டாக்டரிடம் காட்டாமல் கிறிஸ்தவ ஜபம் செய்த தாய்-சிறுமி பலி

சர்க்கரை நோயால் படுத்த படுக்கையாகி விட்ட சிறுமியை டாக்டரிடம் அழைத்து செல்லாமல், ஜபம் செய்து கொண்டிருந்தார் தாய்; ஒரு மாத போராட்டத்துக்கு பின், ஆம்புலன்ஸ் வர ஒரு மணி நேரத்துக்கு முன், சிறுமி உயிர் பிரிந்தது.

அமெரிக்காவில் உள்ள வெஸ்டன் என்ற பகுதியை சேர்ந்தவர் டேல் நூமென்; போலீஸ் அதிகாரி. தாய்,லெய்லானி நூமென். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இளைய மகள் 11 வயது மேடலின். மேடலினுக்கு, குழந்தைகளுக்கு வரும் சர்க்கரை நோய், “டயபடீஸ் 1′ வந்துள்ளது. இதனால், அடிக்கடி வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு, படுத்த படுக்கையாகி விட்டாள்.

சர்க்கரை நோய் என்று தெரிந்தும், டாக்டரிடம் அவளை பெற்றோர் அழைத்துப் போகவில்லை. “டாக்டரின் மருந்தை விட, எங்கள் ஜபம் மூலம் அவளை இறைவன் காப்பாற்றி விடுவார்’ என்று பெற்றோர் ஜபம் செய்ய ஆரம்பித்தனர்; அவர்களுடன் மற்ற மூன்று குழந்தைகளும் அமர்ந்து, “பைபிள்” படித்து, ஜபம் செய்து கொண்டிருந்தனர். இப்படியே ஒரு மாதம் போய்விட்டது. ஆனால், மேடலின் உடல்நிலை மிகவும் மோசமானது. அவள் உடல்நிலையை பார்த்த உறவினர், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனைக்கு போன் செய்து, ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே, சிறுமி இறந்துவிட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர். டாக்டரிடம் அழைத்து செல்லாமல், ஜபம் செய்து கொண்டிருந்த பெற்றோர் மீது கொலை வழக்கு போடப்பட்டுள்ளது.

மேடலினுக்கு வந்த சர்க்கரை வியாதிக்கு, “கெடோசிடோசிஸ்’ என்று பெயர். உடலில் உள்ள கணையத்தில் இன்சுலின் சுரப்பி இருக்கிறது. அதில் இருந்து இன்சுலின் சுரந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

ஆனால், குழந்தைகளுக்கு ஏற்படும், “டயபடீஸ் 1 ‘ நோயில், இன்சுலின் சுரப்பியே வேலை செய்யாது. மேடலினுக்கு இன்சுலின் சுரப்பது நின்று விட்டது. அதனால் நிலைமை மோசமானது.சிறுமியின் தாய் லெய்லானி கூறுகையில்,”மேடலின் நோய் நன்றாக குணமாகிவந்தது; அவளுக்கு நானே தலைவாரி விட்டேன். இறைவன் பிழைக்க வைக்க எவ்வளவோ முயன்றிருக்கிறான். அதற்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

JESUS? CHRIST?- Gospels are Legends

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: