தேதி பாதிரியார் ரெக்ஸ் வீட்டிற்கு சென்று விவரம் கேட்டோம். அப்போது எங்களுக்கு முறையாக விளக்கம் அளிக் கவில்லை. பின், ரெக்ஸ் தலைமறைவாகிவிட்டார். நாங்கள் 13 பேரும் சிறுதொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். வட் டிக்கு பணம் வாங்கியும், நகைகளை விற்றும் சிரமப் பட்டு பணத்தை கொடுத் தோம். எனவே, எங்களுக்கு அவரிடம் இருந்து பணத்தையாவது அல்லது அரசு குடிசை மாற்று வீட்டையாவது பெற்றுத் தர வேண்டும். பணத்தை கொடுத்த போது 13 நபரிடமும் புரோ நோட்டை ரெக்ஸ் தனது கைப்பட எழுதிக் கொடுத் தார்,” என்று கூறியிருந்தார். இப்புகாரின் மீது உரிய விசாரணை நடத்தும்படி கமிஷனர் ஜாங்கிட் பீர்க்கன்காரணை போலீசாருக்கு உத்தரவிட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து இஸ்ரேல் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.16 பேரை தவிர மேலும் பலரிடம் பணம் வாங்கி ரெக்ஸ் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கமிஷனர் ஜாங்கிட் இந்த வழக்கை புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற் றம் செய்து உத்தரவிட்டார். உதவி கமிஷனர் நவநீதகிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மணி தலைமையில் அமைக்கப் பட்ட தனிப்படை போலீசார் ரெக்ஸ் மற்றும் அவரது கூட்டாளி துளசி ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட் டனர். தலைமறைவாக உள்ள ராஜன், புனிதா இருவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். அரசு முத்திரையை காட்டி மோசடி: குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி மோசடி பாதிரியார் ரெக்ஸ், துளசி ஆகியோர் சர்ச்சுக்கு வரும் பலரிடம் விண்ணப்பம் பெற்றுள்ளனர்.

வீடு கோரி விண்ணப் பித்தவர்கள் முதல் தவணையாக சில ஆயிரங்களை முன்பணமாக கொடுத்துள்ளனர். மீத பணத்தை கறக்க திட்டமிட்ட இருவரும், வீடு கேட்டு கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை, குடிசை மாற்று வாரியத்தில் சமர்ப்பிக்கும் போது குத்தப்படும் அரசு முத்திரையை ஜெராக்ஸ் பிரதி எடுத்து விண்ணப்பதாரர்களிடம் காண்பித்துள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: