கல்யாணத்துக்கு முன் கர்ப்பமாக்கு…!

shockan.blogspot.com

திருமண நிச்சயம் செய்யப்பட்ட புதுமாப் பிள்ளை, கல்யாணத்திற்கு முன்பாக மாமியார் வீட்டுக்கு அழைக்கப்படுகிறார். நிச்சயதார்த்த சி.டி. பார்ப்பதற்காக சென்றவர், தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வந்தால் மணமகன் குடும்பத்தாரின் மனநிலை எப்படி இருக்கும்? சலீமின் குடும்பம் அத்தகைய மனநிலைக்கு உள்ளாகியிருக்கிறது.

சலீமின் அண்ணன் நிஜாம், நம் முன்னே கத்தை கத்தையாக பேப்பர்களைக் காட்டினார். அத்தனையும் சலீம் எழுதிய மரண வாக்குமூலம். அதை நம்மிடம் நீட்டியபடியே கண்ணீர் வழியப் பேசத் தொடங்கினார் நிஜாம்.

“”நாங்க சின்னதா தொழில் செய்து நிம்மதியா வாழ்ந்துக் கிட்டிருந்தோம். பண் ருட்டி போலீஸ் லைனில் ஐந்தாவது தெருவில் மாடிவீட் டில் வசிக்கும் நிகரா பேகம் நல்ல பொண்ணு. டிகிரி படிச்சிருக்கான்னு சொன்னாங்க. அப்பா ஷேக் ஆதம் ஃபாரின்ல இருக்கிறதும், அம்மா ரசியாபேகம்தான் பொண்ணை வளர்க்குறாங் கன்னும் அவங்களுக்கு ஒரு பையனும் இருக்கான்னும் தெரிஞ்சுக்கிட்டோம். பெண் பார்க்கப் போனோம். இரண்டு தரப்புக்கும் பிடிச்சுப் போனதால போன டிசம்பர் 16-ந் தேதியன்னைக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. எங்க மதத்தில் அதை மங்னான்னு சொல்லுவோம்.

மங்னா முடிந்த மூணாவது நாள் பொண்ணோட அம்மா ரசியாபேகம் என் தம்பிக்கு போன் செய்தார். நிச்சயதார்த்த சி.டி.யைப் பார்க்கக் கூப்பிட்டார். நமக்கும் ஒரு காப்பி வாங்கிட்டுவாடான்னு சொன்னேன். அன்னைக்குப்போனவன்தான். பொண்ணு வீட்டிலேயே தங்கிட்டான். மூணு மாசம் கழித்து மார்ச் 25-ந் தேதியன்னைக்கு பொண்ணு வீட்டிலிருந்து எங்களுக்கு போன் வருது. “”உங்க சொந்தக்காரங்களை அழைச்சிட்டு வாங்க. எங்களுக்கு மாப்பிள்ளை பிடிக்கல. நிச்சயதார்தத்தை கேன்சல் பண்ணணும்”னு சொன்னாங்க. மார்ச் 28-ந் தேதி பண்ருட்டிக்குப் போனோம்.

ஜமாத்தை கூட்டினாங்க. உங்க பையன் எங்களை ஏமாற்றி பொருட்களைக் கேட்கிறான். இந்த மாப்பிள்ளை வேணாம் என்று ரசியாபேகம் சொன்னார். என் தம்பியோ, “”நீங்கதானே என்னைக்கூப்பிட்டு சி.டி. பார்க்கச் சொல்லி பொண்ணோட ரூமுக்கு தனியா அனுப்பி வச்சீங்க. இப்ப மாப்பிள்ளை பிடிக்கலைன்னா என்ன அர்த்தம்”னு கேட்டான். அதற்கு ரசியாபேகம், “”நானும் தப்பு செய்தேன். என் பொண்ணையும் தப்பு செய்யவச்சேன். உண்மை தான். இப்ப பிடிக்கலை. வெளியே போ” என குரான் மேலே கைவைத்து ஜமாத்தாரிடம் சொல்ல, எங்க எல்லோருக்குமே அதிர்ச்சி. என் தம்பி அந்தப் பொண்ணு நிகராகிட்டே பேசி னான். அது எதுவுமே பேசலை. ஜமாத் ஆட்களெல்லாம், இவ்வ ளவு நடந்திருக்கு. நீங்களே பேசி முடிவு பண்ணுங் கன்னு சொன்னாங்க. சலீமை அங்கேயே விட்டுட்டு வந்தோம்.ஏப்ரல் 6-ந் தேதி என் தம்பி தற்கொலை பண்ணிக்கிட்டதா நிகரா வீட்டிலிருந்து தகவல் வருதுங்க” என்று நிஜாம் கலங்க.. சலீம் எழுதிய மரண வாக்குமூலத்தை நாம் படிக்கத் தொடங்கினோம்.

“”நிச்சயிக்கப்பட்டதிலிருந்து நானும் நிகராவும் உயிருக்குயிராய் காதலித்தோம். பாண்டிச்சேரி, நெய்வேலி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் போன்ற பகுதிகளில் ஜாலியாக சுற்றி ஆதவன், உன்னைப்போல் ஒருவன் படங் களை ஒன்றாகப் பார்த்தோம். அப்போதுதான் ரசியா பேகம் போன்செய்து நிச்சயதார்த்த சி.டி.யைப் பார்ப்பதற்காக வரச்சொன்னார். என்னை நிகராபேகம் ரூமிற்கு அனுப்பி சி.டியைப் பார்க்கச் சொல்லிவிட்டு கதவைச் சாத்திக்கொண்டார். அப்போது நானும் நிகராவும் தனிமையில் இருந்தோம். முதன்முதலாக அப்போதுதான் அப்படி இருந்தேன். உல்லாசத்தை அனுபவித்தோம். நாங்கள் டயர்டாகக் கூடாது என்று 3 முறை காப்பி போட்டுத்தந்தார் ரசியாபேகம். அப்போது, என் மகள் கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றார். ஏன் என்று அவ ரிடம் கேட்டேன். அதற்கு அவர், என் அக்கா அனார் கலியின் மகளுக்கு கல்யாணமாகியும் குழந்தை யில்லை. இதுபோல எங்கள் நெருங்கிய உறவுக்காரர்களில் பல பெண்களுக்கு குழந்தை இல்லை. என் மகளுக்கும் குழந்தை இல்லாமல் போய்விடக்கூடாது. அதனால்தான் குழந்தை பெற்றுக்கொண்டு திருமணம் செய்துகொள்ள லாம் என்றார். 

நான் அவர்கள் வீட்டிலேயே இருந்ததால், என் சொத்துகளில் சிலவற்றை விற்கச் சொல்லி பணத்தையும் வாங்கிக்கொண்டார்கள். எப்போது தருவீர்கள் என்று கேட்டதற்கு, என் மகள் உன்னோட இருந்ததற்கு பணம் சரியாகப்போய்விட்டது என்று ரசியாபேகம் பச்சை யாகவே சொன்னார். 3 மாதத்திற்கு மேல் அங்கே இருந் தேன். நிகராவின் அப்பா, வெளிநாட்டிலிருந்து வந்ததும் என்னைப் பற்றித் தவறாகச் சொல்லி நிகராவிடமிருந்து என்னைப் பிரிக்க ஆரம்பித்தார்கள். “நிகராவும், எனக்கு குழந்தை உருவாக வேண்டும். அது இல்லாதபட்சத்தில் உன்னை திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்று அழுத்தமாகச் சொன்னார். தவறு யார் பக்கம் என்று தெரியாத நிலையில், அவர்களின் நிபந்தனை எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. அதனால்தான் நான் இந்த தற்கொலை முடிவுக்கு வந்தேன். என்னைபோல யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று மரணவாக்குமூலத்தில் எழுதியிருக்கிறார் சலீம்.

பண்ருட்டி போலீஸ்லைன் பகுதியில் இரண்டரை மணிநேரத்திற்கு மேல் நாம் சுற்றி சுற்றி விசாரித்தோம். “”நிகராவுக்கு ஒரு கிறிஸ்தவ பையனுடன் காதல் இருந்த தாகவும், மதம் மாறி திருமணம் செய்துகொண்டுவிடக் கூடாது என்பதால்தான் சலீமுக்கு நிச்சயம் செய்தார்கள்’ ‘ என்று ஏரியாவாசிகள் தெரிவித்தனர். “திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரிக்கவேண்டும் என்று சலீமை டார்ச்சர் செய்து அவரது தற்கொ லைக்குத் தள்ளியவர்கள் தாயும் மகளும்தான்’ என்ற போலீஸ்லைன் 5வது தெருவாசிகள், “இந் தப் பகுதியில் இது போல ஆண்மையை சோதிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது’ என்றனர்.

நிகரா வீட்டில் இருந்த அவரது அப்பா ஷேக் ஆதம் தன் மனைவியையும் மகளையும் நம்மிடம் பேச அனுமதிக்க வில்லை. “”போலீஸ்தான் விசாரிச்சிக்கிட்டிருக் காங்களே.. நீங்க எதுவா இருந்தாலும் அவங்ககிட்டே கேளுங்க. எங்க பொண்ணு வாழ்க்கையை கெடுத்துடாதீங்க” என்றார். சலீமின் பீரோவை சுத்தம் செய்தபோது, இந்த வாக்குமூலம் கிடைத்ததாகச் சொல் லும் அண்ணன் நிஜாம், “”கல்யாணம்ங்கிறது மோட்டார் சைக்கிளா சார்? ஓட்டிப்பார்த்து வாங்குறதுக்கு? என் தம்பி சாவுக்கு நியாயம் கிடைக்கணும். அவனைத் தற்கொலைக்குத் தள்ளியவங்க தண்டிக்கப்படணும்” என்றவர், “”அந்தப் பொண்ணு முகத்தை மட்டும் பத்திரிகையில போட்டுடாதீங்க” என்றார் மனிதாபிமானத்தோடு.

தாம்பத்யம், குழந்தைபேறு இவற்றிற்கெல்லாம் மருத்துவத்துறை பல புதிய சிகிச்சைகளைக் கண்டுபிடித்து செயல்படுத்தி வரும் நிலையில், பழமையான நம்பிக்கைகளால் மனித உயிர்களோடு மரண விளையாட்டு ஆடும் கொடூரங்கள் தொடர்வதைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு தேவை. அரசும் சட்டமும் அதைச் செய்தால்தான் சலீம்களின் உயிர்கள் காப்பாற்றப்படும்

Advertisements

2 Responses to கல்யாணத்துக்கு முன் கர்ப்பமாக்கு…!

  1. Karuppan says:

    Why Tamil muslims think like this

  2. vedaprakash says:

    கருப்பையாஜி உங்களது தகவல்கள் அதிரவைக்கின்றன.

    முஸ்லிம்களுக்கே இந்த கதி என்றால், இந்துக்கள் எப்படி வதைக்கப்படுவார்கள் என்று நினைக்கும் போதே பயமாக இருக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: