பார்ப்பனர்களுக்குத் துணைபோகும் சில தொங்கு சதைகள்…?

http://nanavuhal.wordpress.com/2010/04/14/kalanidhi-dmk-dk/

`மீண்டும் பழைய குப்பையா?’ என்னும் தலைப்பில் `விடுதலை’ நாளேடு ஒரு தலையங்கம் (திங்கள் – 12.04.2010) வெளியிட்டிருந்தது.

அந்தத் தலையங்கத்திலிருந்து சில பகுதிகள்:

……தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மானமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.க. அரசு தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரு மனதாக சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது.

pts05இந்த நிலையில் பிரபவ என்று தொடங்கும் அந்தப் பார்ப்பன ஆண்டு முறை என்பது காலாவதியாகிப் போய்விட்ட ஒன்றாகும்.

ஆனால் பார்ப்பனர்கள் விடாப்பிடியாகவும், பார்ப்பனர்களுக்குத் துணை போகும் சில தொங்கு சதைகளும் பழைய பத்தாம்பசலித்தனமான ஆண்டு முறையை நிலைநாட்டும் வகையில் நடந்து கொள்வது சட்டவிரோதம் மட்டுமல்ல, தமிழர்களின் தன்மான உணர்வுக்கும், மறுமலர்ச்சிக்கும் தடை போடும் அற்பத்தனமுமாகும்.

தமிழால் வயிறு வளர்த்துக் கொண்டு, அந்தத் தமிழையும், தமிழர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில், பழைய சேற்றுக் குட்டையில் தமிழர்களை விழச் செய்யும் வகையில் தமிழ் நாளேடுகள் சில விக்ருதி ஆண்டு ராசி பலன்கள் என்ற பெயரில் இணைப்புகளை (Supplements) வெளியிடுவது அசல் வெட்கக்கேடாகும். இந்த ஏடுகளின் இத்தகைய போக்குகள் கண்டிக்கத்தக்கதும், வெட்கப்படத் தக்கதுமாகும்……

மக்களிடத்தில் பக்தி இருக்கிறது; பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால், புராணங்களின் பெயரால் கூறப்படுபவற்றைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற ஒரு காரணத்தால்எந்தக் குப்பையையும் கொட்டி பத்திரிகைகளாக்கி, பாமர மக்களின் பணத்தைப் பறிக்கும் வழிப்பறி அல்லாமல் இது வேறு என்னவாம்?

விஞ்ஞான மனப்பான்மையை மக்களிடம் வளர்க்கவேண்டும் – இது ஓர் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.அதற்கு எதிராக மக்களை மூடக் குழியில் தள்ளும் இந்த ஊடகங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பது தவறல்ல!

தமிழ் உணர்வாளர்களும், பகுத்தறிவாளர்களும் இத்திசையில் மக்களைக் குழப்பும் சக்திகளை அம்பலப்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

மூடத்தனத்தை வளர்க்காதே, மக்களின் முற்போக்குச் சிந்தனையை மழுங்கடிக்காதே என்ற முழக்கம் எங்கும் ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!

இந்தத் தலையங்கம் வெளிவந்த அன்றே (12.04.2010) `தமிழ் முரசு’ மாலை நாளிதழின் முதல் பக்கத்தில் ஒரு விளம்பரம் வெளிவந்திருந்தது.

pts02

மறுநாள் (செவ்வாய் – 13.04.2010) `தமிழ் முரசு’ நாளிதழில் ஆறாம் பக்கத்தில் (முழுப்பக்கம்) `ஆண்டு பலன்கள்’ இடம்பெற்றிருந்தன.

pts07 pts01

`தமிழ் முரசு’ நாளிதழ் சன் குழுமத்தின் வெளியீடு; சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன்; நிருவாக இயக்குநரும் அவரே.

pts04 pts06

`உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு’ (அடேயப்பா!) என்று சொல்லிக்கொள்ளும் `விடுதலை’ நிருவாகத்தினருக்குச் சில கேள்விகள்:

1. கலாநிதி மாறன் பார்ப்பனரா, `பார்ப்பனர்களுக்குத் துணைபோகும் தொங்கு சதையா?’

2. சன் குழுமத்தினர் பார்ப்பனர்களா, `பார்ப்பனர்களுக்குத் துணைபோகும் தொங்கு சதைகளா?

3. கலாநிதி மாறனும் சன் குழுமத்தினரும் `பழைய பத்தாம்பசலித்தனமான ஆண்டு முறையை நிலைநாட்டும் வகையில்’ நடந்துகொள்வதன்வழி `சட்ட விரோதமாகச்’ செயல்படுகிறார்களா?

4. கலாநிதி மாறனும் சன் குழுமத்தினரும் `தமிழர்களின் தன்மான உணர்வுக்கும், மறுமலர்ச்சிக்கும் தடைபோடும் அற்பத்தனத்தில்’ஈடுபடுகிறார்களா?

5. `தமிழால் வயிறு வளர்த்துக் கொண்டு, அந்தத் தமிழையும், தமிழர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில், பழைய சேற்றுக் குட்டையில் தமிழர்களை விழச் செய்யும் வகையில் விக்ருதி ஆண்டு ராசி பலன்கள் என்ற பெயரில் இணைப்புகளை வெளியிடுவது அசல் வெட்கக்கேடானது’ என்று கலாநிதி மாறனுக்கும் சன் குழுமத்தினருக்கும் `விடுதலை’ நிருவாகத்தினர் எடுத்துச் சொல்வார்களா?

6. தமிழ் முரசின் இந்த `வெட்கக்கேடான போக்கை’ `விடுதலை’ நிருவாகத்தினர் கண்டிப்பார்களா?

7. கலாநிதி மாறனும் சன் குழுமத்தினரும் `குப்பையைக் கொட்டிப் பத்திரிகையாக்கிப் பாமர மக்களின் பணத்தைப் பறிக்கும் வழிப்பறி’செய்கிறார்கள் என்று அவர்களுக்கு `விடுதலை’ நிருவாகத்தினர் அறிவுறுத்துவார்களா?

8. `மக்களை மூடக் குழியில் தள்ளும்’ தமிழ்முரசு நாளிதழை வெளியிடும் கலாநிதி மாறன்மீதும் சன் குழுமத்தினர்மீதும் `விடுதலை’ நிருவாகத்தினர்`சட்டப்படியான நடவடிக்கை’ எடுப்பார்களா?

9. `மக்களைக் குழப்பும் சக்திகளான’ கலாநிதி மாறனையும் சன் குழுமத்தினரையும் `தமிழ் உணர்வாளர்களும் பகுத்தறிவாளர்களும்’அம்பலப்படுத்துவார்களா?

10. பத்தாவது கேள்வி அ. நம்பிக்கு: `விடுதலைப் பருப்பு எங்கே வேகும், எங்கே வேகாது’ என்று `விடுதலை’ நிருவாகத்தினருக்குத் தெரியும்; அதனை அறியாமல் இவ்வாறு அப்பாவித்தனமாகக் கேள்விகள் கேட்கலாமா? நீர் எந்த உலகத்தில் இருக்கிறீர், அ. நம்பி?

– அ.நம்பி

Advertisements

One Response to பார்ப்பனர்களுக்குத் துணைபோகும் சில தொங்கு சதைகள்…?

  1. Aanandan says:

    Great Post by Nambi.

    Thanks for bringing it to top

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: