Child Abduction- One more Pastor

குழந்தை கடத்தல் வழக்கில் மேலும் ஒரு பாதிரியார் கைது

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=32884

குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, மேலும் ஒரு பாதிரியார் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரியில், மூன்று மாத ஆண் குழந்தை மற்றும் மூன்று வயது சிறுவன் ஆகியோரை கடத்திய, தனலட்சுமி (35) மற்றும் சென்னை கிரிஜா, கணவர் சிவா, ராணி மற்றும் பாதிரியார் அல்போன்ஸ் சேவியர் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

கடத்தப்பட்ட இரு சிறுவர்களை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தைகள் கடத்தல் தொடர்பாக, விழுப்புரம் மாவட்டம் ரெட்டணையை சேர்ந்த, பாதிரியார் செல்வம் (44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பாதிரியார் செல்வத்திடம் நடத்திய விசாரணையில், கிடைத்த தகவலின்படி, கிரிஜாவை காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் மன்றத்தில், மனுதாக்கல் செய்தனர்.

குழந்தையை கடத்தி விற்ற வழக்கில் பாதிரியார் கைது

[ வெள்ளிக்கிழமை, 28 மே 2010, 08:18.11 AM GMT +05:30 ]
கிருஷ்ணகிரியில் குழந்தையை கடத்தி விற்ற வழக்கில் சென்னையைச்சேர்ந்த பாதிரியார் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காமராஜர் நகரை சேர்ந்த ராமக்கா என்பவரது 3மாத ஆண் குழந்தை, கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் கடத்தப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தனிப்படை அமைத்து, கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்த தனலட்சுமி (35) என்பவரை கைது செய்தனர். இவரிடம் ரூ.1000 கொடுத்து, குழந்தையை வாங்கியதாக கூறிய சென்னை பெரம்பூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவா, அவரது மனைவி கிரிஜா மற்றும் ராணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், கிருஷ்ணகிரி ஆர்.எஸ்.லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் தேவா(3)வை, கடந்த டிசம்பரில் தனலட்சுமி கடத்தி, கிரிஜாவிடம் கொடுத்துள்ளார்.

அவர் சென்னை படப்பை இல்லாகி நகரை சேர்ந்த அல்போன்ஸ் சேவியர்(48) என்ற பாதிரியாரிடம் ரூ.50 ஆயிரத்துக்கு குழந்தையை விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அல்போன்ஸ் சேவியரை கடந்த 22ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

இப்போது குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் விழுப்புரம் மாவட்டம் ரெட்டணையை சேர்ந்த பாதிரியார் செல்வம் (44) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. போலீசார் நேற்று முன்தினம் செல்வத்தை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், காவேரிப்பட்டணம் பகுதியிலிருந்து மற்றொரு ஆண் குழந்தையை கடத்தி தன்னிடம் விற்கப்பட்டதாக செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Copyright (c) 2009 NewIndiaNews.com, All rights reserved.

Advertisements

One Response to Child Abduction- One more Pastor

  1. குழந்தை கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட பாதிரியார் கைது

    அதிகம்
    படித்தவை
    அதிகம் விமர்சிக்க
    பட்டவை
    அதிகம் ஈ-மெயில்
    செய்தவை
    சனிப்பெயர்ச்சி மலர்
    ஜார்க்கண்ட் ராஜ்பவனில் தமிழ்
    மாயமான அணுவிஞ்ஞானி “செக்ஸ் டார்ச்சர்’ வழக்கில் சிறையில் இருப்பது அம்பலம்
    சவுதியில் ஒட்டகம் மேய்த்த வாலிபர் : எஸ்.பி., முயற்சியால் மீட்பு
    “தி.மு.க.,வினர் அ.தி.மு.க.,வில் சேருவார்கள்’ : ஜெ.,
    மனித கழிவை அகற்ற எளிய சாதனம் : தமிழக கல்லூரி மாணவர் உலக சாதனை
    “தி.மு.க.,வினர் அ.தி.மு.க.,வில் சேருவார்கள்’ : ஜெ.,
    “கட்டுப்பாடு தொடர்ந்தால் நம்மை அழிக்க முடியாது’: முதல்வர் கருணாநிதி
    சவுதியில் ஒட்டகம் மேய்த்த வாலிபர் : எஸ்.பி., முயற்சியால் மீட்பு
    போபால் விஷவாயு தீர்ப்பில் வியப்பென்ன? ஆர்.ரங்கராஜ் பாண்டே
    மனித கழிவை அகற்ற எளிய சாதனம் : தமிழக கல்லூரி மாணவர் உலக சாதனை
    38 வயது பெண்ணை மணந்தார் 81 வயது தாத்தா
    சவுதியில் ஒட்டகம் மேய்த்த வாலிபர் : எஸ்.பி., முயற்சியால் மீட்பு
    கோவையில் செம்மொழி மாநாடு:பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    நான்காயிரம் சதுர அடிக்குள் கட்டடங்களுக்குஉள்ளாட்சிகளே அனுமதி வழங்க அதிகாரம்

    இ-பேப்பர்

    எழுத்தின் அளவு:
    Buzz
    Share

    ஆல்பம்

    பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரியகுளம் மாஜிஸ்திரேட் ..
    பதிவு செய்த நாள் : மே 22,2010,23:47 IST

    கிருஷ்ணகிரி : குழந்தை கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்ட பாதிரியாரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக, மேலும் ஒரு பாதிரியாரை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரியில், கடந்த 18ம் தேதி, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பேரிகையை சேர்ந்த ராமக்கா என்பவரது நான்கு மாத ஆண் குழந்தையை கடத்தி சென்ற, கிருஷ்ணகிரி தனலட்சுமி மற்றும் சென்னையை சேர்ந்த கிரிஜா, அவரது கணவர் ஆட்டோ டிரைவர் சிவன் மற்றும் ராணி ஆகிய நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 2009 டிச., 4ம் தேதி, கிருஷ்ணகிரி ஆர்.எஸ்., லட்சுமிபுரத்தில் சாலையில் விளையாடிக்கொண்டிருந்த செல்வராஜ் மகன் தேவா (3) என்ற சிறுவனை, தனலட்சுமி கடத்தி சென்று கிரிஜாவிடம் கொடுத்தது தெரிந்தது. தனிப்படை போலீசார் சென்னை சென்று நடத்திய விசாரணையில், சென்னை பெரம்பூர் இரும்பூளியூர் பாதிரியார் அல்போன்ஸ் சேவியர் (48), குழந்தை கடத்தல் கும்பலுக்கு தலைவராக இருந்தது தெரிந்தது. மேலும் இவர், “ராஜரீக மக்கள் கட்சி’ என்ற கட்சியை, ஓராண்டுக்கு முன் துவங்கி, கட்சியின் தலைமை செயலராக தன்னை அறிவித்து, கட்சிக்கு தமிழகம் முழுவதும் 19 மாவட்டங்களில் நிர்வாகிகளை தேர்வு செய்து உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டதும் தெரிந்தது.
    குழந்தை கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளியான, பெரம்பூரில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த கிரிஜா, ராஜரீக மக்கள் கட்சியின் பெரம்பூர் பகுதி மகளிர் அணி தலைவியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கிரிஜாவுக்கும், அல்போன்ஸ் சேவியருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் 4ம் தேதி, கிருஷ்ணகிரியை சேர்ந்த சிறுவன் தேவாவை, தனலட்சுமி கடத்தி சென்று, தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோவில் வந்த சிவா, கிரிஜா மற்றும் ராணியிடம் கொடுத்துள்ளார்.
    சிறுவன் தேவாவை, கிரிஜா அல்போன்ஸ் சேவியரிடம் கொடுத்துவிட்டு, முன் பணமாக 10 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். தேவாவை, அல்போன்ஸ் சேவியர், ராஜரீக மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலரான திண்டிவனம் இரட்டணியை சேர்ந்த பாதிரியார் செல்வம் (37) மூலம்,செஞ்சி தாலுகா, தேவதானப்பேட்டையை சேர்ந்த மாட்டு வியாபாரி மணி என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
    இதையடுத்து, தேவதானம்பேட்டை சென்ற தனிப்படை போலீசார், மணி வீட்டில் இருந்த சிறுவன் தேவாவை மீட்டனர். மணி மற்றும் சிறுவனை விற்பனை செய்த பாதிரியார் செல்வம் ஆகியோர் தலைமறைவாகினர். மீட்கப்பட்ட சிறுவன் தேவா, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். குழந்தை கடத்தல் கும்பலின் தலைவராக செயல்பட்ட அல்போன்ஸ் சேவியரை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரிக்கின்றனர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: