விஜய் 6 படங்கள் பெரும் தோல்வி-நஷ்டஈடு

தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டம் ரத்து… விஜய் சமரசப் பேச்சு!
புதன்கிழமை, மே 26, 2010, 15:18[IST]

சென்னை: சமரசமாகப் போகலாம் என்று விஜய்யும் அவரது தந்தையும் கேட்டுக் கொண்டதால், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இன்று நடத்தவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆதி படத்தில் தொடங்கி சுறா வரை 6 படங்கள் விஜய்க்கு பெரும் தோல்வியையும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தையும் தந்துள்ளன. குறிப்பாக சுறா பெரும் நஷ்டத்தை ஏற்படுத்த, விஜய்யிடம் 40 சதவிகித நஷ்டஈடு கேட்க முடிவு செய்திருந்தனர் திரையரங்க உரிமையாளர்கள். விநியோகஸ்தர்களும் தங்கள் பங்குக்கு நஷ்ட ஈடு கேட்டு வந்தனர்.

இந்த நஷ்டஈட்டைத் தராவிட்டால் விஜய்க்கு ரெட் கார்டு போடலாம் என்று அவர்கள் முடிவு செய்து, அதனை பத்திரிகையாளர்களிடம் கூற பிரஸ் மீட்டுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதுபற்றிய செய்திகள் வெளியாக பரபரப்பான சூழல் நிலவியது. விஷயம் அறிந்ததும் உடனடியாக திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகளைத் தொடர்பு கொண்ட எஸ் ஏ சந்திரசேகரன், “அவசரப்பட வேண்டாம். உட்கார்ந்து பேசி தீர்த்துக்குவோம். நீங்க இந்த அளவு போக வேண்டிய அவசியமே இல்லை. பிரஸ் மீட்டை கேன்சல் பண்ணுங்க,” என்றாராம்.

இன்றே பேச்சு நடத்த வருமாறு விஜய் தரப்பு அழைக்க, உடனடியாக ஒப்புக் கொண்டனர் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர்.

இன்று மாலை 3 மணிக்குப் பிறகு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் எஸ்ஏ சந்திரசேகருக்கும் பேச்சு நடக்கிறது. இந்த பேச்சின் முடிவை நாளை பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

சீமான் படத்தில் விஜய்!

இதற்கிடையே, சீமான் இயக்க, கலைப்புலி தாணு தயாரிக்கும் புதிய படத்திலும் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தப் படத்துடன் சேர்த்து, இன்றைய தேதிக்கு விஜய் கைவசம் நான்கு படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நேரத்தில் மூன்று படங்கள்… எதிர்ப்பைச் சமாளிக்க விஜய்யின் திட்டம்!

தனக்கு எதிராகக் கிளம்பியுள்ள திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க, புதிய திட்டம் வகுத்துள்ளார் நடிகர் விஜய்.

தொடர்ந்து 5 படங்கள் தோல்வியால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை விஜய் ஈடுகட்டியே தீரவேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள். இதைச் சமாளிக்க விஜய் புதிய திட்டத்தை வகுத்துள்ளாராம்.

அதன்படி ஒரே நேரத்தில் மூன்று படங்களைத் துவக்குகிறார்.

முதல் படம் காவல்காரன் ஏற்கெனவே 70 சதவிகிதம் முடிந்துள்ள நிலையில், அடுத்த வாரம் வேலாயுதம் படத்தை ஆரம்பிக்க உள்ளார். அதற்கடுத்த சில தினங்களில், 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கையும் ஆரம்பிக்க உள்ளார்.

இந்த மூன்று படங்களின் ரிலீஸின் போதும், முந்தைய நஷ்டங்களை சரிகட்டும் வகையில் எம்ஜி ரேட்டைக் குறைத்துக் கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

விஜய்யின் இந்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஒப்புக் கொள்வார்களா என்பது, அவர்களின் நாளைய கூட்டத்தின் முடிவில் தெரிந்துவிடும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: