இலங்கையில் பாலியல் பாதிரியார்
May 8, 2010 Leave a comment
ஹொலண்ட் நாட்டு பாதிரியார் இலங்கையில் பாலியல் நடவடிக்கையில்
ஹொலண்ட் நாட்டு பாதிரியார் (ஹொலண்ட், ரொட்டெர்டாம்)இலங்கையில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தற்காலிகமாக பணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு ஒவ்வொரு வருடமும் சுற்றுலா செல்லும் இவர் அங்கு சில அறக்கட்டளை பணிகளையும் செய்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான குற்ற சாட்டினை விசாரித்து ரொட்டெர்டாம் கத்தோலிக்க சபையின் தலைவர் இந்த பாதிரியார் நிதி கையாடல் மற்றும் பாலியல் குற்ற சாட்டுக்களில் ஈடுபட்டதனால் விசாரணைகள் முற்றுப்பெறும்வரை தற்காலிகமாக இவரது பணிக்காலம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
http://www.eelanatham.net/story/ஹொலண்ட்-நாட்டு-பாதிரியார்-இலங்கையில்-பாலியல்-நடவடிக்கையில்
கத்தோலிக்கத் திருச்சபையில் சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் அதிகரித்துவருகின்றன
http://tamil.allnews.in/news/breaking-news/பாலியல்-சர்ச்சையில்-ஊட்டி-பாதிரியார்/59417.html
பாலியல் சர்ச்சையில் ஊட்டி பாதிரியார்
அமெரிக்க தேவாலயம் ஒன்றில் பணியாற்றித் திரும்பிய இந்தியப் பாதிரியார் மீது தெரிவிக்கப்படும் சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.
அமெரிக்கா மின்னசோட்டாமாநிலத்தில் க்ரூக்ஸ்டன் என்ற பகுதியில் பணியாற்றியபோது சிறுமிகளிடம் தவறாக நடந்துகொண்டார் என்று கத்தோலிக்க பாதிரியார் ஜோசஃப் பழனிவேல் ஜெயபால் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
“ஜெயபால் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை, ஆயினுங்கூட மீண்டும் மீண்டும் புகார்கள் எழுவதால், பிரச்சினை அகில இந்திய கத்தோலிக்க பிஷப்புக்களின் அமைப்பான Catholic Bishops Conference of Indiaவின் முன் வைக்கப்பட்டிருக்கிறது; அதன் உத்தரவின் பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தற்போது ஜெயபால் பணியாற்றும் ஊட்டி மறைமாவட்டத்தின் ஆயரான பிஷப் அருளப்பன் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய ஜோசஃப் ஜெயபால் மின்னசோட்டா மாநிலத்தில் செப்டம்பர் 2004லிருந்து ஆகஸ்ட் 2005 வரை க்ரூக்ஸ்டன் என்ற பகுதியில் பணியாற்றியிருக்கிறார்.
மூன்றாண்டுகள் அங்கே தங்கி அவர் பணியாற்றியிருக்க முடியும், ஆனால் நோய்வாய்ப்பட்ட தனது தாயைப் பார்க்கவேண்டுமென்று ஓராண்டிலேயே இந்தியா திரும்பிவிட்டார்.
மின்னசோட்டா பணிக் காலத்தில் ஒரு சிறுமியுடன் தவறான உறவு வைத்திருந்ததாகவும், ஒரு தேவாலயத்தின் பணத்தைக் கையாடியதாகவும் அவர் இந்தியா வந்த பிறகு அவர் மீது புகார்கள் எழுந்தன.
வேறொரு சிறுமியும் ஜெயபால் தன்னை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினார் என்று பின்னர் குற்றஞ்சாட்டினார்.
ரோசோ கவுண்டி என்ற பகுதியில் ஜெயபால் மீது ஜனவரி 2007ல் கிரிமினல் வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டன.
ஜெயபாலை அமெரிக்காவிற்கு திரும்ப அழைத்து வழக்கு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், ஆனால் இந்தியா அம்முயற்சிகளுக்கு ஒத்துழைக்கவில்லையென்றும்ரோசோ கவுண்டியின் அரசு வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.
ஆனால் தான் குற்றமற்றவர் என்றும் தன் மீதான வழக்குகளை சந்திக்கத் தயாரென்றும் கத்தோலிக்க திருச்சபையின் செய்தி நிறுவனமான யூ.சி.ஏ.விற்கு அளித்துள்ள பேட்டியில் 57 வயதான ஜெயபால் கூறியிருக்கிறார்.
தேவைப்பட்டால் பாதிரியார் ஜெயபால் அமெரிக்கா சென்று அவருக்கு எதிரான வழக்குக்களை சந்தித்தே ஆகவேண்டும் என ஊட்டி பிஷப் அமல்ராஜிடம் திட்டவட்டமாக தெரிவித்திருப்பதாக சென்னை ஆர்ச் பிஷப் சின்னப்பா கூறியிருக்கிறார்.