‘லாபியிஸ்ட்’ பெண்மணி நீரா நாடியா

”முதல்வரின் டெல்லி விசிட் ரொம்ப சூப்பரா போச்சு. தலைவர் சொன்னது எல்லாத்தையும் சோனியாம்மா ஏத்துக்கிட்டாங்க. இனி கனிதான் டெல்லிக்கு ராணி…” – இப்படியெல்லாம் உற்சாக பலத்துடன் இருந்த தி.மு.க. மேலிட தலைவர்கள், கடந்த புதன் இரவு வெளியாகத் தொடங்கிய தொலைபேசி டேப் செய்திகளைக் கண்டு ஆடித்தான் போனார்கள்.. நீரா ராடியா என்கிற பலம்

வாய்ந்த ‘லாபியிஸ்ட்’ பெண்மணி அடுத்தடுத்து சில பிரபலங்களுடன் பேசிய தொலைபேசிப் பேச்சின் சில பகுதிகள் என்று சொல்லி, அந்த டேப் விவரங்கள் செய்தியாகப் படிக்கப்பட்டன. குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி முடிந்த கையோடு… தி.மு.க. தரப்பிலிருந்து யாருக்கு என்ன பதவி என்று மத்திய அரசோடு பேரங்கள் தொடங்கிய சமயத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் தொலைபேசி உரையாடல்கள் அவை.

மறுபடி தொலைதொடர்புத் துறை கிடைக்குமா?’ என்று ஆ.ராசாவுடனும்… ‘அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகிய மூன்று குடும்பங்களுக்கும் மந்திரி பதவி வாங்கித் தருவதில் கருணாநிதி படும் சிரமங்கள்’ குறித்து கனிமொழியுடனும் நீரா ராடியா பேசியதாக விவரங்கள் அந்த டேப் தொகுப்பில் இருந்தன.ஆ.ராசாவுக்கு தொலை தொடர்புத் துறை கிடைத்தால் தயாநிதி மாறன் எப்படி எடுத்துக் கொள்வார் என்பது பற்றியும், டி.ஆர்.பாலுவின் மன ஓட்டங்கள் பற்றியும் இந்த நீரா ராடியாவுடன் ஆ.ராசாவும், கனிமொழியும் எதற்காக இத்தனை நம்பிக்கை வைத்து பேசவேண்டும் என்ற கேள்வியும் குழப்பமும் இயல்பாகவே இதனால் எழத்தான் செய்தது. மத்திய அமைச்சரவையின் முக்கிய இலாகாக்களை ஒதுக்கும் விஷயங்கள் குறித்து அப்படியரு அதிகாரத் தொனி மிக்க வார்த்தைகளில் அந்த ‘லாபியிஸ்ட்’ பெண்மணி பேசுவதாகச் சொன்னது டேப் தொகுப்பு!

விவகாரம் அதுமட்டுமல்ல…. தொலைதொடர்புத் துறையின் சார்பாக அதற்கு முன்பும் அமைச்சராக இருந்த ஆ.ராசாவும் இந்த நீரா ராடியாவும் பல மணி நேரங்கள் பேசிய தொலைபேசி உரையாடல்களின் தொகுப்பு, வருமான வரித்துறைக்கென்றே உள்ள இன்டெலிஜென்ஸ் பிரிவின் வசம் இருப்பதாகவும் அடுத்தடுத்து வெளியாகத் தொடங்கிவிட்டன தகவல்கள். வருமான வரித் துறை டேப் செய்திருந்த இந்த உரையாடல்களை, சி.பி.ஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அளித்து உதவும்படி டெபுடி ஐ.ஜி-யான வினித் அகர்வால் வைத்த வேண்டுகோள் கடிதம் என்று ஒரு நகலும்…. ‘ஆமாம்… நிறைய விவகாரங்களை இது தொடர்பாக டேப் செய்திருக்கிறோம். உரியமுறையில் கேட்டு எங்களிடம் பெற்றுக் கொள்ளுங்கள். அதோடு, இந்த விவகாரம் தொடர்பாக உங்கள் வசம் ஏதேனும் தகவல் வைத்திருந்தால், அதை எங்கள் விசாரணைக்கு நீங்களும் கொடுத்து உதவுங்கள்’ என்று வருமான வரித்துறையின் இணை இயக்குநர் ஆஷிஷ் அப்ரால் என்பவர் பதில் எழுதியாக ஒரு நகலும் இப்போது டெல்லியில் கசிந்து… பெரும் புயலைக் கிளப்பத் தொடங்கியிருக்கிறது.

இந்தக் கடிதப் பரிமாற்றங்கள் 2009 வருடம் நவம்பர் மாதத்தில் நடந்ததாக அந்த நகல்களில் உள்ள தேதி குறிப்பிடுகிறது.

அதாவது, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து புயலடிக்கத் தொடங்கிய சமயத்திலிருந்தே, அது தொடர்பான ரகசிய விசாரணைகளில் வருமான வரித் துறைக்கென்று உள்ள இன்டெலிஜென்ஸ் பிரிவு இறங்கிவிட்டதாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

வருமான வரி அதிகாரி அளித்த பதில் கடிதத்திலேயே இந்த ‘லாபியிஸ்ட்’ பெண்மணி நீரா நாடியா பற்றி அதிர்ச்சியும் பிரமிப்பும் கலந்த தகவல்கள் அடுக்கப்பட்டுள்ளன.

வைஷ்ணவி கார்ப்பரேட் கன்ஸல்டன்ட், நோயஸிஸ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் சர்வீஸ், விட்காம் மற்றும் நியூகாம் கன்சல்டன்ஸி என்று பல்வேறு நிறுவனங்களின் முக்கிய அச்சாணியாக இயங்கும் இந்த பெண்மணியின் தொலைபேசி உரையாடல்களை, மத்திய உள்துறை செயலாளரின் அனுமதி பெற்றே டேப் செய்து வந்ததாகக் கூறுகிறது வருமானவரி கடித நகல். விமானப் போக்குவரத்து மற்றும் பல துறைகளில் உள்ள பிரமாண்ட நிறுவனங்களுக்கு ‘ஆலோசகராக’ செயல்படும் நீரா ராடியாவின் நிறுவனங்கள், தொலை தொடர்புத் துறை தொடர்பான நிறுவனங்களுடன் இறுக்கமான நட்பில் இருப்பதையும் கடித நகல் கூறுகிறது. ‘தொலைதொடர்புத் துறை தொடர்பான லைசென்ஸ்கள் பெற்றுக் கொடுப்பதில் இந்தப் பெண்மணிக்கு முக்கியப் பங்கு இருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். கூடவே, முக்கிய மீடியாக்களையும் தன் கட்டுப்பாட்டில் இவர் வைத்திருக்கிறார். தொலைபேசி லைசென்ஸ் தொடர்பான சில நிறுவனங்களின் முதலீட்டை இந்தியாவுக்குள் படிப்படியாகக் கொண்டு வரும்படி இவர் அறிவுறுத்தும் சில தொலைபேசி உரையாடல்களும் எங்களிடம் உள்ளது. இல்லையென்றால், லைசென்ஸ் பெற்றதன் மூலம் கொள்ளை லாபம் பெற்றது தெரிந்துவிடும் என்றும் இவர் அறிவுரை கூறுகிறார்’ என்று சொல்லும் அந்த வருமான வரி கடிதம்…

‘தொலைதொடர்பு அமைச்சருடன் நேரடியாகவே இவர் பேசிய உரையாடல்களை நாங்கள் வைத்துள்ளோம். டெலிகாம் லைசென்ஸை குறிப்பிட்ட நிறுவனங்களுக்குப் பெற்றுத் தருவதில் தனக்குள்ள முக்கியப் பங்கு குறித்து இந்த நீரா ராடியா பெருமையோடு மத்திய அமைச்சரிடம் பகிர்ந்துகொள்கிறார்’ என்று கூறுகிறது. இது விவகாரமாக நீரா ராடியா தொடர்புகொண்டிருந்த மற்ற முக்கிய நபர் பற்றிய தகவல்களும் தங்களிடம் உள்ளதாகக் கூறுகிறது அந்தக் கடித நகல்.

மத்திய அமைச்சர் பதவியில் ஆ.ராசாவை தொடர்ந்து நீடிக்கச் செய்வதற்காக முதல்வர் கருணாநிதி காய்களை நகர்த்தி வரும் நிலையில், அடுத்தடுத்து ராசாவின் பதவிக்கு வெடி வைக்கும் விதமாகவே கடித நகல், டேப் விவகாரம் என்று பரவுவது எப்படி என்பதுதான் இப்போது டெல்லியில் மிக சுவாரஸ்யமான விவாதம். அந்தக் கட்சிக்குள்ளேயே இருக்கும் ஒரு சிலரை நோக்கி கைகள் நீள்வதையும் காண முடிகிறது.

”தொலைதொடர்பு தொடர்பான ரகசிய புலனாய்வு ஆவணங்கள் பகிரங்கமாக வெளியானது மத்திய அரசுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்!” என்று ஒரு தரப்பினர் சொல்லிக் கொண்டிருக்க… ”தொடர்ந்து பிரஷர் கொடுத்து வரும் தி.மு.க-வை பின்வாங்கச் செய்வதற்கு இந்த விவகாரமெல்லாம் உதவும். அந்த வகையில் காங்கிரஸ் அரசுக்கு இதில் நிம்மதிதான்!” என்று சொல்லி கண் சிமிட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

நமக்கும் அந்த ஆவண நகல்களில் சில கிடைத்தன. ‘டாப் சீக்ரெட்’, ‘கான்ஃபிடன்ஷியல்’ என குறியிடப்பட்ட அவையெல்லாம் யாரோ ஒரு உயர் அதிகாரிக்கு விசாரணை டீம் கொடுத்த தகவல் சுருக்கம் போலவே இருக்கிறது. அவை ஒரிஜினலான ஆவணங்கள்தானா… அதை வைத்து சி.பி.ஐ. தனதுவிசாரணையை மேற்கொண்டு எப்படி கொண்டு செல்லும் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க… 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தோடு இன்னும் ஏராளமான பல பகீர் விவரங்களையும் அதில் காண முடிகிறது.

நீரா ராடியாவை மையம் கொண்டு மொரீஷியஸ், ஆப்பிரிக்கா, கினியா என்று எல்லை தாண்டி நடந்திருக்கும் பரிவர்த்தனைகள் குறித்து ஒட்டுக் கேட்டதாக அந்த ஆவணங்கள் கூறுகின்றன.

”இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற, மரியாதைக்குரிய ஒரு வடநாட்டுத் தொழிலதிபர், எக்காரணம் கொண்டும் தொலைதொடர்புத் துறைக்கு தயாநிதி மாறன் மீண்டும் அமைச்சராகிவிடக் கூடாது என்று நீரா ராடியாவிடம் கேட்டுக் கொள்ளும் உரையாடல் கிடைத்துள்ளது. அதையும் மீறி தயாநிதி மாறன் வந்துவிட்டால், தொலைதொடர்புத் துறையில் தான் செய்து வரும் பிசினஸ்களிலிருந்து வெளியேறிவிடப் போவதாகவும் தொழிலதிபர், நீரா ராடியாவிடம் கூறுகிறார்.

ஆ.ராசாவுக்கு குறிப்பிட்ட பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் பெருந்தலைகளை பிரெயின்வாஷ் செய்யும் வேலையில் இந்தியாவின் பிரபல சேனல் முகங்கள் இருவர் செயல்பட்டனர். நீரா ராடியா மற்றும் அரசியல் பெண் வி.ஐ.பி. ஒருவருக்காகவே இவர்கள் இந்த பேச்சுவார்த்தை முயற்சிகளை நடத்தினர். தமிழகத்தைச் சேர்ந்த பவர்ஃபுல் பெண்மணி ஒருவருக்கு நீரா ராடியா மிக நெருக்கமானவர் போலவே போன் பேச்சுகளில் தொனிக்கிறது!” என்று கூறும் இந்த ஆவணங்கள், ‘ஸ்பெக்ட்ரம்’ விவகாரத்தில் சர்ச்சைப் புயலில் சிக்கிய ஸ்வான் டெலிகாமையும் இதில் தொடர்புபடுத்துகின்றன.

”ஜார்கண்ட் மாநிலத்தில் டாடாவின் சுரங்க உரிமத்தை நீட்டிக்க நீரா ராடியா அப்போதைய ஜார்கண்ட் முதல்வர் மதுகோடாவுடன் பேசிய உரையாடலில் மதுகோடா 180 கோடி ரூபாய் கேட்டது தெரிய வந்துள்ளது. அதே உரிமத்தை ஜார்கண்ட் ஆளுநரிடம் நீட்டித்து வாங்கியுள்ளார் இந்த ‘சேவைக்காக’ ஒரு கோடி ரூபாய் நீராவுக்கு வழங்கப்பட்டுள்ளது!” என்று வேறு மாநில விவகாரங்களையும் இந்த ‘டாப் சீக்ரெட்’ ஆவண நகல்களில் காண முடிகிறது. மதுகோடா தொடர்பான ரெய்டுகளுக்கு இந்த ‘டாப் சீக்ரெட்’ ஆவணமும் ஒரு காரணமா என்பது தெரியவில்லை!

தொலைதொடர்புத் துறையின் ‘கிங்’களில் ஒருவரான சுனில் மிட்டல்கூட நீராவின் ‘சேவை’யை நாடினார் என்று தொலைபேசி மூலம் ஒட்டுக் கேட்டுச் சொல்கிறது இந்த ஆவணம். இந்த ரேஞ்சில் படிக்கப் படிக்க தலை சுற்ற செய்யும் தகவல்கள் கொண்ட ஆவணங்களில் தொழில் அதிபர்களுக்கும், மிகப் பெரிய அதிகாரிகளும், அரசியலின் உச்ச பதவிகளில் இருப்பவர்களுக்கும் இடையே எத்தனை ‘சாலிட்’டான பேரங்களும், புரிந்துகொள்ளல்களும் இருக்க முடியும் என்று புரிந்துகொள்ள முடிகிறது. இந்த மூன்று புள்ளிகளையும் இணைத்து வைக்கும் வேலையில் நீரா ராடியா போன்ற இன்னும் எத்தனை மெகா ‘லாபியிஸ்ட்’கள் தரகு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ என்று யோசிக்கும்போது பயங்கரமாகத் தலை சுற்றுகிறது.

”குறிப்பிட்ட அந்த டேப் உரையாடல்களில் இருப்பது மத்திய அமைச்சர் ஆ.ராசா அல்லது ராஜ்யசபா எம்.பி-யான கனிமொழி ஆகியோரின் குரல்தானா என்பதற்கு என்ன ஆதாரம்? தி.மு.க-வை ஒழித்துக் கட்டுவதற்கு டெல்லியில் நடக்கும் பயங்கரமான சதிவலையின் அங்கம்தான் இதெல்லாம்!” என்று மறுக்கும் தி.மு.க. தலைவர்கள்,

”அரசியல் ரீதியாக மட்டுமில்லாமல்… தலைவரின் குடும்பத்துக்குள் பதவிப் போட்டி ஏற்பட்டதாகச் சொல்லி, அதை வைத்து ஒருத்தர் இன்னொருத்தரைப் பற்றி பேசிக்கொண்டதாக விவகாரத்தை நாடறியப் பரப்பினால், அதை வைத்து குடும்பத்துக்குள் மறுபடி குழப்பம் வரும் என்பதும் எங்கள் எதிரிகளின் திட்டம்!” என்று கூறுகிறார்கள் இந்த தி.மு.க. தலைகள்.

என்ன சொல்ல !

7 votes

ராசா சென்னை பயணம் !

கலைஞர் ராசா விவகாரத்தில் டெல்லி சென்று அசிங்கமாக தலித் அஸ்தரம் விட்டு பார்த்தார். தமிழ் நாட்டுப் பெருமையை வடக்கே சொல்ல வேண்டாமா? ஆனால் பாவம் அந்த அஸ்தரம் அவருக்கு எதிராகத் திரும்பிவிட்டது!

இன்று மத்திய அமைச்சர் ஸ்பெக்ட்ரம் ராஜாவை உடனடியாகத் தன்னை வந்து சந்திக்குமாறு தமிழக முதல்வர் கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்கள் அழைத்துள்ளார். ஹெட்லைன்ஸ் டுடே வெளியிட்டுள்ள தொலைபேசி உரையாடல்களே இதற்குக் காரணமாக இருக்கும் என்று எல்லாருக்கும் தெரிந்ததே.

சற்று முன்பு இந்தச் சானலில் திரும்பத் திரும்ப விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ராஜா எரிந்து விழுவதைக் காண்பித்து அவர் வயத்தெரிச்சலைக் கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

முத்தாய்ப்பாக, ஹெட்லைன்ஸ் டுடே வெளியிட்ட தொலைபேசி உரையாடல்களைப் பற்றி எதுவும் தெரியாது, பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் இன்று எல்லாவற்றையும் பார்த்தேன். ராடியாவிடம் அமைச்சர் பதவியைக் கேட்க நான் என்ன முட்டாளா? என்றும், எல்லாவற்றையும் ராடியாவிடமே கேட்டுக் கொள்ளுமாறும் நிருபர்களிடம் கூறியுள்ளார்.

சில கேள்விகள்:

1. ராசா பேசிய உரையாடகள் கலைஞருக்கு தெரியுமா? “கலைஞர் குடும்பத்துக்கு மூன்று மந்திரி பதவியா?” என்று ராடியா கேள்வி கேட்க அதற்கு ராஜா சிரித்துவிட்டு “அது தெரிந்தது தானே?” என்கிறார். இதை கலைஞர் நியூஸை பார்க்கும் போது அவரது மனநிலை எப்படி இருக்கும்.

2. இந்தத் தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்பட்ட விஷயம் முன்கூட்டியே உள்துறைச் செயலாளரிடம் அனுமதி பெற்றே செய்யப்பட்டிருப்பதாக இப்போது தெரியவந்துள்ளது. ஏன் இவ்வளவு வருஷம் கழித்து இது லீக் செய்யப்படிருக்கிறது? ராஜாவை எப்படியாவது வெளியே அனுப்ப காங்கிரஸ் செய்யும் சதியா?

3. ராடியாவிடம் மந்திரி பதவி பற்றிக் கேட்க நான் என்ன முட்டாளா என்று ராஜா பார்லிமெண்ட் முன்னாடி ஆவேசமாகக் கேட்கிறார். அப்படி என்றால் ஏன் ராடியாவின் இந்த தொலைப்பேசி உரையாடல்கள் மீடியாவில் ஒலிபரப்ப கூடாது என்று தடை கேட்டு கோர்ட்டுக்கு போனார். (கோர்ட் நிராகரித்துள்ளது என்பது வேறு விஷயம் )

4. இந்த விவகாரத்தில் – தயாநிதி மாறன் ஊடகங்களுக்கு செய்தியை சப்ளை செய்கிறார் என்றும், பாவம் பாலு என்றும் உரையாடல்கள் வருகிறது. இதை தயா, பாலு கேட்டால் என்ன நினைப்பார்கள் ?

5. இவ்விவகாரத்தில் அதிகம் அடிபடும் ராடியா என்ற பெண்மணி, சில டெலிகாம் நிறுவனங்களுக்கு லைசன்ஸ் பெறுவதற்கு பெருமளவில் உதவியுள்ளார் என்பது வருமானவரித் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. சிபிஐ, வருமானவரி துறை ஆகியவை இவ்வளவு கண்டுபிடித்த பின்பும் அரசு ஏன் சும்மா இருக்கிறது? இத்தனைக்கும் சிபிஐ, மற்றும் வருமானவரி துறை எல்லாம் தற்போது இயங்கும் அரசுகளின் கீழ் இருக்கிறது. ராஜாவைப் பாதுகாப்பதன் மூலம் வேறு ஏதாவது பெரிய தலைகளைப் பாதுகாக்க முனைகிறதோ?

6. எதிர்க்கட்சிகளில் பாஜகவும், மீடியாக்களில் ஹெட்லைன்ஸ் டுடேவும் மட்டுமே இதனை பிரதானமாகப் பேசி வருகின்றனர். மற்ற மீடியாக்கள் அவையடக்கம் கருதி அடக்கியே வாசிக்கின்றன. ஜூவி முன்பு ராஜா பற்றி படம் போட்டதற்கே கோர்ட்டுக்கு போன பயமா?

இப்பொழுது திமுக எதற்காக ராஜாவை அவசரமாக அழைத்துள்ளது என்பது போகப் போகத்தான் தெரியும். தெரியாமலும் போகலாம்.

முழு விடியோ இங்கே இருக்கு ஐந்து பாகமாக.

டெல்லிக்கு சென்று, கலைஞர் ஒட்டு மொத்த தலித்துக்கும் நல்ல பேர் வாங்கி தந்துவிட்டார். செம்மொழி மாநாட்டில் இதற்கு ஒரு விருது தந்துவிடலாம்.

Advertisements

2 Responses to ‘லாபியிஸ்ட்’ பெண்மணி நீரா நாடியா

 1. ஸ்பெக்ட்ரம் ஊழல் சென்னை ஆடிட்டர் அலுவலகத்தில் சிபிஐ சோதனை
  Posted on ஜனவரி 21, 2010 by lightink

  அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக சென்னை ஆடிட்டர் அலுவலகத்திலும், ஊழியர் வீட்டிலும் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.
  2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொலை தொடர்புத்துறையின் சில அதிகாரிகள் மற்றும் சில தனியார் அமைப்புகள் ஊழல் மற்றும் ரகசிய ஆலோசனை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தையும், ஊழியர் வீட்டையும் முற்றுகையிட்டு சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.
  இந்த சோதனை குறித்து சிபிஐ புலனாய்வுத் துறையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், எம்.கெவின் என்ற ஊழியர் வீட்டையும், ஆடிட்டர் கணபதியின் அலுவலகத்தையும் சிபிஐ சோதனை நடத்தியது என்றார்.
  சென்னையை மையமாக கொண்ட க்ரீன்ஹவுஸ் புரமோட்டர் நிறுவனத்தின் ஆலோசகராக இருப்பவர் எம்.கெவின். இந்த நிறுவனத்தின் கணக்குகளை ஆடிட் செய்பவர் கணபதி. இந்த சோதனை குறித்து கம்பெனி தரப்பில் கூறுகையில், இவ்வழக்கு தொடர்பாக கருத்துக்கூற விரும்பவில்லை. இரு தனிநபரின் தனி விவகாரம் என தெரிவிக்கப்பட்டது. கம்பெனியின் நிர்வாக அதிகாரி காயத்ரி கூறுகையில், இந்த இருநபர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும் என்றார். கெவின் மற்றும் கணபதியுடன் குறிப்பிட்ட சென்னை புரமோட்டர் நிறுவனத்திற்கு உள்ள தொடர்பு குறித்த விவரங்களை அந்நிறுவனம் தரவில்லை. சிபிஐ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தில்லி, மும்பை, சென்னை, அகமதாபாத், ஜெய்ப்பூர், குர்கான், மொகாலி, நொய்டா ஆகியவற்றில் தொலைபேசி நிறுவனங்கள் மற்றும் தொலைதொடர்புத் துறையிலும் அதிரடி சோதனை நடத்தியது. 2வது சந்ததியினர் மொபைல்போன் சேவைக்கான ஸ்பெக்ட்ரம் (அலைகற்றை) ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக இந்த சோதனை நடந்தது. கடந்த ஆண்டு தொலைதொடர்புத் துறையின் கீழ் உள்ள வயர்லெஸ் திட்டப் பிரிவு, தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்தின் (பயன்பாட்டு சேவை) துணைத் தலைவர் அலுவலகம் ஆகியவற்றில் சிபிஐ சோதனை நடந்தது.
  ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தனியார் தொலைபேசி நிறுவனங்களுடன் அதிகாரிகள் வைத்திருந்த ரகசிய தொடர்பை கண்டறிய இந்த சோதனை நடந்தது.

  http://lightink.wordpress.com/2010/01/21/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/

 2. மினிஸ்டர் ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல் ,தி பயனியர் செய்தி
  மே 3, 2010

  இந்த இணைப்பில் கிளிக்கினால் திரு ராஜாவும், திரு அருண் டால்மியாவும் இருக்கும் புகைப்படத்தைப் பார்க்கலாம்.

  ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய செய்திகளை இருட்டடிப்புச் செய்து தன் விசுவாச ஜனநாயக கயமைத் தனத்தை செவ்வனே செய்து வருகின்றன தமிழ் செய்திதாள்கள். வார ஏடுகளும் நமக்கேன் வம்பு என்ற வகையிலோ அல்லது விளம்பர பெட்டிகளின் கனத்தினாலோ ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. இருப்பினும் தி பயனியர் நாளிதழிலில் திரு ராஜாவைச் சம்பந்தப்படுத்தி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி விலாவரியாக கட்டுரைகள் எழுதப்படுகின்றன.

  இது பற்றி விசாரணை செய்த சிபிஐ அதிகாரி அகர்வால் திடீரென்று மாற்றப்பட்டிருக்கிறார் என்று ஜெயா டிவியில் திரு மைத்ரேயன் எம்பி அவர்கள் சொல்கிறார். மேலும் வருமான வரித்துறைக்கு எழுதிய கடிதங்களையும் ஆதாரமாய் காட்டுகிறார். இதுவரையிலும் இந்தியா சந்திக்காத மிகப் பெரும் ஊழலை ஒரு தமிழர் செய்திருக்கிறார் என்கிறார்கள். ஆனால் நம்பவும் முடியவில்லை நம்பாமலிருக்க முடியவில்லை. தி பயனியர் பத்திரிக்கையில் வெளிவந்திருக்கும் செய்தியை நீங்களே படித்துப் பாருங்கள். இந்த சமயத்தில் நமது முதலமைச்சர் டெல்லி சென்றிருப்பது பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்துவதில் வியப்பேதும் இல்லை அல்லவா?

  BRIBERY, MONEY LAUNDERING, FAVOUR TO CHINESE COMPANY, CBI TOLD TO LAY OFF TRAIL CBI found Raja aide involved in parking bribes in tax havens, but told to stay off Minister, his men
  I n February this year, the CBI probe unit handling the spectrum scam laid its hands on highly incriminating evidence that indicated transfer of scam money to secret accounts in Switzerland and other countries, but under political pressure the `lead’ has been conveniently buried.

  The CBI stumbled upon damning evidence of money transfer in the spectrum case while probing the arrest of Maharashtra and Goa Chief Postmaster General (CPMG) MS Bali for accepting a bribe of Rs 2 crore from a builder for issuing a No-Objection Certificate (NoC) for granting construction permission on postal land at a prime spot in Mumbai.

  Bali was caught red-handed in a Mumbai hotel late on February 24 along with Arun Dalmia, a frequent visitor to Telecom Minister A Raja’s office and residence for five years. Dalmia’s son Harsh was also arrested from the spot.

  During interrogation, Dalmia told the sleuths about his two Swiss accounts and property details and high-volume cash transactions flowing into bank accounts in Delhi, Chennai, Singapore, Dubai, Malaysia and other tax havens abroad. Dalmia was for years on the radar of the Intelligence Bureau and RAW, who had informed the CBI that this middle-aged man was a broker for a Chinese telecom equipment vendor. Raja’s plan to grant an over Rs 20,000-crore deal to a Chinese telecom vendor for supplying GSM lines to BSNL was thwarted by the security concerns raised by these agencies.

  Sources said the CBI suspected a link between the spectrum scam and the arrest of the duo when it learnt that Raja’s private secretary RK Chandolia had asked Bali to visit the hotel and collect the bribe from the builder. “When Dalmia told us about their Swiss bank accounts and hawala transactions, we knew we had laid our hands on a high-value catch,” said a Central Bureau of Investigation officer. Chandolia was elevated to the post of economic adviser in the Department of Telecom by Raja and his role in the spectrum scam and money transfer was already being probed by the CBI. According to sources close to Bali, the CPMG spilled the beans on the very first night of inter rogation. Confirming this, a CBI officer told The Pioneer: “Bali told us that he got a call from Chandolia around 6 pm to go to the hotel along with Dalmia and collect the money.”

  But, shockingly, the role of Chandolia in fixing the deal never came up in the statements recorded by the CBI. “Bali became a scapegoat,” sources said, adding that senior Dalmia also confirmed the role of Raja’s office in fixing this deal.

  After the CBI’s Mumbai unit alerted its Delhi counterparts the following day about the confession made by Bali and Dalmia and the possible link between the spectrum scam and Bali, a CBI team airdashed to Mumbai to interrogate the duo.

  “But when we reached Delhi, our bosses got instructions from `highest authorities’ to delink the Mumbai case from our ongoing investigation. The Mumbai unit also got instruction to limit the case to Bali and Dalmias,” said a CBI official, adding that they were denied permission to verify the transaction details of the two Swiss accounts of the Dalmias.

  According to Ministry insiders, Dalmia could be a key player in the spectrum scam. He arrived in early 2005 in Raja’s office in Paryavaran Bhavan, when the latter was Environment Minister. Dalmia was accompanied by two young women and his visiting card showed him to be the Honorary Consular General of a little-known African country, Ministry sources said. “We checked with the External Affairs Ministry and found that he was a fraud. But, in the meantime, he estab shed direct contact with the Minister,” insiders said.

  Sources recalled that Dalmia was always escorted by young women whom he introduced as his secretaries. His for tunes shone when Raja became the Communications and IT Minister. Dalmia became the liaison man for a Chinese telecom giant in India, which had a significant presence in the southern and western regions of the country. He operated a slew of financial consultancy services across India and tax havens abroad.

  The CBI team found concrete evidence, including photographs, to establish the Minister’s close link with Dalmia in the two-daylong searches at his house.
  Finding evidence of several highvolume foreign transactions, the Central Bureau of Investigation brought the matter to the notice of the Enforcement Directorate, but to date no progress has been made in the case.

  “We were told to stay away from Raja and his men,” a senior agency official maintained.

  thanks to : The pioneer
  http://velichathil.wordpress.com/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: