பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் அறிவுரை

தமிழ் காட்டுமிராண்டி பாஷை இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. “வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்’ என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், “தமிழ் மொழி 3000 – 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி’ என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டு மிராண்டி மொழி என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும், மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றி தெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லா விட்டால், நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?

periyar தமிழால் என்ன நன்மை?தமிழ் தோன்றிய 3000 – 4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்த புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இது வரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன். தமிழறிஞர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகு தூரம்“தமிழ் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாத வித்துவான்களாக… தமிழ்ப் புலவராகவே வெகு காலம் இருக்க நேர்ந்து விட்டதால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். ஆகவேதான் புலவர்கள், வித்துவான்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர்கள் வரை, இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்கல்லாமல் மற்றெதற்கும் பயன்படுவதற்கு இல்லாதவர்களாகவே ஆகி விட்டார்கள். பிழைப்புக்கு ஆதாரமாய் தாய்மொழி வேஷம்அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள், மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய், அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள். வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால் பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும் யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால், பல முண்டங்கள் பல விதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன். தொல்காப்பியன் மாபெரும் துரோகிதொல்காப்பியன் ஆரியக் கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்து விட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் வகையில், தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார். – பெரியார் எழுதிய “தமிழும் தமிழரும்’ என்ற நூலிலிருந்து.தமிழில் என்ன நல்ல கருத்து உள்ளது?நாட்டுக்கு “சுதந்திரம்’ கிடைத்து இன்றைக்கு 20ஆவது ஆண்டு நடக்கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, “இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ் வேண்டும்’. இதுதானா? அய்யோ பைத்தியமே! தமிழை (பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ் “சுவை’ அல்லாமல், அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை, பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டுபிடித்து பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன்.சிலப்பதிகாரம் இது விபச்சாரத்தில் ஆரம்பித்து, “பத்தினி’த்தனத்தில் வளர்ந்து, முட்டாள்தனத்தில், மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிஷமாகும்.வெளிநாட்டான் அறிவு இனிப்பு; மொழி கசப்பா ?சர்வத்தையும் விஞ்ஞான மயமாக மேல்நாட்டு முறைகளைக் கொண்டு ஆக்கி, சர்வத்திலும் மேல்நாட்டானை (புதிய முறைகளை)ப் பின்பற்றி, வளர்ச்சி அடையவே முயற்சிக்கிறோம். திட்டம் போடுகிறோம். இந்தக் காரியங்களுக்கு தமிழர் – முத்தமிழர் சங்கங்களையே நம்பி என்ன காரியத்திற்கு, ஆங்கிலக் கருத்தோ, இங்கிலீஷ் சொல்லோ, ஆங்கிலேயனிடம் பயிற்சியோ இல்லாமல் இங்கிலீஷை பகிஷ்கரித்து விட்டு என்ன சாதித்துக் கொள்ள முடியும்? பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன் ?சாதாரணமாக பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். – பெரியாரின் கருத்துகள், “அறிவு விருந்து’ என்ற நூலிலிருந்து. தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம்…தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? “தாய்ப்பால் சிறந்தது’ என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்! தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது? இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு – காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன். இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன். – “தாய்ப் பால் பைத்தியம்’ என்ற நூலிலிருந்து.

File:Periyar with Jinnah and Ambedkar.JPGகற்பு ஒழுக்கம் என்பது பூச்சாண்டி !உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கி ஆளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அது போலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும், எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழப் பயன்படுத்தி வரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ சத்தோ ஒன்றுமே கிடையாது. கற்பு, காதல், சத்தியம், நீதி, ஒழுக்கம் என்பனவெல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள். அதாவது குழந்தைகளைப் பயமுறுத்த பெரியவர்கள் “பூச்சாண்டி, பூச்சாண்டி’ என்பது போல், இவை எளியோரையும் பாமர மக்களையும், வலுத்தவர்களும் தந்திரக்காரர்களும் ஏமாற்றச் செய்த ஒரு பெரும் சூழ்ச்சியேயாகும். – “மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்’ என்ற நூலிலிருந்து.

பெண்களும் கற்பும்பெண் தன்னைப் பற்றியும், தனது கற்பைப் பற்றியும் காத்துக் கொள்ள, தகுதி பெற்றுக் கொள்ள விட்டு விட வேண்டுமே ஒழிய, ஆண் காவல் கூடாது. இது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும். – 3.11.1935 “குடி அரசு’ இதழ்பெண்களுக்கு அறிவுரைஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும். ஜிப்பா போட வேண்டும். நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை, நகை, துணி, அலங்கார வேஷங்கள்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். பெண்கள் எல்லாம் ஆறடி ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது, அநாகரீகமும் தேவையற்ற தொல்லையுமாகும். ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ள வேண்டும். – “பெரியார் ஒரு வாழ்க்கை நெறி’ என்ற நூலிலிருந்து. உண்மையான சமரசம்ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு கஷ்டமே இருக்காது. – “தந்தை பெரியார் அறிவுரை 100′ என்ற நூலிலிருந்து.பெண்ணடிமை ஒழிய…பெண்ணடிமைக்கு அடிப்படைக் காரணங்கள் திருமணம், கற்பு என்பவைகளேயாகும். திருமணம் என்பது மனிதத் தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமை கொள்ளவே ஏற்பட்டது… திருமணம் என்பது ஆண்களுக்கு நன்மையாகவும், பெண்களுக்கு கேடாகவும் இருக்கிறது. பெண்களை அடிமையாக வைத்திருப்பது என்பது ஆண்களுக்கு லாபமாக இருக்கிற காரணத்தால், பெண்கள் உரிமைக்கு ஆண்கள், ஒப்புவது இல்லை. இந்த நிலை மாறியாக வேண்டும். நாளைக்கே ஒரு அரசாங்கம் வந்து, திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சட்டம் செய்து விட்டால் பிரச்சனை இல்லை… எனவே, பெண்ணடிமை ஒழிய திருமண முறை ஒழிந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல. மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டுமென்றாலும், இந்த திருமண முறை ஒழிந்தே ஆக வேண்டும். பெண் விடுதலை…கற்புக்காக பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான, நிர்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும்… கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கிற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும். -”உயர் எண்ணங்கள்’ என்ற நூலில் பெரியார் ஒரே புருஷன் என்ற கட்டாயம் கூடாது…இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி, ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகிறது. இதன் பலாபலன் எப்படியிருந்தாலும் இந்தப்படி சொல்கின்றவர்களை எல்லாம் உலகனுபவமும், மக்கள் தன்மையின் அனுபவ ஞானம் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கைத் தன்மையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ, அல்லது உண்மை யறிந்தும் வேறு ஏதாவதொரு காரியத்திற்காக வேண்டி, வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றோதான் கருத வேண்டியிருக்கிறது. …இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும்.அடிமைத்தனம்மக்களின் அன்பும், ஆசையும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, அது இன்னவிதமாக, இன்னாரோடு மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்பதாக நிர்பந்திக்க எவ்வித நியாயமும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஏனெனில், ஆசை என்பது ஜீவ சுபாவமானது. அதை ஏதோ நிர்பந்தத்திற்காக தடுத்து வைப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தன மேயாகும். கற்பு என்பது புரட்டுசாதாரணமாகவே இன்றைய கற்பு, விபச்சாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும் சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்கு, சிறிதும் தேவையில்லாததேயாகும். எப்படி கற்பு என்ற வார்த்தையும் அதைப் பயன்படுத்தும் முறையும் புரட்டானது என்றும், பெண்ணடிமை கொள்ள உத்தேசித்து ஏற்படுத்தியதாகும் என்றும் சொல்லுகிறோமோ, அது போலவே விபச்சாரம் என்னும் வார்த்தையும் அதன் பிரயோகமும் புரட்டானதும், பெண்களை அடிமை கொள்வதற்கென்றே ஏற்படுத்தப்பட்டதென்றும் காணப்படுவதோடு, அது முக்கியமாய் இயற்கைக்கு விரோதமானதென்றும் கூட விளங்கும். ஒழுக்கம் அவசியமில்லைசாதாரண மனித ஜீவனின் உணர்ச்சியையும், இந்திரியச் செயலையும் கட்டுப்படுத்தும்படியானதான கொள்கைகளை, ஒழுக்கங்களை, கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினால் அது செலாவணியாகுமா? செலாவணியாவதாயிருந்தாலும், அதற்கு என்ன அவசியம் என்பன போன்றவைகளை கவனிக்க வேண்டாமா என்றுதான் கேட்கிறோம். கர்ப்பத்தின் விளைவுபெண்கள் வியாதியஸ்தர்கள் ஆவதற்கும், சீக்கிரம் கிழப்பருவம் அடைவதற்கும், ஆயுள் குறைவதற்கும், அகால மரணமடைவதற்கும் கர்ப்பம் என்பதே மூலகாரணமாயிருக்கிறது. பெண்கள் விடுதலைக்கும், சுயேச்சைக்கும், முன்னேற்றத்திற்கும் அவர்கள் பிள்ளை பெறுவது என்பதை நிறுத்த வேண்டும் என்று நாம் சொல்லுகின்றோம். – “பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலிலிருந்து. பெண்கள் அடிமை நீங்க வேண்டுமானால், முதலாவதாக அவர்களை கற்பு என்னும் சங்கிலியால் கட்டிப் போட்டிருக்கும் கட்டை உடைத்தெறிய வேண்டும். கட்டுப்பாட்டிற்காகவும், நிர்பந்தத்திற்காகவும் கற்பு ஒருக்காலும் கூடாது! கூடாது! ” தந்தை பெரியார் ” சமுதாய சீர்திருத்தம் என்ற நூல் – பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு கேள்வி : பெண்களுக்கு புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்? பதில் : கற்பு என்கின்ற வார்த்தையும், விபச்சார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ, அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும். இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்குக் காரணம், ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபச்சார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்து விட்டதாலேயே, சட்டப்படி முழு விடுதலையும் பெற்றிருக்கிறார்கள். ” தந்தை பெரியார் ” குடிஅரசு 29.10.1933 – “விடுதலை’ வெளியிட்ட தந்தை பெரியார் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் கர்ப்பம் இடையூறானது !“”…பெண்கள் கர்ப்பமாவது அசம்பாவிதமாய் இருப்பதுடன், பெண்களின் சுதந்திர வாழ்வுக்கும் இந்த கர்ப்பமானது பெரிய இடையூறாயிருக்கிறது. …புருஷன் தனக்கு இஷ்டமான பெண்ணை மணந்து கொள்வதற்கும், பெண்சாதி ஒரு புருஷனைத் தவிர வேறு எந்தப் புருஷனையும், எந்தக் காரணம் கொண்டும் மணந்து கொள்ள முடியாததற்கும், இக்குழந்தைகளைப் பெறுவதே பெருத்த தடையாய் இருக்கிறது… இதுவரை கூறி வந்தவைகளாலும், இன்னும் பல காரியங்களாலும், பெண்கள் கர்ப்பத் தடையை அனுசரிக்க வேண்டியது அவசியமாகும். – குடியரசு கட்டுரை 1.3.1931 “”…இந்தக் “கலியாணம்’ என்ற அமைப்பு முறை இருப்பதால்தானே, கணவன் – மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது… “தந்தை பெரியார் பெங்களூரில் நிகழ்த்திய சொற்பொழிவு – விடுதலை 28.6.1973 நாசமாகப் போகிற கற்பு, கற்பு என்று சொல்லி, நம் பெண்களை எவ்வளவு கேவலமாக ஆக்கி விட்டார்கள்? -தந்தை பெரியார் “வாழ்க்கைத் துணை நலம்’ எனும் புத்தகத்திலிருந்து 1938ஆம் ஆண்டு பதிப்பு ஆண்களின் சூழ்ச்சி !…அன்றியும் ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால், பெண்களின் அடிமைத்தனம் வளர்வதுடன், பெண்கள் என்றும் விடுதலைப் பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்பு கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காக பாடு படுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம், பெண்களை ஏமாற்றுவதற்கு செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. பெண் விடுதலை…பெண்கள், பிள்ளைபெறும் தொல்லையிலிருந்து விடுதலையாக வேண்டும் என்கிற மார்க்கத்தைத் தவிர, வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்கின்ற முடிவு நமக்கு கல்லுப் போன்ற உறுதியுடையதாய் இருக்கிறது. தவிர, “பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தி விட்டால், உலகம் விருத்தியாகாது; மானிட வர்க்கம் விருத்தியாகாது’ என்று தர்ம நியாயம் பேச சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகா விட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்? மானிடவர்க்கம் பெருகா விட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும்? அல்லது இந்த தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன நஷ்டம் உண்டாகி விடும்- என்பது நமக்குப் புரியவில்லை. -”குடியரசு’ (12.8.28) பத்தினி என்பது முட்டாள்தனம்பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள் தனத்திலிருந்தும் மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை. – “விடுதலை’ (4.5.73) தேசிய குற்றம்ஒரு பெண்ணை தாய், தகப்பன், பி.ஏ. படிக்க வைத்து, ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்து, அந்தப் பெண் சமையல் செய்யவும், குழந்தை வளர்க்கவும், நகை துணி அலங்காரங்களுடன் மக்களின் கவனத்தை ஈர்க்கவும் செய்தால், பி.ஏ. படிக்க வைத்த பணம் வீண் என்பதோடு, அதற்காக சர்க்கார் செலவழித்த மக்கள் வரிப் பணமும் வீண்தானே? இது தேசிய குற்றமாகாதா? ஆண் போல நடக்க வேண்டும்…எனவே பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழையாமல் ஆண் என்றே அழைக்க வேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இட வேண்டும். உடைகளும் ஆண்களைப் போல கட்டுவித்தல் வேண்டும். சுலபத்தில் இது ஆணா பெண்ணா என்று மற்றவர்கள் கண்டு பிடிக்காத மாதிரியில் தயாரிக்க வேண்டும். பெண்ணும் தன்னை “பெண் இனம்’ என்று கருத இடமும், எண்ணமும் உண்டாகும்படியாக நடக்கவே கூடாது. – திருப்பத்தூரில் (15.9.46) பெரியார் சொற்பொழிவுசுயேச்சைக்கு விரோதம்…ஆகையால் ஆண், பெண் இருவர்களின் சுயேச்சைக்குமே கர்ப்பமாவதும், பிள்ளைகளைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது. அதிலும் பெண்கள் சுயேச்சைக்கு, கர்ப்பம் என்பது கொடிய விரோதியாய் இருக்கிறது. அதனால்தான் நாம் கண்டிப்பாய் “பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும்’ என்கிறோம். – “குடியரசு’ (6.4.1930) திருமணம் பெண்ணை அடிமையாக்குகிறதுபுருஷன் – மனைவி சம்பந்தமே, எஜமான் அடிமை சம்பந்தமே ஒழிய அன்பு முறை சம்பந்தமோ, நட்பு முறை சம்பந்தமோ அல்ல. ஒரு பெண்ணை, ஒரு ஆணுக்கு அடிமையாக்குவது தவிர்த்து திருமண முறையில், புருஷன் – மனைவி முறையில் வேறு தத்துவம் இல்லவே இல்லை என்பதை உறுதியாகச் சொல்வேன். “”நீ என் மனைவி; நானே உனக்கு கணவன்; நீ என்னைத் தவிர வேறு யார் மீதும் காதல் கொள்ளக் கூடாது” என்று ஒரு தலைமகன் கூறும் தத்துவத்தை – ஒரு தலைவி அப்படியே ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் அது அடிமைப் புத்திதானே? பெண்களுக்கு உரிமை வேண்டுவோர், இத்தத்துவத்தைக் கொண்டுள்ள திருமண முறைகளை ஒழித்துக் கட்ட முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டாமா? கண்ணகி பற்றி..“”…..கோவலன் சிலம்பு வைத்திருப்பது ராஜாவினுடையது – என்று பொய்க் குற்றம் சாட்டப்பட்டதன் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாத அரசன், கோவலனை வெட்டிக் கொல்லச் சொல்லுகிறான்; கோவலன் இறந்து போகிறான். இதை அறிந்த அம்மாள் கண்ணகிக்குப் பெரும் கோபம் வந்து, நிரபராதிகளான மதுரை மக்களைச் சுட்டுச் சாம்பலாக்கினாள்… கோவலன் ஒழுக்கமற்றவன்; தாசி ஒழுக்கமற்றவள்; கண்ணகி மடப்பெண். “”அகலிகை, சீதை, துரோபதை, தாரை எல்லாம் கற்புக்கரசிகளாய் இருக்கும் போது, கண்ணகி கற்புக்கு மாத்திரம் முட்டாள்தனம் வேண்டுமா? மற்றும் இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும், தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ன புத்தி? மார்பைக் கையால் திருகினால் அது வந்து விடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும், அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர, வேறு எதிலும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பை (முலை) வீசி எறிந்தால், அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் “பாஸ்பரஸ்’ இருக்குமா? இந்த மூடநம்பிக்கை கற்பனையானது, என்ன பயனைக் கொடுக்கிறது? இதனால் கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் கூற முடியுமா? “”அக்கினி பகவானுக்கு கண்ணகி, “பார்ப்பனர்களைத் தவிர, மற்றவர்களைச் சுடு!’ என்று கட்டளை இட்டாளாம். அதுபோல் பார்ப்பனர்களைத் தவிர, மற்றவர்கள் சாம்பலானார்களாம்; மதுரை நகரம் சாம்பலாயிற்றாம்! இதுதான் கண்ணகியின் கற்பின் பெருமையா? அவள் புத்தியின் பெருமையா? அக்கினி பகவானுக்குப் புத்தி வேண்டாமா? ஒரு பெண் பிள்ளை முட்டாள்தனமாக உளறினால், நிரபராதிகளைச் சுடலாமா? ஒரு பட்டணத்தைக் கொளுத்தலாமா? என்கின்ற அறிவு வேண்டாமா? பார்ப்பனர்களை எதற்காக மீதம் விட வேண்டும்? ஆகவே, வருணாசிரம தர்ம மனு நூல், ராமாயணம், பாரதத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?… “”…பாண்டியன் விசாரணை செய்து அவனுக்குக் கிடைத்த உண்மை மீது, கோவலனுக்குத் தண்டனை விதித்தான். ஆனால், கண்ணகி ஒரு விசாரணையும் செய்யாமல், ஒரு குற்றமும் காணாமல் நிரபராதிகளான மக்களை, பெண்களைச் சுட்டு எரித்துக் கொன்றாள். அவள் கற்புக்கரசி! வணங்கத்தக்கவள்! தெய்வமானவள்! பாண்டியன் “குற்றவாளி’ இதுதானே சிலப்பதிகாரக் கதை? இதுதான் தமிழர் பண்பாம்! எவ்வளவு முட்டாள்தனம் இந்த மாதிரியான ஆபாசமும், அநீதியும் நிறைந்து இருக்கும் கதைகளை நாம் வைத்துக் கொண்டு, நமக்குச் சொந்தம் என்றா சொல்வது? “”இவைகளைத்தான் நாம் ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறோம்; நெருப்பு வைக்க வேண்டும் என்று சொல்லுகிறோம்; சமுதாயத்திற்கு உதவாக்கரை என்று ஒதுக்கி வைக்கிறோம்!…” (28.7.1951 விடுதலையில் வெளியாகிய பெரியாரின் உரை ஆதாரம் : 22.12.2001 விடுதலை) உப்பு, மிளகாயா பெண்கள் !“ஒருவனுடைய வீட்டு உப்பு மிளகாய் புளியை அபகரிக்க நினைப்பது எப்படி திருட்டாகுமோ, அதுபோல் அவனுடைய மனைவியையும் அபகரிக்க நினைப்பது திருட்டு ஆகும்’ என்று நினைத்து, அவளை அனுபவிக்க மனத்தாலும் நினைக்கக் கூடாதாம். என்னே அடிமைத்தனம்! உப்பு, மிளகாயா பெண்கள்? கேவலம் பெண்கள் இப்படியா ஒருவனுடைய வீட்டு உப்பு, மிளகாயைப் போல் தனி உடமைச் சொத்தாகி விடுவது? – “விடுதலை’ (11.10.48) கல்யாண முறை ஒழிய வேண்டும் !கலியாணம் என்பதையே சட்ட விரோதமாக்க வேண்டும். இந்தக் கலியாணம் என்ற அமைப்பு முறை இருப்பதால்தான் கணவன் – மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. மனைவியாகி விட்டால் அதோடு சரி அவள் ஒரு சரியான அடிமை! அது மட்டுமல்ல இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் அவற்றுக்கு சொத்துக்கள் சம்பாதிப்பது , அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன? – “விடுதலை’ (28.6.73)

தமிழனுக்கு தனிவழி கிடையாது !

தமிழன் நடந்து கொள்வதற்கென்று தனிமுறை, வழிமுறை கிடையாது. தமிழனுக்கு என்று தனித்த முறையில் ஆரியம் கலவாத இலக்கியம் கிடையாது. – “குடியரசு’ (27.11.43)எல்லாமே தமிழ்தான் !தமிழன், தெலுங்கன், கன்னடியன், மலையாளி இவர்கள் பேசுவதெல்லாம் தமிழ்தான். இவர்கள் பேசுவது வெவ்வேறு மொழியென்று கூறுபவன் தமிழ் மகனல்லன்; தமிழை அறியாதவன்; ஆரியத்திற்குச் சோரம் போனவன். நம்மைக் காட்டிக் கொடுத்து ஆரிய ஆதிக்கத்திற்கு ஆக்கந்தேட முயற்சிப்பவன். – “மொழியாராச்சி’ நூலிலிருந்து தமிழின் பெயரால் பிழைப்பு !நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், “தமிழைக் காக்க வேண்டும், தமிழுக்கு உழைப்பேன், தமிழுக்காக உயிர் விடுவேன்’ என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக் கூடாது. – “விடுதலை’ (16.3.67) தமிழ் ஒன்றுக்கும் பயன்படாது !தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, இதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார். – “விடுதலை’ (27.11.43) இன்றைய தேவை ஆங்கிலம் !…நாம் இன்றைய நிலைமையை விட வேகமாக முன்னேற வேண்டுமானால் – ஆங்கிலம்தான் சிறந்த சாதனம் என்றும், ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனை மொழியாகவும் இருந்தாக வேண்டுமென்றும், ஆங்கில எழுத்துக்களே தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்களாவது அவசியம் என்றும், ஆங்கிலமே நம் பேச்சு மொழியாவது நலம் பயக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். – “மொழியும் அறிவும்’ நூலில் பெரியார் முக்கொலை !போதாக்குறைக்கு “பெரியார் கல்லூரியில் படித்தவர்கள்’ என்றும் நாங்கள் “பகுத்தறிவுவாதிகள்’ என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள், “தமிழுக்கு தமிழ் மொழிக்கு கேடு வந்தால் நாங்கள் பதவியை விட்டு வெளியேறி விடுவோம்’ என்று சொல்கிறார்கள் என்றால், இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது? என்ன பெரியார் வாசனை இருக்கிறது? உயர்தர படிப்புகளையெல்லாம் கல்லூரியிலும் கூட தமிழிலேயே ஆக்குகிறோம் என்றால், “மக்களை முட்டாள்களாக்குகிறோம்’ என்றுதானே பொருள்? இப்படியான நிலை ஏற்பட்டால் இது முக்கொலை என்றுதானே ஆகும்? தமிழ் மொழியும் கெட்டு, பாட விஷயமும் பொருளும் கெட்டு, ஆங்கிலமும் கெடும்படி ஆவதால் இது மூன்று கொலை செய்ததாகத்தானே முடியும்? இதுதானா இந்த சிப்பாய்கள் வேலை? – “விடுதலை’ (5.4.67)

திருக்குறளைக் கண்டிக்கிறேன் !…குழந்தைகள் எல்லாம் வீட்டிலேயே இங்கிலீஷில் பேச வேணும். அது நல்ல நாகரீகத்தையும் கொண்டு வரது. ஏன் “குறளை’ எடுத்துக்குங்க. நான் மட்டும்தான் குறளைக் கண்டிக்கிறேன். குறளோடு நின்னுட்டா வளர்ச்சியே குன்றி விடுமேன்னுதான். குறள் இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தினது. பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கி விட்டது. – பெரியார் பேட்டியிலிருந்துகெட்ட நாற்றம் !வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், “எல்லாம் போய் விட்டால், நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் “இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு என்று கூறினால் – அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது?’ என்று பதில் கூறுவேன். – “விடுதலை’ (1.6.50) “கலைமகள்’ (பிப்ரவரி 73)

சிலப்பதிகாரம், தேவடியாள் மாதிரி !…இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், ஆபாச மூட நம்பிக்கை ஆரிய கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய் கொண்டும், வளையல் அணியால் மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப்படுகின்றாளோ – அதுபோலத்தான் இந்த சிலப்பதிகாரம் ஆகும். – “விடுதலை’ (28.7.51)

சுதந்திர நாள் அல்ல, துக்க நாள் !என்னைப் பொறுத்தவரையில் நான் இதை “சுதந்திரம் பெற்ற நாள்’ என்று சொல்ல மாட்டேன். அடிமையும், மடமையும், ஒழுக்கக் கேடும், நேர்மைக் கேடும் ஏற்பட ஏதுவான துக்க நாள் என்றுதான் சொல்வேன். இதை நான் இன்று மாத்திரம் சொல்லவில்லை. இந்தியாவுக்கு சுதந்திரம் என்று என்றைக்கு வெளியிடப்பட்டதோ, அன்றே சொன்னவன் நான். காலித் தனத்துக்குப் பெயர் வேலை நிறுத்தம், அயோக்கியத் தனத்துக்குப் பெயர் அகிம்சை; சண்டித்தனத்திற்குப் பெயர் சத்தியாக்கிரஹம். தான் பதவி பெற்ற கட்சிக்கு துரோகம் செய்து விட்டு, எதிர்க் கட்சி ஆளாவது முதலிய அயோக்கியத் தனங்கள், எப்படி யோக்கியமான சுதந்திரமாக இருக்க முடியும்? மற்றும் இன்றைய சுதந்திரம் என்பதில், எந்த அயோக்கியத் தனமான காரியம் விலக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியும்? இதை சுதந்திர ஆட்சி என்று வயிற்றுப் பிழைப்பு, பதவி வேட்டை தேசியவாதிகளும் மக்களும்தான் சொல்லிக் கொள்ள முடியுமே தவிர, நேர்மையான அறிவுள்ள ஜன சமுதாயத்தால் சொல்ல முடியுமா என்று கேட்கிறேன். – “விடுதலை’ தலையங்கம் (15.8.72) ஏமாற்றுத் திருவிழா !…ஆதலால், வெள்ளையருக்கும் காங்கிரஸுக்கும் ஏற்பட்ட ஓர் ஒப்பந்த ஆட்சிதானே ஒழிய, இந்திய மக்களுக்கு ஏற்பட்ட சுதந்திர ஆட்சியல்ல. இதன் பயனாய் இந்த நாட்டிலுள்ள காங்கிரஸல்லாத மக்களுக்கு நன்மை இல்லை. பிரதிநிதித்துவம் இல்லை… ஏற்படப் போகும் மாகாண ஆட்சி என்பது வெள்ளையர் அதிகார ஆட்சிக் காலத்திலிருந்த உரிமையை விட மோசமான ஆட்சியேயாகும்… ஆதலால் இம்மாதம் 15ஆம் தேதி நடக்கும் சுதந்திரத் திருநாள் என்னும் “ஆரியர் – பனியா’ ஏமாற்றுத் திருவிழாவில் நாம் கலந்து கொள்வதில்லை என்கிறோம். – “விடுதலை’ (20.8.72) சுதந்திரம், சோறு, மானம் இல்லை !பந்தயம் வேண்டுமானாலும் கட்டுவேன். மத்திய அரசாங்கப் பிடியில் இருந்து திராவிட நாடு தனி நாடாகப் பிரியாவிடில் சுதந்திரம் இல்லை சோறு இல்லை மான வாழ்வு இல்லை. இது உறுதி! உறுதி! உறுதி! – “விடுதலை’ (25.2.49) வடநாட்டான் பிரதமராக இருக்கலாமா?வெள்ளையன் ஒழிந்தது போல் வட நாட்டானும் ஒழிய வேண்டாமா, இந்நாட்டை விட்டு? இந்நாட்டிற்கு சுதந்திரம் வந்துள்ளது உண்மையாயின், எதற்காக ஒரு “இமயமலைப் பார்ப்பான்’ – ஒரு வட நாட்டவன் எங்கள் நாட்டிற்கு பிரதம மந்திரியாக இருக்க வேண்டும்? எதற்காக வடநாட்டவர்கள் இங்கிருந்து நம்மைச் சுரண்டி வர வேண்டும்? கேட்பாரில்லையே இத்தமிழ் நாட்டில்… எதற்காக இந்நாட்டை வட நாட்டவன் ஆதிக்கத்திற்கு ஒப்படைத்து விட்டு, இந்நாட்டவர்கள் அவர்களின் சிப்பந்திகளாக, ஏவலாட்களாக பணியாற்றி வர வேண்டும்? வேறு சுதந்திரம் பெற்ற நாடுகளைப் பார்த்தாயினும் உங்களுக்கு புத்தி வரக் கூடாதா? – “விடுதலை’ (19.10.48) சுதந்திரத்தின் சரித்திரம் !…சுதந்திரத்திற்கும், காங்கிரஸுக்கும் அதன் போராட்டத்திற்கும் தியாகத்திற்கும் சம்பந்தமில்லை. வெள்ளையன் தானாகவே வீசி எறிந்து விட்டுப் போன சுதந்திரத்தை எடுத்துக் கொள்ள, இந்தியாவில் கட்டுப்பாடான வேறு கட்சிகள் இல்லாமல் காங்கிரஸும் முஸ்லிம் லீகும் மாத்திரம் இருந்ததால், முஸ்லிம் லீகுக்கு பயந்து இணங்கி ஆளுக்கு கொஞ்சமாக பங்கு போட்டுக் கொண்டார்கள். அதாவது அனாதியாகக் கிடந்ததை பங்கு போட்டுக் கொண்டார்கள். இதுதான் சுதந்திரத்தின் சரித்திரம்.

அநியாயம் நிறைந்த அரசியல் சட்டம் !இந்திய அரசாங்கமானது அநியாயம் நிறைந்து விளங்கும் அரசியல் சட்டத்தைக் கொண்டிருக்கின்றது. மேலும் அரசியல் நிர்ணயசபையாவது ஒழுங்கானது என்று சொல்ல முடியுமா? – “விடுதலை’ (22.9.51) அரசியல் சட்டம் ஒழியட்டும் ! எனவே, இவர்களால் செய்யப்பட்ட அரசியல் சட்டம் நமக்குத் தேவையில்லை என்று நாம் கூறுவது மட்டும் போதாது. அதை ஒழித்துக் கட்ட ஒரு வழி தேடித்தான் ஆக வேண்டும். எனவே, நாம் என்ன செய்ய வேண்டும்? அந்த அரசியல் சட்டம் நமக்குத் தேவையில்லை. ஆகையால் அதன் கீழ் நாம் சட்டசபைக்குப் போவது சரியில்லை என்பதை உணர வேண்டும். – “விடுதலை’ (22.9.51) நெருப்பில் போட்டு பொசுக்குவோம் !நான் சொல்கிறேன் “இந்த அரசியல் சட்டத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்த அரசியல் சட்டம் எங்களுக்கு தீங்கிழைப்பது ஆகும். இது எங்கள் பிரதிநிதிகளால் செய்யப்பட்டதல்ல. இதை நெருப்பில் போட்டு பொசுக்குவோம்….’ – “விடுதலை’ (7.8.52)

தேர்தலுக்காக !காங்கிரஸ் ஆட்சி பலத்தால், திராவிட நாடு பிரிவினை கேட்பவர்கள் தேர்தலுக்கு நிற்க முடியாது’ என்று விதி செய்து கொண்டவுடன், தி.மு.க. “நாங்கள் திராவிட நாடு பிரச்சனையை விட்டு விட்டோம்’ என்று சொல்லி, தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்று இன்று ஆட்சிக்கும் வந்து விட்டார்கள். தேர்தலுக்கு அது ஒரு தடைப் பிரச்சனையாக ஆகி விட்டதால், அவர்கள் அதைப் பற்றி பேச்சு மூச்சு கூட விடக் கூடாத நிலையில் இருக்கிறார்கள். மத்திய அரசாங்கம் காங்கிரஸார் கையில் இருப்பதால், அவர்களுக்கு பயந்து கொண்டு அடிக்கடி தி.மு.க.வினர் காலாகாலம் பார்க்காமல் “நாங்கள் திராவிட நாடு பிரச்சனையை கைவிட்டு விட்டோம்; விட்டு விட்டோம்; விட்டே விட்டோம்’ என்று சொல்ல வேண்டிய அவசியத்திற்கு வந்து விட்டார்கள். – “விடுதலை’ (30.3.67)

அண்ணாதுரை பற்றி பெரியார் !அண்ணாதுரை ஏன் போனார்? திராவிடர் கழகத்தில் இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது; பெரிய நிலைக்கு வர முடியாது என்று கருதினார். வெளியேறினார். சௌக்கியமாக பணம் சம்பாதித்துக் கொண்டு வாழ்கிறார். அதைப் பார்த்து ஆத்திரப்பட்டுத்தானே, நாமும் பணம் சம்பாதிக்க வேண்டும்; எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பது என்று கருதித்தானே, இன்றைய துரோகிகளும் வெளியேறுகின்றார்கள்? பொதுத் தொண்டன் எப்படி இருக்க வேண்டும் ?பொதுத் தொண்டனுக்கு தன்னால் பாதுகாக்க, பெருக்க வேண்டிய பெரிய தொழில், சொந்த சொத்து இருக்கக் கூடாது. இருந்தால் எதிரிகளுக்கு பயந்து இலக்ஷியத்தை விட்டுக் கொடுக்க நேரும். மனைவி, பிள்ளை குட்டிகள் இருக்கக் கூடாது. இருக்கவே கூடாது. பொதுத்தொண்டு ஊதியத்தால் வாழ்கிறவர்கள், அவர்கள் குடும்பங்கள், மக்கள் சராசரி வாழ்க்கைத் தரத்துக்கு மேல் வாழக் கூடாது; வாழவே கூடாது. வாழ வேண்டி வந்தால் வாழ்ந்து, ஆனால் “”நான் பொதுத் தொண்டன். தியாகி. கஷ்டப்பட்டவன்” என்று சொல்லாதே. சொல்வதற்கு வெட்கப்படு. அப்படி நினைப்பாயேயானால், நீ மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று விட்டதாகக் கருதிக் கொண்டிருப்பவன் – என்றுதான் சொல்ல வேண்டும். -பெரியார் எழுதிய “கழகமும் துரோகமும்’ என்ற நூலிலிருந்து. இரண்டு தடவைக்கு மேல் பதவி கூடாது யாராக இருந்தாலும் இரண்டு தடவைக்கு மேல் ஒரு ஆள் பதவிக்கு வரக் கூடாது என்று சட்டம் செய்ய வேண்டும். இப்போதுள்ளவன், சாகிற வரையில் பதவியில் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். அதற்காக பல காரியங்களைச் செய்ய பயப்படுகிறான். இதைத் தடுக்க வேண்டும். – “விடுதலை’ (27.1.1970) எந்த மதத்துக்கும், எந்த ஜாதிக்கும் சலுகை கூடாதுமதங்கள் என்பவை எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமாகவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும்படிச் செய்வதுடன், அரசியலில் அரசியல் நிர்வாகத்தில் அவை எவ்வித சம்பந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும். ஜாதிக்கென்றோ, மதத்திற்கென்றோ எவ்விதச் சலுகையோ உயர்வு தாழ்வு அந்தஸ்தோ, அவற்றிற்காக அரசாங்கத்திலிருந்து தனிப்பட்ட முறைகளைக் கையாளுவதோ, ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக் கூடாது. – பெரியார் எழுதிய “நமது குறிக்கோள்’ என்ற நூலிலிருந்து.

மது தேவை !குடிப்பது தவறில்லை. கள் குடிச்சு செத்தவங்க எத்தனை பேர் சொல்லுங்களேன்… நண்பர்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கேன். கள்ளுக் கடை எல்லாம் மூடி இருந்தாங்களே, அப்ப குடிக்காம இருந்தாங்களா? குடிச்சிகிட்டுத்தான் இருந்தாங்க. ஒருத்தரும் அப்போ குடியைத் தடுக்கலை. வருமானம் குறைஞ்சதுதான் மிச்சம்… ஜனங்க சோம்பேறியாய் ஆனதுக்குக் காரணமே மது ஒழிப்புதான். கன்னடக்காரன் !ஏன் என்னையே தமிழன் இல்லேன்னு சொல்றாங்களே. என் தாய்மொழி கன்னடம் என்பதாலே சொல்றாங்க. பெரும்பாலானவங்க என்னை தெலுங்கர் – நாயுடு என்றே நினைக்கிறாங்க. நான் கன்னடக்காரன்.

கொடுமை !முஸ்லிமை எடுத்துக் கொண்டால், பெண்களை உலகத்தைக் கூட பார்க்க விட மாட்டேன் என்கிறானே. முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா? – “விடுதலை’ (28.6.1973) மகான் அல்ல !தோழர்களே! நபி அவர்களை நான் ஒரு மகான் என்றோ, அமானுஷ்ய சக்தி படைத்தவர் என்றோ கருதவில்லை. என்னைப் பொறுத்தவரையில், நபி அவர்களை ஒரு மனிதத் தன்மை படைத்த சிறந்த மனிதராகத்தான் கருதுகிறேனேயல்லாமல், அதற்கு மேற்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில் கருதவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். – “விடுதலை’ (23.12.1953)

மடத்தனம் – புளுகு !…அந்த கண்ணகியைப் புகழ்வதும், தமிழச்சிக்கு உதாரணம் காட்டுவதும் தமிழர் சமுதாயத்துக்கு எவ்வளவு இழுக்குத் தெரியுமா? …இந்த சிலப்பதிகாரம் போல் வேறு அழுக்கு மூட்டை இலக்கியம் இல்லவே இல்லை. இது ஒரு கற்பனைக் கதை. கண்ணகியும் ஒரு கற்பனை பெண் பிள்ளை. நூல் முழுதும் மடத்தனம், புளுகு. இப்படியா தமிழனுடைய வாழ்க்கைக்கு உதாரணம் காட்டுவது? – “விடுதலை’ (28.3.1960)

பார்ப்பான் காட்டிய வழி !தமிழன் வளர்ச்சிக்கு, அறிவிற்கு, கலைகளுக்கு, சமயத்திற்கு, அரசியலுக்கு , பார்ப்பான் காட்டிய வழியைத் தவிர, ஒரு தமிழன் காட்டிய வழி என்று சொல்ல இன்று என்ன இருக்கிறது? நமது கலைஞர்கள், கவிஞர்கள், புலவர்கள், அரசியல்வாதிகள், பார்ப்பானை குறை மட்டும் சொல்லிக் கொண்டு, அவன் கலாச்சாரத்தில் மூழ்கி, அவன் காட்டிய வழியில் நடந்து கொண்டு வாழ்கிறவர்களாகத்தான் இருந்து வந்தார்கள்; வருகிறார்கள் என்பதல்லாமல், தமிழர் நலனுக்கு, வளர்ச்சிக்கு, இழிவு நீக்கத்திற்கு என்று யாராவது எந்த அளவுக்காவது பாடுபட்டார்கள் என்று ஒரு விரலையாவது நீட்ட முடிகிறதா? சனியன் !இன்று நமக்குப் பெரும் சனியனாக “அய்க்கோர்ட் – high court’ ஒன்று இருக்கிறது. மற்ற எல்லா ஸ்தாபனங்களும், நமக்கு பெரிதும் அனுகூலமாக இருக்கின்றனவென்றே சொல்லலாம். – “விடுதலை’ (7.10.1972)

அரக்கன் !“காங்கிரஸ்’ என்பது நமது நாட்டையும், இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையான நமது சங்கத்தையும் அழிக்க வந்த ஒரு “அரக்கன்’ என்றுதான் சொல்ல வேண்டும். – “குடியரசு’ (7.11.1926) இவர்களுக்கு எதற்கு ஓட்டு ?…தேர்தலில் வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டு அளிக்கப்பட்டிருக்கிறது! அதாவது திருடன், காலித்தனம் செய்பவன், எதற்கும் அருகதையற்றவன், பாமரர் ஆகிய அனைவருக்கும் ஓட்டு. இவர்கள் எப்பேர்ப்பட்டவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதை சற்று நடுநிலையிலிருந்து யோசித்தால், நான் ஏன் அரசியல் வேலை முக்கியமல்ல என்று கூறுகிறேன் என்பது விளங்கும். – “குடியரசு’ (14.5.1948) ஆகாயக் கோட்டை !…ஆகவே காங்கிரஸானது ஆரியர் நலனுக்காகவே ஒரு போலியான, கற்பனையான, புராணக் கதைகளின் சேதிகளின் பேரில் கட்டப்பட்டிருக்கும் ஒரு மாயாஜால வித்தையென்றும், ஆகாயக் கோட்டையென்றும் சொல்லுகிறோம். – “விடுதலை’ (12.6.1946)ஒழிக்கப்பட வேண்டியவைகள் !மக்களிடம் உணர்ச்சி ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால், சினிமா ஒழிக்கப்பட வேண்டும். நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால், வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும். நாட்டில் காலிகள் அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டுமானால், பத்திரிகைகள் ஒழிக்கப்பட வேண்டும். அரசியலில் நல்ல ஆட்சியும் நாணயமும் ஏற்பட வேண்டுமானால், தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும். – பெரியார் பிறந்தநாள் விழா மலர் 84 (17.9.1962)

“இந்துக்கள் என்றால்…?நான் பந்தயம் கட்டிச் சொல்வேன். நம் மக்களில் (இந்துக்கள் என்பவர்களில்) கடவுளை வணங்குகிறவர்களில் ஒருவர் கூட அறிவாளரோ, யோக்கியரோ, உண்மை அறிந்தவரோ இல்லை! இல்லை! இல்லவே இல்லை என்று கூறுவேன். – “கடவுள் ஒரு கற்பனையே’ நூலில் பெரியார்வயிற்றுப் பிழைப்பு !நம் நாட்டிலும் கம்யூனிஸ்ட்காரர்கள் இருக்கிறார்கள்; இவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு மட்டும் பொதுவுடமையைச் சாதனமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்களே ஒழிய, பொதுமக்கள் கடைத்தேற ஒன்றும் செய்யவில்லை…. எனவே, நாட்டில் பொதுவுடமைக் கொள்கையைக் கொண்ட அரசாங்கம் ஏற்பட்டு முயன்றால்தான், மக்களின் குறைபாடுகள் நீங்குமே ஒழிய, பொறுக்கித்தின்னும் இந்த கம்யூனிஸ்ட்களின் காலித்தனம், பலாத்காரத் தூண்டுதல் மூலம் ஒன்றும் முடியாது. – “உண்மை’ (பிப்ரவரிமார்ச், 1972) ஹிந்தி இருக்கட்டும் இந்தி வேண்டவே வேண்டாம் என்பதல்ல எங்கள் கொள்கை; அதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று நாங்கள் சொல்லுகிறோம்… சில காரியத்திற்காக இந்தியை கட்டாயமாக்க வேண்டுமானாலும் கட்டாயமாக்குங்கள்; ஆனால் குழந்தைகளுக்கு வேண்டாம். பெரியவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம். – “விடுதலை’ (7.10.48) இந்திய அரசாங்கம் வேண்டாம் !எங்களுக்கு ” தமிழர்களுக்கு ” தமிழ் நாட்டாருக்கு – இந்திய அரசாங்கம் வேண்டாம். தமிழ்நாடு – தமிழர்கள் இந்திய அரசாங்கத்தின் கூட்டு ஆட்சியில் – இந்திய யூனியனில் இருக்க விரும்ப வில்லை. நாங்கள் எங்களை, நாட்டை, தனிப்பட்ட பூர்ண சுயேச்சையுள்ள தனியரசு நாடாக ஆக்க விரும்புகிறோம். …மத்திய கூட்டாட்சியிலிருந்து பிரிந்து கொள்ள ஆசைப்படு கிறோம். …ஆகவே இந்திய தேசியக் கொடியை கொளுத்துவது ” இந்தியக் கூட்டாட்சி என்பதில், தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் பிரஜைகளாக இருக்க சம்மதப்பட வில்லை ” என்கின்ற எங்களுடைய இஷ்டமின்மையைக் காட்டுவதே யாகும். – “விடுதலை’ (20.7.1955) மதிப்பு தேவையில்லை !பாரத மாதா கொடி, பாரத நாட்டின் கொடி என்றால், அது வட நாட்டைப் பொறுத்த மட்டும்தான். நாங்கள் அதற்கு மதிப்புக் கொடுக்கத் தேவையில்லை…. காங்கிரஸ்காரர்கள் என்றால் தாய்நாட்டுப் பற்று, தாய்மொழிப் பற்று, தன்மான உணர்ச்சி, சுய அறிவு இவைகளை எல்லாம் தத்தம் செய்தாக வேண்டும். – “விடுதலை’ (4.8.1955)

கம்யூனிஸ்ட்கள் !…நம் நாட்டுக் கம்யூனிஸ்ட்களைப் பொறுத்த மட்டிலும் அத்தனையும் பொய்யாகி விட்டது. பெரும் அயோக்கியர்களையும், பித்தலாட்டக்காரர்களையும், கலகக்காரர்களையும், கொள்ளை, கொலையைத் தூண்டி விடும் அராஜகச் செயல் கொண்டவர்களையும், கொண்டுள்ளது. – “விடுதலை’ (5.8.1955) நியூசென்ஸ்…அரசியல் ரீதியில் இன்று காங்கிரஸுக்கு, காமராசருக்கு எதிர்ப்பு இல்லாமல் ஆக்கியது நமது இயக்கம்தான். பார்ப்பான் குள்ளநரி ஆகிவிட்டான். முஸ்லிம் லீக் இன்று செல்லாக் காசாகி விட்டது. “கண்ணீர்த் துளி’ (தி.மு.க.) நாட்டுக்கு நியூசென்ஸாகி விட்டது. பெரியார் பிறந்தநாள் விழா மலர் (17.9.1964)முட்டாள்தனம் !இந்த அதிசய காலத்தில் “எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன்’ என்று முட்டாள் தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? “விடுதலை’ (14.11.1972)

பலி !இந்தத் திருமண முறையானது காட்டுமிராண்டி காலத்தில், அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை இன்றைக்கும் மனிதன் எதற்காகக் கடைப்பிடிக்க வேண்டும்? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோவிலுக்கு எப்படி மிருகங்களை பலி கொடுக்கிறார்களோ, அது போலவே ஆணுக்குப் பெண்ணை பலி கொடுக்கிற விழாத்தானே திருமணம்? இந்த நாட்டில் மக்கள் தொகையில் சரி பாதியான பெண்கள் இனத்தை எதற்காக இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டும்? …ஆண்களும் பெண்களும் இத்தகைய தொல்லைகளில் மாட்டிக் கொள்ளாமல், படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா? -”விடுதலை’ (3.9.1973)மதங்கள்….கிறிஸ்துவ மத தர்மப்படி, “மனிதர்கள் எல்லோரும் பாவிகளே ஆவார்கள். ஏசு மூலம் ஜபம், பிரார்த்தனை செய்தால் மன்னிக்கப்பட்டு விடுவார்கள்’ என்பது கட்டளையாகும். இதனால்தான் மற்ற மதங்களைவிட, கிறிஸ்துவ மதத்தில் நேர்மையற்றவர்கள் அதிகமான பேர்கள் இருக்க வேண்டியதாகி விட்டது. இஸ்லாமியர்களும் தொழுகையினால், வேண்டுகோளால் பாவம் மன்னிக்கப்பட்டு விடுகிறது என்ற கொள்கையைக் கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் என்பவர்களோ எல்லா விதமான பாவத்திற்கும், அவை ஒழிய கோவில், குளம், ஸ்தல யாத்திரையே போதுமானவையாகும் என்பது உறுதியான கொள்கையாகும். இந்த நிலையில், எந்த மனிதன்தான் யோக்கியனாக இருக்க முடியும்? மனிதன் எதற்காக யோக்கியனாக இருக்க வேண்டும்? -”விடுதலை’ (3.9.1973)

கம்யூனிஸ்ட்களின் வேலை !கம்யூனிஸ்ட் -எவன் காலை நக்கியாவது வயிறு வளர்க்கிறதுதான் அவன் வேலை; இன்னின்னாரோடு தான் இருக்கணும் என்கிற எண்ணம் இல்லை. நாம் வலுத்தால் நம் கிட்டே. பார்ப்பான் வலுத்தால் அவன் கிட்டே. இன்னொருவன் வலுத்தால் அவன் கிட்டே. உலகத்தில் கொள்கையே இல்லாத ஒரு கூட்டம் என்றால் நம் கம்யூனிஸ்ட்தான். அதற்கு அடுத்தாற்போல காங்கிரஸ் – என்ன பண்ணியாவது பதவிக்கு வரணும் என்கிறவன்… இப்போது துவக்கின ஒரு கட்சி இருக்கிறது… அண்ணா முன்னேற்றக் கழகம் என்று இருக்கிறது. அவர்களுக்கு சொந்தத்திலே ஏதாவது வேலை இருக்கிறதா? அவர்கள் எதிரிகிட்டே பேசிக் கொண்டு, “காலிகளை ஒழித்து விட்டு வருகிறேன். எனக்கு ஏதாவது எச்சல்கலை போடுகிறாயா?’ என்று கேட்கிறார்கள். – 4.11.1973ல் பெரியார் ஆற்றிய உரை துக்க நாள், மோசடி, ஏமாற்றுதல் !நானும் ஆரம்ப காலந்தொட்டு, “இது ஒரு மோசடி, மோசடி என்று “ஏமாற்றுதல்தான்’ என்று சொல்லிக் கொண்டேதான் வந்திருக்கிறேன். சுதந்திரம் வந்தது, சுதந்திர நாள் என்ற போதே நான் சொன்னேன் “இது சுதந்திர நாள் அல்ல; துக்க நாள்; மோசடி; நம்மை ஏமாற்றத் துரோகம் செய்கிற நாள்’ என்று நான் அன்றைக்கே சொன்னவன்தான். உரிமை !நமக்கு ஞாயம் இருக்கிறது; இந்த டில்லி அரசாங்கத்தை மாற்ற; நமக்கு ஞாயம் இருக்கிறது, நம் அரசாங்கத்தை அமைக்க. அடியோடு இந்தியா பூராவுக்கும் மாற்றா விட்டாலும் நம் நாட்டைப் பொறுத்தவரைக்கும், நாம் தனிச் சுதந்திர ஆட்சி என்று செய்து கொள்ள நமக்கு உரிமை இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு வந்ததே முன்னே நான் சொன்னாற்போல, ஒரு பித்தலாட்டத்தினாலே வந்ததே தவிர, நமக்கெல்லாம் ஆசை இருந்து வரவில்லையே! “இந்தியா என்கிற ஒரு தேசம் ஆகணும்; அதிலே நாம் ஒரு நாட்டானாக இருக்கணும் இதற்கு ஒரே தேசம்’ அப்படி என்று ஆரம்பிக்கவில்லையே. – 8, 9.12.1973ல் பெரியார் ஆற்றிய உரை பூணூலின் அர்த்தம் !மானம் இருந்தால் இந்த நாட்டில் பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? இருக்க முடியுமா? ஒரு பயல் பூணூல் போட்டுக்கிட்டு நம் எதிரிலே வருவானா? “என்னடா அர்த்தம், இந்தப் பயலுக்குப் பூணூல் இருக்கிறது; ஏ அயோக்கியப் பயலே என்ன அர்த்தம்? நீ பிராமணன், நான் சூத்திரன் என்று அர்த்தம். அப்படி என்றால் என்ன? உன்னுடைய வைப்பாட்டி மகன் என்று அர்த்தம். போடு உன்னைச் செருப்பாலே – அப்படி என்று ஆத்திரமல்லவா வரும் , நமக்கு மானம் இருந்தால்? பொறுக்கித் தின்கிறவன் !அடுத்தாற்போல, ஒழிய வேண்டியது காங்கிரஸ். காங்கிரஸ் ஒழிந்தது; இனிமேல் அது ஒன்றும் உருப்படியாகாது. இப்போதே இரண்டுபேரும் தொங்குகிறார்களே! இரண்டாகப் பிரிந்து, ஒன்றுக்கொன்று மானங்கெட்டுத் திரிகிறது; இப்போது ஒருவருக்கொருவர் சேர்ந்து பார்க்க லாம் என்று (நினைக்கிறது). சேர்ந்தால் இனி என்ன மரியாதை இருக்கப்போகிறது? என்ன ஆகப் போகிறது? இனி எவன் காங்கிரஸை ஆதரிப்பான், பொறுக்கித் தின்கிறவனைத் தவிர? மந்திரி ஆகணும் என்றால் வாழ முடியாது, ஆகிறவன் ஆகிவிட்டுப் போகிறான். சட்டசபை மெம்பர் ஆகணும் என்றால் முடியாது ஆகிப் பொறுக்கித் தின்கிறவன் தின்று விட்டுப் போகிறான். இது இரண்டும் வேணாம் என்கிறவன் நான்! நாம் விட்டது தப்பு. அயோக்கியப் பயல்களுக்கு காங்கிரஸ்காரப் பயல்களுக்கு இடம் கொடுத்தோம். அவன் பார்ப்பான். அதிலே பொறுக்கித் தின்னப் போனவன், நம் ஆள். அதிலே முக்கால் வாசிப்பேர் பார்ப்பானுடைய வைப்பாட்டி மகன் என்று ஒத்துக் கொள்கிறவன். – 19.12.1973ல் ஆற்றிய உரையிலிருந்து நாட்டு முன்னேற்றத்துக்கு வழிநான் 1932ல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை “கணூணிணீணிண்ஞுஞீ ஏதண்ஞச்ணஞீ ச்ணஞீ ஙிடிஞூஞு” என்றார்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டேன். “”நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள, நாங்கள் பயிற்சி பெறுகிறோம்” என்றார்கள். “”எவ்வளவு காலமாக?” என்று கேட்டேன். “”எட்டு மாதமாக” என்றார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? “பதிவிரதம்’ பேசி, பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா? – “விடுதலை’ (28.6.73)

ஒரு தமிழ் நூல் கூட இல்லை!…எனவே, தமிழன் இன்றைய நிலையில் தனது வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்கள் என்று தெரிந்து கொள்ளத்தக்க கருத்துக்களைக் கொண்ட தமிழ் நூல் ஒன்று கூட இன்று நமக்கில்லை. – “விடுதலை’ (28.3.60)

காந்தியமும் ஒழிய வேண்டும் !இந்திய தேசியக் காங்கிரஸும், காந்தியமும் அழிந்தொழிந்து போவது என்பது இந்திய ஏழை மக்களுக்கு மாத்திரமல்லாமல், உலக ஏழை மக்கள் இயக்கத்திற்கே அதாவது சமதர்ம உலகத்திற்கே பெரிய இலாபகரமான காரியமாகும். இந்தியாவில் சமதர்மக் கொள்கை என்றைக்காவது ஒருநாள் ஏற்படும் என்று நினைப்போமேயானால், அது தேசிய காங்கிரஸும், காந்தியமும் ஒழிந்த நாளாகத்தான் இருக்குமே தவிர, அது ஒழியாமல் ஏற்படாது என்பது உறுதி. “குடியரசு’ (30.7.33)

காந்தியாரின் விஷம் !தோழர் காந்தியாரை விட வைதிகர்களும், சனாதன தர்மிகளும் எத்தனையோ மடங்கு மேம்பட்டவர்கள் என்பது எனது அபிப்பிராயம். எப்படியெனில், வைதிகர்களுடைய அக்கிரமம் அயோக்கியத்தனங்கள் எனப்பட்ட விஷமானது, குருடனுக்கும் மூடனுக்கும் நன்றாகத் தெரியும்படியாக இருக்கின்றது. காந்தியாரின் விஷம், மேலே சர்க்கரைப் பூச்சு பூசி, எப்படிப்பட்ட அறிவாளியும் எடுத்துச் சாப்பிடும்படியான மாதிரியில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால், வைதிகர்களது விஷத்தை யாரும் சாப்பிட்டு செத்துப் போக மாட்டார்கள் என்பதோடு, அவ்விஷங்கள் வைதிகர்களையே கொல்வதற்குத்தான் பயன்படும் என்றும் சொல்லலாம். ஆனால் “காந்தியாரின் விஷம்’ எல்லோரையும் அருந்தச் செய்து, எல்லோரையும் கொல்லத் தக்க மாதிரியில் பூச்சு பூசப்பட்டிருக்கிறது என்பதோடு, காந்தியாரை “மகாத்மா’வாக்கி பின் சந்ததிகளையும் கொல்லச் செய்யத் தக்கதாகும் என்று சொல்லலாம். ஆதலால், வைதிகப் பிரச்சாரத்தையும் சனாதனப் பிரச்சாரத்தையும் பகிஷ்கரிப்பதை விட, காந்தி பிரச்சாரத்தைப் பகிஷ்கரிக்க வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும். – “புரட்சி’ தலையங்கம் (10.12.33) காந்திக்கு அஞ்சலிகாந்தியாரின் இடத்தை நிறைவு செய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை… “உலக மக்களுக்குத் தொண்டாற்றுவதற்காக 125 வயது வரை நான் உயிருடன் வாழ்ந்து வருவேன்’ என்று கூறிக் கொண்டே, அதற்கு ஏற்ற வண்ணம் உடலையும் பாதுகாத்துக் கொண்டே, பெருவாரியான மக்களின் போற்றுதலையும், பாராட்டுதலையும் பெற்று, அதற்காக உண்மையாய் உழைத்து வந்த மகான் காந்தியார், தனது 79ஆம் ஆண்டில் அகால மரணத்தால் முடிவெய்து விட்டார். …இப்படிப்பட்ட இவரே இக்கதிக்கு ஆளான பின்பு, இனி எவர் எக்கதியானால்தான் என்ன என்று கூறலாம். – “குடியரசு’ (7.2.48)

காந்தி சிலை இருப்பது அவமானம்சட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம், காந்தி… எனவே இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன். ஒரு வெலிங்டனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தை எங்களுக்கு காந்தி செய்துள்ளார்… காந்தி செய்த மோசடி மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான் காந்தியின் படத்தை எரிப்போம்; எங்கள் நாட்டில் காந்தி சிலையிருப்பது கூடாது அகற்ற வேண்டும் என்று சொல்லுகிறோம். அவர் செய்த அடுத்த துரோகம், நம்மை வட நாட்டானுக்கு அடிமையாக்கி விட்டுப் போனது. சுயராஜ்யம் பேசி, வெள்ளைக்காரன் வெளியே போனதும் நம்மை வடநாட்டானுக்கு அடிமைகளாக்கி விட்டார். – “விடுதலை’ (9.10.57)

சிரிக்க மாட்டார்களா ?இந்துக்கள் தேர் இழுப்பதைப் பார்த்து முஸ்லிம்கள் பரிகாசம் செய்து விட்டு, முஸ்லிம்கள் கூண்டு கட்டிச் சுமந்து கொண்டு கொம்பு, தப்பட்டை, மேளம், பாண்டு, வாண வேடிக்கை செய்து கொண்டு தெருவில் போய்க் கொண்டிருந்தால், உலகம் திருப்பிச் சிரிக்காதா? இந்துக்கள் காசிக்கும் இராமேஸ்வரத்துக்கும் போய் பணத்தைச் செலவழித்து விட்டு, “பாவம் தொலைந்து விட்டது’ என்று திரும்பி வருவதைப் பார்த்து முஸ்லிம்கள் சிரித்து விட்டு, முஸ்லிம்கள் நாகூருக்கும், மக்காவுக்கும், முத்துப் பேட்டைக்கும் போய்விட்டு வந்து, தங்கள் பாவம் தொலைந்து விட்டது என்றால், மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா? – “குடியரசு’ (9.8.31)

மதங்களால் என்ன நலன் ?எதற்காக “இந்து’; எதற்காக “கிறிஸ்தவம்’; எதற்காக “முஸ்லிம்’ முதலிய மதங்கள் வேண்டும்? இவர்களுக்கு தனித்தனி வேதம்; வேஷம்; செய்கைகள் முதலியன எதற்காக தேவையாக இருக்கின்றன? இவைகளால் பிரிவினை உணர்ச்சியல்லாமல், சமுதாயத்திற்கு நலனென்ன என்று கேட்கிறேன். -”விடுதலை’ (18.10.72)

தொழிலாளர் சங்கம் ஏன் ?பொதுவாக “தொழிலாளர் சங்கம்’ என்றாலே, எனக்கு அதனிடத்தில் விருப்பம் இருப்பதில்லை. அதில் ஒரு சத்து இருப்பதாகவே எனக்குத் தோன்றவில்லை. சில வெறும் வெளி ஆசாமிகள் அதைத் தம் நன்மைக்கும், கீர்த்திக்கும் ஏற்படுத்திக் கொண்ட சாதனமென்பதே என்னுடைய வெகு நாளைய அபிப்பிராயம். – “குடியரசு’ (30.5.26)

ஸ்டிரைக் எதற்கு ?இப்போது எடுத்ததற்கெல்லாம் “ஸ்டிரைக்’ ஆரம்பித்து விடுகிறார்கள். இதில் பெரும்பான்மை ஸ்டிரைக்குகள் சங்கங்களை நடத்துகிற ஆட்களின் ஸ்தாபனங்களின் சொந்த நலனுக்கும், மற்றபடி தங்கள் சொந்த காரியங்களை சாதித்துக் கொள்ளவுமே செய்கிறார்கள். ஸ்டிரைக்கினால் ஏற்படுகிற விளைவுகள் என்ன? … தொழில் வளர்ச்சி கெட்டு, உற்பத்தி குறைவதோடு மட்டுமல்ல பொது மக்களுக்கும் எவ்வளவு தொந்தரவு ஏற்படுகிறது? – “விடுதலை’ (20.9.52)

அப்படியே நம்பி விடாதீர் !சகோதரர்களே! நான் சொல்வன் எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தான்… “ஒரு பெரியார் உரைத்து விட்டார்’ என நீங்கள் கருதி, அப்படியே அவைகளைக் கேட்டு நம்பி விடுவீர்களானால், அப்போது நீங்கள் யாவரும் அடிமைகளே! – “விடுதலை’ (8.10.1951) நாளை என்ன நடக்கும்?நாளை, ஒரு சமயம் சமதர்ம காலத்தில், “பிராமணர்கள் (சரீரத்தால் பாடுபடாதவன்) சொத்து வைத்திருந்தால், மற்றவர்கள் பலாத்காரத்தில் பிடுங்கிக் கொள்ளலாம்’ என்று ஏற்பட்டாலும் ஏற்படலாம். இந்த மாதிரி மாறுதல்கள் காலத்திற்கும் பகுத்தறிவிற்கும், நாட்டின் முற்போக்கிற்கும் ஏற்றாற்போல நடந்துதான் தீரும். எனவே நான் மாறுதலடைந்து விட்டேன் என்று சொல்லப்படுவதில் வெட்கப்படுவதில்லை. நாளை நான் எப்படி மாறப் போகிறேன் என்பது எனக்கே தெரியாது. ஆகையால், நான் சொல்வதைக் கண்மூடித்தனமாய் நம்பாதீர்கள். “குடியரசு’ (11.10.1931)

Advertisements

4 Responses to பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் அறிவுரை

 1. . தொல்காப்பியன் மாபெரும் துரோகிதொல்காப்பியன் ஆரியக் கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்து விட்ட மாபெரும் துரோகி.

  திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் வகையில், தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார். – பெரியார் எழுதிய “தமிழும் தமிழரும்’ என்ற நூலிலிருந்து.

  திருக்குறளைக் கண்டிக்கிறேன் !…குழந்தைகள் எல்லாம் வீட்டிலேயே இங்கிலீஷில் பேச வேணும். அது நல்ல நாகரீகத்தையும் கொண்டு வரது. ஏன் “குறளை’ எடுத்துக்குங்க. நான் மட்டும்தான் குறளைக் கண்டிக்கிறேன். குறளோடு நின்னுட்டா வளர்ச்சியே குன்றி விடுமேன்னுதான். குறள் இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தினது. பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கி விட்டது. – பெரியார் பேட்டியிலிருந்துகெட்ட நாற்றம் !வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், “எல்லாம் போய் விட்டால், நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் “இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு என்று கூறினால் – அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது?’ என்று பதில் கூறுவேன். – “விடுதலை’ (1.6.50) “கலைமகள்’ (பிப்ரவரி 73)

  This man is called Tamil Periyar

 2. http://dravidianatheism.wordpress.com/2010/04/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/#comment-220

 3. Thank your for your visit and links

 4. Fahim Amanullah says:

  nice

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: