சிந்து, பலுசிஸ்தானில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை

ஜூன் 10,2010,23:29 IST http://www.dinamalar.com/News_Detail.asp?Id=16632

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வாழும் இந்துக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என, இந்துக்கள் கவுன்சில் அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்து தொழிலதிபர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து பலுசிஸ்தான் சட்டசபையிலிருந்து இந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மை சமூகத்தினராக வாழ்கின்றனர். இந்துக்கள் மீது அடக்குமுறை, கட்டாய மதமாற்றம், தாக்குதல்கள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. இந்நிலையில், குவெட்டா நகரில் இந்து தொழிலதிபர் ஒருவர் மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மகனை அந்த கும்பல் கடத்தி சென்றுவிட்டது. இதேபோன்று, தர்பார்கர் மாவட்டம் இஸ்லாம்கோட்டில் உள்ள புனித நேனுராம் ஆசிரமத்தில் போட்டோ பசீர் என்ற முஸ்லிம் வாலிபர் ஒருவர் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார். தொடர் தாக்குதல்கள் இந்துக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல்களை தொடர்ந்து பாதுகாப்பு வழங்கக் கோரி, இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன.

இதுதொடர்பாக பாகிஸ்தான் இந்துக்கள் கவுன்சில் பொறுப்பாளர் ரமேஷ்குமார் மற்றும் தலைவர் ராஜா அசர்மால் மங்லானி ஆகியோர் கராச்சியில் கூறியதாவது, நேனுராம் ஆசிரமத்தின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்துக்கள் சார்பில் இரண்டு நாள் பந்த் நடத்தப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட போட்டோ பசீரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டோம். ஆனால், அவன் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பெரிய சதி உள்ளது. சிந்து மற்றும் தர்பர்கர் மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு இணையாக அதிக அளவில் இந்துக்கள் வசிக்கின்றனர். இரு சமூகத்தினரும் சகோதரத்துவத்துடன் வாழ்வதை சீர்குலைக்கும் வகையில் சம்பவம் நடந்துள்ளது. போட்டோ பசீரை காவலில் எடுத்து விசாரிக்காமல் போலீசார் நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். பசீரை, அரசியல்வாதிகள் காப்பாற்ற முயன்று வருகின்றனர். இதேபோன்று, தொழிலதிபர் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யவேண்டும். கடத்தப்பட்ட தொழிலதிபரின் மகனை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். சிறுபான்மையின இந்துக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க பாகிஸ்தான் அரசும், சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாண அரசுகளும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

இந்த நிலையில், வெளிநடப்பு செய்த இந்து உறுப்பினரின் கோரிக்கையை பதிவு செய்த பலுசிஸ்தான் அரசு, இந்து தொழிலதிபரை கொன்றவர்களை கைது செய்யவும், கடத்தப்பட்ட அவரது மகனை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்துக்களுக்கும்,கோவில்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: