அரசு கேபிள் டிவி ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் விசாரணைக்கு தடை

உமாசங்கர் மீதான விசாரணைக்கு தடை
ஜூன் 16,2010,22:37 IST

சென்னை : ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் தாக்கல் செய்த மனு: அரசு “கேபிள் டிவி’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக, 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டேன். பின், ஜனவரியில் சிறுசேமிப்புத் துறை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டேன். அரசு “கேபிள் டிவி’ நிறுவனம், மூடப்படும் நிலையில் உள்ளது. இணைச் செயலராக பதவி உயர்வு பெறுவதை மறுக்கும் விதத்தில், எனக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்து தடை உத்தரவு பெற்றேன். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் எனக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி என் மீது நடவடிக்கை எடுக்க நம்பத்தகுந்த தகவல்கள் இருந்தால், போலீசார் எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்யலாம்.

விஜிலன்ஸ் விசாரணை என்கிற பெயரில் டி.எஸ்.பி., அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி செயல்பட முடியாது. சட்ட விரோதமான விசாரணைக்கு என்னை உட்படுத்துகின்றனர். என் மீதான குற்றச்சாட்டுகள் அவதூறானவை. துறை நடவடிக்கை என்றால், அது அகில இந்திய சர்வீஸ் சட்டம் அல்லது பொதுப் பணியாளர்களுக்கான விசாரணை சட்டப்படி இருக்க வேண்டும். சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், சட்டத்தில் கூறிய வழிமுறைகளின்படி இருக்க வேண்டும். பகைமை நோக்கில் அரசு செயல்படுகிறது. நான் ஒரு நேர்மையான, உண்மையான அதிகாரி. பொதுநல நோக்கில் செயல்பட்டுள்ளேன். என்னை துன்புறுத்தும் நோக்கில், போலீசுக்கு உள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். எனவே, எனக்கு எதிராக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி தனபாலன், “அதிகார வரம்பு குறித்த கேள்விக்கு, அரசு பதில் மனு தாக்கல் செய்த பின் தான் முடிவு செய்ய முடியும். எனவே, கூடுதல் அரசு பிளீடர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். 28ம் தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது. அதுவரை, லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது’ என உத்தரவிட்டார்.

Advertisements

One Response to அரசு கேபிள் டிவி ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் விசாரணைக்கு தடை

 1. karuppaiah says:

  TN: Enquiry against IAS officer stayed

  PTI First Published : 17 Jun 2010 09:39:24 AM IST
  CHENNAI: The Madras High Court today stayed an inquiry into alleged accumulation of unaccounted wealth by IAS officer C Umashankar.
  The interim injunction, effective till June 28, was issued by Justice V Dhanapalan on a petition by the officer seeking stay of proceedings against him by the Tamil Nadu government, based on a May 6 last letter by Directorate of Vigilance and Anti-Corruption, charging him with accumulating wealth disproportionate to his known sources of income.
  The judge opined that the jurisdictional question could be decided only after counter affidavit was filed and directed the government to file its counter.
  The petition was posted for hearing on June 28.
  In the petition, Umashankar said he was selected by UPSC for appointment as IAS officer and joined Tamil Nadu cadre in 1991. In May 2006 he was posted as Managing Director of ELCOT.
  He contended that ‘ELNET’, a public limited company, was jointly promoted by ELCOT and that ‘ETL Infrastructure Ltd’ was promoted as a 100 per cent subsidiary of ELNET in 2004. He claimed ETL which came into existence from ELNET funds ‘disappeared’ from ELNET’s control.
  Umashankar said that as MD, he was also ELNET’s Chairman and had proposed a special resolution for consideration by shareholders in July 2008 to remove Unnamalai Thiagarajan from the post of Managing Director of ELNET.
  He submitted he was transferred as MD, Arasu Cable TV Corporation in October 2008. He took steps to protect the company’s interest.
  He claimed disciplinary proceedings were initiated against him to deny him promotion as Joint Secretary to Union Government after he submitted a proposal to nationalise Sumangali Cable Vision. He moved the Central Administrative Tribunal, which stayed the disciplinary proceedings.
  He said a DSP in DVAC sent him a letter dated May 6 asking him to answer queries on his wealth.He said police was free to register an FIR against him if there was credible information warranting action under Prevention of Corruption Act.
  However, the police officer, under guise of enquiry, could not be ‘let loose’ on him, his family members, relatives and friends, he said and alleged abuse of power by police.
  If departmental action was needed, it should be under All India Services Act or under Public Servants Enquiries Act, he contended and alleged that the enquiry was illegal, arbitrary, without authority of law and malicious.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: