திருப்பூர் மதுக்கடை பார் ஒரு கோடிக்கு ஏலம்!

மதுக்கடை பார் எண் 1986 ஒரு கோடிக்கு ஏலம்! கை மாறி விடாமல் தடுக்க விஷமம்

திருப்பூர் : திருப்பூரில் அதிக லாபம் தரும் பார்களை ஏலம் எடுப்பதில் ஒப்பந்ததாரர்கள் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய்க்கு, 1986 என்ற எண்ணுள்ள பார் ஏலம் போனது, இது, ஒப்பந்ததாரர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் கலால் மாவட்டத்தில் “டாஸ்மாக்’ பார்கள் மொத்தம் 249 உள்ளன. கடந்த மாதம் 19, 20, 21ம் தேதிகளில் ஏலம் நடந்தது; 29 பார்களை யாரும் ஏலம் கோரவில்லை. ஏலம் எடுக்கப்பட்ட 220 பார்களில், 150 பார்களுக்கு மட்டுமே ஒப்பந்ததாரர்கள் உரிமத்தொகை மற்றும் வைப்பு தொகைகளை செலுத்தினர். மீதமுள்ள 70 பார்கள் மீண்டும் ஏலத்துக்கு வரும் நிலை உருவானது.நகரில் அதிக வருவாய் தரும் குறிப்பிட்ட சில பார்களை வசப்படுத்திக் கொள்வதில், அரசியல் கட்சியினர் இடையே பலத்த போட்டி துவக்கத்தில் இருந்தே நிலவியது. இதன்காரணமாக, சில பார்களை அதிகபட்ச தொகைக்கு சிலர் ஏலம் கோரியதை அடுத்து, அத்தகைய பார்கள் குறைந்த விலைக்கு ஏலம் போகாமல் தடுக்கப்பட்டது. அதேநேரத்தில், அதிகபட்ச தொகை கோரிய பார்களுக்கு உரிய தொகை செலுத்தப்படாமல் மீண்டும் அவை மறுஏலத்துக்கு கொண்டு வந்து, குறைந்த ஏலத்தில் தன்வசப்படுத்திக் கொள்ளவும், அரசியல் கட்சியினர் தரப்பில் திட்டமிடப்பட்டது.

கடந்த மாதம் 19, 20, 21ம் தேதிகளில் ஏலம் கோரப்படாத 29 பார்கள், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் ஏலம் எடுத்தும் உரிமத்தொகை செலுத்தப்படாத பார்கள் 70 என மொத்தம் 99 பார்களுக்கான மறுஏலம், 9ம் தேதி நடந்தது. நேற்று முன்தினம் இரவு வரை நீடித்த இந்த ஏலத்தில், மொத்தம் 76 பார்கள் ஏலம் போயின; மீதி 23 பார்களுக்கு யாரும் ஒப்பந்தப்புள்ளி கோரவில்லை.ஒரு கோடி ரூபாய்: திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டுக்கு எதிரில் உள்ள “டாஸ்மாக்’ மதுக்கடை எண் 1986 பார், ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் போனது. இதில், நடப்பு மாதத்துக்கான உரிமத்தொகை மற்றும் இரு மாதங்களுக்கான வைப்பு தொகை என இந்த பாரை ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர், மூன்று கோடி ரூபாய் “டாஸ்மாக்’ நிர்வாகத்துக்குச் செலுத்த வேண்டும்.பார்களில் அதிகபட்ச வருமானமாக, மாதத்துக்கு சில லட்சங்களுக்கு மேல் வாய்ப்பு இல்லாத நிலையில், ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் எடுக்கப்பட்டதன் மூலம், இந்த பார் மற்றவர் கைக்கு போய் விடக்கூடாது என்பதே ஏலம் எடுக்கப்பட்டதன் நோக்கமாக உள்ளது. இதுதவிர, ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கூறி ஏலம் எடுத்துள்ள நிலையில், அதற்கான தொகையை செலுத்தி பாரை எடுத்துக் கொண்டால் மட்டுமே, அது விதிமுறைபடி சரியாக இருக்கும்; அது, சாத்தியமானதாக இல்லை.ஏலம் எடுத்தவர், விதிமுறைப்படி மூன்று கோடியை “டாஸ்மாக்’ நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாமல் மீண்டும் அந்த பாரை ஏலத்துக்கு கொண்டு வர வைப்பதோ, அந்த பாரை முடக்குவதோ, அனுமதி பெறாமல் பாரை நடத்துவதோ விதிமுறை மீறல்.

ஏலம் எடுக்கப்படாத பல பார்கள், கடந்தாண்டு முறைகேடாக செயல்பட்டன. சில பார்கள் சில மாதங்கள் பணத்தை செலுத்தி விட்டு, பின்னர், உரிய தொகை செலுத்தாமல் செயல்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இந்தாண்டும் அவ்வாறு பார்கள் செயல்படும் பட்சத்தில், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.பாரை பிறருக்கு விட்டு தரக்கூடாது என்ற லாப நோக்கில், செயல்படுவோரின் இதுபோன்ற விஷமங்கள் அடுத்து வரும் ஏலங்களின் போது நிச்சயம் தடுக்கப்பட வேண்டும். இத்தகையோர் பார் ஏலங்களில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட வேண்டும். விதிமுறைகளில் உள்ள நிபந்தனைகளை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்பவர்களை அடையாளம் கண்டு, ஒதுக்கி, நியாயமான முறையில் ஒப்பந்தப்புள்ளி கோரும் ஏலதாரர்களுக்கு பார்கள், கிடைக்கச்செய்ய வேண்டு

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: