கோயமுத்தூர் CSI டையோசிஸ் முன்னாள் பிஷப்.மாணிக்கம் துரை அவர்கள் கைது

கோயமுத்தூர் பிஷப் Rt.Rev.மாணிக்கம் துரை அவர்கள்மீது ஏராளமான வழக்குகள், பல நீதிமன்றங்களில் நடந்துக்கொண்டிருக்கிறது.

அதில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள நடுவட்டம் என்ற இடத்திலுள்ள குருவானவர்Rev.கவிராஜ் என்பவர் தன்னை பிஷப்.துரை அவர்கள் கொலைமிரட்டல் விடுத்தாக புகார் தெரிவித்திருந்தார்.

கோவை சி.எஸ்.ஐ. முன்னாள் பிஷப் மாணிக்கம் துரையை அவரது வீட்டிலிருந்து
போலீசார் கைது செய்து அழைத்து வந்த போது எடுத்த படம்
சம்பவத்தின் காரணம்: கிறிஸ்டியன் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் சபை மக்கள் பிஷப்Rt.Rev.மாணிக்கம் துரை அவர்கள் டையோசிஸ் அறக்கட்டளை பணத்தில் மோசடி செய்ததாக புகார் அளித்து, பிஷப் அவர்களை கண்டித்து கூடலூரில் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில்நடுவட்டம் CSI சபைகுருவானவர் Rev.கவிராஜ் அவர்களும் பங்கேற்றார். உண்ணாவிரத்துக்கு மறுநாள்பிஷப்.துரை அவர்கள் Rev.கவிராஜ் அவர்களை அழைத்து கண்டித்தார். அப்போது என்ன சம்பாஷனை நடந்தது என்பது தெரியாது அதன்பின் Rev.கவிராஜ் அவர்கள் பிஷப்.துரை தன்னை மிரட்டுகிறார் என்று போலீஸில் புகார் கொடுத்தார். அதைக்குறித்த வழக்கு கூடலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்நடக்கிறது. வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பிஷப்.துரை அவர்களுக்கு மூன்றுமுறை கோர்ட் சம்மன் அனுப்பியும் பிஷப் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து பிஷப்.துரையை கைது செய்ய பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கூடலூர் போலீஸ் அதிகாரி SI பசவராஜ் தலைமையில் போலீஸார் சனிக்கிழமை கோயமுத்தூர்பிஷப்.துரை அவர்களின் வீட்டுக்குசென்று கைது செய்து கூடலூர் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு நீதிபதி அவர்கள் விடுமுறையில் சென்றுவிட்டார் என்று அறிந்து பிஷப் அவர்களை ஊட்டியில் உள்ள நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். ஆனால் அங்கும் நீதிமன்றம் கோடைகால விடுமுறையால் மூடப்பட்டிருந்தது. ஆகவே ஒரு வழியாக விடுமுறையிலிருந்த நீதிபதி அவர்களின் வீட்டுக்கே பிஷப்பை அழைத்து சென்றனர். பிஷப் அவர்கள் நீதிபதியிடம் தன்னை ஜெயிலுக்கு அனுப்பவேண்டாம் எனக்கு நெஞ்சுவலி என்று அறிவித்தார். அதனால் ஊட்டியில் உள்ள அரசு மருத்துமனையில் போலீஸ் காவலுடன் பிஷப் அவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

பிஷப்.துரை அவர்கள்மீது ஏற்கனவே CSI டையோசிஸ் பணம் மூன்று கோடிகளை கையாடல் செய்ததாகவும் பணத்தை முறைக்கேடாக பயன்படுத்தியதாகவும் உள்ள குற்றச்சாட்டை CBCIDஅதிகாரிகள் பிஷப் அவர்களை விசாரிக்க அவரை கைது செய்ய இருந்தனர். ஆனால் பிஷப் அவர்கள் தன்னை கைது செய்யக்கூடாது என்று கூறி முன்ஜாமீன் பெற்றார். அதன்பின் தினசரி காலை CBCIDஆபீஸில் கையெழுத்துபோட வந்துபோய்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் பிஷப்.Rt.Rev.மாணிக்கம் துரை அவர்களுக்கு பதில் கோயமுத்தூர் டையோசிஸ் பணிகளை நிறைவேற்ற திருச்சி-தஞ்சை CSI டையோசிஸ் பிஷப்.Rt.Rev.பால் வசந்தகுமார்அவர்களை தற்காலிக பிஷப்பாக செயல்பட CSI சினாட் நியமித்தது. இந்த நிலையில் பிஷப் அவர்களோடு பண ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களான அமிர்தம், மனேசன் ஆகிய இருவரையும் CBCID போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்து விசாரித்து கொண்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு போலீஸ் அப்ரூவராகமாறிக்கொண்டிருக்கின்றனர் என்று அறியப்படுகிறது. அதில் CSI குருவானவர்களும் உண்டு. பிஷப்அவர்கள் எங்கள் மேல் அதிகாரியாவர், ஆகவே அவர் கூறியபடி நாங்கள் கீழ்படிந்தோம் என்று கூறிபிஷப்புக்கு எதிராக சாட்சி கூற போலீஸ் அப்ரூவராக அவர்கள் மாறிவிட்டனர். இதுபிஷப்.Rt.Rev.துரை அவர்களுக்கு பெரும் பின்னடைவாகும்.

இப்போது கோயமுத்தூர் டையோசிஸ்க்கு புது பிஷப் தெரிந்தெடுக்கப்படவேண்டும் என்று பலர்CSI சினாடுக்கு எழுதி அறிவித்துள்ளனர் என்று கூறுகிறார்கள். புதிய பிஷப் தெரிந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுவதாக கேள்விப்படுகிறோம். பிஷப் மீதுள்ள வழக்கு நீண்டுபோகுமானால் CSIசினாட் கமிட்டியே ஒரு பிஷப்பை தாங்களே தெரிந்தெடுத்து கோயமுத்தூர் டையோசிஸ்க்காக நியமிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஜாமக்காரன்: பிஷப் அவர்களைக்குறித்து நாம் இப்படி அறிவிப்பது வெறுப்பினாலோ, பகையினாலோ அல்ல. பிஷப் அவர்கள் கைது செய்யப்பட்டது நமக்கு சந்தோஷம் கொடுக்கும் செய்தியல்ல. CSIசபையின் தலைவன், நாடறியும் அவமானத்திற்குள்ளானதுதான் கர்த்தருக்கும், நமக்கும் மனவேதனையை கொடுக்கிறது.

பிஷப் அவர்களுக்கு தன்னை தற்பரிசோதனை செய்யவும், தன்னை சரிப்படுத்திக்கொள்ளவும், குறிப்பாக மனம் திரும்பவும் இது அவருக்கு தேவன் அனுமதித்த நல்ல சந்தர்ப்பம் ஆகும். இப்போது கூறும் இந்த ஆலோசனையை அவர் கவுரவப் பிரச்சனையாக கருதி அலட்சியப்படுத்தினால் பிஷப்அவர்களின் இருதயம் மீண்டும் முன்பைவிட கடினமாகிவிடும். வழக்கு இவருக்கு சாதகமாகி விடுதலை செய்யப்பட்டால் அவர் ஆத்துமா கர்த்தரைவிட்டு மிகதூரம் விலகிவிடும். அதன்பின் மீண்டும் பிஷப் தன் பதவியில் அமர்ந்தால் முன்பைவிட அவர் செயல்பாடுகள் மோசமாகி மீண்டும் பெரிய குற்றங்கள் புரியும் கடினமான நிலைக்கு தள்ளப்படுவார். பழிவாங்கும் சிந்தை மேலோங்கும் தவறுக்குமேல் தவறு செய்ய உந்தப்படுவார். அவர் ஆவிக்குரிய நிலை மிக மோசமாகிவிடும். துணிகர பாவம் செய்ய தெய்வபயம்அவர் இருதயத்திலிருந்து தானே நீங்கிப்போகும்.

ஆகவே பிஷப் அவர்கள் இப்போது செய்யவேண்டியது. கடைசிநேரத்தில் யார் எல்லாம் அப்ரூவராக மாறினார்கள் என்று அறிந்து, அவர்களின் செயலில் உண்மை உள்ளதா என்பதை பிஷப் அவர்கள் அறியவேண்டும். உண்மையான குற்றச்சாட்டுகளை கூச்சப்படாமல் சம்மதித்து பிஷப் அவர்கள் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவேண்டும். பணம் திருப்பி செலுத்த வேண்டியது உண்மைதான் என்றால் அதை திருப்பி செலுத்த தயங்கக்கூடாது. பிஷப் தன் பதவியை ஏற்றெடுக்கும்போது Chitfund கடனை அடைக்க முடியாத நிலையில் இருந்ததை நினைவு கூர்ந்து திருமண்டல பணப்பிரச்சனையை சரிப்படுத்திவிட்டால் அப்போதைய மனநிம்மதியையும், சமாதானத்தையும் பிஷப் அவர்கள் திரும்பப்பெறுவார். பாவத்தை மறைக்கிறவனுக்குதான் வாழ்வு இல்லை. ஆனால் அதை அறிக்கைசெய்து விட்டுவிட்டவனுக்கு தேவனுடைய கிருபைதானே அவன்மேல் வரும், அவன் குடும்பத்திலும் வந்துவிடும். நீதி 28:13.

தாவீது தன் தவறை உணர்ந்தபின் கர்த்தரின் கிருபை அவன்மேல் இறங்கி அவன் நிலையை கர்த்தர் எத்தனையாய் உயர்த்தினார். அவன் இழந்ததையெல்லாம் திரும்ப பெற்றுக்கொண்டான் என்று வேதம் கூறுகிறது. கர்த்தர் பிஷப்.துரை அவர்கள் பட்ட அவமானத்துக்கு ஈடாக வெற்றியையும், உயர்வையும், கௌரவத்தையும் தருவார். எந்த இடத்தில் அவமானப்படுத்தப்பட்டாரோ அதே இடத்தில் கனப்படுத்தப்படுவார். மேலும் பிஷப். துரை அவர்களை சுற்றியுள்ள துதிபாடிகளையெல்லாம் இனம்கண்டு அவர்களை அகற்றி சரியான ஆலோசனை கொடுக்கும், ஜெபிக்கும் உண்மையான நண்பர்களை கண்டுபிடித்து அவர்களை தன் பக்கத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

நானும் ஒரு ஊழியக்காரன் சேர்ந்தவன் என்ற நிலையில், நானும் பிஷப்.துரை அவர்களின் கீழ் இயங்கும் கோயமுத்தூர் திருமண்டலத்தில் நான் பிறந்து வளர்ந்து திருமண்டலத்துக்காக பாரப்படுபவன், உண்மையாக ஜெபிப்பவன் என்ற நிலையில் இந்த ஆலோசனைகளை உரிமையோடு எழுதுகிறேன்.பிஷப்.துரை அவர்களுக்கு என்னை ஆரம்ப முதலே பிடிக்காது என்பதை அறிவேன். ஆனாலும் என் சொந்த திருச்சபையின் தலைமை பொறுப்பிலுள்ளவர் என்ற நிலையில் அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவருக்காக பாரத்துடன் ஜெபிப்பவன், ஜெபித்துக்கொண்டிருப்பவன் என்பதை என் கர்த்தருக்கு முன்பாக பாரத்துடன் அறிக்கையிட்டு இதை எழுதுகிறேன்.

கோவை திருமண்டல ஜாமக்காரன் வாசகர்களும் பிஷப்.துரை அவர்களுக்காக ஜெபியுங்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: