ஆபாச நடிகை நக்மா நடத்திய ‘அல்லேலூயா’ மதப்பிரச்சாரம்! – நாத்திகம் இராமசாமி

nagma

இந்தியாவில் கிறிஸ்து மார்க்கம் பரவக் காரணமாக இருந்தது, மதப்பிரச்சாரம் செய்ய வந்தவர்களின் தொண்டூழியமும், அன்பும், தாழ்மையும், பண்பும், சகோதரத்துவமும், இரக்கச் சிந்தையும்தான்.

“ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்” என்பது கிறிஸ்துவ வேதவாக்கியம்.

இந்த வேதவசனத்தை நடைமுறைப்படுத்தும் நல்லோர்களாக அவர்கள் இருந்ததால், இந்தியப் பார்ப்பனர்களால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, தீண்டத்தகாத சூத்திர அடிமைகளாக வாழ்ந்த இந்திய மக்கள் குடும்பம் குடும்பமாக, ஊர் ஊராகக் கிறிஸ்துவ மார்க்கத்தை தஞ்சமடைந்தார்கள்.

அன்னை தெரசா போன்ற சமூக ஊழியர்களையும், கலைக்டர் பக்கிள் துரை போன்ற அரசு நிர்வாகிகளையும் கண்ட இந்திய மக்கள், கிறிஸ்து மார்க்கவாதிகளின் “உன்னைப் போல் பிறனையும் நேசி” என்ற இயேசு மார்க்கத்தை விரும்பித்தழுவினார்கள்.

ஆனால், இன்றைய நிலையில் கிறிஸ்துமார்க்கம் என்பது கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கும் மிகப் பெரிய இழிவுத் தொழிலாகிவிட்டது!

ஏழைகளுக்கு இரங்கச் சொன்ன இயேசு வழியை விட்டுவிட்டு, ஏழை எளியோரை ஏமாற்றிக் காணிக்கை பெற்று, கோடிஸ்வரன்களாகும் ‘திருட்டுத் தினகரன்’ வழியில் போய்விட்டார்கள், கிறிஸ்துவ ஊழியக்காரர்கள் என்று பெயர் சொல்லிக் கொள்கிறவர்கள்.

கிறிஸ்துவ ஊழியம் என்பதே இந்திய ஏழைப் பாமரக் கிறிஸ்துவர்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதும், கூடும் கூட்டத்தைப் படம் எடுத்து மேல்நாட்டுப் பணக்காரக் கிறிஸ்துவர்களிடம் காட்டிப் பணக் கொள்ளை நடத்துவதும்தான் என்றாகிவிட்டது!

“இலவசமாய் பெற்றீர்கள்; இலவசமாய் கொடுங்கள்” என்று இயேசு தமது போதகர்களுக்குச் சொல்கிறார். ஆனால், இன்றைய ‘கிறிஸ்துமத வியாபாரிகளோ’ எதையும் கொடுத்துப் பழகியவர்களாக இல்லை; வாங்கிக் குவிப்பவர்களாகவே வாழ்கிறார்கள்!

“ஒரே ஒரு இயேசு பிறந்தான்; அவனும் சிலுவையில் அறையப்பட்டு மாண்டான்” என்று சொல்லிப் புலம்பவேண்டிய நிலையிலேயே கிறிஸ்துவ மதத்தின் இன்றைய நிலை ஆகிவிட்டது!

இந்த நிலைக்கு, இந்தியாவில் மூலதாரமாக – முன் உதாரணமாக வழிகாட்டிய அயோக்யன் திருட்டுத் தினகரன்தான்!

ஏழை – எளிய மக்களுக்குத் தொண்டு செய்து, இயேசுவின் நாமத்தைக் கனம் செய்ய வேண்டிய ஊழியக்காரன், அந்த மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, காசுபறித்துக் குடும்பத்தையே உலகப் பணக்காரர் வரிசைக்குக் கொண்டு சென்றான் என்பது, ‘ஊழியம்’ என்ற பெயரால் கொள்ளையடிக்க வருவதற்கு முன் வழிகாட்டியாகிவிட்டது.

எல்லோரையும் நோய்களிலிருந்து விடுவித்து ‘அற்புத சுகம்’ கொடுப்பதாக ஏமாற்றி – மோசடி செய்து, கோடி கோடியாகச் சம்பாதித்துக் குடும்பத்தாரை வாழவைத்தத் திருட்டுத் தினகரன், பல நோய்கள் பீடிக்கப்பட்டு சாவுநாள் வருவதற்கு முன்பே ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்ற கிறிஸ்துவ வாக்கியத்துக்கு ஏற்ப செத்துப் போனான்!

அந்தப் பாவி அற்ப ஆயுளில் செத்தபின்பு, அவனது வழியில் மற்றொரு திருடன் ‘புகழ்’ பெற்றுக் கொண்டிருக்கிறான்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரை அடுத்துள்ளது நாலுமாவடி என்ற சிற்றூர். இந்தச் சிற்றூரில் மிகச் சாதாரண ஏழை மனிதனாக – ‘கோயில் குட்டி’ பணி செய்து கொண்டிருந்தவர், சி.லாரன்ஸ் என்பவர். இவர் திருடன் தினகரன் கூட்டங்களுக்கு அடிக்கடி போய் வந்ததன் விளைவு, இவரும் தினகரனைப் போல் ஒரு ‘கம்பெனி’ தொடங்கக் காரணமாயிற்று!

திருட்டுத் தினகரன் “இயேசு அழைக்கிறார்” என்ற பெயரில் எமாற்றியதுபோல, நாலமாவடி சி.லாசரஸ் என்பவரும் “இயேசு விடுவிக்கிறார்” என்ற பெயரில் திருட்டுத் தொழிலை ஆரம்பித்தார்! தன் பெயரையும் கவர்ச்சியாக மோகன் சி.லாசரஸ் என்று வைத்துக் கொண்டார்.

உண்மையில் இந்த மோகனின் தாய்-தந்தை வழி முன்னோர்கள் அனைவரும் இந்து மதக்காரர்கள்தான்! இந்த மோகன், கோடி கோடியான கொள்ளை வருமானத்திற்காக ‘பெத்தலேகமி’லிருந்து வந்த கிறிஸ்துவனைப்போல நடிக்கிறார்.

இவரது நடிப்பாற்றல் மூலம் மிக் கறுகிய காலத்துக்குள்ளேயே கோடீஸ்வரனாகி விட்டார்! இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரும் பணக்காரர்களில் இவரும் ஒருவர் என்ற பட்டியலுக்கு வந்து விட்டார்!

தூத்துக்குடி என். பெரியசாமி குடும்பம்தான் தென் மாவட்டங்களிலேயே, ஒரு தொழிலும் செய்யாமல் முதல் பணக்காரர்களான குடும்பம்! இன்று பெரியசாமியைத் தோற்கடிக்கும் மாபெரும் பணக்காரனாகிவிட்டார், “இயேசு விடுவிக்கிறார்” அதிபர் மோகன்-சி.லாசரஸ்!

நாலுமாவடி கிராமத்தையே விலை பேசி வாங்கிக் கொண்டிருக்கிறார், இயேசுவின் பெயரால்!

“என்னைப் பின்பற்றி வருகிறவன் எல்லாவற்றையும் விட்டு விட்டு வரக்கடவன்” – என்றார், இயேசு.

ஆனால், இந்த நாலுமாவடி இயேசுவோ “எல்லாக் கிறிஸ்துவனும் என்னிடம் தந்து விட்டு போங்கள்” என்று ஊழியம்(?) செய்கிறார்.

நோய் இல்லாத மனிதன் எவனும் பூமியில் இல்லை! திருட்டுத் தினகரனும் நோயால்தான் செத்தான்! மோகன்-சி.லாசரஸ்சுக்கும் நோய்களுண்டு.

இந்த நோயாளி லாசரஸ்தான் மற்றவர்களுக்கு சுகம் அளிப்பதாகச் சொல்லி, காசடித்துக் கொண்டிருக்கிறார்! பாமரக் கிறிஸ்துவர்களும் கோடி கோடியாகக் காணிக்கை தந்து கொண்டிருக்கிறார்கள்! மோகன் உல்லாச வாழக்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கூடும் கூட்டத்தை வீடியோ படம் எடுத்து, வெளிநாடுகளில் கொண்டு போய் கிறிஸ்துமதப் பிரச்சாரம் செய்வதாகச் சொல்லி, அங்கிருந்தும் பெரும் தொகையைப் பெற்றுக் கொள்கிறார், மோகன் சி.லாசரஸ்!

இவர் அண்மையில் சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பெரும் பணக்காரர்களுக்கென்று, அற்புத சுகமளிக்கும் ஜெபக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்தக் கூட்டத்திற்கு ஆபாசச் சினிமா நடிகை நக்மா என்பவரையும் அழைத்து வந்திருந்தார்.

நடிகை நக்மா ஆபாசத்தொழில் செய்வதில் புகழ் பெற்றவர். அடிக்கடி அரபு நாடுகளுக்குப்போய் பணம் சம்பாதித்து வருவார். இந்தியாவில் குற்றம் செய்து விட்டு, அரபுநாடுகளில் பதுங்கிக்கொண்டிருக்கும் பலரோடு, நடிகை நக்மா தொடர்புள்ளவர் என்றெல்லாம் கூடப் பத்திரிகைச் செய்திகள் வந்ததுண்டு!

அத்தகைய நடிகை நக்மாவோடுதான் “இயேசு ஊழியம்” செய்வதாகச் சொல்லி, கிறிஸ்துவர்களை ஏமாற்றும் மோகன் சி.லாசரஸ் தொடர்பு கொண்டு, நட்சத்திர ஓட்டலில் “ஊழியம்” செய்திருக்கிறார்கள்!

நட்சத்திர ஓட்டல் நெருக்கம் காரணமாக, நாலுமாவடி கிராமத்துக்கும் நக்மாவை அழைத்துப் போய் “அல்லேலூயா” பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.

சினிமா நடிகைகளை நேரில் காண்பதில் பாமர ஆசை  கொண்ட கிராமத்து மக்கள், ஆயிரக்கணக்கில் கூடி, நடிகை நக்மாவின் ‘அல்லேலூயா’ ஆட்டத்தைக் கண்டு களித்திருக்கிறார்கள்.

எல்லா வியாபார விளம்பரங்களுக்கும் ஆபாசப் பெண்களின் அரை நிர்வாணம் தேவைப்படும் காலம் இது! கிரிக்கெட் ஆட்டத்திலும் ரசிகர்களை குஷிப்படுத்த அம்மணப் பெண்களை இடையிடையே ஆட்ட விடுகிறார்கள்! ரசிகர்களும் விசிலடித்து ரசிக்கிறார்கள்!

எனவே, ஏமாற்றுத் தொழில் செய்யும் மோகன் சி.லாசரஸ் தன் தொழில் பிரபலத்துக்கு ‘குலுக்காட்ட’ நடிகை நக்மாவைக் கொண்டு வந்து, கூட்டத்தைக்கூட்டி, கூடிய கூட்டத்தை வீடியோ எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி ‘காணிக்கை வியாபாரம்’ செய்து கொண்டிருக்கிறார்!

“ஊசியின் காதுக்குள் ஒட்டகத்தைப் புகுத்தினாலும், பணக்காரன் பரலோக ராஜியத்தில் பிரவேசிக்க மாட்டான்” – என்பதெல்லாம் பெத்தலேகமில் பிறந்த பழைய இயேசுவின் வழி!

இந்தியாவில் தோன்றியுள்ள தினகரன், லாசரஸ் போன்ற புதிய அப்போஸ்தலர்களோ, ‘கோடிஸ்வரன் வாழ்க்கையே பரலோக இன்பம்’ என்ற இழிவு வாழ்க்கைக்கு வந்துவிட்டார்கள்!

பழைய இயேசுவோ, “பாவப்பட்ட எல்லா மக்களும் என்னிடத்தில் வாருங்கள்” என்றார்! இந்தப் பொய் வியாபாரிகளோ, “காணிக்கை செலுத்தப்பணம் உள்ளவர்கள் மட்டும் என்னிடம் வாருங்கள்” என்கிறார்கள்!

வியாபாரக் கவர்ச்சிக்கு நக்மாக்களைக் கொண்டுவந்து “அல்லேலூயா” போடச்சொல்லுகிறார்கள்!

பார்ப்பனர்களின் இந்து மதத்தால் சூத்திர நாலாஞ்சாதியாக்கப்பட்டு, தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் கூட தனித்தகரக் குவளையில் தந்து, செத்த பிணத்தைக் கூட தனிச்சுடுகாட்டில் போடு என்று வருண தருமம் அனுபவித்து மீண்ட மக்கள், ஏழை பங்களான் இயேசுவைத் தேடி வந்தால் இடையிலே இப்படிப் பணப் பேய்களாக தினகரன் – லாசரஸ் போன்ற திருடர்கள் நிற்கிறார்கள்!

தெரு ஓரத்திலே மோடி வித்தை காட்டும் ஏமாற்றுத் தொழில்காரர்களைப் போல, வித்தை காட்டி மக்களை மோசம் செய்யும் இந்த ஏமாற்றுக்காரர்களிடமிருந்து மக்கள் மீண்டும் வரவேண்டும்.

நாட்டை ஆட்சி செய்பவர்களும் லாசரஸ் போன்ற மோசடிக்காரர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேறு பல மாநிலங்களில் இந்த அற்புதச் சுகக்கூட்டங்களை அரசு தடை செய்திருப்பதைப் போலத் தமிழ்நாட்டிலும் அரசு தடை போடவேண்டும். தமிழக அரசுக்கு மானமும் அறிவும் வரவேண்டும்.

இயேசு பிரசிங்கித்தார் என்றால் அவர் இந்தத் திருடர்களைப்போல் காணிக்கை வாங்கி, குடும்ப டிரஸ்ட்டுகள் அமைத்து கோடிஸ்வரனாகவில்லை என்பதை கிறிஸ்துவர்கள் சிந்திப்பார்களாக!

–          நன்றி. நாத்திகம், 18.07.2008 இதழ்

Advertisements

14 Responses to ஆபாச நடிகை நக்மா நடத்திய ‘அல்லேலூயா’ மதப்பிரச்சாரம்! – நாத்திகம் இராமசாமி

 1. October 7, 2009 at 8:32 am
  RV நான் மாங்க மடையனாக(கிறிஸ்தவனாக இருந்த பொழுது) இவர்கள் கூட்டத்திற்கு சென்று இருக்கிறேன். இப்பொழுது யோசித்து பார்கையில் எப்படி எளிமை, தியாகம், சிலுவை என்று இவர்கள் மக்களை ஏமாற்றினார்கள் என்று உணர்கிறேன். இந்த பதிவு கிறிஸ்தவர்கள் படித்தார்கள் என்றால் குறைந்த பட்ச சிந்தனை ஏற்படும். ஆதாரம் ஆதாரம் என்று எதற்கெடுத்தாலும் கேட்கும் நீங்கள் இதில் அவர்கள் எப்படி சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று எழுதி இருக்கே அது என்ன ஆதாரம் இல்லையா. ஆதாரத்த தேடறவன் எங்கும் போ வேண்டாம் தொலைகாட்சி அல்லது இவர்கள் கூட்டங்களை பார்த்தாலே போதும். எப்பொழுதும் புதிய கோட் சூட், சபாரி சூட் , கட் அவுட், சுவரொட்டி, மேடை அலங்காரம், இவர்களின் வகானங்கள், விளம்பரம் போன்றவை அதற்கு சான்று . ஆங்கிலத்தில் சொல்வார்களே ‘teaser’ என்று அது போல இந்த கட்டுரை ஒரு அறிமுகம் அவ்வளவு தான். அதை ஒரு ‘innate prejudice’ யோடு பார்க்காமல் மக்களை சுரண்டி மக்கு முண்டன்களாக்கும் பால் தினகரன், மோகன் சி.லாசரஸ், ‘இன்னொரு’ மோகன், சாம் சுந்தரம் போன்றவர்களை அம்பல படுத்தும் முயற்சி என்று பாராட்டிவிட்டு போங்களேன்.

  ben-http://theanarchyfix.wordpress.com/

 2. அடப்பாவி, நீ என்ன ஆர்.எஸ்.எஸ். காரனா? சுனாமி வந்து செத்ததுல வேளாங்கன்னி கோவிலுக்கு போனவன்தானேடா அதிகம்பேரு? எதுக்கு எத எழுதறதுங்கற விவஸ்தவேணாம்…லூசு

  • Loosu maathri pesukireye ….

 3. Thursday, July 31, 2008
  நக்மா மீது வழக்கு போடும் பி.ஜே.பி
  2 votes
  நான் காணாமல் போன ஆடல்லவோ? கர்த்தர் என்னைத் தேடுகிறார்” என்று கிறிஸ்துவப் பெண்ணாக மாறி, மதப்பிரசாரத்தில் இறங்கிய நடிகை நக்மாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக மாறி இருக்கிறது. நக்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

  கிறிஸ்துவ மதபோதகர்களில் மிகவும் பிரபலமானவர் மோகன் சி.லாசரஸ். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இவர் நடத்தும் பிரசங்கத்துக்கு எக்கச்சக்கக் கூட்டம் கூடும். கடந்த 29.06.08-ம்தேதி, திருச்செந்தூர் அருகே உள்ள நாலுமாவடியில் இவர் வழக்கம்போல `இயேசு விடுவிக்கிறார்’ கூட்டத்தை நடத்தியபோது, அதைக் கேட்க வந்த கிறிஸ்துவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. அங்கே மேடையில் வெள்ளைப் புறாவாக வீற்றிருந்தவர் நடிகை நக்மா. `ஸ்டைலு ஸ்டைலுதான்’ என்று சூப்பர் ஸ்டாருடன், சொக்க வைக்கும் விதத்தில் ஆட்டம் போட்ட நடிகை நக்மா, ஏதோ ஞானப்பாலில் குளித்தவர் போல அங்கே கிறிஸ்துவ மதப்பிரசாரமும் செய்தார். `இஸ்லாமியப் பெண்ணான தான் இயேசுவின்பால் ஈர்க்கப்பட்டது எப்படி?’ என்பதோடு கிறிஸ்துவ மதத்தின் சிறப்புகளை அவர் நெக்குருக விளக்கியபோது, `உச்’ கொட்டாத கிறிஸ்துவர்களே இல்லை. அந்த அளவுக்கு உள்ளம் உருக்கும் விதத்தில் நக்மாவின் பேச்சு இருந்தது.

  நக்மாவின் இந்த மதப்பிரசங்கம்தான் அவரை இப்போது சிக்கலில் மாட்டிவிட்டிருக்கிறது. நாலுமாவடியில் நக்மா நடத்திய பிரசங்கம் பற்றிய செய்தி மறுநாள் நாளிதழ்களில் வெளியாக, அதைப் படித்துப் பார்த்த பி.ஜே.பி.யினர் கடும் காட்டமாகி இருக்கிறார்கள். குறிப்பாக, பி.ஜே.பி. வழக்கறிஞர் பிரிவின் நெல்லை மாவட்டத் தலைவர் வக்கீல் அருள்ராஜ் இதில் செமை காட்டமாகி விட்டார்.

  நக்மாவின் பேச்சு அடங்கிய முழு சி.டி.யை வாங்கிப் போட்டுப் பார்த்த அவர், பி.ஜே.பி.யின் வழக்கறிஞர் பிரிவின் மாநிலச் செயலாளர் ஷ்ரீதர் மூர்த்தியிடம் அதுபற்றிப் பேசியிருக்கிறார். இந்த ஷ்ரீதர் மூர்த்திதான் மதானி விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு போட்டிருப்பவர். நக்மாவின் பேச்சைக் கேட்ட அவரும், இதற்காக நக்மா மீது வழக்குத் தொடரலாமே என கிரீன் சிக்னல் கொடுக்க, உற்சாகமானார் வக்கீல் அருள்ராஜ்.

  உடனடியாக இவர் நடிகை நக்மாவின் முகவரியைத் தேடி அலைந்திருக்கிறார். இரண்டு வாரம் தேடியும் நக்மாவின் மும்பை முகவரிகிடைக்கவில்லை. “அதனாலென்ன? நடிகர் சங்கத்துக்கு அனுப்பினால் அவர்கள் நக்மாவுக்கு அதை ஃபார்வர்ட் செய்து விடுவார்கள்” என சில சீனியர்கள் ஐடியா கொடுக்க, உடனே சென்னை தி.நகரில் உள்ள `தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க அலுவலக’ முகவரியிட்டு நக்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் வக்கீல் அருள்ராஜ். கடந்த 23-ம்தேதி மாநிலச் செயலாளர் ஷ்ரீதர் மூர்த்தி இதற்காகவே நெல்லை வந்து நோட்டீஸுக்கு இறுதி வடிவம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

  இது பற்றி வக்கீல் அருள்ராஜிடம் பேசினோம்.

  “நடிகை நக்மா யாருங்க? அடிப்படையில் அவர் ஒரு முஸ்லிம். அவர் திடீர் என்று நாலுமாவடியில் போதகர் மோகன்.சி.லாசரசின் `இயேசு விடுவிக்கிறார்’ பிரசங்கக் கூட்டத்தில் கிறிஸ்துவ பிரசங்கம் செய்யப்போவதாக வந்த விளம்பரத்தைப் பார்த்த உடனேயே எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். ஏனென்றால், மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் சூத்ரதாரியாகச் செயல்பட்ட சர்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமோடு இணைத்துப் பேசப்பட்டவர்தான் இந்த நடிகை நக்மா. தவிர, குண்டு வெடிப்பு தொடர்பாக சி.பி.ஐ. அவரையும் விசாரித்திருக்கிறது.

  எனவே, ஒரு தேசத் துரோகியோடு இணைத்துப் பேசப்பட்ட நடிகை கிறிஸ்துவப் பிரசங்கம் செய்ய வருகிறார் என்றவுடனேயே நாங்கள் அலெர்ட் ஆகிவிட்டோம். பி.ஜே.பி. தொண்டர்கள் இரண்டு பேரை கிறிஸ்துவர்கள் போல அந்தக் கூட்டத்திற்கு அனுப்பினோம். அவர்கள் நக்மாவோட பேச்சை அப்படியே டேப் பண்ணிக் கொண்டு வந்தார்கள். அந்தப் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போய்த்தான் அவர் மீது வழக்குப் போட முடிவு செய்தோம்” என்றார் அவர்.

  `வழக்குப் போடும் அளவுக்கு அப்படிஎன்ன பேசிவிட்டார் நக்மா?’ என்ற கேள்வியை வக்கீல் அருள்ராஜிடம் கேட்டு வைத்தோம். சிவகாசி பட்டாசாகச் சீறினார் அவர்.

  “நடிகை நக்மாவின் கிறிஸ்துவ மதப்பிரசங்கம் பிற மதத்தினரின் மத உணர்வை ரொம்பவே புண்படுத்துகிற மாதிரி இருக்கிறது. `உலகில் இயேசு மட்டும்தான் கடவுள், மற்றவர்கள் கும்பிடுவதெல்லாம் வெறும் சாத்தான்களும், பேய்களும்தான்’ என அவர் பேசியிருக்கிறார். இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 295(ஏ)-படி தண்டனைக்குரிய குற்றம். தவிர, `கேன்சர், பக்கவாதம், பிரஷ்ஷர், ஆண்மைக் குறைவு என எல்லா நோய்களும் அற்புத சக்தி மூலம் தீரும்’ என அவர் பேசியிருக்கிறார். நக்மா டாக்டருக்குப் படித்தவரல்ல. அப்படி இருக்கும் போது நோய் தீர பிரிஸ்கிரிப்ஷன் கொடுப்பது ரொம்பத் தவறு. எனவேதான் நடிகை நக்மா மீது `தி டிரக்ஸ் அண்ட் மேஜிக் ரெமடீஸ் ஆக்ட் 1954’ன் கீழ் வழக்குத் தொடர முடிவு செய்திருக்கிறோம். அற்புத சக்தி மூலம் நோய் தீரும் என அவர் பேசியிருப்பது ஓர் ஆட்சேபத்துக்குரிய விளம்பரம்.

  இது பற்றி இன்னும் பத்து நாட்களுக்குள் அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். அதோடு, `இனி இது போன்ற மத பிரசங்கங்கள் செய்வதில்லை’ என அறிவிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். பதில் வராவிட்டால் உடனடியாய் ஐகோர்ட்டில் வழக்குப் போடப்போகிறோம். நடிகை நக்மாவின் மதப்பிரசங்கத்தை பி.ஜே.பி தடுத்து நிறுத்தும்” என்றார் ஆவேசமாய்.

  கிறிஸ்துவ மத போதகர் மோகன்.சி.லாசரசுக்கும் இதே போல நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறதாம். `இயேசு அழைக்கிறார், இயேசு நேசிக்கிறார், இயேசு விடுவிக்கிறார்’ என்பதெல்லாம் இருக்கட்டும், இயேசு வழக்கிலும் சிக்க வைப்பார் போலிருக்கிறதே!
  ( நன்றி: குமுதம் ரிப்போட்டர் )

 4. TENNISON J says:

  dai naikala aatharam illama kutram sata kudathu
  ne sotha thana thinginga
  un kitta yathavathu aatharam irkka
  anga yanna nadakkunu vanthu paru…mohan c lazar parula yantha oru sothum illa
  unaku sothukku vali illatha nilama vantha ippadiyallam pesuviya kadavalodu vilayadatha
  ALINCHU POVA
  unnaku kadaisi kalam thampi……………….yosichu pesu
  unnakku biblela pathi therithanala sollura
  yantha uliya karan melum kuttram satrathay athai kadavul parthu kolluvar
  Rs 50/- wepsite vachuruntha yathavenum nalum poduviya porama pidichavanay
  i will pray for u……………….

  • I Thank Mr.Tennison for his visit and showing what a Christian is.

  • shine.son2@gmail.com says:

   நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருக்கும் வரை உங்களின் அறிவு அதற்கு மேல் யோசிக்கப் போவதில்லை. எனவே தங்களின் கருத்து வியப்பூட்டுவதல்ல.

   • prince says:

    Mr .TENNISON பேசியது வருத்தம் அளிக்கிறது அவர் கடுமையாக பேசியதற்கு நான் வருந்துகிறேன்.
    மேலும் தேவப்ரியாஜி , shine.son2@gmail.com ….. இயேசு கிறிஸ்து வழிகாட்டிய பதை பரிசுத்த வேதாகமத்தில் உள்ளது… யாரும் மனிதர்கள் (தினகரன் – லாசரஸ்… இன்னும் பலர் ) கட்டும் பதில் செல்ல வேண்டாம்.. தேவப்ரியா நீங்கள் வேதத்தை ஆராய்ந்து படிங்கள் அவைகள் உண்மையில் கடவுளின் வார்த்தைகள் .
    கிறிஸ்து நமக்காக வாழ்ந்து பாடுகள் அனுபவித்து, தீமையின் தலையை நசுக்கி , மரித்து மீண்டும் உயிரோடு எழுந்து… மீண்டும் வர போகிறவர்…

 5. shanti says:

  TO
  DEVAPRIYAJI
  brother.ungaluku ivla mula irukide can u explain me neenga epadi born aninga remember my words in ur life ungala madri ala than jesus romba nesikaru becoz avar vandade pavigalai nesika ,vidudalai akka oru vati avoroda anba rusithu paru nee ipadi pesa matai.you dont have permission to interfere othrs life god is true avaruku ellame therium ok dont worry he will not punish u . we will pray for u god bless u& your family.

 6. prince says:

  என்னோட கமெண்ட்ஸ் upload பண்ணினா “Your comment is awaiting moderation.” அப்பிடீன்னு messege வருது சோ உங்களுக்கு தேவையான, சாதகமான, கருத்தை மட்டுமே நீங்கள் வேலிடுவீர்கள் அப்படி தானே…

  • நண்பரே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. என் வலைப்பு இங்கே.

   http://pagadhu.blogspot.in/

   கிறிஸ்து என ஒருவர் வர வேண்டியதே இல்லை பழைய ஏற்பாடு புனையல் கதைகள்படியே.
   கிறிஸ்து யார்- இயேசுவா? http://pagadhu.blogspot.in/2012/06/blog-post_24.html

 7. Pingback: மோகன் சி.லாசரஸ் சர்ச் கட்டிடம் இடிந்து விழுந்து இருவர் மரணம். | தேவப்ரியா

 8. Paul says:

  jesus is very comming soon,jesus redeems valga valrga, parisutha Aavi Aakkni Abisekam irrankattum Aarputham nadakattum

 9. Murugan says:

  every month Nalumavadi vanthu Parunga jesus seiyum Aarputhathai parunga jesus coming soon

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: